அ
லிங்கா' நஷ்டமானது உண்மையே: வேந்தர் மூவிஸ்
'லிங்கா' நஷ்டமானது உண்மையே, அதனால் அதிக பாதிப்பு எங்களுக்குதான் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் சிவா தெரிவித்தார்.
‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி
விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது.
உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன்
வெங்கடேஷின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர்
ராக்லைன் வெங்கடேஷ் உடன் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவாவும் பங்கேற்றார்கள்.
அச்சந்திப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவா பேசியது:
"'லிங்கா' படம் நஷ்டமானது உண்மைதான். விநியோகஸ்தர்களில் அதிக நஷ்டமானது
நாங்களே. அதற்கான நிவாரணத்தை விநியோகஸ்தர்களுக்கு பெற்றுத்தர முயற்சி
செய்து கொண்டிருந்தோம். அதற்குள் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர்
சிங்காரவேலன் தவறான அணுகுமுறைக்கு சென்று விட்டார்.
முதல் முறை பேட்டிக் கொடுக்கும் போதே, "ஏன் இப்படி பண்ணுகிறீர்கள். இது
தவறு" என்று கூறினேன். இனிமேல் அப்படி பண்ண மாட்டேன், பண்ண மாட்டேன் என்று
கூறியே தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டே இருந்தார். நான் எவ்வளவு
சொல்லியும் கேட்கவில்லை. தற்போது 'லிங்கா' சிங்காரவேலன் ஆகிவிட்டார்.
ரஜினிகாந்தை பற்றி அவர் பேசியதை எல்லாம் என்னால் கூற முடியாது. அவ்வளவு
அவமரியாதையாக பேசி ரஜினி மனசையும் நோகடித்து விட்டார். ரஜினி நடித்த 150
படங்களில், 145 படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. இவ்வளவு
அதிகமான வெற்றி படங்களைக் கொடுத்தவர் ரஜினி மட்டும் தான்.
அதே போல், படங்கள் சரியாக போகவில்லை என்றால் காசை திருப்பி கொடுத்ததும்
ரஜினி தான். அதுவே ப்ளஸ்ஸாகவும், மைனஸாகவும் அவருக்கு அமைந்து விட்டது.
உண்மையை சொல்ல வேண்டுமானால் 'லிங்கா'வில் அதிகமான நஷ்டம் அடைந்தது வேந்தர்
மூவிஸ் தான்.
வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர்
திரும்பியவுடன் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்
ஆகியோருடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். சிங்காரவேலன்
பேசியதை தவறாக எண்ண வேண்டாம். தவறான அணுகுமுறைகளை மன்னித்து
விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்" என்று கூறினார்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment