இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ள பாடல் வரிகளை நீக்காமல், கமல்ஹாசன் நடித்துள்ள "உத்தம வில்லன்' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான "உத்தம வில்லன்' திரைப்படம் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், "என் உதிரத்தின் விதை...' என்று தொடங்கும் பாடலில், இந்து மதக் கடவுளான விஷ்ணுவை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. அந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.
விஷ்ணு அவதாரங்களில் 3-ஆவது அவதாரமான வராக அவதாரத்தை அவமதிக்கும் வகையில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே, அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு அந்த வரியை நீக்காமல் "உத்தம வில்லன்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூறும் புகாரில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும், இந்த மனு விசாரணை செய்வதற்கு தகுதியுடையதாக இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
2 வை ராஜா வை
ழில் தயாராகும் படங்களில் எண்பது சதவீதம் பிற படங்களின் பாதிப்பில் எடுக்கப்படுபவை. சில அப்பட்ட காப்பிகள், சில புத்திசாலித்தனமான தழுவல்கள்.
காப்பி குறித்து எழுதி நமக்கே போரடித்துவிட்டதால், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கும், ஹாலிவுட், ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் படத்துக்குமான பத்து பொருத்தங்களை நாம் பட்டியலிடவில்லை. மேலும், மணிரத்னத்தின் ஆத்மார்த்த குரு பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்களிலும் ஓ காதல் கண்மணியின் சாயலை காணலாம்.
நிற்க. விஷயம் ஓ காதல் கண்மணி பற்றியதல்ல. ஐஸ்வர்யாவின் இரண்டாவது படம், வை ராஜா வை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. 2008 -இல் ஹாலிவுட்டில் 21 என்ற படம் வெளியானது. படத்தின் நாயகன் ஒரு ஸ்டூடண்ட். ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. அதற்கு நிறைய டப்பு வேண்டும்.
நிலையில் அவன் கணித பேராசிரியர் ஒருவரை சந்திக்கிறான். அவர் ஏற்கனவே சில மாணவர்களை தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் கில்லாடிகளாக பயிற்சி அளித்து வைத்திருக்கிறார். ஹீரோவும் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு, அனைவருமாக சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸுக்கு செல்கின்றனர். அங்கு தங்களது திறமையால் பணமும் வெல்கின்றனர். அதன் பிறகு எழும் பிரச்சனையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.
இந்தப் படத்தை தழுவி வை ராஜா வை எடுக்கப்பட்டதாக தகவல். ஆனால், உண்மை என்ன? ஐஸ்வர்யா கதை விவாதம் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வை ராஜா வை கதையை உருவாக்கியதாகவும், 21 படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சூதாட்டத்தை மையப்படுத்தியது என்பதால் 21 படத்தை வேண்டுமென்றே இந்தப் படத்துடன் தொடர்புப்படுத்துகிறார்கள் எனவும் ஐஸ்வர்யா தரப்பு குற்றச்சாட்டை மறுக்கிறது.
மே 1 படம் வெளிவரும்போது எல்லா பொய் திரைகளும் விலகிவிடும். அதுவரை காத்திருப்போம்.
3 கப்பார் இஸ் பேக் படம், ஷோலே படமோ அல்லது அதன் இரண்டாம் பாகமோ அல்ல என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். ஷோலே படத்தில், வில்லனின் பெயர் கப்பார். இதைவைத்து, இப்படத்தை, யாரும் ஷோலே 2 என்று நினைத்து விட வேண்டாம். இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள். கப்பார் என்பது கப்பார் இஸ் பேக் படத்தின் முன்னணி கேரக்டரின் பெயர் என்று அக்ஷய் குமார் …
0 comments:
Post a Comment