எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம்: ட்விட்டர் எதிர்ப்பாளர்களுக்கு சிம்பு விரிவான பதில்
கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அப்படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
அஜித் ரசிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, படம் வெளியானவுடன் இயக்குநர் அட்லீ, அனிருத் ஆகியோருடன் இணைந்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'என்னை அறிந்தால்' பார்த்தார்.
அதற்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்துள்ளேன். 'தல' அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என்று சிம்பு கருத்து தெரிவித்திருந்தார்.
சிம்புவின் இந்தக் கருத்தால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உண்டானது. 'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று சாடும் வகையிலான ஹெக்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்டேன். அதற்கு, "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முன்பு தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது எப்போதாவதுதான் நல்ல படங்கள் வருகின்றன.
சினிமாவில் நிறைய அழுத்தம் இருக்கிறது. 'யு' சான்றிதழில் மட்டும்தான் படம் இருக்க வேண்டும், காமெடியாக இருக்க வேண்டும், பேய் படம் என்றால் பார்க்கிறார்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் அவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் தற்போது குறைவாக இருக்கிறது. நமது கட்டமைப்பு அந்த மாதிரி இருக்கிறது.
இந்த மாதிரியான நெருக்கடியான சூழலில், எல்லா படங்களிலும் குறைகள் என்பது இருக்கத்தான் செய்யும். குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்கிறது, அதற்காக அக்குழந்தையை அடித்து, துன்புறுத்தி, மிரட்டி சொல்லிக் கொடுப்பதில்லை. அக்குழந்தையிடம் நாம் எப்படி சொல்லிக் கொடுப்போம், அதுதான் என்னுடைய கருத்து.
'ஐ' படம் எவ்வளவு பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் எடுத்திருந்தார்கள். அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை விட்டுவிட்டு போகலாம். இல்லையென்றால் சொல்கிற விதம் என்று ஒன்று இருக்கிறது. இது 'கேவலம்', 'வேலைக்கு ஆகாது' என்று சொல்லும்போது அவ்வளவு பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்?
இதை நாம் சொன்னால், உடனே எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்கிறார்கள். 'அஞ்சான்' படம் சரியாக போகவில்லைதான், இயக்குநர் லிங்குசாமி ஏதோ ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டார். உடனே லிங்குசாமியை அவ்வளவு கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதாவது கேட்க முடியுமா, சொன்னேனா... இல்லையே. அது அவங்களோட கருத்து சுதந்திரம்தானே.
அதுபோலவே எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நான் என் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னால், அதை பெரிய பூகம்பமாக உருவாக்குகிறார்கள். அதான் ஏன் என்று தெரியவில்லை" என்றார் நடிகர் சிம்பு.
நன்றி - த இந்து
பிடிக்காதவன மெண்டல் நு சொல்றது கருத்து சுதந்திரம் ..உங்களுக்கு பிடிச்சிருக்கு எல்லாருக்கும் பொதுவாக பிடிக்கும்னு சொல்லிட்டு போ ..அத விட்டுட்டு தேவையில்லாமல் வாய் சவடால் விட்டு வம்புக்கு இழுக்கிறது அப்புறம் கருத்து சுதந்திரம்னு படுத்துகிறது ..முன்னாடி எப்ப நல்ல படம் வந்துச்சு?..ஒரே மாறி படாத எடுத்து வச்சிட்டு நல்ல படம்னு சொல்லிகிறீங்க ..மேல் தட்டது மக்களை படம் எடுத்து ஓடும் போது அது நல்ல படம்..வெற்றிமாறன் சொல்வது போல் போர்முல படம் தான எடுத்தீங்க ..இங்கு உள்ள வாழ்க்கை முறையை வித்தியாசமான உத்தியுடன் காட்டினால் அது மொக்க படம்...நேர்மையா படம் எடுத்த ஓடும் போர்முல எல்லாம் மிக்ஸ் பண்ணா ஓடாது...Points175
Raghu Nathan at businessman
அப்போ எனோட கருது சுகதிரம் இது - - படம் ரொம்ப ரொம்ப சுமார் , (அருண் விஜய் - நல்ல நடிப்பு ), (அஜித்- பரவில்லை) ( த்ரிஷா & அனுஷ்க டோடல்லி வேஸ்ட்) லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்னோட பணம் வேஸ்ட். இதுக்கு பில்லா 2 -பரவில்லை.
நான் ஒத்துகொள்கிறேன். உங்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. நாங்கள் யாரும் தடுக்கவில்லை. அனால் நீங்கள் சொல்லும் கருத்துக்குள், கருத்தே இல்லையே. அதுதான் பிரெச்சனை. "மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்." இதில் என்ன கருத்து இருக்கிறது? மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நல்லது எது, கேட்டது எது என சிந்திக்க கூட தெரியாது. இதில் என்ன கருத்து உள்ளது? சிம்பு அவர்கள் கருத்து உள்ள கருத்தை தெரிவித்தால் நாங்கள் யாரும் கடுப்பாக மாட்டோம். காரணமில்லாமல், கருத்தில்லாமல், எவரைப்பற்றியும் கவலைப்படாமல், கருத்தில்லா கருத்தை தெரிவித்தால் கடுப்பாகிபோவோம் நாங்கள்.Points2255
மனநலம் பாதிக்க பட்டவர் என்று சொன்னது விஜய் ரசிகர்களை தான். அஜித்தின் எந்த படம் வந்தாலும் அவர்களுக்கு பிடிக்காது. படம் பார்க்காமலே படம் மொக்கை என்று கருத்து சொல்லும் மனநலம் பாதிக்க பட்ட விஜய் ரசிகர்கள் . சூப்பர் ஸ்டார் டைட்டில் விஜய்க்கு கிடைப்பதற்கு ரஜினியை கிண்டல் செய்பவர்களும் அவர்களே . ஆகா சிம்பு சொன்ன மனநலம் சரி இல்லாதவர்கள் அந்த விஜய் ரசிகர்களே..
படம் பிடிச்சுருந்தா நல்லாருக்குநு சொல்லு.. ஒரு சிலர்க்கு பிடிக்கும்.. ஒரு சிலர்க்கு பிடிக்காது.. வேட்டையாடு விளையாடு .. காக்க காக்க .. வாரணம் ஆயிரம் கலந்து எடுத்தா 150 ருபாய் பணம் கொடுத்து பார்க்கும் போது பிடிக்காமல் தான் போகும்.. எனக்கு பிடிக்கல.. நான் மனநலம் பாதிக்க பட்டவனா.. நான் முதுநிலை பட்டதாரி.. பேங்க் ஒபிபிசெர் .. உன் கருத்து என்னையோ அடுதவரையோ பாதிக்க கூடாது..
Dear Friends and Haters, First one think all of them,,, Yennai Arindhaal film is going on a Rock .. Blockbuster film of 2015, This is telling on All Cinema welfares and Cinema Scientists, But some Irritate Persons speaking about Simbhu. That is ANIL Kunjukals playing.. Not carrying about Small Vgay Mama Fans. Thala fans support Simbhu
சிம்புவுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கு என்பதை நாமும் ஒத்துக்குறோம். ஆனா ஒன்னு-அதே மாதிரி மத்தவங்களுக்கும் கருத்து சுதந்திரம் இருக்குமா இருக்காதா? சிம்பு ஒரு உதவாக்கரை என்று சொன்னால் எனது கருத்துச் சுதந்திரத்தை சரிதான் என்று ஏற்றுக்கொள்வாரா? சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம். அதை அந்த அளவில் விட்டு விட்டு வேறு வேலை இருந்தாப் போய் பாருங்கப்பா. எனக்கு ஒரு ஆசை. 40 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களை நடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரே மூஞ்சியை திரும்ப திரும்பப் பார்ப்பதற்கு போர் அடிக்குது.கதாநாயகிகளை மாற்றுவது போல் நாயகர்களும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.கிழடு கெட்டை எல்லாம் குமரிகளோடு ஆடுறத பார்த்தா சகிக்கல.Points475
0 comments:
Post a Comment