Monday, April 13, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்சனம்

செயற்கையான  பாவனைகள்  செய்யாத  இயல்பான  யதார்த்தமான  நபர்களை  நாம்  வாழ்நாளில் அடிக்கடி சந்திப்பதில்லை . எப்போதாவது  ஒரு முறைதான் சந்திக்கிறோம். அது  போல்  மகேந்திரன் , பாலுமகேந்திரா  மாதிரி ஜாம்பவான்கள்  இயக்கிய படங்கள்  போல்  யதார்த்தமான  , இயல்பான  , மசாலாத்தனம் , வன்முறை  இல்லாத கண்ணியமான படங்கள் தமிழில்  எப்போதாவதுதான்  வரும். இப்போ  வந்திருக்கு, விருதுக்குரிய இந்தப்படம்  பற்றிப்பார்ப்போம்..


சென்னையில் வீடு  குடி  இருக்க  கிடைக்காமல்  பிரம்மச்சாரிகள் எப்படி எல்லாம்  கஷ்டப்படறாங்க  என்பதுதான்  கதையின்  கரு. ஆனால்  அதில்காதல்   தியாகம்  குரோதம்  பிரிவு எல்லாம் கலந்து  கட்டிய  விருந்தாய்  திரைக்கதை. 


ஒரு   ரூம்ல  நண்பர்கள்  4 பேர்  இருக்காங்க .அவங்களுக்குள்  எழுதப்படாத  ஒப்பந்தம்  யாராவது அவங்க கேர்ள் ஃபிரண்டை ( சும்மா  பேசிட்டு  இருக்க  )  ரூமுக்கு  கூட்டிட்டு வந்தா  மத்தவங்க மொட்டை  மாடிக்குப்போயிடனும்.  இந்த  டீலிங்க் ல  போய்க்கிட்டு  இருக்கு  அவங்க லைஃப் 


 ஹீரோயின் ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி டைவர்ஸ்  ஆகி  தனியா இருக்கும்  நபர். நாயகனுடன்  அவரது  சந்திப்பு  மிக  யதார்த்தமாய் , கவித்துவ மாய்  அமையுது. நாயகன்  டார்கெட்   காரியம்  முடிஞ்சதும்  கழட்டி விடுவது . ஆனா  நாயகி  அதுக்கு ஒத்துக்கலை .  பல மாசமா அவங்க தனியா  ரூம்ல நேசமா  இருந்ததால  நாயகி  3  மாசமா  மாசமா ஆகிடறா ( அடேங்கப்பா!எத்தனை  மாசம் இந்த  லைன்ல ) 


நாயகன்   கலைக்கச்சொல்றான்.நாயகி அடமா கலைக்காம  குழந்தை பெத்துக்குது. நாயகன்  பயந்து  ரூமைக்காலி  பண்ணி எஸ் ஆகறான். நாயகி  அவனைத்தேடி  ஆஃபீஸ்  வரை  வர்றா. அவன் அங்கே  இருந்தும்  எஸ் ஆகறான். இது  ஒரு டிராக் 


 இன்னொரு நாயகன்  , இன்னொரு வீடு . ஹவுஸ்  ஓனர்  பொண்ணோட  காதல் இது  தனி  டிராக்


 இந்த  2  டிராக்கும்  எந்தப்புள்ளியில் இணையுது .  யார் யார்  யார் கூட  சேர்ந்தாங்க  என்பது  பின் பாதி திரைக்கதை 



நாயகனா  ஒரு புதுமுகம்    சுமாரான  நடிப்பு .  சீட்டிங்  இளைஞனா  நல்ல  சுறுசுறுப்பான  தோற்றம் . பின்  பாதியில்  குழந்தையைப்பார்த்து மனம்  உருகுவது   அருமை  


இன்னொரு  நாயகனா  பாபி  சிம்ஹா . கண்ணியமான  நடிப்பு . படம்  ஆரம்பிக்கும்போது இவர்  செகண்ட்  ஹீரோ , ஷூட்டிங்  பிராசஸ் ல  இருக்கும்போது  இவரது  படங்கள்  ரிலீஸ்  ஆனதால்  பின்  பாதியில்  இவரை  ஹீரோவாக்கும்  முனைப்பு . எப்படிப்பார்த்தாலும்  இவருக்கு  இது முக்கியமான  படம் 

 நாயகியாக   பனிமலர்  . அருமையான  நடிப்பு  . காதல்  கொள்வது  .சோகம்  எல்லா  உணர்வுகளையும்  கண்களிலேயே  வெளிப்படுத்துவது  அருமை. இவரது பாடி லேங்குவேஜ்  அட்டகாசம் . சிரிக்கும்போது  பிரபல  பெண்  ட்வீட்டரை  நினைவு படுத்தறார்


இன்னொரு நாயகியாக  நிஷா . இவர்  வரும்  காட்சிகள் குறைவு  என்றாலும்  நல்ல  ஹோம்லி  லுக் பூவேலி  கவுசல்யா  போல்


பின்னணி இசை  பல இடங்களீல்  அபாரம் . காட்சி  சொல்ல வேண்டிய  உணர்வுகளை  இசை சொல்லி விடுகிறது . ஒளிப்பதிவு  அபாரம் .எடிட்டிங்  , இயக்கம்  , திரைக்கதை  என  எல்லா  அம்சங்களும்  அபாரம்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  சூரியனின் கனவு நிழல்.
ஆணின் கனவு பெண் # செ உ அ வ


2 வீடு என்பது கிட்டத்தில் இருக்க வேண்டும்.நமக்கு வேண்டியவர்கள் எப்போதும் நம் பக்கத்தில் இருக்க வேண்டும் -விக்ரமாதித்யன் கவிதை ,வீடுபேறு #செஉ



3  உங்க.படம் ஏன் டிராப் ஆகிடுச்சு ?




மருதநாயகமே டிராப் ஆகுது. #,செ உ அ வ



 4  சினிமாக்காரனுக்கு நாட்டையே தூக்கிக்கொடுப்பானுங்க.ஆனா வாடகைக்கு குடி இருக்க வீடு தரமாட்டானுக.#,செஉஅவ




5 எந்த ஒரு பையனாவது ஒரே ஒரு பொண்ணோட நிறுத்திக்கறானா ? #செ உ அ வ




6 மச்சான்.உன் ரூம் ல ஒரு நாள் தங்கிக்கலாமா?





இடமே இல்லை.என் மேல தான் படுக்கனும்
பரவால்லியா?#செஉஅவ


7  பொதுவா இந்த பசங்க எல்லாம் பொண்ணுங்களை யூஸ் பண்ணிட்டு கழட்டி விடத்தான் பார்ப்பானுங்க #செஉஅவ


டேய்.என்னை மேரேஜ் பண்ணிக்கும் ஐடியா இருக்கா?இல்லையா?



உன்னை மட்டுமில்ல.ஐஸ்வர்யாராய் ,அனுஷ்கா எல்லாரையும் பண்ணிக்கலாம்னு ஆசை #செஉஅவ


புல் டைமா ரூமைக்கூட்டிட்டு பார்ட் டைமா வேலை தேடிட்டு இருக்கார்னியே அது இவர் தானா ?#செஉஅவ


10  இங்க பாருடி.என் மேல நம்பிக்கை இருக்கா?இல்லையா?


கொஞ்சம் கூட இல்லைடா #,செஉஅவ


11 லுங்கி கட்டி இருக்கறவனை எல்லாம் இந்தப்பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாளுங்க.பேன்ட் சர்ட் போட்டிருந்தாதான் மதிப்பாங்க போல # செஉஅவ


12 உன்னை மாதிரி பொண்ணுங்க வேலைக்குப்போறதே வேலைக்குப்போகும் மாப்ளையை கட்டிட்டு செட்டில் ஆகறதுதானே?#செஉஅவ


13  மாப்பி.2000 ரூபா பணம் வேணும்



பணம் இல்லை.புரியுதா?


ம்


புரியலைன்னா சொல்லு.இன்னொருக்கா சொல்றேன் #செஉஅவ


14  மாப்ளை.பணம் வேணும்.


சாரிடா.இங்க டவர் இல்ல.கேட்கல.


அடேய்.டவருக்குப்பக்கத்துலதானே குடியே இருக்கே? #செஉஅவ



15  ஊர்ல இருந்து சினிமா எடுக்கலாம்னு கிளம்பற பூரா பயலும் விஜய் படம் எடுக்கலாம்னுதான் பஸ் ஏறுறாங்க # செஉஅவ


16 நீ என்ன வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு பெண் உன் அருகில் இல்லை எனில் வாழ்க்கை வெறுமை ஆகி விடும் ஒரு கட்டத்தில் #,செஉஅவ


17 நாம எல்லாம் வேஸ்ட்டுடா.அவனைப்பாரு.என்ன டைம்ல என்ன வேணுமோ அதை அவன் அனுபவிக்கிறான் # செ உ அ வ






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது = நேர்த்தியான திரைக்கதை ,இயல்பான காட்சி அமைப்பு ,இயக்குநரின் ஆளுமையில் ... இடைவேளை.சபாஷ்


2 பிரம்மச்சாரிகள் சென்னையில் வாடகை வீடு பிடிக்க எப்படி கஷ்டப்படுகிறார்கள்?என்பதை பதிவு செய்த முதல் தமிழ்ப்படம் = செ உ அ வ






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   ஹீரோவின்  அம்மா  சீரியஸ்  என்று அண்ணன்  ஃபோன்  பண்ணியதும்  ஹீரோ பஸ்  ஸ்டண்டில்  இருக்கும்போது  நாயகி  ஃபோன்  பண்ணி தனிமையில்  இருக்கேன் .  வந்தா   கில்மா  நிச்சயம்  என  அறைகூவல் விடுக்கிறார் (  ரூம்க்கு வா = அறை  கூவல்) நாயகன்  தடுமாறி  அம்மாவை  அம்போன்னு விட்டுட்டு  ரூம்க்கு  போறார். அப்போ  அம்மா இறந்த  செய்தி  வருது . இது   செம  செண்ட்டிமென்ட்  சீன்  . அபாரமான  நடிப்பு   இசை எடிட்டிங்  


2   அண்ணன்  பையனுக்கு  சைக்கிள்  வாங்கித்தர  முடியாம  அவதிப்படுவதும் , ஒவ்வொரு முறை அவன்   கேட்கும்போதும்  துடிப்பதும்    டச்சிங் சீன் 


3   ஷேர்  ஆட்டோவில்   நாயகனும்  நாயகியும்  முதல்  முறையாக   பயணம்  செய்யும்போதும்  ஒலிக்கும்  பின்னணி  இசை  அபாரம் .


4 மழைத்துளிகள்  வாழ்க்கையிலே  பாடல் காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  அற்புதம் 


5    கேர்ள்  ஃபிரண் ட்  ரூம்க்கு  வர்றா  என்றதும்  நண்பர்களை  மொட்டை  மாடிக்கு அனுப்ப  படாத  பாடு படும் சீன் 



6  தன்னை   மோசடி  செய்ய  நினைத்த  நாயகனின்  ஆஃபீசை  கண்டு  பிடித்து நாயகி ஆஃபீசுக்கு  வரும்ப்போது  ஒலிக்கும்  பின்னணி இசை அருமை 


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  நாயகனின்  அலை பேசி  எண்ணை  வைத்து  அவரது  வீட்டு அட்ரசை  கண்டு  பிடிக்கலாமே? நாயகி  ஏன்  முயற்சிக்கலை? 


2  நாயகனின் ஆஃபீசில்  வாசலில்  7  நாட்கள்  காத்திருப்பவர்  ஆஃபீசுக்கு உள்ளே  போய்  மேனேஜரைப்பார்த்தா   வீட்டு விலாசம்  கிடைச்சிருக்குமே? 

3   தன்னுடன்  கருத்து  வேற்றுமை  கொண்ட  நண்பன்  காதலியிடன்  தன்னைக்காட்டிக்கொடுப்பான்  என  நாயகனால்  யூகிக்க  முடியாதா? வேற  ஆஃபீசுக்கு  ஷிஃப்ட் ஆகி  இருக்கலாமே? 


4    நாயகன்  குழந்தையைப்பார்த்ததும் மனம்  மாறுவது  இன்னும்  இயல்பாய்  நம்பகத்தன்மையாய்  சொல்லி  இருக்கலாம்


5   வீடு  கிடைப்பதே  குதிரைக்கொம்பாய்  இருக்கும்போது  ஹவுஸ்  ஓனர்  லேடியிடம்   ஜஸ்ட்  வெத்திலை  பாக்கு  வாங்கித்தர  அவன்  எரிஞ்சு  எர்ஞ்சு  விழுவது செயற்கை. அழகான  பெண்  உள்ள  ஹவுஸ்  ஓனர்  லேடியிடம்
யாராவது எரிஞ்சு விழுவாங்களா?


சி  பி  கமெண்ட்  -  சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - முன் பாதி காதல் கலாட்டா ,பின் பாதி மனதைத்தொடும் கதை ,விகடன் மார்க் =46 ,ரேட்டிங்.= 3.75/5

ஏ  செண்ட்டர் ரசிகர்களைக்கவரும்  பிரமாதமான  படம்   . டோண்ட்  மிஸ்  இட் . லேடீசும்  பார்க்கலாம், மிக கண்ணியமான  படமாக்கம் . 2015 ல்  வந்த  முக்கியமான  யதார்த்தப்படம்






ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சூப்பர்



 ரேட்டிங் =3.75/5



ஈரோடு ஸ்ரீ  கிருஷ்ணாவில்  படம்  பார்த்தேன். 

0 comments: