Sunday, April 05, 2015

திருச்சி-நீராரம்பம் சாத்தனூர்-சன்னாசியப்பன் கோயில் குள நீர் பாம்புக்கடிக்கு மருந்தா?

திருச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் குழுமணி செல்லும் வழியில் உள்ளது நீ.சாத்தனூர் (நீராரம்பம் சாத்தனூர்) கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சன்னாசியப்பன் கோயில் குளத்தில் உள்ள நீர் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

பாம்பு தீண்டியவர்களை இங்கு அழைத்துவந்து குளத்து நீரை (ஒரு சொம்பு அளவு) குடிக்கக் கொடுக்கின்றனர். அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோயில் வாசலில் கண் விழித்து அமர்ந்திருந்தால் முழுமையாக குணமடைந்து விடுகிறது என்கின்றனர் இக்கிராம மக்கள்.

பாம்பு தீண்டி, குளத்து நீரைக் குடித்து உயிர் பிழைத்த அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம்(44) என்பவர் கூறியபோது, “2 வருடங்களுக்கு முன் கட்டு விரியன் பாம்பு தீண்டியது. உடனே இக்கோயிலுக்கு வந்து சன்னாசியப்பனை வேண்டிக்கொண்டு குளத்து நீரைக் குடித்துவிட்டு ஒருநாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். பாம்புக்கடி விஷம் முறிந்து 2 நாட்களில் முழுமையாக குணமடைந்தேன்” என்றார்.
இதேபோன்று அருகில் உள்ள கீரிக்கல்மேடு, கிளியூர், போசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூப் பறிக்கச் செல்வோர் பாம்பு தீண்டி சிகிச்சைக்காக இங்கு வருவது தொடர்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து, கோயில் பூசாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது, “பல தலைமுறைகளுக்கு முன் நீ.சாத்தனூர் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, கெழுத்தி மீனின் முள் வாயில் சிக்கிய நிலையில் தவித்த நல்ல பாம்புக்கு சிலர் உதவியதால், இந்த ஊரில் உள்ளவர்களை பாம்பு தீண்டாது, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறாது என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாதந்தோறும் சராசரியாக 10 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு இங்கு வந்து கோயில் குளத்து நீரைக்குடித்து குணமடைந்து வருகின்றனர். கோடைக் காலத்தில் கூட இந்தக் குளம் வற்றாது” என்றார்.
தற்போது இந்தக் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து, நீர் பாசி படிந்த நிலையில் உள்ளது. குளத்தைச் சீரமைக்குமாறு ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை சீரமைக்க ரங்கம் தொகுதி எம்எல்ஏ வளர்மதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
அறிவியல்பூர்வமாக ஏற்கமுடியாது
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.கே.முரளிதரனிடம் கேட்டபோது, “எல்லா பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. எந்த வகை பாம்பு தீண்டியது என்று தெரியாத நிலையில் இதுபோல சிகிச்சை பெற்றிருக்கலாம். சிலர் பாம்பு தீண்டியவுடன் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, அதன்பின் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டதால் குணமடைந்ததாகக் கூறுவதுண்டு. குளத்து நீரைக் குடித்து குணமடைவது அறிவியல்பூர்வமாக ஏற்கக்கூடியது அல்ல. தேவைப்பட்டால் அந்தக் குளத்து நீரைப் பரிசோதித்துப் பார்த்தால், அந்த நீரின் தன்மை குறித்து கூறமுடியும்” என்றார்.


நன்றி - த இந்து


  • Komandur Kannan  
    முதலில் எல்லா பாம்பும் விஷம் இல்லை. பாம்புகளும் கொத்தும் போது எப்போதும் விஷம் கக்குவதில்லை. எல்லா விஷ பாம்பும் மனிதனை கொல்வதில்லை. யாரவது ஒருவரை ராஜ நாகத்திடம் கொத்து வாங்கிவிட்டு இந்த தண்ணீரை குடித்து பிழைக்க சொல்லுங்கள்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    • K.Baskar  
      அதிசயமாக உள்ளது.
      Points
      2815
      about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Vigneshwaran Pitchaimani Research Associate I at Niigata University, Japan 
        தண்ணீரில் வளர்த்திருக்கும் தாவரம் மற்றும் நீர்பாசிகளை பரிசோதித்தால், ஆஅஹ ஒரு அருமையான Ph.D project
        about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
        • முருகன் தில்லைநாயகம்  
          விஷத்தை முறிக்க விஷம் பயன் படுத்துவது வழக்கம். குளத்து நீரும் குடிக்க தகுதியற்ற விஷ தன்மை உள்ளதாக இருக்க கூடும்.
          Points
          4725
          about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
          kairokarthi  Up Voted
          • Jayabalan Narayanasamy  
            பாம்பு கடித்து விட்டால் கிராமத்து ஜனங்கள் ஓடிவந்து ரயில்வே ஸ்டேஷனில் சொல்லுவார்கள் அவர்கள் கண்ட்ரோலில் சொல்வார்கள் செய்தி ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் உள்ள ஸ்டேஷனுக்கு பறந்திடும் உடனே அவர் ஒரு டம்ளரில் தண்ணீர் மொண்டு வைத்து விட்டு மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் சற்று நேரத்தில் அவர் விஷம் இறங்கியாச்சுன்னு செய்தி வந்திடும் அவரும் தன் வேலையைப் பார்ப்பார் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம்
            Points
            7660
            about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • UMESH  
              வேடிக்கையாக உள்ளது
              Points
              480
              about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Kumar  
                முதலில் அந்த நீரை ஆராய்ந்து பார்த்துவிட்டு அப்புறம் கருத்து சொல்ல வேண்டிய முதல்வரே ஏற்கமுடியாது என்று ஆரபிப்பது தான் இன்றைய நிலை. மஞ்சள் கிருமிநாசினி என்றபோது சிரித்தவர்கள் தான் அமேரிக்கா மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கினால் அண்ணாந்து பார்கிறார்கள்...
                Points
                1735
                about 21 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                • Vembarguna  
                  குணமடைந்தால் நண்மையே அதேசமயம் கண்மூடித்தனமான பக்தி தேவைதானா? கடவுள் உதவுவார் என்றால் நேரடியாக என்று நினைத்தால் தவறு, நாம் பிறர்க்கு செய்யும் உதவி நமக்கு யாராவது உதவுவர் என்பதே நம்பிக்கை

                0 comments: