1 நண்பேன்டா
2 கொம்பன்
3,சகாப்தம்
4 FAST. FURIOUS 7 # 2 4 2015
1 நண்பேன்டா
உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,
தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் ‘நண்பேன்டா’ ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது தடவையாக இப்படத்தில் என்னுடன் நயன்தாரா இணைந்துள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகன். இப்படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் மோதல், காதல் என இரண்டும் கலந்து இருக்கும். இருவரும் சேர்ந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளோம்.
எனது படங்களில் சந்தானம் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சந்தானத்துக்கு அதிகமான காட்சிகள் இருக்காது. பெரும்பாலான காட்சிகளில் நான் தனியாகத்தான் நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு நான் நடிக்கும் படத்தில் சந்தானம் இல்லை. இதனால் எனக்கும் சந்தானத்துக்கும் மோதல் என்று வதந்தி பரவி உள்ளது. இருவரும் எப்போதும்போல் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.
நான் தொடர்ந்து காமெடி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்கு காமெடி படங்கள்தான் நன்றாக வருகிறது. அதனால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல், அரசியல் படங்களிலும் நடிக்கமாட்டேன். நான் நடித்த படங்கள் 2 வருடங்கள் கழித்து வெளியானலும், என்னுடைய பேனரில் வருடத்தில் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
2 கொம்பன்
கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சென்சாரில் இப்படத்துக்கு என்ன சான்றிதழ் என்று கேட்ட போது, "'கொம்பன்' படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதைக்கு இது மட்டுமே கூற முடியும்" என்று கூறினார்கள்.
இந்நிலையில், படத்துக்கு தடைக்கேட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அம்மனுவில் கூறியிருப்பது, " சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. (ஆதாரம் 7-.11.-1936, தி ஹிந்து)
'கொம்பன்’ பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
படத்தின் தலைப்பே (ஆப்பநாட்டு மறவன்) ’கொம்பன்’ என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.
கடந்த 6 மாதங்களில் தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
3,சகாப்தம்
4 FAST. FURIOUS 7
கடந்த 14 வருடங்களாக அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் 7-வது பாகம் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிறது. இந்தச் செய்தியை யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வின் டீசல், மறைந்த பால் வாக்கர், 'ராக்' ஜான்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், 7-ஆம் பாகத்தில், 'டிரான்ஸ்போர்டர்' நாயகன் ஜேஸன் ஸ்டாதம் இணைந்துள்ளார். இந்திய நடிகர் அலி ஃபாசல் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
'ப்ரயன் ஓ கானர்' என்ற பாத்திரத்தில் நடித்த பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஸா', 'கான்ஜூரிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வான் இந்த பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் குறித்து பேசிய வான், "ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கும்போது படப்பிடிப்பு தளங்கள் பிரம்மாண்டமாக இருக்கும், படத்தை எடுக்க நிறைய நேரமும், முயற்சியும், கலைஞர்களும் தேவைப்படுவார்கள். ஆனால் இந்தப் படம் கண்டிப்பாகப் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என நினைக்கிறேன். நான் இயக்கியதிலேயே கடினமான படம் இது, ஆனால் பெருமைக்குரிய படமும் இதுவே" என்றார்.
நன்றி - த இந்து தினமணி மாலை மலர்
0 comments:
Post a Comment