பெண் போலீஸுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், காவல் உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னையில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவருடன், காவல் உதவி ஆணையர் ஒருவர் செல்போனில் தவறாக பேசும் உரையாடல்கள் ‘வாட்ஸ்அப்’ மூலம் பரவி, கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வடசென்னை கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.
அதில், பெண் போலீஸுக்கு, காவல் உதவி ஆணையர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதிபட தெரிய வந்தது. இந்தத் தகவல் மாநகரக் காவல் ஆணையர் ஜார்ஜூக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் காவல் உதவி ஆணையர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- Humanbeingஅந்த "அதிகாரி??" பெயர் கூடா இல்லையே. அவ்வளவு தூரம் காவந்து பண்ணுறாங்களோ?Points46160
- Bharathirajaஅந்த பெண் போலீசையும் அந்த கயவன் இருக்கும் இடத்திற்கே பணி இடமாற்றம் செய்வார்களோ என்னவோ? குற்றம் நிரூபணம் ஆகியுள்ள நிலையில் அந்த அதிகாரியின் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கலாமே? பொதுமக்களாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் அல்லவா?Points12505
- Makkah Iqbalபோலிஷ் தப்பு பண்ண வேற இடத்துக்கு மாற்றம் அதே வெராலு பண்ண தவறு ஜ்ஹெயில் அடி மிதி உங்க நியாயம் நல்ல இருக்கு தண்டனை குடுத்தால்தான் மற்றவர்களுக்கும் பயம் varum இல்லை என்றால் அதே தவறை அவர் வேறமாதிரி பண்ணுவார் இதற்கு முன் இவர் panniruppar தவறு மக்களுக்கு பாதுகாப்பு குடுக்கும் இவர்களே இப்படி என்றால் நம் நாடு தலைகுனிவை சந்திக்கும் கோவேர்மொன்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும் இவருக்கு அந்த வேலைபற்பதர்க்கு தகுதி இழந்துவிட்டார் பதவிகளை இருந்தால் aapaththuabout 17 hours ago · (2) · (0) · reply (0) ·
- Dhamsஎன்ன ஆச்சி தமிழ் நாட்டு போலீஸ்க்கு, இப்பதான் கொஞ்ச நாளா கௌரவமா இருந்தாங்க, அதுக்குள்ள இப்ப, டிராபிக் ராமசாமி அரஸ்ட், பெண் போலீஸ் காமெடின்னு, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சிடுச்சி... முதல்ல அந்த உதவி கமிஷனரை டிஸ்மிஸ் பண்ணி, ஜெயில்ல போடுங்க, பொம்பளை போலீஸ்கே இந்த நிலைமைன்னா, மத்த குடும்ப பெண்கள் நிலைமை என்ன ஆகிறது... அரசு மற்றும் காவல் துறை எடுக்கிற முடிவு... மற்ற துறைகளுக்கு ஒரு அபாய மணியாக இருக்கணும்... இந்த மாதிரி ட்ரான்ஸ்பார் காமெடி எல்லாம் செல்லாது...Points270
- Viswanathanஅவரின் பதவி பறிக்கப்பட வேண்டும்... இதை திரும்பவும் செய்யமாட்டார் என்பது என்ன நிட்சயம்...about 18 hours ago · (4) · (0) · reply (0) ·
- ஜெயம் Ramachandranதலைமையே இப்படி என்றால் வள்ளுவர் சொல்லுவார்--ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.-----ஒரு காவல் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; பசு கூட பால் கொடுக்காது என்று கோபமாய்க் கூறியுள்ளார் அத்துடன் .முக்கியமான தொழில்களும் உருப்படாமல் போகும்.இத்தகைய குற்றவாளிக்கு தண்டனை வெறும் இடமாற்றம் தானா? அவருக்கு இன்னும் வசதியாய் இருக்கும்!Points530
- Mohamed Thasleemபணியிலிரிந்து நீக்க வேண்டும் செய்வீர்களா செய்வீர்களாPoints375
- Balanநான் கேள்விப்பட்ட தகவல். பல வருடங்களுக்கு முன், சிங்கப்பூர் சென்ற,அமெரிக்க ஸ்கூல் பையன், காரில் கோடு கிழித்து விட,கைது செய்யப்பட்டு, பிரம்படி வழங்கும் படி நீதி மன்றம் உத்தரவு இட்டது. அமெரிக்க பெற்றோர்,ஆசிரியர் சங்கம் மூலம்,அவன் சிறுவன்,மன்னித்து விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டும் பயன் இல்லை. அப்போதைய ஜனாதிபதி, கிளிண்டன் வேண்டுகோள் விடுத்த பிறகும், இரண்டு அடி அடித்து, தான் பிறகு விட்டாங்க.அது போல, காவல் அதிகாரி ஆக இருந்தாலும், தீர்ப்பு தரும் நீதிபதியாக இருந்தாலும், பிரம்படி தருகிறமாதிரி, ( தழும்பு ஏற்படும் அளவிற்கு கொடுத்தால் நலம் !!) சட்டத்தில் இடம் உண்டா? இந்திய தண்டனை சட்டம், காவல்துறை,மற்றும் நீதி துறையில் பணி புரிபவர்களுக்கு வேறு வேறா?. இதற்கு என்ன தண்டனை என்பதை சட்டம் படித்தவர்கள் கூறுங்கள். ( அபராதம் இத்தனை ரூபாய், என கூறினால்,நான் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடலாம்.!!. அதெல்லாம் சினிமாவில், பஞ்சாயத்தில் காட்டுறாங்க.!). இடம் மாற்றம் தவிர பிரம்படி போன்றவை உண்டா?.Points12910
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment