Friday, April 10, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10 /4/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1,துணை முதல்வர் (கே பாக்யராஜ்)

2 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
3 S/O.SATHYA MURTHY (telugu)
4,AVENGERS # 10/4/15 ரிலீஸ்


1,துணை முதல்வர்-விவேகானந்தன் இயக்கியிருக்கும் படம், துணை முதல்வர். அரசியல் படமான இதில் பாக்யராஜும், ஜெயராமும் நாயகர்களாக நடித்துள்ளனர். பாக்யராஜுக்கு ஜோடி ஸ்வேதா மேனன்.

கதைப்படி ஒரு கிராமத்தின் அரசியல் பிரமுகர் பாக்யராஜ். அவரது நண்பர் ஜெயராம். கிராமத்துக்கு நன்மை செய்யும் இரண்டு நல்ல உள்ளங்கள் இவர்கள்.

பாக்யராஜ், ஜெயராம் நடிக்கும் துணை முதல்வர் படத்தின் புகைப்படம் ஒன்றில் ஸ்வேதா மேனன் கேரள ஸ்டைலில் முண்டுடுத்தி வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து காட்சியளிக்கிறார். தமிழில் ஸ்வேதா மேனன் என்றால் கவர்ச்சி நடிகை. அதற்காக தமிழ்ப் படத்திலும் அவரை கேரள ஸ்டைலில் கவர்ச்சியாக காட்ட வேண்டுமா?
Swetha Menon, Thunai Mudhalvar, ‌ஸ்வேதா மேன‌ன், துணை முத‌ல்வ‌ர்
இந்தக் கேள்விகளுடன் அணுகினால் படத்தின் இயக்குனர் விவேகானந்தன் சொல்லும் பதில் வேறு விதமாக இருக்கிறது.
கதைப்படி ஒரு கிராமத்தின் அரசியல் பிரமுகர் பாக்யராஜ். அவரது நண்பர் ஜெயராம். கிராமத்துக்கு நன்மை செய்யும் இரண்டு நல்ல உள்ளங்கள் இவர்கள். ஒருமுறை கேரளா செல்லும் போது அங்குள்ள கிராமத்துப் பெண் ஸ்வேதா மேனனுக்கு பாக்யராஜின் கேரக்டர் மீது காதல் ஏற்பட்டு அவரை கல்யாணம் செய்து கொள்கிறார். ஆம், ஸ்வேதா மேனன் இந்தப் படத்தில் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள மலையாளியாக நடித்துள்ளார். அதனால்தான் அந்த முண்டு, ஜாக்கெட் கெட்டப்.



அரசியல் நையாண்டிப் படமான இதில் ஜெயராமுக்கு ஜோ‌டி சந்தியா. இவர்களின் காதல் கைகூட பாக்யராஜ் உதவி செய்வது படத்தில் பிரதானமாக வருகிறது. அரசியல் கட்சிகள் யாரையும் நோகடிக்காமல் மக்களை சிரிக்க வைக்கும் அரசியல் நையாண்டிப் படமாக துணை முதல்வர் தயாராகி வருகிறதாம்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் யார் கதையையும் காப்பியடித்து உருவாக்கப்பட்டதல்ல. இது என் சொந்த அனுபவம். அதை படமாகத் தந்திருக்கிறேன் என்றார் இயக்குநர் மருது பாண்டியன். பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகியோரும் கதாநாயகர்களாக வருகிறார்கள். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விளம்பரங்கள் வெளியானதும், படத்தின் கதை என்னுடையது என்று நெல்லையைச் சேர்ந்த அருண் பாரதி என்பவர் நம்மிடம் தெரிவித்திருந்தார். தனது ப்ளாக்கில் இதே தலைப்பில் எழுதிய கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என தனது மின்னஞ்சலிலும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான மருதுபாண்டியனிடம் கேட்டபோது, "இந்தக் கதை யாருடைய கதையைப் பார்த்தும் காப்பியடிக்கப்பட்டதல்ல. எனது சொந்த அனுபவம். சென்னைக்குள் நுழையும்போது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டு தெரியுமே.. அதுதான் இந்தத் தலைப்பு. மற்றபடி கதை குறித்து யார் என்னை அணுகினாலும், சட்ட ரீதியாக அதைச் சந்திக்கவும் தயார்தான்," என்றார்.


3  சன் ஆஃப் சத்யமூர்த்தி
Son of Satyamurthy   2
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா நடித்திருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாம். சென்ற வாரம் வெளியான இப்படத்தின் பாடல்கள் இன்னும் டாப் ஆல்பம் லிஸ்டில் இளைஞர்களிடையே கேட்கப்பட்டு வருகிறது.
ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் அவரின் டப்பிங்கை பேசி முடித்துவிட்டாராம். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டுவர வேண்டுமென்று இரவு பகலாக உழைத்து வருகிறதாம் போஸ்ட் புரொடக்ஷன் டீம். இம்மாத இறுதியில் எப்படியாவது படத்தை சென்சாருக்கு அனுப்பிவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.
மேலும் இப்படத்தில் நடிகர் உபேந்திரா, நடிகை சினேகா மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்களாம்.

4  அவெஞ்சர்ஸ்=  இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டிய 60-வது ஆண்டு நினைவு வைர விழா 4 நாட்கள் அரசு பொது விழாவாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரச குடும்பத்தினர் பொதுமக்களுடன் சேர்ந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடந்தது.


அதாவது பட்டத்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டனுடன் லண்டனில் உள்ள கென்சிங்டன் சினிமா தியேட்டருக்கு சென்றார். அங்கு அவெஞ்சர்ஸ்  என்ற ஆக்ஷன் படத்தை பார்த்து ரசித்தார். பொதுவாக அரச குடும்பத்தி தினர் வெளியே தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில்லை. அரண்மனையில் நடைபெறும் சிறப்பு காட்சியின்போது பார்த்து ரசிப்பார்கள்.



ஆனால் அந்த மரபுகளை மீறி இளவரசர் வில்லியம் தியேட்டரில் வந்து பொதுமக்களுடன் படம் பார்த்தார். அப்போது வரிசையில் சென்று டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் சென்றார். தனி இடத்தில் அமராமல் பொதுமக்களுடனேயே அவரும், மனைவி கேத் மிடில்டனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் அரச உடையை தவிர்த்து சாதாரண ஆடையில் வந்திருந்தனர். இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



மறுநாள் இளவரசர் வில்லியம் தனது தம்பி ஹாரியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பெறும் தங்களது தாத்தா (ராணி எலிசபெத்தின் கணவர்) இளவரசர் பிலிப்பை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இந்த நிகழ்ச்சியிலும் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்றார்.



நன்றி  - மாலைமலர் , தின மணி  

0 comments: