Sunday, February 15, 2015

2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்

1  15 02  2015 = 1+5+0+2+2+0+1+5=16=1+6 =7  கூட்டுத்தொகை  7  வருது.அப்போ  வழக்கம்  போல பாகிஸ் தான்-க்கு  ஏழரை தான்



====================




2   செஸ்னா  வெள்ளைக்காய் ல  ஆடுபவனுக்கு  வெற்றி  வாய்ப்பு .கிரிக்கெட்னா  பேட்டிங்  முதல்ல  பண்ற அணிக்கு  வெற்றி  வாய்ப்பு 




=======================





ஜானி ஜானி எஸ் பாப்பா = வெற்றி  தேவதை  யார் பக்கம்?


டோனி =லட்சுமி(ராய்)  என்  பக்கம்


======================


4 கிரிக்கெட் கமெண்ட்டர் = இப்டி அடிச்சிருக்கலாம்,அப்டி ஆடி இருக்கலாம்
ஃபிலிம்  ரிவ்யூவர் = இப்டி  எடுத்திருக்கலாம்,அப்டி எடுத்திருக்கலாம்




=================


5  மனுஷ வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சுக்கோ
கிரிக்கெட் வாழ்க்கைல நாலு நாலா அடிச்சுக்கோ


================


6 "சன்" டே தமிழ் நாட்டுக்கு பின்னடைவா இருந்தாலும் இந்த சன்டே இந்தியாவுக்கு WINஅடைவா இருக்கும்


=============

7 எதிரி தவற விடும் ஒவ்வொரு வாய்ப்பும் உன் புண்ணியக்கணக்கு #,கேட்ச் மிஸ்


============
8 பவுலிங் போடும் முன் எதுக்கு பந்துக்கு முத்தம் தரும் சாக்கில் எச்சி பண்றே?


அப்போ தான் ஒரு பயலும் கேட்ச் பிடிக்க மாட்டானுவ


=================

9 காதலி கண் எதிரே இருந்தால் காதலனின் செயல் திறன் இரு மடங்காகும் #,அனுஷ்கா என்ட்ரி


================


10 இப்போதைக்கு இந்தியா வுக்கு கத்தி ,துப்பாக்கி எல்லாமே பேட் தான் என்(பத)னை அறிந்தால்,. நீ ஜெயிப்பில் புலி


==============


11 இந்தியா ஜாலி

100 அடிச்ட்டாரு கோலி
பாகிஸ்தான் இன்னைக்கு காலி




==========

12 சிங்கம் 1 போனதும் சிங்கம் 2 வந்துடுச்சு # கோலி , டோனி


===============


13 செஸ்லயும், கிரிக்கெட்லயும்  மொத  வெட்டுக்குதான்  லேட் ஆகும்.அப்புறம் வரிசையா  வெட்டுதான்


================


14   இந்தியன்  ஓப்பனிங்கில்  எப்பவும்  கலக்கிடுவான். ஃபினிஷிங்ல தடுமாறுவான்


==================


15  மனோவியல் சாஸ்திரப்படி  பாகிஸ்தான்  தெம்பா ஆட்டத்தை  துவங்கும்,இந்தியா  அதீத எச்சரிக்கையுடன் பவுலிங் போடும்.நடப்பதெல்லாம் நன்மைக்கே



=================



16  அனேகன் 2 நாளில்  20 கோடி வசூல்  , எ அ  10 நாளில்  100  கோடி  வசூல்  என்பதெல்லாம்  ஒரு கவுரவத்துக்காக  சொல்லப்பட்ட தகவல்  என  கணிக்கிறேன்


==================


17   எடுத்து வைக்கும்  முதல்  அடியை  தடுமாற்றம்  இல்லாமல்  வை #  ஓப்பனிங்கில் ஒயிடு பால்


======================

18 எதிரிக்கு  நீ  கொடுக்கும்  முதல்  அடி எவ்வளவு  சீக்கிரம்   ஆரம்பமோ  அவ்வளவு சீக்கிரம்  உன்  வெற்றி யின் ஆரம்பமும்


==================


19   எதிரி கோபமாக இருக்கும்போது  நீ  நிதானமாக  இரு.
நிதானித்தவன்  வரப்போகும்  வெற்றியை  அவதானித்தவன்


======================


20  குடும்ப வாழ்வில் வெற்றி பெற  இரு குழந்தைக்கு இடையே  இடைவெளி  கொடு.மேட்சில்  ஜெயிக்க  இரு  அவுட்டுக்கு இடையே இடைவெளி தராதே


========================


21  பச்சைக்கலர்க்கு போயஸ்லயும் சரி  , கிரிக்கெட்  கிரவுண்ட்லயும்  சரி , இறங்குமுகமே


===================

22  200 லயே முடிச்சிருக்கலாமே? ஏன் லேட்?


 விளம்பரக்காசு  வேஸ்ட் ஆகாம  இருக்கனும்னா இழுக்கனுமாம் 



==================


23  நீ 7 அடி உயரமா  இருந்தாலும்   உன் எதிரி திறமைசாலியா இருந்தா  5 1/2  அடியா இருந்தாலும்  அவன்  உன்னை  ஜெயிப்பான்


===================


24   மதுரை  முத்து + ஈரோடு  மகேஷ்  கூட இப்படி  மொக்கை  போட மாட்டாங்க #  விஜய்  டி வி  தமிழ்கமெண்ட்



=====================


25  நீ  வெற்றி பெற்றாலும்  அது பரபரப்பான , போராடிப்பெற்ற வெற்றியாக  இருக்கனும்



======================

26   எல்லைல  அடிக்கடி  பிரச்சனை பண்ணும்  பாகிஸ்தானை  கிரிக்கெட் கிரவுண்ட்ல தோற்கடிக்கும்போது  நாட்டையே  ஜெயிச்சதா  பெருமை கொள்வான் இந்தியன்


====================


27  தொலைதூரத்தில் இருக்கும் எதிரியை  வீழ்த்துவதைவிட    பக் வீட்டு/எதிர்  வீட்டு  எதிரியை  வீழ்த்துவதில்தான் பரமதிருப்தி # பாகிஸ்தான்,இலங்கை


=============================

0 comments: