1
மண்டபத்தில் பாதி ஆண்களுக்கு முடி நரைச்சிருக்கு.ஒரு பொண்ணுக்குக்கூட நரைக்கவே இல்லை #,நீதி ஆண்கள் அஜித் மாதிரி இயல்பு
==============
2 விஜய் = சார்.புலி 100 கோடி வசூலிச்சுடுமா ?
சிம்பு தேவன் = சும்மா சொல்லிக்குங்க.நம்ம ஜனங்க நல்லவங்க.நம்பிடுவாங்க
============
3 THE WON = தவான்
============
4 உன்னை நிரூபிக்க அரிதான வாய்ப்புக்கிடைக்கையில் சரியாகப்பயன்படுத்திக்கொள் #,தவான்
=============
5 விக்கெட்டும் செல்வம் மாதிரி தான்.கை வசம் செல்வம் இருந்தால் வாழ்க்கை மைதானத்தில் துணிந்து அடிச்சு ஆடலாம்
=============
6 கடிச்சு சாப்பிட்டா பேரிக்கா.
அடிச்சு ஆடிட்டிருக்கோம்.திணறுது சவுத் ஆப்ரிக்கா
================
7எதிரியின் தற்காப்பு ஆட்டத்திலிருந்து உன் அடுத்த தாக்குதலுக்கான பாடத்தைக்கற்றுக்கொள்.# சவுத் ஆப்ரிக்கா பீல்டிங்
===========
8n 100*
கிரிக்கெட் ல
கணக்கு எக்சாம் ல
சினிமா ல
முக்கியமான தன்னம்பிக்கை தரும் நெம்பர்
============
9 வெற்றி கொடுக்கும் தன்னம்பிக்கை் அடுத்த வெற்றி இன்னமும் எளிதாக்கும் # பாகிஸ்தான் ,சவுத் ஆப்ரிக்கா
==============
10 பன்முகத்திறன் கொண்டவர்கள் னு ஒரு லிஸ்ட் எடுத்தா பசங்களை விட பொண்ணுங்கதான் அதிகம் வருவாய்ங்க போல
==============
11 டோனியைப்பிடிக்காதுனு சொல்லும் பூராப்பயலுகளும் லட்சுமிராயைப்பிடிக்கும்னு சொல்வாங்க போல
==============
12 டோனி = டொக் நீ
================
13 எதிரி உன்னைவிடத்திறமைசாலி எனில் அவனுக்கு நீ நிர்ணயிக்கும் இலக்கு மிக கடுமையானதாக இருக்க வேண்டும்
=============
14 காலைல இருந்து நின்னுட்டே இருந்தோம்.ரொம்ப டயர்டா இருக்கு.சாந்தி முகூர்த்தம் இன்னைக்கு வேணாம் னு ஒரு பயலும் இது வரை சொல்லி இருக்க மாட்டான்
==============
15 கல்யாணப்பந்தி ல கூட கர்ச்சீப் போட்டு என் ஆள் வருதுங்கறான்.டேய்
===============
16 கல்யாண மண்டபத்தில் எது முறைப்பொண்ணு ?எது பங்காளி வீட்டுப்பொண்ணுனு தெரியாம குத்து மதிப்பா சைட் அடிக்க வேண்டியதா இருக்கு
==============
17
ட்விட்டர்ல சாப்பாட்டு ராமிகள் பேரெல்லாம் பா னு முடியுது .புஷ்பா ,ஜீபா,ஷீபா,பிரதிபா,வாப்பா,போப் பா,பாப்பா
=====================
18 பொண்ணுங்க கிட்டே பல்பு வாங்குனவனே கமுக்கமா இருக்கும்போது “ என்ன சார்? செம பல்பா?”னு கேட்டு மானத்தை வாங்குவான் தமிழன்
========================
19 ரசிகன் டூ நடிகை= இதுவரை தொழில் அதிபருக்கு , மொள்ள மாரிக்கு , கேப்ப மாரிக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். காசா? பணமா? எனக்கும் ஒரு வாய்ப்பு
===================
20 ஸ்கூல் டீச்சர் பாட்டு பாடுகிறார் =MIS SING
========================
1 comments:
அருமை...........ஹ ஹ ஹா.......
Post a Comment