Thursday, April 30, 2015

பொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக்

1  மாவு  ஆட்டும்போது  கிரண்டர்ல கை விரல்  பட்டு  ரத்தம்  வந்தா  அதை  அப்டியே   ஒரு  ஃபோட்டோ  போட்டு  மாஃஃபியா , அழகு  சோஃபியா-னு  பில்டப்



====================



 2  காலைல 10  மணிக்கு  கடலை போட்ட பொண்ணு கிட்டே ஒருத்தன்  இப்போ ஃபேஸ்புக்ல “லாங்க் டைம் நாட் ஸீ?” -னு கேட்கான்.அடேய்



======================



3  உடைமை உணர்வில் கேட்கப்படும்  கேள்விகள் ,விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இவை  ஆணின் நேசத்தின் ஆழம் என்பதை எந்தப்பெண்ணும் புரிந்துகொள்வதில்லை




=============================




எதற்கெடுத்தாலும்  அழுவது  பெண்.எப்போதாவது  அழுவது  ஆண்.பெண்ணின்  அழுகைக்கு 1008  காரணங்கள் இருக்கும், ஆணின் அழுகைக்கு பெண் மட்டுமே காரணி




===================



புதுவசந்தம்  படத்துல சித்தாரா கேரக்டருக்கு கவுரின்னு பேர்  வெச்ச  இயக்குநர்  விக்ரமன்  வாட்சப்கவுரி  மேட்டர்  தெரிஞ்சா  நொந்திருப்பாரில்ல?




================




ஏம்மா! அது துவண்டு போதல்ம்மா. நான்  டிக்சனரில  அரைமணி நேரமா  தூவண்டு அப்டின்னா  என்ன அர்த்தம்னு  தேடிட்டு இருக்கேன், அய்யோ ஊர்மிளா




====================




7  சிக்கா  விருது வழங்கும் விழாவுக்கு  சுஹாசினி  லோஹிப் & ட்ரான்ஸ்பரண்ட்  சேலைல  வந்ததை  யாரும்  விமர்சிக்க வேண்டாம்,விமர்சனம் பிடிக்காது




=============================





8  புதியவன் அந்த டபுள் மீனிங் ட்வீட் புரியாதவர் போலவே நடிப்பதும் கேள்வி சந்தேகம் கேட்பதும் ஆஹா! நல்ல கலைஞர் யா நீர்



==============



9 என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும் வெய்யில் அடிச்சாலோ சொந்த சம்சாரம் அடிச்சாலோ திருப்பி அடிக்க முடியாது






==================




10 முதல் தோசை பிஞ்சுடாம இருக்கனும்னா தோசைக்கல்லை நல்லா பழக்கி வெச்சிருக்கனும்.முதல் காதல் புட்டுக்காம இருக்கனும்னா காதலியிடம் நல்லாஆ பழகனும்




=============



11 நல்லவேளை.ஜோதிகா நாயகி.சுஹாசினியா இருந்தா 36 வயசு ஆனவங்க தான் 36 வயதினிலே படம் பார்க்கனும்னு சொல்லி இருப்பாங்க



=================



12 நாட்டிலஎல்லா ஆண்களுக்கும் பிடிச்சாு நாட்டுக்கட்டை.

ஊட்டில இருந்து உருட்டி விட்டா எங்கயும் நிக்காம குன்னூர் வந்துட்டா அது உருட்டுக்கட்டை


==================


13 பஸ்ல பொண்ணுங்க சேலை முந்தானையை சரி செய்யும் வரை முகத்தை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன்.


==============

14 அடெங்கப்பா.பஸ் ல ஒரு பொண்ணு ஒத்தை ஜடை ல ஒன் பை ஒன் னா மேலிருந்து கீழா 8 ரோஜாப்பூ வெச்சிருக்கு.ஆபீஸ்க்கு போகுதா?பர்ஸ்ட் நைட்க்கா?


==============

15 ஓ காதல் கண்மணி  ஹாலிவுட் படமான Friends with Benefits (2011) படத்தின்  தழுவல்  என  தகவல்.மவுஸ் யூஸ்  பண்ணாமல்  கிடைத்த தகவல் இது


========================


16  சில  பிரபல  ட்வீட்டர்கள்  பொண்ணுங்களை  டா  போட்டும்  பசங்களை  டி  போட்டும்  கூப்ட்டு  பேசிக்கறாங்க. இதுதான்  ஃபேசன் போல


======================


17 பொண்டாட்டிங்க  எதுனா  கேள்வி  கேட்டு  நமக்கு பதில்  தெரியலைன்னா ம்ம்ம்ம்  சரி சரி அப்டினு சமாளிச்சிடனும்.எதிர்த்துப்பேசக்கூடாது


==========================


18 இந்தப்பொண்ணுங்க  எல்லாம்  டிபி ல முகத்தை  ஒரு சைடு  மூடிக்கறாங்க.ஒன் சைடு  லவ்  போல


==================


19  அந்த ஆடியோ இருக்கு இந்த வீடியோ இருக்கு.வேணும்னா போன் நம்பரை டிஎம் பண்ணுங்க"னு பொண்ணுங்க நெம்பர் வாங்க ட்ரிக் பண்ணுவான் நெட் தமிழன்


==============


20 என்னமோ ஐ ஏ எஸ் கலெக்டர் மாதிரி இந்த காதலிங்க பீச்க்கு வந்தா 10 நிமிசத்துல நான் கிளம்பறேன்.வீட்ல ஒர்க் இருக்குன்றாங்க


=============

நித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு பேட்டி

  • படம்: எல்.சீனிவாசன்
    படம்: எல்.சீனிவாசன்
தமிழ் ரசிகர்களை ‘ஓ காதல் கண்மணி’ மூலமாகக் கவர்ந்திருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமா, கேரள சினிமா, ஃபகத் பாசிலுடனான நட்பு, அப்பா மம்மூட்டியின் பங்களிப்பு என ‘தி இந்து’ தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட்டீர்களே…
ஒரு கனவு நனவான மாதிரி இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. எல்லாம் கடவுளின் ஆசீர்வாதம். மணி சார் படங்களுக்கு நான் அவ்வளவு பெரிய ரசிகன். இந்தப் படத்துக்காக அவர் அழைத்துப் பேசியதிலிருந்து இப்போதுவரை நடந்தது அனைத்துமே ஒரு கனவு போலவே இருக்கிறது.
ஒரு பக்கம் சீரியஸ் மலையாளப் படங்கள். அதற்கு இணையாகக் காதல் படங்கள். உங்களை எந்த மாதிரியான நடிகர் என்று சொல்ல விருப்பம்?
எந்த மாதிரியான படங்களிலும் நடிக்க முடியும் என்று மக்கள் நினைக்க வேண்டும். எந்தக் கதாபாத்திரத்துக்கும் நான் சரியாக இருப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும். எனக்கு இந்த வகை சினிமா மட்டும்தான் என்றில்லை எல்லா வகையான படங்களும் பார்ப்பேன். அதைப் போலவே எந்த வகைப் படத்திலும் நடிக்கத் தயார்.
உங்கள் வளர்ச்சியை ஒரு அப்பாவாக மம்மூட்டி எப்படிப் பார்க்கிறார்? தலையீடு செய்வதுண்டா?
எனக்கு என்ன தெரியுமோ, அதில் சிறந்தது எதுவோ அதை நான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். நடிப்பில் அப்பாவுக்குத் தேசிய விருது கிடைத்தபோது என்னிடமும், அக்காவிடமும் “நீங்க என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்கணும்” என்று சொன்னார்.
எப்போதுமே படப்பிடிப்பில் இருந்ததால் எங்களைப் பார்த்துக் கொண்டது எல்லாம் கம்மிதான். எப்போதுமே திட்ட மாட்டார், அடிக்க மாட்டார். எனக்கு அப்பாவே ஓர் உதாரணம்தான்.
அதேபோல என்னுடைய விஷயங்களில் எப்போதுமே அப்பா தலையிட்டதில்லை. என்ன முடிவு என்றாலும் நீயே எடு, தப்பாக வந்தாலும் சரி, சரியாக வந்தாலும் சரி அதிலிருந்துதான் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்வார். நடிப்பு மட்டுமல்ல, எனக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பாதான் ரோல் மாடல்.
இந்திய அளவில் தரமான படங்களைத் தருவதில் மலையாளத்துக்கு முக்கியமான இடம் உள்ளது. ஆனால், சினிமா வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லையே?
தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே திரையரங்குகள் அதிகம். மாநிலங்களும் பெரியவை. கேரளாவில் திரையரங்குகள் குறைவு. இந்தித் திரையுலகம் என்று எடுத்துக்கொண்டால் அதன் வியாபாரம் உலகம் முழுவதும் இருக்கிறது. நிறைய மக்களுக்குத் தமிழ் மொழி தெரியும். ஏன் கேரளாவில்கூடத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார்கள்.
இப்போது எங்களால் முடிந்த அளவுக்கு சப்-டைட்டில் போட்டு இந்திய அளவில் மலையாளப் படங்களை வெளியிட முயற்சி செய்கிறோம். ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மலையாளப் படங்களுக்கு நல்ல விமர்சனம் வருகிறது. ஒரு படத்தை வேறு மொழியில் ரீமேக் பண்ணும்போது அதன் அசல்தன்மை போய்விடும். அதே வேளையில் அந்தந்த மொழியில் சப்-டைட்டில் சேர்த்தாலே போதும். படமும் புரிந்துவிடும், படத்தின் அசல்தன்மையும் குறையாது.
மலையாள சினிமாவில் சக நடிகர்களில் ஒருவரான ஃபகத் பாசிலுக்கு நெருக்கமானவர் நீங்கள். அவர் பற்றிச் சொல்லுங்கள்..
ஃபகத்தைச் சின்ன வயதிலிருந்தே தெரியும். இயக்குநர் பாசில் எனது குடும்ப உறுப்பினர் மாதிரி எனது திருமணம் நடந்தபோது அனைத்து வேலைகளையும் பார்த்து, அனைவரையும் வாசலில் நின்று வரவேற்றார். அதே போல, ஃபகத்துக்குத் திருமணம் நடந்தபோது அவன் பின்னால் நான் இருந்தேன். ஃபகத், நஸ்ரியாவைத் திருமணம் பண்ணியது ரொம்ப சந்தோஷம்.
நஸ்ரியாவும், எனது மனைவியும் நெருங்கிய தோழிகள். ஃபகத்துக்கு இருக்கும் திறமை அவனுடைய வயது நடிகர்களில் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதுதான் உண்மை. அவனுடன் எனக்கு இருக்கும் நட்பை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போட்டியாக நான் நினைக்கவில்லை. நான் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கும், அவன் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு எனக்கும் எப்போதுமே இருக்கிறது.
சென்னை எந்த அளவுக்கு உங்களுக்கு நெருக்கம்?
சொன்னால் நம்பமாட்டீர்கள்..கேரளாவைவிடச் சென்னையில்தான் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன். பள்ளி வாழ்க்கை எல்லாமே சென்னையில்தான். கல்லூரி மட்டுமே அமெரிக்காவில் படித்தேன். எனக்கு இங்கு நண்பர்கள் அதிகம். என்னுடைய அப்பா, அம்மா கட்டிய முதல் வீடு சென்னையில்தான் இருக்கிறது. எனக்குப் பிடித்த நகரம் எப்போதுமே சென்னைதான்.
தமிழக - கேரள சினிமா ரசிகர்கள் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
இரண்டு மாநில சினிமா ரசிகர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சினிமாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பார்க்கிறார்கள். எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். அவர்களுக்குப் பிடித்த நடிகர்களைக் குடும்பத்தில் ஒருவரைப் போலக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு அந்த நடிகரை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் வெளிப்படுத்துகிறார்கள்.
இங்கேயும் என்னை ஒரு கேரள நடிகராகப் பார்க்காமல், எப்படி நடித்திருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டு மாநில ரசிகர்களையும் எனக்குப் பிடிக்கும். சினிமாவுக்கு மொழியோ பிராந்திய உணர்வோ தேவையில்லை. அதில் வாழ்க்கை இருந்தால் கொண்டாடிவிடுவார்கள்.

நன்றி - த இந்து

ANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவி)

கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.
கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.


எறும்பு தின்பண்டங்களை மட்டுமா அரிக்கும்? மனதை அரித்து மன நோயாளியாக மாற்றுவதற்குகூட எறும்பைக் குறியீடாகக் கொள்ளலாம்.
எம்எல்எம் எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் சாதாரண மக்களை எப்படியெல்லாம் பாதிக் கிறது என்பதை சமீப ராஜதந்திரம் படம் வரை தமிழில் பார்க்கிறோம். சமீபத்திய படங்களில் எம்எல்எம் பற்றிய பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது. வங்கதேசத்தில் கூடத்தான். ‘எறும்பின் கதை’ படத்திலும்.
வங்கதேசம் பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். பாபர் மசூதி இடிப்பின்போது அங்கு இந்து மக்கள் மீதான வன்முறைகள் பற்றி ‘லஜ்ஜா’ நாவலில் எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் துரத்தப்பட்டு இந்தியாவில் வாழ்கிறார்.
3 வருடங்களுக்கு முன்பு நான் தாக்கா சென்றிருந்தபோது, வங்கதேசத் திரைப்படம் ஏதாவது ஒன்றை பார்க்க விரும்பினேன். அங்கு திருப்பூரைவிட பனியன் உற்பத்தி அதிகம். கூலி குறைவு. கொத்தடிமைத்தனமான பனியன் தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டேன் . திரைப்படம் பார்க்கும் ஆசையும் இருந்துகொண்டே இருந்தது.
உள்ளூர் நண்பர்கள் வேண்டாம் என்றனர். ‘‘இந்தியாவில் எடுக்கப்படும் இந்தி படங்களின் மோசமான பதிப்புகள்தான் எங்களூர் படங்கள்’’ என்றனர். இதை மறுக்கும் விதமாக சில அபூர்வமான படங்களும் வெளிவருகின்றன. சமீபத்தில் வந்த வங்கதேச படம் ‘எறும்பின் கதை’.
தாக்காவை அதன் அழுக்குத்தனத்தோடு சரியாகக் காட்டியிருக்கும் படம். நகரத்தின் புனித வாழ்க்கையும் நுகர்வு சார்ந்து பழகும் மக்களின் இயல்பும் ‘மித்து’ என்ற வேலையில்லாத இளைஞனை ரொம்பவும் பாதிக்கிறது. எம்எல்எம்-ல் சேருகிறான். ஓட்டை கைபேசி வைத்திருக்கிறான். நிர்வாகம் நல்லதாக வாங்கச் சொல்ல, புதியது வாங்கச் செல்கிறான். பழைய கைபேசி விற்கும் ஒருவனிடம் இருந்து பாதி விலைக்கு வாங்குகிறான்.
அது ஒரு நடிகையின் கைபேசி என்பதும், அவளிடம் இருந்து தொலைந்துபோனது என்றும் பின்னர் அவனுக்குத் தெரிகிறது. அவள் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள் என்கிறாள். அவள் தரும் அன்பளிப்பை மறுத்து எம்எல்எம்-ல் சேரச் சொல்கிறான். அவளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தர, எம்எல்எம்-க்கு வலு சேருகிறது.
அவளது கைபேசியில் இருந்த வீடியோ காட்சி ஒன்றை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தன்னுடன் நட்பைத் தொடர்ந்தால் அதை வெளியிட மாட்டேன் என்றும் கூறுகிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். திரைப்படத்தில் நடிப்பதுபோல, பத்து நிமிடத்துக்கு கணவன் - மனைவியாக நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். அவள் ஏற்றாலும் பிறகு, எரிச்சலடைந்து அவனைத் துரத்திவிடுகிறாள். தனது உதவியாளர் மூலம் வீடியோ காட்சியைப் பெற முயற்சிக்கிறாள். வீட்டுக்குச் சென்று மிரட்டுகிறாள். வீடு களேபரமாகிறது.
எம்எல்எம் நிறுவனத்திலும் சோதனை. கம்பெனி மூடப்படுகிறது. முதலீட்டாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். வீட்டுக்கு வந்து தொல்லை தருகிறார்கள். நடிகையின் வீடியோ தொந்தரவு வேறு. ஓடி ஒளிகிறான். நண்பனின் துணிக்கடையில் இரவு நேரங்களில் துணிபொம்மையுடன் படுத்துக்கொள்கிறான். தொந்தரவுகள் அவனை அலைக்கழிக்கின்றன. மனநிலை பிசகு ஏற்படுகிறது. ‘‘அம்மா நான் பழையபடி ஆகணும். பள்ளிக்குப் போகணும்’’ என்று அரைக்கால் சட்டை, பை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.
திருமணமாகாத தங்கை, ‘‘அண்ணா, இந்த தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க நீ நடிக்கிறாய்தானே.. ஆமாம் என்று சொல், சொல்’’ என்று கதறுகிறாள். உடம்பில் எறும்பு ஊர்வதுபோல அவனை பிரச்சினைகள் சூழ்ந்து அரிக்கின்றன. பிரச்சினைகளால் மாறும் மனநோயின் கூறுகளை அவனது நடவடிக்கைகள் காட்டிக்கொண்டே இருக்கின்றன.ஒரு இளைஞனை தடுமாற வைக்கிற எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இந்த காட்சிகளை இந்தியச் சூழலிலும் வெகுவாகப் பொருத்திப் பார்க்கலாம்.
இதில் அழுக்கான தாக்கா, வறுமை சார்ந்த வாழ்க்கைகள், தடுமாறும் அரசியல் என சமூகப் பாதுகாப்பு இல்லாத வங்கதேச மக்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளலாம். இதில் வரும் அப்பா கதாபாத்திரம் நோயாளியான நிலையில் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார். அரசியல்வாதி களும் அப்படித்தான் எதையும் கண்டுகொள்ளாமல் தாக்காவை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறார்களோ என நினைக்கச் செய்தது.

நன்றி - த இந்து


சுப்ரபாரதிமணியன்

எமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா?

1  பிரதமர் மோடிக்கு சசிதரூர் பாராட்டு #  இவரு  மனைவியை  விட்டுத்தள்ளியவர் , அவரு  மனைவியைபோட்டுத்தள்ளியவர்,நல்ல  ஜோடி


===========


2 கமலின் புதிய படத்தில் த்ரிஷா #,இதுக்கு வருண் மணியன் ஒத்துக்கிட்டாரா?பெரிய தியாகியா இருப்பார் போல



===========



3 தமிழகத்தில் பலம்


பொருந்திய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும்-தமிழிசை
# எல்லாரும் கை குத்தல் அரிசி சாப்பாடு சாப்பிடுவாங்க்ளோ?


==============


4 அமெரிக்காவில் யாரும் தாலி கட்டுவதில்லை-திருமாவளவன் #  அமெரிக்கால அவுட்  சைடு  போனா  கால் கழுவக்கூட  மாட்டாங்க, பேப்பர்தான்.அதுக்காக?


===================


5  காங்கிரஸ் பலம் தேர்தல் நேரத்தில் மேடையில் தெரியும்-குஷ்பூ#மக்களின்  பலம்  தேர்தல்  முடிந்க்த பின்  வாக்கு எண்ணுகையில் தெரியும்  மேடம்



=========================


6   ஊழலில் சீரழிந்து வருகிறது தமிழக சுகாதாரத்துறை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # லாங்  லீவ்ல  போய் இருந்தாரே  ராகுல்?  வந்துட்டாரா?



===================

7  இந்த அரசு ஏழைகளுக்கானது’ பிரதமர் மோடி பேச்சு.. முன்னெறனும்னு டெய்லி ஃபாரீன் டூர் போயி சிரமப்படுவதைப்பாத்தா  கண்  வேர்க்குது


====================


பாரில்  ஃபாரீன்   நடன அழகிகளுடன் ஆபாசம் போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்#நம்மநாட்டுப்பொண்ணுங்களோட ஆடி  இருந்தா  தப்பில்லைபோல



===============

9மேக் இன் இந்தியா" இல்லை, விவசாயிகள் நிலத்தை பிடுங்க பிரதமர் மோடி விருப்பம் - ராகுல்காந்தி #  வாங்க  சார்  வாங்க.விஸ்வரூபம் 2  போல 


===================


10  டெல்லியில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரெயில்கள் விரைவில் அறிமுகம் # அப்டியே  டிடிஆர் , செக்கர்  இல்லைன்னா  டிக்கெட்டும்  எடுக்கத்தேவை இல்லை



======================


11 நீதித்துறையில் முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் # குறிப்பா  ஜெ , கலைஞர் , சோனியா, ஆ ராசா  வழக்குகள்


======================


12  இளையதளபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்-எமி ஜாக்சன் # நீங்க நடிக்க ரெடி,அவரு  நடிக்க ரெடியா? ஐ  மீன்  உங்க  கூட  நடிக்க ரெடியா?


========================


13  நிதி கொடுக்க மனம் வேண்டும் - கருணாநிதி  ! என்ன? கண்ணாடியைப்பார்த்துப்பேசிட்டு இருக்கீங்க போல ?



======================


14 ரோமியோ ஜூலியட் படக்குழுவிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்! #  கடைசில 1000  ரூபா  கொடுத்து  பைசல்  பண்ணிடுவாங்க


=====================

15  பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி மறுப்பு # பொண்ணுங்க  இல்லைன்னா  இருக்குன்னு  அர்த்தம்னு கொல்லிமலை சித்தர் கனவில் சொன்னார்


========



16  பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது: திருமாவளவன் # ஆமா 2  பேரும்  ரொம்ப ரோஷக்காரங்க.ஒரு கூட்டணில  எப்படி 2 ஜாதி?



===================

17  கோவையில் 3 ஆயிரம் பாம்புகளை பிடித்த என்ஜினீயரிங் மாணவிகள் # பாம்புன்னா படையே  நடுங்கும், பொண்ணுங்கன்னா  பாம்பே நடுங்கும்



=====================


18  புதிதாக வாங்கப்பட்ட 430 அரசு பஸ்கள் இயக்காமல் முடக்கம்: ராமதாஸ் குற்றச்சாட்டு.# தீர்ப்பு வரும் வரை  காத்திரு(ங்க)


=========================


19  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்தக்கோரி அதிகாரிகள்–ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம். # அப்பாடா, நாளை  நெட்  கட் ஆகாது


=====================


20 சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்திய பெண் பயணி அமீனா சிக்கந்தர் கைது.# நேமாலஜி  மேட்சிங்.சிக்கிட்டார்

=====================

Wednesday, April 29, 2015

ஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா

பி.வி.ஆச்சார்யா | கோப்புப் படம்
பி.வி.ஆச்சார்யா | கோப்புப் படம்
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியதற்கான காரணங்களை விவரித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்துள்ளார். 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்படுவது தொடர்பான செய்தி நேற்று வெளியானது. இதையடுத்து அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தயாரிக்கும் பணியில் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் இறங்கினர். சுமார் 12 மணி நேர ஆய்வுக்கு பின்னர் 18 பக்க வாதத்தை அவர்கள் தயாரித்தனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பாட்டீலிடம் ஆச்சார்யா தனது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். 18 பக்கங்களில் 23 அம்சங்களை எழுத்துபூர்வமாக வைத்தார் பி.வி.ஆச்சார்யா.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்த வழக்கில், கர்நாடக அரசை எதிர் மனுதாரராக சேர்க்காமலேயே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு. குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த வழக்கை விசாரித்த ஒரே காரணத்துக்காக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜெயேந்திர சரஸ்வதி மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, இந்த வழக்கில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகள் தரப்பில் செயல்படும் தமிழக அரசால் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டிருக்கக் கூடாது. அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான வருமானத்துக்கு அதிக சொத்து சேர்த்தல், கூட்டுச் சதி செய்தல், பினாமி சட்டத்துக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்கள், சாட்சியங்கள் நீதிமன்றம் தரப்பில் கொண்டுவரப்பட்டன.
அதனை அடிப்படையாக வைத்து பெங்களூரு நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார்.
இந்த வழக்கில் 32 போலியான தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல கோடு ரூபாய் பணப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது. இந்த 32 நிறுவனங்களிலும் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் நிர்வாக இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் 52 புதிய வங்கிக் கணக்கு தொடங்கி வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பணத்தை - பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களின் வாக்குமூலம் மூலம் உறுதியாகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதி குன்ஹா, ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை மூலம் ரூ.14 கோடி வருமானம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். அந்த நிர்வாகத்தில் அவ்வாறு வருமானம் வரவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பினாமியாக செயல்படுகிறார்கள் என்பது பினாமி சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம் - வைர நகைகள், ரூ.19 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், தமிழகம் முழுக்க இருக்கும் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர்.
1991-96 காலகட்டத்தில் இருந்த வருமானமும் சொத்து மதிப்பும் முந்தைய மதிப்புக்கும், பிந்தைய மதிப்புக்கும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை எனத் தெளிவாக தெரிய வருகிறது.
எனவே, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் கூட்டுச் சதி செய்தல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பிரிவின் கீழ் உரிய தண்டனையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி  - த  இந்து

மீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டென்ஷ்ன்ப்ளிஷ்

1  உலகில்  உள்ள அனைவரும்   தன்  வாழ்வின் அதிகபட்ச  அவமானத்தை  தன்  எதிர்  பால்  இனத்தால்  அடைந்திருப்பார்

=================


காதலியிடம்  உன்  வறுமையை  மறைக்க  வேண்டுமானால்  உன் அன்பை அளப்பரிய  அளவில்  காட்டி  விடு

==================


3  FB ல  பொண்ணுங்க “பாத்திரம் கழுவணும், துணிய மடிச்சு வைக்கணும், பூ கட்டணும், தோசை சுடணும், துவையல் அரைக்கணும்னு சொல்லிட்டு  எதுவுமே  செய்யாம


==================

சமூக வலைத்தளங்களில் அதிகம்  பரிச்சயமற்ற நபர்  பொதுவெளியில்  உங்களிடம் அதீத  உரிமை  எடுத்து  விளித்தால் உங்கள்  கண்டனங்களை உடனே பதிவு செய்க


================

5   ஆன்மீக உரை ஆற்றும்போது நெக்லஸ் மங்கையர்க்கரசி 10 முழம் ஜாதி மல்லிகைப்பூ வெச்ட்டு வருது.எதுனா குறியீடா?


================

6 வாரம் 1 தடவை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக்குளினு அப்பா சொன்னா கேட்காம 1000 ரூ குடுத்து பியூட்டிபார்லரில் ஆயில் மசாஜ் செய்வான் தமிழன்


===============



7 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆனால் கல்யாணம் பண்ணிக்கமுடியாது' என்ற வாக்கியத்தை பயன்படுத்தாத ஆண்கள் அரிது!


============


8 அன்பே! உன் கடைக்கண் பார்வையை விட உன் அக்காவின் ஷாப்பிங் மால் பார்வை என்னைக்கவர்ந்திழுக்கிறதே!


============


9 உன் இதழ் தேடி வியர்த்து போனது என் இதழ்கள் ."


சும்மா அடிச்சு வுடாதீம்மா.உடலில் வியர்க்காத பாகம் உதடுதான்னு ஜூவாலஜி மிஸ் ஜூலி சொல்லுச்சே?

================

10 கடல் வாழ் உயிரினம் உதாரணம் சொல்.
மீன்.மீனம்மா.கடலை வாழ் உயிர் இனம் உதா = மீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்


==============

11 அ ழகியே! உன் மேல் அளவு  கடந்த  
ஆ  சை! உடனடியாய்
இ ச்  1  கொடுத்தால்
ஈ  என சிரித்து  உன்னுடனே  இருப்பேன்!#  எல் கே ஜி கவுஜ


====================

12 ஒரு  பொண்ணு  டி பி ல  முதுகைக்காட்டி  நிக்குது.அந்தப்பக்கமா  போனா  முகம்  தெரியற மாதிரி ஏதாவது  ஆப்ஷன்  இருக்கா? டெக்னிக்கல் புலிகளே!


==================

13  காதலியின் கன்னம்  என்பது  காதலன்  ஆசையாய்க்கடிப்பதற்கே!
உரிமை உள்ளவளின்  உதடு உன்மத்தன்  உதடு  கவ்வுவதற்கே!


=====================

14   டி எம்  தவிர்ப்பீர்னு  பொண்ணுங்க  எச்சரிக்கை  போர்டு  வெச்சா “ஏன்  மேடம்  டி எம்  தவிர்க்கனும்?”னு  டி எம்லயே  போய்  விசாரிப்பான் தமிழன்


=================


15  ஏப்19: சர்வதேச சைக்கிள் தினம். காதலியை பேக்கில்  கேரியர்  இல்லாத சைக்கிளில்  ரைடு  கூட்டிட்டுப்போய் எஞ்சாய்  செய்ய உகந்த தினம்


====================

16 ஒரு பொண்ணு  பயோல சென்னை/கன்யாகுமரி/பெங்களூர்-னு போட்டிருக்கு.கண்டக்டர்  ஃபேமிலியா இருக்குமோ?பிறந்த ஊரு/வளர்ந்த ஊரு/வாழும்  ஊரா இருக்கும்


====================

17  அன்சாரிமஸ்தான்  ஏதோ  ஒரு  பொண்ணு  கூட  டி எம் ல  கில்மாக்கடலை போட்டுட்டு அதை  நியாயப்படுத்த  பெண்நட்பு , வரம்  வரமிளகாய்னு அடிச்சு விடறாரு


===================


18  வீட்ல  எலி 1  லக்ஸ் சோப்பை  கவ்விக்கிட்டு போகுது.நான்  என்னமோஅனிமல் பிளானட்  ஆள் போல்  அதை  ஃபாலோ  பண்ணிட்டிருக்கேன்#குளிக்குமா?சாப்டுமா?


=================



19  பாக்கெட்ல  10  ரூபா  மட்டும் வெச்சுகிட்டு  கேர்ள்  ஃபிரண்ட் கிட்டே” உனக்கு  என்ன  வேணும்  சொல்லு, நானாச்சு  வாங்கித்தர”னு உதார் விடுவான்



===================


20   இந்தப்பொண்ணுங்க  வெறும்  வாய்ல  முழம்  போடறதுல வல்லவள்கள். நேர்ல ஒரு ப்ளம் கேக்  கூட வாங்கித்தர மாட்டாங்க,சும்மாஃபோட்டோஷேர்ல 150கேக்



===========================