============
1 தமிழ் இனத்தலைவர் 200 கோடி சுருட்டிட்டார்னா நீ அதிமுகவா?எனவும் ,புரட்சித்தலைவி 66 கோடி ஆட்டையைப்போட்டுட்டார்னா நீ DMKவா?னு உலகம் கேட்கும்
===========
2 நாம ஒரு கிளுகிளுப்பான மூடுல இருக்கும்போது இந்த சீரியல் டைரக்டருங்க ஏதாவது ஒரு எழவைக்கூட்டிடறானுங்க.அரை மணி நேரமா ஒரே அழுகாச்சி
==============
3 உலகத்தில் இருக்கும் பொண்ணுங்க எல்லோரும் போன ஜென்மத்தில் டீச்சர் போல. புருசனுக்கு/காதலனுக்கு அடிக்கடி டெஸ்ட் வைக்கறாங்க
===============
4 ஏதாவது கேள்வி கேளுங்கனு பொண்ணு FB ல கேட்டா இதான் சாக்குன்னு தமிழன் 1 ஃபோன் நெம்பர் 2 அட்ரஸ் 3 வயசு எல்லாம் டீட்டெய்லா கேட்பான்
================
5 தானும் சந்தோஷமா இல்லாம பார்வதியையும் சந்தோஷமா இருக்க விடாம விடிய விடிய ஈஸ்வரன் கோவில் ல இருப்பதுதான் மகா சிவராத்திரி
===============
6 தனக்கு முன்னால் ஓடுபவனை முந்த தன் வேகத்தை அதிகப்படுத்தாமல் முன்னே செல்பவனின் காலை இடறி விடுவான் தமிழன்
============
7 மகா பிரம்ம ராத்திரி ,மகா விஷ்ணு.ராத்திரி ,மகா முருக ராத்திரி னு எல்லா சாமிக்கும் உருவாக்கி இருந்தா ரொம்ப சிரமமாப்போய் இருக்கும்.நல்ல வேளை
===============
8 2015 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ஹிட் படம் அனேகன்.ஆல் சென்ட்டர் ஹிட்
===========
9 ஐ அதிக முதலீடு ,3,வருச பிராஜெக்ட் அடிச்ச ஹிட்டை விட குறைந்த முதலீடு விரைவாக ரிலீஸ் ஆன அனேகன் சம்பாதிப்பு ஐ யை விட அதிகமா இருக்கும்
===============
10 சிவகார்த்திகேயன் நைட் ல பிறந்த நாளை ரொம்ப நேரம் கொண்டாடினா அதுவும் மகா.சிவ ராத்திரியே
==================
11 உயர உயர பறந்தாலும் ஊர் 'குருவி ' " கழுகு" ஆகுமா?
============
12 நியூ இயரா இருந்தாலும் ,மகா சிவராத்திரியா இருந்தாலும் கமல் தன் முத்திரையைப்பதித்து விடுவார் #,சகலகலாவல்லவன் ,மைக்கேல் மதனகாமராஜன்
==============
13 2015 ல் இதுவரை வந்ததில் ஆல் சென்ட்டர் ஹிட் படங்கள்
1 ஐ
2 டார்லிங்
3,அனேகன்
============
14 பொதுவாக பிரபலங்களுக்கு மென்சன் போட்டு பதில் வர்லைன்னா டென்சன் ஆவது எதுக்கு?நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஆளுங்க கிட்டே மட்டும் பேசுனா போதும்
=============
15 புலி இளைய தளபதி யின் பிறந்தநாள் பரிசா வருதாம் .22 6 2015 = 2+2+6+2+0+1+5 = 18 = 1+8=9= கூட்டுத்தொகை மேட்சிங்=இளைய தளபதி புலி =9 (ஹிட்)
==============
16 சிம்பு தேவன் (6) + விஜய் (3) = புலி @ 22 6 2015 = கூட்டுத்தொகை 9
==================
17 சாலைகளில் மாட்டு வண்டிக்கு மசக்கை ஆனது மாதிரி பஸ்சை ஓட்டிட்டு பஸ் ஸ்டேண்ட் வந்ததும் சுடுதண்ணியைக்கால்ல ஊத்துனது மாதிரி பறப்பான் தமிழன்
================
18 கை நீளமான பெண்ணுக்கு பூக்கடையில் வேலை இல்லை.
வாய் நீளமான பெண்ணுக்கு பேக்கரியில் வேலை இல்லை
=============
19 இந்த மாடர்ன் பிகருங்க கட்டி இருக்கும் சேலைக்கு மேட்சா கலர் கலரா கண்ணீர் விட ஏதாவது டெக்னிக் எதிர்காலத்தில் ட்ரை பண்ணுவாங்ளோ?
=============
20 புது கேமரா வாங்குனதும் ஏதாவது க்ளிக்கிட்டு பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டுட்டு தன்னடக்க பின் குறிப்பா RT போட வேணாம் ,சும்மா ம்பான் தமிழன்
====================
0 comments:
Post a Comment