சினிமா விமர்சனம் எழுதுவதற்கான தகுதிகள் பற்றிய சுஹாசினியின் பேச்சுக்கு, இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுஹாசினி மணிரத்னம் நிகழ்த்திய நன்றியுரை பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
"மவுஸை மூவ் பண்ணத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சகர்களாகி விட்டார்கள். விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமே விமர்சனம் பண்ண வேண்டும்" என்று சுஹாசினி பேசினார்.
சுஹாசினியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ச்சியாக சுஹாசினிக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.
இந்நிலையில், சுஹாசினி கருத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் இயக்குநர் மணிரத்னம் அளித்த விளக்கம்:
"சுஹாசினியின் கருத்தை அவர் சொன்ன விதத்திலேயே ஆராய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் தனது கருத்தை சரியாக பதிவு செய்யாமல்கூட இருந்திருக்கலாம்.
சுஹாசினி, தொழில்முறை விமர்சனத்தைப் பற்றியே பேசினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இதுவரை எங்கள் படங்களை எப்படி ஆதரிப்பார்கள்... அதேபோல் ஆதரிக்க வேண்டும் என்றே கோரியிருந்தார்.
சுஹாசினி உட்பட யார் என்ன சொன்னாலும் சரி, மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு படத்தை உருவாக்கினால் அதைப் பற்றி என் சொந்த கருத்து இருக்கும். அந்தப் படத்தை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால், நிச்சயம் அதை ஒட்டிய கருத்து ஒன்று இருக்கும்.
சினிமா என்பது பொதுப்படையான கலை. அதை விமர்சிக்க மக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இன்றைய சூழலில் மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்கள் இன்னும் பல மடங்குகூட அதிகரிக்கலாம். எனவே விமர்சனங்களை நாம் பின்னூட்டமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தப் படத்தை உருவாக்கும் போது அவற்றை பயன்படுத்திக் கொண்டு தரத்தை மேம்படுத்த வேண்டும்.
விமர்சனங்கள் எப்போதுமே இருக்கும். ஆனால், அது எப்படி முன்வைக்கப்படுகிறது என்பதிலேயே வித்தியாசம் இருக்கிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு ஒரு வீரர் எவ்வளவு நேர்த்தியாக விளையாடுகிறார் என நான் விமர்சிக்கலாம். எனக்கு கிரிக்கெட் கமென்ட்ரி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது இருந்தால் நான் விமர்சிக்கிறேன். அதேபோல், சினிமா பார்க்கும் அனைவருக்கும் அதைப் பற்றிச் சொல்ல ஏதாவது கருத்து இருக்கும். ஆனால், விமர்சனங்கள் எதிர்வினையை தூண்டிவிடக் கூடாது. அத்தகைய போக்கு ஆன்லைனில் நிலவுகிறது.
நேர்மையான விமர்சனங்கள் எப்போதுமே வரவேற்பைப் பெறும். 'கடல்' பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் அதை என் பாணியில் எடுத்துக் கொண்டேன்" என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம்.
நன்றி -த இந்து
- Ramarao Ramanaidu"பெண் புத்தி பின் புத்தி" என்பதன் பொருள் ... ஒரு செயலால் பின் விளையக்கூடிய நல்லது தீயது குறித்து முன் கூட்டியே சிந்திப்பவள் என்பதாகும்.Points945
- Gnanasekaranமுன்பு உச்சியில் இருந்த நடிகர்களின் வாரிசுகளை அறிமுகப்படுத்தும் கலைஞாக மாறிவிட்டார். அதற்காக இவருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். அதற்காக இவர், இவரிடம் வேலை செய்யும் எவருக்கும் காசு "போதுமானதாக" கொடுப்பதில்லை. அனால் பொதுவுடைமை கொள்கையை பற்றி பேசுவதில் வல்லவர். இன்றைய தேதிக்கு இவர் ஒரு அறிமுகப்படுத்தி இயக்குனர் அவ்வளவுதான். பெரிய பெரிய நடிகர்களெல்லாம் நடிக்க வருகிறார்கள் என்றெல்லாம் சொல்வது அபத்தம். காரணம் இவர் இயக்கும் படத்தில் காசு எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி இன்றைய பெரியனடிகர்களெல்லாம் இவரிடம் சூடுபட்டவர்கல்தான். மீண்டும் சூடு போட்டுக்கொள்ள இனி எந்த பெரிய நடிகர்களும் தயாராக இல்லை என்பதே உண்மை.Points3800
- Gnanasekaranஒரு ஊரில் ஒருத்தர் இருந்தார். அவர் கலைத்துறையில் ஏதாவது சாதிக்க துடித்தவர். யாரையும் தன்னுடைய குருவாக ஏற்றுக்கொள்ள மனப்பான்மை இல்லாதவர். யாருடைய படைப்பின் மீதும் அவ்வளவாக ஆர்வம் காட்டதவராக இருந்தவர். தான் தான் கலைத்துறையின் காட்பாதராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். எனவே ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டார். வித்தியாசமான புது முயற்சிகள் எப்போதும் மக்களை கவரும் என்பதில் ஐயம் இல்லை. அனால் அந்த காலத்தின் ஓட்டத்தில் அந்த கலைஞனுக்கு வயதாகிறது. மக்களுக்கும் வயதாகிறது. பழயபோல் தன்னுடைய படைப்புகள் எல்லாம் மக்களிடம் ஏன் விலை போகவில்லை என்பதை யோசிக்க தொடங்குகிறார். மீண்டும் புது முயற்சியை தொடங்குகிறார். அனால் தனக்கு வயதாகுகிறது என்பதை மறந்து இன்றைய இளைய சமுதாயத்தின் ஒரு பங்கு, தானும் தான் என்று எண்ணி தன் கலைபடைப்புகளை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார். அனால் மீண்டும் மீண்டும் தோல்வியே. இப்போது தன்னை மாற்றி கொண்டுவிட்டார் இந்த கலைஞர். உலக உண்மையை உணர்ந்து விட்டார். "காசு பணம் துட்டு மணி மணி". எனவே முன்பு உச்சியில் இருந்த நடிகர்களின் வாரிசுகளை அறிமுகப்படுத்தும் கலைஞாக மாறிவிட்டார்.Points3800PrabuM Down Voted
- Kmsdglஒரு வேளை இது போன்ற அறிக்கைக்கும் தகுதி தேடுவாரோ என்னவோ உங்கள் விளக்கங்கள் எல்லாம் சார்புடைவையுடையது - சர்வமும் உழைப்பு மயம் தான்-கற்பனை / நிஜ நிகழ்வுகளின் உருவாக்கப் படைப்புத்திறன் கொண்ட உங்கள் உழைப்பு - மக்கள் பொழுதுபோக்கிற்கு தாங்கள் செலவு செய்து பார்க்கின்றனர்-சிலர் தெரிந்த சில விதங்களில் விமரிசனம் செய்கின்றனர்-டேக் இட் ஈசிPoints2500
- Gnanasekaran"ஏன் நானும், பி.சி-யும்கூட ஒரு குட்டிச்சுவரில் அமர்ந்து ‘யாருக்குமே சினிமா எடுக்க தெரியல. நாங்க எடுக்கிறோம்’ என்று பேசியிருக்கிறோம்." -மணி ரத்னம். விமர்சனம்: இவர் சினிமாவில் நுழையும்போதுதான் சினிமாவின் மிக உயரிய இடத்தில் உள்ள பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர் போன்றோரெல்லாம் சினிமா எடுத்து வந்தனர். அப்படி என்றால் இவர்களுக்கு எல்லாம் சினிமா எடுக்க தெரியாதா? இல்லை இவர்களை எல்லாரையும் விட இந்த மணி அய்யா அவர்கள் உயர்ந்தவரா? எந்த ஒரு கலைஞனுக்கும் தன்னடக்கம் என்பது தேவை, அது இவரிடத்து இல்லாதது வருந்ததக்கது...Points3800
- Thiyagarajanஅவர் ஒன்றும் அப்படி பேசியதை சரி என்று கூறவில்லை அறிவுஜீவியே...மக்கள் அப்படி கூறுவது இயல்புதான் என்றுதான் சொல்கிறார்.about 2 hours ago · (0) · (0) · reply (0) ·
- Vaidhyanathan Sankarதிரைப்படத்தை விமர்சிக்க தனி தகுதி ஏதும் இருப்பதாக கூறுவது அகங்காரம்,மமதை,திமிர்.வரிசையில் நின்று காசுகொடுத்து டிக்கெட் எடுத்து பார்க்கும் ஒவ்வொரு saamaaniiyanukkum அந்த தகுதியும் திறமையும் உரிமையும் முழு அளவில் உண்டு.Points14025
- Gnanasekaran"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது சுஹாசினி அம்மையாரின் செயலைப் பார்க்க பார்க்கச் சிரிப்பு வருது."Points3800
- Dr Bhimarao.Sathyanarayananசப்பைக்கட்டு என்ற வார்த்தைக்குப் பொருள் அறியாதவர்கள் இந்தப் போட்டியைப் படித்தால் அறிந்து கொள்ளலாம். தன்னுடைய அகங்காரமான பேச்சுக்கு மன்னிப்புக் கேட்கும் வரை ரசிகர்கள் இந்தப் பிரச்சினையை கை விடுவார்களா என்பது சந்தேகமே!
0 comments:
Post a Comment