Saturday, April 11, 2015

துணை முதல்வர் - சினிமா விமர்சனம்

மஞ்சமாக்கான்பட்டின்னு ஒரு கிராமம்.அந்த  ஊர்ல ஆத்துக்கு  பாலம்  இல்லை.திமுக  வுக்கு  தெரிஞ்சிருந்தா  பாலம்  கட்றேன்னு ஒரு  பெரிய  தொகையை  சுருட்டி  இருப்பாங்க ,அதிமுகவுக்கு  தெரிஞ்சிருந்தா  அம்மா  பாலம்  கட்டி  இருப்பாங்க. ஆனா  படத்தில்  அதெல்லாம்  நடக்கலை. ஒவ்வொரு  கட்சியும்  ஆட்சிக்கு  வரும் முன் அதைப்பண்றேன், இதைப்பண்றேன்ன்னு  வாக்கு  குடுத்துட்டு  ஆட்சிக்கு வந்த  பின்  ஃபாரீன்  டூர்  தான்  போறாங்க , இல்ல  செஞ்ச  ஊழல்க்கு  ஜெயிலுக்கோ  கோர்ட்டுக்கோ  போய்ட்டு  இருக்காங்க.


இந்த  ஊர்  ஜனங்க  இதை  எல்லாம் பார்த்து  சலிச்சுப்போய்  அவங்க  ஆள்  ஒருத்தனை  சுயேச்சையா  நிக்கவெச்சு எம் எல் ஏ  ஆக்கிட்டா  பாலம்  கட்டிடலாம்னு  நினைக்கறாங்க..அந்த ஆள் தான்  நம்ம  ஆளு  ஹீரோ.

2  பெரிய  கட்சியும்   சம  பலத்தோட சீட்  பிடிச்சதும்  சுயேட்சை  எம் எல் ஏ  ஆன  ஹீரோ  அந்த  ஒரு  சீட்டை  வெச்சே  துணை முதல்வர்  ஆகிடறாரு.அதுக்குப்பின்  அவர்  என்ன  செஞ்சார் ? என்பதே  கதை. 


சத்யராஜ்  நடிச்ச எம் எல் ஏ உட்பட  பல படங்கள் ல பார்த்து சலிச்ச  கதை  தான். கே பாக்யராஜ்  திரைகதை என்பதால் சுவராஸ்யமாய் ஏதாவது  இருக்கும்னு  பார்த்தா  ஏமாற்றமே. 


ஹீரோவா கே  பாக்யராஜ். நீண்ட  இடைவெளிக்குப்பின். விக்கும்  தொப்பையும்  லேசாஉறுத்தினாலும்  அவர்  அக்மார்க் பிராண்ட்  காமெடி  காப்பாத்துது.  ஆனா  மார்க்கெட்  போன  பின்  மீண்டு வந்த  வடிவேலு , விவேக் இவங்க  எல்லாம்  கலக்க முடியாம  சமாளிப்பு  மட்டும்  செஞ்ச  மாதிரி இவரும்  சமாளிக்கிறார்  அவ்வளவே


 இன்னொரு  சப்போர்ட்டிங்  ஹீரோவா  ஜெயராம். ஓரளவு  காமெடிபண்றார்




 நாயகியா  ஸ்வேதா மேனன்.  இவரை ஆல்ரெடி தமிழன்  பல  மலையாளப்படங்கள்ல  / தமிழ்ப்படங்கள் ல அப்டி  இப்டி பார்த்துட்டதால  பெருசா  எதும்  கவர  முடியலை. தமிழனுக்கு  புதுசு புதுசா  திறமை  காட்டும் ஆள் தான்  வேணும். ஆல்ரெடி திறமை  காட்னவங்க  திறமையை  மறுபடி  மறுபடி  பார்க்க  மாட்டான். இவருக்கு  ஒரு  குத்தாட்டம்  உண்டு 


இன்னொரு நாயகியா  காதல் சந்தியா .  எப்டி  இருந்த  ஃபிகர்  இப்டி  ஆகிட்டாரேன்னு   தோண  வைக்கும்  உடல்  அமைப்பு .,அதிக  வாய்ப்பில்லை .



இது  போக  பாக்யா  ஆஃபீசில் வேலை  செய்யும்     எல்லாருக்கும்  ஒரு ரோல்   கொடுத்திருக்காங்க . சம்பளம் தான்  சரியாத்தர  முடியலை .அட்லீஸ்ட்  சான்ஸ்  தரலாமே  என்ற  நல்ல  எண்ணம் . பாராட்டலாம்.


ஒளிப்பதிவு  , இசை  , எடிட்டிங்  காட்சி  அமைப்பு   எல்லாம்  பழம்பஞ்சாங்கம் . மாடர்ன்  உலகத்துக்கு  அப்டேட்  ஆகலை .


பின் பாதியில்   நாடகத்தனமான  காட்சி  அமைப்புகள், நம்ப  முடியாத  சம்பவங்கள்





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  5 வயசு ஆகியும் நீ பையனுக்கு பால் தர்றியே?
ஏப்பா.நீ கூடத்தான் 35,வயசாகியும் பால் குடிக்கறே.#,து மு


2 ஆத்தைப்பார்த்தா உனக்கு என்ன நினைவு வரும்?
16 வயதினிலே ஸ்ரீ தேவி சேலையை தொடை வரை தூக்கிட்டு நடக்கும் சீன் # து மு


3 4 எழுத்து படிச்சவனை விட.4,பேருக்கு உதவி செய்பவனே உயர்ந்த்வர்.#து மு


4 இங்க்லீஷ்/ம்லையாளப்படம் பார்க்கறவன் எல்லாம் மொழி புரிஞ்சா பார்க்கிறான்.ஏதோ பாத்தோ ,சத்தத்தைக்கேட்டோ ஜாடைமாடையா புரிஞ்சுக்குவான் #து மு



5 குத்து விளக்கு சின்னம் கிடைச்சவன் குத்து விளக்கை வீட்டுக்கு வீடு கொடுத்துட்டான்.உனக்கு கிணறு சின்னம்.என்ன பண்ணப்போறே?#து மு






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்







1  நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தியாவின் நெ 1 திரைக்கதை வசனகர்த்தா கே பாக்யராஜ் ன் கதை திரைக்கதை வசனத்தில் துணை முதல்வர்

2 பாக்யராஜ் ன் பாக்யா ஆபீசில் ஒர்க் ப்ண்ற மணவை பொன் மாணிக்க்ம் ,இளசை சுந்தரம் உட்பட 12 பேரும் ஆஜர் #,து மு


3 சீனியர் படைப்பாளிக்ள் தன் வெற்றியைத்தக்க வைக்க காலத்துக்குத்தகுந்தாற்போல் அப்டேட் ஆக வேண்டும்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 ஓப்பனிங் சீன்ல  சைக்கிள்  கேரியரில்   மூட்டையை  வைக்கத்திணறும்  கிராமத்தானுக்கு அதை  சொல்லிக்கொடுக்கும் ஆள்  அதே  ஃபார்முலாவை  அவன்  குழந்தைக்கும்  யூஸ்   பண்ணும்  அப்பாவித்தனம்


2   ஹீரோவின்  குழந்தை   5 வயசாகியும்   பால்குடி  மாறாமல்  இருப்பதும்   டீச்சரிடம்   பம்முவதும் 

 அக்மார்க்  கே பாக்யராஜ்  டச்


3  ஜெயராம்  சந்தியா  பாக்யராஜ் சம்பந்தப்பட்ட  டபுள் மீனிங் டயலாக்  காட்சிகள்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஒரு  கிராமமே கொண்டாடும்  அளவு  அல்லது  ஓட்டுப்போடும்  அளவு  என்ன  சாதனை  ஹீரோ செஞ்சார்.? அவரை  பக்கத்துத்தெரு  ஆளுக்குக்கூடத்தெரியலை 


2  ஆளுங்கட்சியும்  , எதிர்க்கட்சியும்   பண பலத்துடன்  களம்  இறங்கும்போது  அதை எதிர்க்கும்  ஆள்  திருநாவுக்கரசு  போல்  தனி  செல்வாக்கு  வேண்டாமா?


3   என்னதான்  காமெடி  என்றாலும்  அம்மா - மகன்  பால்  குடிக்கும்  காட்சி  விரசம்,  அதை  வைத்து  எழுதப்பட்ட  லோ  கிளாஸ்  காமெடி  சீன்  சி செண்ட்டர்   ஆள்  கூட   கை தட்ட  யோசிக்கும்    காமெடி. எப்பவும்  டபுள் மீனிங் காமெடி  பெண்கள் ரசிக்கும் விதத்தில் நாகரீகமாக  சொல்வது அவசியம் . 


4   புருசன்   எம்  எல் ஏ  ஆகனும்  என்பதற்காக  தெருவில்  மனைவி  குத்தாட்டம்  போடுவதும்  அதுக்கு  அவர்  சொல்லும்  சால்ஜாப்பும் சகிக்கலை.எந்த  ஆண்மகனும்  தன்  மனைவியை  காட்சிப்பொருள்  ஆக்கி  பதவி  பெற  நினைக்க  மாட்டான்  (  சில மாமா  பசங்க  நீங்கலாக) 


5  பின் பாதியில்  ஹீரோ  செத்துட்டதா  டிராமா  போடுவது   ஹீரோயின்  விதவைக்கோலத்தை  ஏற்பது  அதை  ஒளிந்திருந்து   ஹீரோ  பார்த்து  அழுவது   எல்லாம்  சரோஜா தேவிக்கு  திரட்டி  சுத்துன  காலத்து  காட்சி  அமைப்புகள் 

6  ஆர்ட்  டைரக்‌ஷன்  மோசம்.  ஹீரோ  கே  பாக்யராஜ்  போல் சிலை  அமைக்கும்  காட்சியில்  அச்சு அசல்  எஸ் ஏ சந்திர சேகரன்  போலவே  சிலை . பெஞ்ச்  ரசிகனே  கத்தறான்.ஹய்யோ  அய்யோ 





சி  பி  கமெண்ட் - துணை முதல்வர் = கே பாக்யராஜ் எனும் யானைக்கு (மீண்டும் )அடி.சறுக்கியது -ஸி சென்டர் படம்,விகடன். மார்க் = 38 ,ரேட்டிங்= 2.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 38



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  டப்பா



 ரேட்டிங் =2.25 / 5

ஈரோடு தேவி அபிராமியில் ப்டம் பார்த்தேன். 8 பேர் தான் ஆடியன்ஸ் . இதே அபிராமியில் முந்தானை முடிச்சு , 120 நாள் இது நம்ம ஆளு 80 நாள் ஓடுச்சு . ஹூ,ம் அது ஒரு காலம்



a







0 comments: