Monday, March 30, 2015

மணல் நகரம் - சினிமா விமர்சனம்

மணல் நகரம்

துபாயில் வேலை பார்க்கும் பிரஜின் தமிழ் நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும் தனது நண்பன் கௌதம் கிருஷ்ணாவை துபாய்க்கு வரவழைக்கிறார். டூரிஸ்ட் விசாவில் செல்லும் கெüதம், பிரஜின் தங்கியிருக்கும் அறையிலேயே தங்குகிறார்.
பிரஜினின் நண்பரான ஜெஸ்சி ஜோஸ் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் ஓட்டலில் பார்வையற்றோர் இசைக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அக்குழுவில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் போக, வேறு வழியில்லாமல் இவருக்குப் பதிலாக கெüதம் அந்த நிகழ்ச்சியில் பாடுகிறார்.
இதேநேரம் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்யும் நாயகி தேஜஸ்வினியும் பிரஜினும் காதலித்து வருகிறார்கள். ஆனால், தேஜஸ்வினி மீது அந்த ஓட்டலின் உரிமையாளர் மையல் கொள்கிறார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருடன் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார்.
பணக்காரரின் மகளான வருணாவுக்கு கெüதமை பிடித்துப்போக அவருக்கு தன் ஓட்டலிலேயே வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுகிறார்கள்.
இதனிடையே பிரஜினின் காதலியான தேஜஸ்வினியை ஒரு பழைய பிரச்னை துரத்துகிறது. நண்பர்களும் வெவ்வேறு பிரச்னைகளில் சிக்குகிறார்கள். கெüதம்-வருணாவின் காதல் விஷயம் பெரு முதலையான வருணாவின் அப்பாவிற்குத் தெரிந்து, இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.
பிரஜின்-தேஜஸ்வினி, கெüதம்-வருணாவின் காதல்கள் ஜெயித்தனவா...? என்பதை சில திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
பிரஜின் மற்றும் கெüதம் கிருஷ்ணாவின் நடிப்பில் குறையேதும் இல்லை. நாயகிகள் தேஜஸ்வினி வருணா இருவருமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நடிப்பைப் பற்றி பெரிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. துபாயில் வேலை செய்யும் மனிதர்களின் கஷ்டங்களை ஓரளவுக்குப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் "ஒரு தலை ராகம்' சங்கர்.
ரெனில் கெüதம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
"மணல் நகரம்'- மணலில் கட்டிய கோட்டை.


நன்றி- தினமணி

0 comments: