‘காஞ்சனா-2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார் தாப்ஸி. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
அழகிய நாயகியான நீங்கள் எப்படி ‘காஞ்சனா 2’வில் பேயாக நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்?
‘காஞ்சனா 2’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு அதில் நடிக்க சம்மதம் தெரிவிப்பதற்கு 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். அதில் பேய் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால், லாரன்ஸ் சார்தான், “இது நல்ல கதாபாத்திரம். நீ செய்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். நான் ஒவ்வொரு முறை தயங்கும்போதும் அவர்தான், “இது உன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக அமையும்” என்று தைரியம் கூறி நடிக்கவைத்தார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை விட லாரன்ஸ் என் மீது வைத்த நம்பிக்கை அதிகம்.
நீங்கள் நடித்த இந்திப் படமான ‘பேபி’யும், ‘காஞ்சனா-2’வும் அடுத்தடுத்து ஹிட் ஆகியுள்ளதே?
2014-ல் நான் நடித்த எந்த படமும் வெளி யாகவில்லை. ஆனால் அந்த ஆண்டை பொறுத்தவரை, நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையப் போகும் படங்களில் நடித்து வருகிறோம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. என் நம்பிக்கை இந்த ஆண்டில் பொய்க்கவில்லை. இரண்டு படங்களும் ஹிட் ஆகிவிட்டன. அதிலும் ‘காஞ்சனா 2’ வில் எனது நடிப்புக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என் நடிப்பை மற்றவர்கள் பாராட்டும்போது பெருமையாக இருக்கிறது. இதே வேகத்தில் இன்னும் பல வெற்றிகளைக் கொடுப்பேன்.
உங்களுக்கு சினிமாத்துறையில் லட்சுமி மஞ்சு மட்டும்தான் தோழியாமே. உண் மையா?
உண்மைதான். எனக்கு சினிமாத் துறையில் இருக்கும் ஒரே ஒரு தோழி அவர் மட்டும்தான். சினிமாத் துறையில் எனக்கு நிறைய தோழிகள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சினிமாத் துறைக்கும் என்னுடைய நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது என் கொள்கை. சினிமாவுக்கு வெளியில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள்.
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வது போல் காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு வாழ்வது சரி என்று நினைக்கிறீர்களா?
திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வது நல்லதுதான். திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து செய்தால் அது இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினையாக இருக்கும். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சினை. ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும்போது பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடலாம். இதனால் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.
இணையதளங்களில் நடிகை களை தவறான முறையில் சித்தரித்து வரும் வீடியோக்களை பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒரு நடிகையின் வீடி யோவை தவறாக உருவாக்கி இணையத்தில் உலவ விடுபவர்கள் கண்டிப்பாக புத்தி சரியில்லாதவர்களாகத்தான் இருப் பார்கள். நம் சமூகத்தில் நிறைய பேர் புத்தி சரியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகமாகிவிட்டது. இதற்கு காரணமாக இருப்பவர்களின் உடல் உறுப்பு களை செயலிழக்க வைக்க வேண்டும். அதுதான் பலாத்காரத்துக்கு சரியான தண்டனையாக இருக்கும்.
தற்போது உங்க ளைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் குறைந்து விட்டதே?
நான் அதே பெண்ணாகத்தான் இருக்கிறேன். வாழ்க்கையில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்று தெரிந்து கொண்டேன். இப்போதும் என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வரத்தான் செய்கிறது. நான் அவற்றைக் கண்டுக் கொள்வதில்லை.
உங்கள் திருமணம் எப்போது?
அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். நடித்தது போதும் என்று நினைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment