Friday, March 13, 2015

மகாபலிபுரம் - சினிமா விமர்சனம்




ஹீரோ  தன்  3  ஃபிரண்ட்சோட  ஊர்  சுத்திட்டு இருக்கார்.ஹீரோவுக்கு  ஆல்ரெடி  லவ் மேரேஜ்  ஆகிடுச்சு. ஃபிரண்ட்ஸ் 4  பேரும் சேர்ந்து  ஒரு  டைம்  லேப்டாப்ல  கில்மாப்படம்  பார்க்கறாங்க. அப்போ  ஒரு ட்விஸ்ட்.த்ரில்லர்  படத்தில்  ட்விஸ்ட்  வரும் , கில்மா படத்துல  என்ன  ட்விஸ்ட்? அதாவது  ஹீரோவோட  காதல்  மனைவி  வேற  ஒரு ஆளோட கச முச  வீடியோ  ஓடுது.அப்டியே   எல்லாரும்  ஷாக்  ஆகிடறாங்க. அதுக்குப்பின்  என்ன ஆகுது? என்பதே  கதை .


தெரிந்த  முகம்  கருணா  தான் . அதிக  வாய்ப்பில்லை . மத்த  3  பேரும்  சொல்லிக்கற  மாதிரி  இல்லை 


நாயகியா  வருபவர்  சுமார்  அழகு  வெகு  சுமார்  நடிப்பு 


திரைக்கதை  எப்டி எழுதறதுன்னு  தெரியாம  4 ஃபிரண்ட்சையும்  கிரிக்கெட்  விளையாடற   மாதிரி    , கேரம்  ஆடற  மாதிரி  ,  மொக்கை  ஜோக்  சொல்ற  மாதிரி  பல  ஷாட்ஸ்  எடுத்து  வெச்சு  எல்லாத்தையும்  கோர்த்து  வெச்சு  முக்கால்  மணி  நேரம்  இடைவேளை  வரை   சிரமப்பட்டு  ஓட்டிடறாங்க 



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1   உங்களுக்கு எப்ப மேரேஜ்?


நான் தயாராத்ஐதான் இருக்கேன்.எவனும் பொண்ணு தரத்தயார் இல்ல. # ம



2 ஒரு பையன் ஒரு பொண்ணை லவ்வினா அந்தப்பொண்ணு மட்டும் அழகாத்தெரியும்.பொண்ணு ஓக்கே சொல்லிட்டா உலகமே அழகாத்தெரியும் # ம


3 டாக்டர்.கிரிக்கெட் விளையாடும்போது அடிபட்டுடுச்



லேடிDR=ம்்



எதுக்கு ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வெச்சுப்பார்க்கறீங்க? அடிபட்டது.நெஞ்சுல இல்ல # ம


4 திமிரா இருக்கும் அழகான பசங்களை விட உயிரையே தரத்தயாரா இருக்கும் மொக்கைப்பசங்களைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குது



5  மாப்பி.இந்த மெசேஜ்க்கு என்னடா அர்த்தம்?


சாரிடா.இங்க்லீஷ் மெசேஜ் படிக்க மாட்டேன் # ம






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  மகாபலிபுரம் @ நெய்வேலி ஜெயப்ரியா .நாமதான் பலியா?8 பேர் தான் ஆடியன்ஸ்


2 ஹீரோயினுக்கு மிளகா பஜ்ஜி பிடிக்கும்கறதால ஹீரோ பஜ்ஜிக்கடை ஓப்பன் பண்றாரு.வாவ்! வாட் எ பஜ்ஜிகல் மிராக்கிள்

3 ஹீரோ & குரூப் கிரிக்கெட் ,கேரம் ,செஸ் ஆடிட்டு இருக்காங்க.ஒவ்வொரு சீன்லயும்.ஸ்போர்ட்ஸ் கோட்டால எடுத்த படமோ?







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1  போஸ்டர்  டிசைன்  ,    அழகு . கருணா  போஸ்டர்  நல்ல  மார்க்கெட்டிங் டெக்னிக்


2  டைட்டில்லயே தியேட்டருக்கு  வர்றவங்க  எல்லாம்  பலி தான்  அப்டினு  க்ளூ  குடுத்தது 



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  எங்கேயோ  நடந்த  உண்மைக்கதைனு  பில்டப்  கொடுத்து  புரொடியூசரை  ஏமாத்திட்டீங்க. சரி   சொந்தமா  நல்லதா  4  சீன்  கூட  யோசிக்கத்தெரியலையே?


2  கஞ்சா  வாங்கும்  ஃபாரீனர்கள்  பாலித்தீன்  பாக்கெட்டைப்பிரிக்காமயே  ஸ்மெல்  பண்ணிப்பார்க்கற  மாதிரி சீன்  இருக்கு . வழக்கமா  கஞ்சாவை  கைல  எடுத்துப்பார்த்துத்தானே செக்  பண்ணுவாங்க? 


3  ஹீரோயின்  ஒரு  சீன்ல  “இதுக்குத்தான்  கூட்டமே  இல்லாத  படத்துக்கு கூட்டிட்டு  வந்தியா?ன்னு  கோவிச்சுக்குது  ஹீரோ  கிட்டே. அந்த  சீன்ல தியேட்டர்ல  347  பேர்  இருக்காங்க .. இதுக்குப்பேரு  கூட்டம்  இல்லையா?


4   ஃபிகரை   தியேட்டருக்கு  கூட்டிட்டு  வரும்  ஹீரோ   கார்னர்  சீட்டில்  அமராமல்  எல்லோரையும்  போல்  அமர்வது அதிர்ச்சி அளிக்கிறது


5   ஃபாரீனர்ஸ்   வில்லனிடம் “  ஹீரோயினை  காட்டி  இதே  மாதிரி   ஃபிகர்  நடிச்ச  பிட்டைய்ம்  வேணும்னு  தான்  கேட்கறாங்க. அவரே  தான்  நடிக்கனும்னு  சொல்லலை.  வில்லன்  ஏன்  மெனக்கெட்டு ஹீரோயின்  பிட்  படத்துக்கு  ரெடி  பண்றாரு?


6   ஹீரோ  சாக்கு  மூட்டையில்  இருப்பது  ஹீரோயின்  என  தெரியாமல் தூக்கிட்டுப்போவது  எப்படி? ஒரு ஆண்  வெயிட்  சராசரி 75  டூ  85  , பெண்  வெயிட்   40  டூ  50  தானே  இருக்கும் ? லைட்  வெயிட்டா  இருக்கே?னு  ஏன்  சந்தேகப்படலை ?

7  சாக்குப்பைக்குள்  இருக்கும்  ஹீரோயின்   வாயில்  துணி  வைத்துக்கட்டியதால்  பேச  முடியாது  சரி  ஆனால்  முனகல் சத்தம்  , அபயக்குரல்  ஒலி  எழுப்பி  இருக்கலாமே? ஏன் செய்யலை?


8   வில்லன்   ஹீரோவை  நம்பி  எப்படி அந்த  சாக்கு  மூட்டையை  தர்றான்?கூட தன்  அடியாளை  அனுப்ப மாட்டானா?




சி  பி  கமெண்ட்  - மகா”பலி”புரம் = மொக்கைப்படம், டைட்டிலில்  பலி  இருப்பது  குறியிடு  போல -முடியல - விகடன்  மார்க் = 39 , ரேட்டிங் = 2.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 39



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  ம்ஹூம்



 ரேட்டிங்  = 2.25 / 5


டிஸ்கி - கதம்  கதம்  - சினிமா  விமர்சனம்

http://www.adrasaka.com/2015/03/blog-post_66.html

0 comments: