நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல், படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தில் இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விக்ரம் அணுகப்பட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ஐ'. அதைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.
இந்நிலையில் ஷங்கர் - ரஜினி இருவருமே இணைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை 'கத்தி' புகழ் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது கிடைத்த நம்பத்தக்க தகவல்கள்:
" 'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார்.
தற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது. நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துவிட்டது.
விஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
நாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.
தற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்" என்றார்கள்.
ரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்று கணக்கு போட்டால்?
நன்றி -த இந்து
டிஸ்கி = அற்புதன் எனும் டைட்டில் மட்டும் நானே கற்பனை பண்ணிகிட்டேன்.
- Sivaprakashஇது உண்மையானால் சங்கருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.about 3 hours ago · (0) · (0) · reply (0) ·
- Thiyagarajanகுட் டீம், விக்ரமுக்கும் வில்லன நடிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை, அதனால அவர் ஒத்துக்குவார் லைகா க்கு பணம் ஒரு பிரச்சன இல்ல ஆனால் படம் சிவாஜி மாதிரி இல்லாம முதல்வன் மாதிரி சமுதாய நோக்கோடு இருக்கனும் ஷங்கர் செய்வார்னு நம்பலாம்about 23 hours ago · (0) · (0) · reply (0) ·
- Rajkumar Anbazhaganஅருமை..........நன் எதிர்பார்த்த ஒன்று!!!!!!!!!!! வாங்க தலைவா...........!!!!!!!!!!!a day ago · (0) · (0) · reply (0) ·
- Murugan from Mountain ViewWithout comedy actor vadivelu, no film is going to hit.Points310
- Janarthanan Radhakrishnanஏன்? அவரு ரெண்டு வருஷமோ என்னவோ எந்த படமும் நடிக்காம இருந்தாரே, அந்த காலகட்டத்துல வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லையா? இல்லை அவரு நடித்து வெளிவந்த தெனாலிராமன் வெற்றி பெற்றதா? வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவையாளர், அதற்காக ஒரு நடிகரை இந்த அளவுக்கு ஏத்தி விடவேண்டாம். ..about 12 hours ago · (0) · (0) · reply (0) ·
- Gnanasekaran from Bangalore190 கோடி பட்ஜெட். தமிழ் சினிமா வளர்ச்சியை நோக்கி செல்வதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோரது வாழ்க்கைக்கே வெட்டு வைக்கும் செயல்தான் இந்த பூதகரமான பட்ஜெட். தமிழ் சினிமாவும் தாங்காது, தமிழ் மக்களும் தாங்க மாட்டார்கள். இவ்வளவு பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பார்கள். அது ஓடினால் சரி, ஓடாவிட்டால்? இது எல்லாம் நல்லதுக்கு இல்லை... நல்லதுக்கே இல்லை... நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்...Points3985
- Murali Bose from Kolkataரஜினிக்கு ஜோடி தேடுரதுதான் பிரச்சனையே...வில்லன் கிடையாது... உண்மையான வில்லன் நம்ம ஊரு அரசியல்வாதிங்க தான்.. லைக்கால சும்மா விட்டுருவாங்களா...a day ago · (3) · (0) · reply (1) ·
- DINESH from Erodeபடத்தில் கதை இருந்தால் நல்லது, ஓரயொரு புத்திமதி மீண்டும் ரஜினி வாரி வழங்கும் வள்ளலாக நடிக்காமல் பாட்சா போன்று ஒரு படத்தில் நடித்தால் போதும் . வள்ளி,முத்து,உழைப்பாளி ,அண்ணாமலை,அருணாச்சலம்,படையப்பா ,சிவாஜி வரிசையில் இந்த படம் வராமல் இருந்தால் சரி . இந்த படங்களில் ரஜினி பணக்காரனாக இருந்து,பின் ஏழையாகி..மீண்டும் பணக்காரனாக உயருவார்.இதுதான் இந்த படங்களின் கதை.எந்திரன் படத்தில் கூட கிராபிக்ஸ் சரியாக இல்லை.Points175அருள் Down Voted
- VASANTHAN from Bernலிங்கா 220 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டு ,சிலரால் பொய் கணக்கு காட்டி 13 கோடியும் திரும்ப பெற்றுக்கொண்டார்கள் ,மிகுதியை நிங்களே கணக்கு பண்ணிப்பாருங்க ,மற்ற ஹீரோக்கள் இந்த வசூலை நினைத்துப்பார்க்க முடியுமா?இது ஜோசெப் விஜைக்க எழுதின கதைன்னு, கதை விடும் நீங்க இதை நிருபிக்க முடியுமா !a day ago · (3) · (1) · reply (1) ·Shankar Down Voted
- Saroavanan VC from Cochinஷங்கர் அவர்கள் லிங்கா தந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்கவில்லை போலும். முதியவர் ரஜினி என்ற புதைமணல் ஷங்கர் அவர்களுக்கு நீண்ட நெடிய இனி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைகொடுக்கும் என்று நம்புவோமாக.Points200ArunPrasad · Anjaan · prabhu · Sekar · tmfran · Bala · RBALAKRISHNAN · arun · VaithianathanS · Shankar Up Voted
0 comments:
Post a Comment