Tuesday, April 28, 2015

யூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )

இது பேய்ப் படங்களின் காலம். இந்த வகைப் படங்களின் மிரட்டும் காட்சியமைப்புக்குப் பெரிதும் கைகொடுப்பது கிராபிக்ஸ். ஆனால் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் கேமரா மற்றும் படத்தொகுப்புத் தந்திரங்கள், ஒப்பனை, ஒளியமைப்பு, பின் னணி இசை ஆகிய அம்சங்களை அதிகம் நம்பி ரசிகர்களைப் பயமுறுத்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கமல்.
வினய், டேவிட், ராகுல், அமீர், அருண் (யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ்) ஆகிய 5 நண்பர்களும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய் கின்றனர். 5 பேருமே வாழ்க்கை யைக் கொண்டாட நினைப்பவர் கள். இவர்களில் இருவர் மர்ம மான முறையில் கொலையா கின்றனர். மற்ற 3 பேரையும் தனது சந்தேக வளையத்துக்குள் கொண்டுவருகிறார் போலீஸ் உதவி கமிஷனர் சக்தி (தருண் சக்கரவர்த்தி).
இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட பூஜாவின் (சாக்‌ஷி அகர்வால்) செல்போன் எண்ணில் இருந்து அடுத்து கொல்லப்பட இருப்பது யார் என்று இந்த 3 நண்பர்களுக்கும் எம்எம்எஸ் வருகிறது. அதில் குறிப்பிட்டபடியே கொலையும் நடக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பூஜாவுக்கும் 5 நண்பர் களுக்கும் என்ன தொடர்பு? போலீஸைக் குழப்பும் இந்தக் கொலைகளைச் செய்வது பேயா, மனிதனா? இந்தக் கேள்வி களுக்குப் பதிலாக விரிகிறது ‘யூகன்’.
ஆண்களால் பழிவாங்கப் பட்டு இறக்கும் பெண் கண்டிப் பாக பேயாக வந்து பழிவாங்கு வார் என்பது விட்டலாச்சார்யா காலத்துக் கதை. ஆனால் பேயாக வரும் பெண் எந்தச் சூழ்நிலையில் பழிவாங்கப்பட் டாள் என்பது புதுமை. ஆள் அரவம் இல்லாத பகுதியில் இருக்கும் வீடு, பாழடைந்த பங்களா ஆகியவற்றை வைத் துப் பின்னப்படுவதுதான் பேய்ப் படம் என்ற க்ளிஷேவை உடைத்து ஐ.டி. நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் நண்பர்கள் வசிக் கும் அதிநவீன வீடுகளிலும் காட்சிகளை நகர்த்தியிருக்கும் இயக்குநர் கமல் பாராட்டுக்குரியவர். பேய் தோன்றி மறையும் பல காட்சிகளைப் படத்தொகுப்பு மூலம் அமைத்திருக்கும் விதம் பார்வையாளர்களை அலற வைக்கிறது யூகன்.


சம்பவங்களைக் கலைத்துப் போட்டாலும் குழப்பம் இல்லாமல் நம்மைக் காட்சிகளுக்குள் இழுத்துக்கொள்கிறது திரைக்கதை. ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் இறப்பது மட்டும் காட்டப்படுகிறது. எப்படி இறந்தார்கள் என்பது புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியின் ஊகத்திலேயே காட்சிப் படுத்தப்பட்டிருப்பது புதுமை.
பூஜாவின் தற்கொலைக்கான பின்னணிக் காரணத்தை அழுத்தமாக அமைத்த இயக்குநர், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து எப்படி எம்எம்எஸ் வரமுடியும் என்பது போன்ற கேள்விகளுக்கும் கச்சிதமான பதில்களைத் தந்திருக்கிறார்.
ஆனாலும் ஆங்காங்கே சில ஓட்டைகள். சாக்‌ஷி இறந்து 2 ஆண்டுகள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் மகள் போன வருஷம் எங்கு வேலை பார்த்தாள் என்ற கேள்வி அடுத்த காட்சியிலேயே வருகிறது. டிராயிங் நோட் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. லேப்டாப் 2 ஆண்டுகளாக சார்ஜில் இருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கம் இல்லை. பார்த்துப் பழகிய பேய் தோற்றம், ஆவி வரும் காட்சிகள் ஒரே மாதிரி அமைவது ஆகியவை படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
முக்கிய வேடம் ஏற்றிருக்கும் அனைவரும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியும் யதார்த்தமாக இருப்பதால் நம்பகத்தன்மை கூடுகிறது. திகிலுக்கு நடுவே இளைப்பாறலாக வினய்-சாக்‌ஷி காதல்.
திகில் படங்களுக்கு முதுகெலும்பாக அமைவது ஒளிப்பதி வும் இசையும். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், அலெக்ஸ் பிரேம்நாத்தின் பின்னணி இசையும் படத்துக்கு நல்ல பலம்.
ஆக மொத்தத்தில், பழைய பேயை புதிய புட்டியில் அடைத்துக் காட்டியிருக்கின்றனர்.

நன்றி - த  இந்து



1  எல்லோருக்கும் லைப் ல ஒரு என்ட்டர்டெய்ன்மென்ட் இருக்கும்.எங்களுக்கு லைபே என்ட்டர்டெய்ன்மென்ட்தான்


============


உன் ஐடியாஸ் எல்லாம் சைடு டிஷ் மாதிரி சப்னு இருக்கு.பீர் மாதிரி பொங்கி வரவேணாமா?# யூகன்



==================




3 மாடர்ன் யுகம் இல்லையா? அதனால பேய் வில்லனுக்கு போன் ல Sms அனுப்புது.நல்லவேளை வாட்சப்ல ஆவிஉலக அந்தரங்கம் எதுவும் அனுப்பல



==================

ரெக்கமன்டேசன் லெட்டர் ங்கறது வேலை யை பிச்சை எடுத்து வாங்கற மாதிரி # யூகன்


==============



5 அதெப்பிடிடா விடிய.விடிய FB ல கடலை போட்டுட்டு விடிஞ்ச பின் பொண்ணோட போன் நெம்பர் கூட தெரியாதுனு அடிச்சு விடறீங்க?# யூகன்




===============




6 யாரை வேணா நம்பலாம்.ஒரு காபி சாப்பிடலாம் வானு கூப்பிடற பசங்களை நம்பக்கூடாது # யூகன்



ஹார்லிக்ஸ் ஓக்கே?்


===============

7 என்FB id எப்டி கண்டுபிடிச்சீங்க?
பொதுவா பொண்ணுங்க தன் அப்பா பேரை தன் பேருக்கு முன்னாலயோ/பின்னாலயோ போட்டுக்குவாங்க


=================

8  பொதுவா ஆபீஸ்ல நல்லா வேலை செய்யறவனை விட வேலைத்தனம் செய்பவனுக்குத்தான் ப்ரமோசன் ,இன் க்ரீமென்ட் கிடைக்குது # யூகன்

=============

சிபி கமெண்ட்= யூகன்= முன் பாதி ஜில்லிட வைக்கும் கோஸ்ட் த்ரில்லர் ,பின் பாதி சைபர் க்ரைம் த்ரில்லர்.ஒர்த் டூ வாட்ச்.

விகடன்=40 ,

ரேட்டிங் =2.75/ 5 .BGM SUP

==============

0 comments: