Friday, January 16, 2015

மேத்தமேட்டிக்கல் கவிதை

என் அக்கா பையன்  கங்கா எழுதிய கவிதை,
கணிதமே நீ மட்டும் பெண்ணாக இருந்தால்......
அழகின் வடிவமாய் நீ ஒரு ஜியோமெட்டரி
எல்லையற்ற அன்பினால் நீ ஒரு இன்பினிட்டி
வரவு செலவுக் கணக்கிற்கு நீ ஒரு அரித்மெடிக்
வேரியபிலின் உறவுக்கு பாலமாய் நீ ஒரு பங்சன்
வாழ்வின் வெற்றிக்குத் திசைகாட்டியாய் நீ ஒரு வெக்டர்
அறிவியலைத் தத்தெடுத்து வளர்க்கும் கணிதமே
நீ மட்டும் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால்
நான் உன்னையே காதலித்து மணந்திருப்பேன்!
என் ஆசைப்படி கணிதமே நீ பெண்ணாகப் பிறந்துவிட்டாய். அதனால் உனக்காக நான் எழுதிய காதல் கடிதம் இதோ.......
உன் கூந்தலினை
ஈக்வேசனாக எழுத முயற்சித்தேன் முடியவில்லை!
உன் அழகை வர்ணிக்க
பார்முலாவைத் தேடினேன் கிடைக்கவில்லை!
உன் முக்கோண மூக்கினிலே ஒற்றைக்கல் மூக்குத்தி ஒளிவீசுதே!
நீ புன்னகைக்கும்போது தோன்றும் கன்னக்குழியை
மையமாக வைத்து 6 சென்ட்டிமீட்டர் ஆரத்தில் வரையப்பட்ட
வட்ட வில்தான் உன் புருவங்களோ!
என் இதயத்துடிப்பைக் கேட்டுப்பார்
அது தீட்டா தீட்டா என்றே துடிக்கும்!
நீ யுனிக் செக்சனாக இருப்பதால்
என் ஃபோக்கஸ் முழுவதும் உன் மீதுதான்.
உன் விழிகள் இரண்டும் எலிப்சு
உன் பொற்பாதங்கள் இரண்டும் பாரபோலா
உன் மெல்லிடையோ ஹைப்பர்போலா
எம்ப்டி செட்டாக இருந்த என் இதயத்தை
உன் நேச்சுரல் நம்பர்களால் நிரப்பினாய்!
உன்னை நினைத்துப் பார்க்கையில் தியரம் கொட்டுது
அதை எழுத நினைக்கையில் எண்கள் முட்டுது!
புதிரானவர்கள் என்பதால்தான் நீ பெண் பிறவி எடுத்தாயோ?
நிஜத்தில் நீ ரியலாக என்னைவிட்டுப் பிரிந்தாலும்
என் நினைவுகளில் என்றும் நீ காம்ளெக்சாக இருக்கிறாய்!
என் உணர்வுகளை வார்த்தைகளில் கூறத்தெரியவில்லை

அதனால் எண்களால் சொல்கிறேன்  143!

0 comments: