தனது முடிவுகளுக்கு அப்பா (இளையராஜா) ஒருபோதும் தடை விதித்தது என்று கூறிய யுவன் சங்கர் ராஜா, 1,000 படங்களுக்கு இசையமைத்த தன் தந்தைக்கு தமிழ்த் திரையுலகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் மே 9-ம் தேதி நடைபெறவுள்ள 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' இசை நிகழ்ச்சி தொடர்பாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு கலந்துகொண்ட முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா கூறியது:
"யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' முதலில் ஒரு தேதியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பிரம்மாண்டமாக பண்ண வேண்டும் என்று தீர்மானித்து தேதியை மாற்றி அமைத்திருக்கிறோம். வேறு காரணங்கள் எதுவும் இல்லை.
இந்நிகழ்ச்சியில் எனது படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும். அப்பா இளையராஜா, இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி என அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மற்றும் வேறு யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறோம்.
'மாஸ்' படத்தைப் பொறுத்தவரையில் தமன் இசையமைக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் தமன் 'நான் யுவனின் இசையில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறார். வெங்கட்பிரபு என்னிடம் கேட்ட போது, ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும் போது பண்ணலாம் என்று கூறினேன். 'மாஸ்' படத்தில் நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்துவிட்டதால், பாடல் உடனே வேண்டும் என்று கேட்டார்கள். ஆகையால், அப்பாடலுக்கு மெட்டு அமைத்தது நான், அந்த மெட்டுக்கு இசை வடிவம் தமன் கொடுத்தார்.
திருமணம் குறித்து கேட்கிறீர்கள். என்னுடைய திருமண வாழ்க்கை நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. என்னுடைய திருமணம் எனது அப்பா சம்மதத்துடன்தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாக தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டு தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று பேச்சு நிலவியது. ஆகையால், நான் அப்பாவிடம் போன் போட்டு சொன்னேன். இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்து கொள்ள முடியாது. கண்டிப்பாக சென்னை வந்தவுடன் சந்திக்கலாம் என்றார். திருமணமான மறுநாளே சென்னை வந்தவுடன் அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். ஆனால், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
மதம் மாறியது பற்றி கேட்கிறீர்கள். படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த தருணத்தில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரைத் தான் வைத்திருக்கிறார். ஆனால், கீ-போர்ட் ப்ளேயராக இருக்கும் போது திலீப் குமார். இப்போது நான் மதம் மாறிவிட்டாலும், யுவன் என்ற பெயரை மாற்றினால் நன்றாக இருக்காது என்பதால் பெயரை மாற்றவில்லை. அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்து எல்லாம் அப்பா எதுவுமே தெரிவிக்கவில்லை.
நான் ஆரம்பித்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூடுக்குள் என்னை அடைத்துக் கொண்டேன். மற்றபடி, பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணமில்லை.
நான் இசையமைக்கும் போது ட்விட்டர் தளத்தில் உள்ள கருத்துக்கள் அவ்வப்போது வந்து போகும். ஆகையால், ஏன் என்று விலகியிருந்தேன். இப்போது இன்ஸ்டாக்ராமில் மட்டுமே இருக்கிறேன். விரைவில் மீண்டும் ட்விட்டர் தளத்துக்கு திரும்ப இருக்கிறேன்.
ஒரு வருடத்துக்கு 14 படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கிறேன். இந்த வருடம் 'இடம் பொருள் ஏவல்', 'மாஸ்', 'யட்சன்', 'தரமணி', 'செல்வராகவன் படம்' ஆகிய படங்களுக்கு இசையமத்து வருகிறேன். இனிமேல் படங்களை தேர்வு செய்து பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் இசை நிறுவனம் ஒன்று ஆரம்பித்து, அந்நிறுவனம் மூலத்தின் எனது இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்.
என் அப்பா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதையொட்டி, அவருக்கு தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட விழா எதையும் நடத்தாததில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது" என்றார் யுவன் சங்கர் ராஜா.
நன்றி - த இந்து
- இந்து மதத்தில் இல்லாததை இஸ்லாத்தில் என்ன கண்டார் என்பது விளங்கவில்லை. ஏ.ஆர். ரகுமான் இசை அமைப்பதற்கு முன்பே மதம் மாறிவிட்டார். மொத்தத்தில் எது இந்து மதத்தில் கிடைக்கவில்லை என்று இவர்கள் மதம் மாறினார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் - கண்ணன் ஸ்ரினிவாசலு.Points960
- Chandren from Mumbaiபழயதை மறந்து விடுங்கள் யுவன். நீங்கள் விட்டு சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் உள்ளது. அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது. குடும்பம் மற்றும் இசையில் நிறைய கவனம் செலுத்துங்கள். இறைவனிடம் ஐக்கியமாய் விடுங்கள். அமைதி கிடைக்கும். எங்களுக்கு நல்ல மெலோடீஸ் கிடைக்கும். நன்றி. வாழ்த்துக்கள் பல கோடி.a day ago · (0) · (0) · reply (0) ·
- DEVKUMAR ARUMUGAM from Dubaiஇசை ஞாநிக்கு நிகர் அகில உலகில் எவரும் இல்லை . தேவ லோகம் உண்மை எனில் இவர் இசை தான் அங்கும் இசைக்கப்படும்Points400
- Jalilmohamed Riyadh at Riyadh, KSA from Ad Dammamயுவன் நீ முஸ்லிம்ஆகியதால் இஸ்லாத்திற்கு எந்த உயர்வும் இல்லை.மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்காதளால் இஸ்லாத்திற்கு எந்த குறைவும் இல்லை.யார் நேரிய வழியில் வாழவேண்டும் என்று நினைத்து தன்வாழ்வை அதன்பிரகாரம் அமைத்துக்கொண்டு செயல்படுகிறாரோ.அவருக்கு நிச்சயம் இறைவனின் உதவியும் நேரியவழியும் கிட்டும்.நேசமுடன் ஜலால்Points1155
- Siva Murugan from Pasadena"யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.சவ yuvana day ago · (0) · (0) · reply (0) ·
- P.Renganathan from Bangaloreயுவன் நீங்கள் யோக்கியதையான தந்தைக்கு பிறந்த ஒரு தப்பான பிள்ளை.a day ago · (0) · (0) · reply (0) ·
- P.Renganathan from Bangaloreயுவன் நீங்கள் யோக்கியதையான அப்பாவிற்கு பிறந்த தப்பான பிள்ளை.a day ago · (0) · (0) · reply (0) ·
- Vijay from Chetput"1,000 படங்களுக்கு இசையமைத்த தன் தந்தைக்கு தமிழ்த் திரையுலகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்தார்." ... அவர் "isainiyani " இந்த பாராட்டு ,மரியாதைக்கு எல்லாம் கவலை பட மாட்டார் ,தமிழ்நாடு இசை கு அவர் தான் நிரந்தர ராஜா ...கல்யாணத்துக்கு அப்பா வர வரைக்கும் கூட வெயிட் பண்ணாத நீங்க பாராட்டு ,மரியாதை பத்தி பேசாதிங்க ...a day ago · (0) · (1) · reply (0) ·baarzini Down Voted
- Azar Rikkash... from Dubaiஎனக்கு பிடித்த கம்போசெர் யுவன்...யுவனின் இசை அனைவரையும் ஈர்க்கும்...அப்பனை போல் பிள்ளை என்று சொல்லுவாங்க...அதே இசைஞானம் இருக்கிறது இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை...அவரின் முடிவு சரியானது...இந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... இசைஞானி இளையராஜா ஒரு சிறந்த இசைஅமைப்பாளர்...அனால் அவரைபாராட்டி ஒரு விழா கூட நடத்தவில்லை...நல்ல திறமையான மனிதர்களுக்கு பாராட்டு கிடைப்பதில்ல..ஏன் என்று தெரியவில்லை...அய்யா&யுவன்...நீடோடி வாழ்க...இவர்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்...2 days ago · (9) · (10) · reply (0) ·Gummu-Kumar · Gummu-Kumar · Dilli-Babu · Dilli-Babu · raam · nallavan · Thamim · abu · indian Up Votedsudhagar · sudhagar · JAYASRI · spshanmuganathan · parthi · GOVINDARAJAN · Mohan · Thiyagarajan · NAVEEN · kumar Down Voted
- பாலா from Mumbaiதிருமணத்துக்காக மதம் மாறுபவர்களை நான் துளிகூட மதிப்பதில்லை!Points33425
- Thanigai K from Bangaloreஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனத்துக்கு உள்ளாக்கவேண்டம். மதம் மாறுவதும் திருமணம் செய்வதும் அவருடைய தனிப்பட்ட செயல். இசையை மட்டும் பார்போம்2 days ago · (0) · (0) · reply (0) ·
- Dilli Babu from Chennaiஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் யாரும் தலையிடக்கூடாது(திருமணம்)a day ago · (0) · (0) · reply (0) ·
- கோபாலகிருஷ்ணன் from Dohaசெல்வாவுடன் யுவன் மீண்டும் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது. மணிரத்னம் மற்றும் ரஹ்மான் போன்று இவர்களது கூட்டணிக்கு பெரிய வரவேற்பு உள்ளது.2 days ago · (4) · (1) · reply (0) ·GOVINDARAJAN Down Voted
- கோபாலகிருஷ்ணன் from Dohaசெல்வாவுடன் மீண்டும் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது, மணிரத்னம் ரஹ்மான் மாதிரி உங்களது கூட்டணிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.2 days ago · (10) · (1) · reply (0) ·Jalilmohamed-Riyadh · Jalilmohamed-Riyadh · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · reefa · Thamim Up VotedGOVINDARAJAN Down Voted
- R.M.Manoharan Manoharan from Coimbatoreசிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வனாதன் , இளையராஜாபோன்றோர் பாராட்டுக்கும், விருதுக்கும் மேற்பட்டவர்கள். முன்னாள் முதல்வர் ஜே. பீச் ரோடில் அமைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலயை தூக்கி எறிந்தார். அதுபோல் உங்களுடைய அப்பாவுக்கு ஏதும் நடவாதிருந்தால் அதுவே நல்லது. வீண் பாராட்டிற்கு ஏங்க வேண்டாம். சிவாஜி சிலையை தூக்கி எறிந்தவர் முதல்வர் பதவியிலிருந்து இன்று தூக்கி எறியப்பட்டுள்ளார். அதையும் கவனத்தில் கொண்டு சாந்தி பெறுங்கள் யுவனே!Points6420
- Karthik Yuvan ELECTRICAL ENGINEERING. at Kwaseb from SajirYeppothumea, yuvan is no 1 place da3 days ago · (6) · (3) · reply (0) ·
- Karthik Yuvan ELECTRICAL ENGINEERING. at Kwaseb from SajirIts my god yuvan.3 days ago · (2) · (2) · reply (0) ·
- Hydrooss Tamilan from Kuwait//சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூடுக்குள் என்னை அடைத்துக் கொண்டேன்.// இதற்கு மேலும் யுவனின் தனி வாழ்க்கை பற்றி பேசினால் அது நல்லதல்லPoints25995Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Sahoo · reefa · hydrooss-Tamilan · nallavan · senthamillselvan · Thamim · abu Up Voted
- Chandraa from AnekalWHY DID THE GIRLS SIDE COMPELL YOU MR YUVAN THEY WOULD HAVE WAITED FOR YOUR FATHERS DATE
0 comments:
Post a Comment