1 ஒரு பொண்ணு தன் பேருக்குப்பக்கத்துல @WORKனு போட்டிருக்கு.நமக்கு வேலை வெட்டி இல்லைன்னு குத்திக்காட்டுதோ என்னவோ?
===============
2 நம் அன்புக்கு உரியவர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டுத்தெருவில் உலாப்போவது /வீட்டைப்பார்வையிடுவது இவை எல்லாம் அலாதி சுகம்
================
3 தாமரையோட கணவர் தியாகு தாமரைக்கு தாத்தா மாதிரி இருக்காரு. இதுல டர்னிங் பாயிண்ட் தியாகுவின் இன்னொரு தொடுப்பு பேத்தி மாதிரி இருக்கு
===================
4 பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் எப்படிப்பேச வேண்டும்? என்ன பேச வேண்டும் எனும் குறைந்த பட்ச நாகரீகம் கூட சிலருக்கு இல்லை
======================
5 தாமரை போல் கவிதை எழுத எனக்கும் ஆசை.ஆனா அவரோட (முன்னாள் 2வது ) புருஷன் போல் தலை எல்லாம் நரைச்ட்டா என்ன பண்ண?னு பயமா இருக்கு
===================
6 பப்ளிக்கா இன்ன டைம்ல ஐ லவ் யூ சொல்றேன்னு பில்டப் கொடுத்துட்டு தமிழே தெரியாத ஃபாரீன் ஃபிகர்ட்ட காதலைச்சொல்வான் வீரத்தமிழன்
==================
7 நான் கூட எப்பவும் ஜாலி மூடுல தான் இருப்பேன்,ஆனா அதை எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்க மாட்டேன்# அய்யய்யோ இப்போ சொல்லிட்டனே
=================
8 1289 பேர் கூட உக்காந்து தியேட்டர்ல ஹோம் அலோன் படம் பார்த்துக்கிட்டு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ் போட்டா அது சோகம் ஆகாது
====================
9 தமிழ் பேசும் தூய தமிழ்ப்பெண்களுடன் மட்டுமே கடலை போடுவது எனும் உயர்ந்த லட்சியத்துடனும் , கொள்கையுடனும் வாழும் அனைவருக்கும் வாழ்த்து
==============
10 நூத்துல ஒரு பொண்ணுதான் நம்ம க்ளிக்சை பாராட்டுது.ஆயிரத்தில் ஒரு பொண்ணுதான் நம்ம டிபி யை பாராட்டுது.ஹூம் ;-))
=================
11 கோலம் போட்டுட்டு இருந்த முன் பின் அறிமுகம் ஆகாத பொண்ணுக்கு த பு வாழ்த்து சொன்னேன்.அது அலறி அடிச்ட்டு அம்மாவைக்கூப்பிடுது
===================
12 உன் அத்தனை கோபத்தையும் , வசவுகளையும் ஒரு நொடியில் மறக்கச்செய்து விடும் உன் மீது நான் கொண்ட அன்பு!
====================
13 ஓ காதல் கண்மணி படம் க்ளிக் ஆகுதோ இல்லையோ ஹீரோக்கு ஹீரோயின் க்ளிக் ஆகிடும் போல. அப்டி ஒரு கெமிஸ்ட்ரி.நல்லா இருங்கடே!
=======================
14 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துனு தமிழ்ல சொல்லாம ஹேப்பி தமிழ் நியூ இயர் டூ மை ஃபாலோயர்ஸ்னு இங்க்லீஷ்ல சொல்வார் நெட் தமிழர்
======================
15 சினிமா பட டைட்டிலுக்கு பஞ்சம்கறாங்க. இங்க வந்து பாருங்கய்யா. ட்விட்டர் ஹேண்டில்சை.டக்கரான விதவிதமான ஐடியாக்கள், களை கட்டுது
=======================
16 குழந்தைகளிடம் நீங்கள்.எந்த அளவு குழந்தைத்தனமாகப்பழகுகிறீர்களோ அந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம்
==============
17 யோக்கியனாய் ,கண்ணியமானவனாய் வாழ்பவனுடையை தனிமைப்பொழுதுகள் படைப்புசார் பணியில் இருக்கக்கூடும்
============
18 எளிதில் மின் கடத்திக்கு உதாரணம் சொல் எனக்கேட்டால் உன் உள்ளங்கையுடனான என் உள்ளங்கை சேர்ப்பு என்பேன்
============
19 தாமதமாய் வாழ்த்துச்சொன்னேன்.கோபமாய் நீயே வெச்சுக்கோ என்றாள்!,சரி.வெச்சுக்கறேன்ட்டேன்
================
20 இயற்கை அழகான சூரிய உதயத்தைக்கூட டீ கப் காம்பினேஷன்ல எடுக்க தமிழனோட மூளைல மட்டும் தான் யோசனை உதயமாகும்
======================
0 comments:
Post a Comment