தமிழ் சினிமாவில் நடிப்புக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜீவ கலைஞன் , கலை வித்தகன்,உலகநாயகன் கமல் ஹாசனின் அறிவிக்கப்படாத கலை உலக வாரிசு விக்ரம் ,தன் புருவத்தைக்கூட மாற்றிக்கொள்ளாத நாயகர்களுக்கு மத்தியில் தன் உருவத்தையே மாற்றிக்கொள்வதில் கடின உழைப்பையும், ஆர்வத்தையும் காட்டி வரும் நாயகன் ,அவரது வாழ்நாள் சாதனைப்படம் ஐ என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
இந்திய சினிமாவை பிரம்மாண்டத்தின் அடையாளமாய் உலகத்துக்கு உணர்த்திய விஷூவல் ஸ்பெஷலிஸ்ட் ஷங்கர் இந்தியாவின் நெ 1 இயக்குநர் 190 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் என்னும் பெருமையைப்பெறுகிறார்.ஆஸ்கார் வென்றாலும் அடக்கமாய் இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் -ன் சர்வதேச இசை , ஒளிப்பதிவின் உச்சம் பிசி ஸ்ரீராம் இந்த மெகா கூட்டணியில் வந்திருக்கும் ஐ படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
ஹீரோ ஒரு கிராமவாசி .பாடி பில்டர்.அவர் எதேச்சையா ஹீரோயினைப்பார்க்கறார்.பார்த்த்துமே லவ்வு.பாப்பா ஒரு மாடலிங் கேர்ள்.அது ஹீரோவை சாதாப்பார்வைதான் பார்க்குது. ஆனாப்பாருங்க ஆம்பளைங்க கண்ணுக்கு பொண்ணுங்க சும்மா பார்த்தாலே நம்மை லவ் பண்ற மாதிரிதான் தோணும். எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்.ஈர்ப்புதான்
மனசுக்குப்பிடிச்ச பொண்ணு எந்ததுறைல இருக்கோ அதே துறைல இருந்தா கரெக்ட் பண்றது ஈசி எனும் லவ் ஃபார்முலாப்படி ஹீரோ மாடலிங்க் துறைல கால் வைக்கறார்.அப்போதான் ஹீரோயின் மேல கை வைக்க முடியும் ?
இங்கேதான் வில்லன் எண்ட்ரி. அவரும் ஒரு மாடல் தான்.இந்தப்படத்தில் ஹீரோ , ஹீரோயின் , வில்லன் எல்லாரும் மாடல்.நடிப்புக்காக எப்படி எல்லாம் டெடிகேட்டா இருக்கனும், அர்ப்பணிப்பா இருக்கனும் என்பதற்கான ரோல் மாடல் விக்ரம் என்பதால் மாடலிங்க் கேரக்டர் கொடுத்துட்டாங்க போல .
வில்லன் ஹீரோயின் கூட மாடலிங்கா ஜோடி போட்டு நடிக்கையில் அவரை கரெக்ட் பண்ணப்பார்க்கறார் , முடியலை. வில்லனுக்குப்போட்டியா ஹீரோவை தன் ஜோடியாக்கி மாடலிங்க் ஒர்க்கை தொடர்கிறார் ஹீரோயின்.
ஹீரோவுக்கு நடிப்பு வர்லை. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும்கறதுக்காக லவ் பண்றதா பொய் சொல்லி கெமிஸ்ட்ரி உருவாக்கறார் ஹீரோயின் , பின் பச்சாதாபப்பட்டு நிஜமாவே லவ்வறார்
வில்லன் பொறாமையால ஒரு வைரஸ் ஊசி போட்டு ஹீரோவை குரூபி ஆக்குறார்.
இப்போதான் ஒரு சிக்கல்.நம்ம வாழ்க்கை ஹைவேஸ் ரோடு மாதிரி போய்க்கிட்டு இருக்கும்போது தான் இயற்கையோ , கடவுளோ ஒரு ஸ்பீடு பிரேக்கரைப்போட்டு வைப்பாரு.
பக்க விளைவின் காரணமா ஹீரோ உடம்பு ஹல்க் மனிதன் போல் அகோரம ஆகிடுது. நாயகி வெறுக்கறா.
இழந்து விட்ட காதலை ஹீரோ மீண்டும் எப்படி பெறுகிறார்? வில்லன் ஹீரோயின் மேல என்ன ப்கை? இவங்க 3 பேர் வாழ்வும் என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை
ஹீரோவா விக்ரம் . கற்பனைகூட செய்யமுடியாத நடிப்பு. ஜிம் பாடிபில்டராக , கூனனாக , மாடலிங் மாடர்ன் மேனாக மிருகமாக 4 கெட்டப்களில் அவர் நம்மை மெர்சல் ஆக்குகிறார்
இந்திய சினிமாவில் இது போல் யாரும் செய்ததில்லை எனும் அள்வு அளவில்லா உழைப்பு ,கங்க்ராட்ஸ் விக்ரம், டாக்டர்
முன் தன் உருவம்மாறியது குறித்து வருத்தப்படும் காட்சியில் கலக்கலான நடிப்பு
ஹீரோயினாக எமிஜாக்சன். சுமாரான நடிப்புத்தான். எடுப்பான கிளாமர் இருப்பதால் புக் பண்ணிட்டாங்க போல. கிளாமர் காட்சியில் கலக்கறார்
சுரேஷ் கோபி கேரளா மார்க்கெட்க்காக சும்மா ஊறுகாய்
சந்தானம் , பவர் ஸ்டார் காமெடி ஓக்கே ரகம். அதிக காட்சிகள் இல்லை.
பின் பாதியில் ஒரு ட்விஸ்ட் இருக்கு
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 சந்தானம் டூ பவர்ஸ்டார் = உன் படம் பார்க்க வர்றவங்க எல்லாம் உன்னை ரசிக்க வர்றாங்க னு நினைச்ட்டு இருக்கியா? கலாய்க்க வர்றானுங்க
2 சந்தானம் =,உன்னால ஒரு கத்திரிக்கா கூட தூக்க முடியாது.நீ கேத்ரினா கைபை தூக்கப்போறியா?
3

தோத்துடுவோம்கற பயம் இருந்தா ஜெயிக்க முடியாது # சுபா
என்னைக்கொல்லப்போறியா?
அதுக்கும் மேல # சுபா
5 சந்தானம் = இது என்னடா மண்டைல 2 கோடு?
பவர் ஸ்டார் = எந்திரன் பார்ட் 2
6 சந்தானம் = என்னது? இவன் பாத்திரமாவே மாறிடுவானா? இவனே பாத்திரம் மாதிரி தான் இருக்கான்
7 நான் ஆபாச காட்சில நடிக்க மாட்டேன்
சந்தானம் = உன்னை அடுப்புலயா காலை விடச்சொல்றாங்க? இடுப்புல தானே கால் போடச்சொல்றாங்க?
8 பவர் ஸ்டார் = என்னை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்தறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வளர்ந்துட்டே போவேன்
9 பவர் = கடவுள் படைச்சதுலயே உருப்படியான ரெண்டே விசயம்.1 நான் .இன்னொண்ணும் நான் தான்
10 சண்டைக்குப்போறவன் மாதிரி டூயட் சீன்ல வர்றே?
ஐ வான்ட் ஆட்டிட்யூட்
மேடம்.அவரு என்னமோ ஆட்டிவிடச்சொல்றாரு?,#,சுபா
சந்தானம் = கமல் ரசிகர்கள் ரத்தம் குடுக்கறாங்கோ.விஜய் ரசிகர்கள் அரிசி கொடுக்கறாங்க.நீ மேடமோட ரசிகன்.முடி கூடத்தரமாட்டியா?
12 இந்த உலகமே இப்டித்தான்.உண்மையா லவ் பண்றவனை நம்பாது # சுபா
13 நேத்து நீ நெம்பர் ஒன்னா இருந்தே. இன்னைக்கு அவன் நெம்பர் ஒன்னா
இருக்கான். காலம் மாறும்போது எல்லாம் மாறும்# உள் குத்து வசனம்
அ
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1
1
எமிஜாக்சனின் ஆர்ப்பாட்டமான அழகில் ,டி ஆர் பாணியில் செட்டிங்ஸ்.போட்டு ஷங்கரின் பிரம்மாண்டமான ஐ ஓப்பனிங் சாங்
2 உருக்குலைந்த தோற்றத்தில் அர்ப்பணிப்பு நாயகன் விக்ரம் நம்ப முடியாத இளைப்பில்
3 பாடிபில்டராக அபாரமாக செஸ்ட் ,சோல்டர் ,பை செப்ஸ் ஏற்றியப்வர் தொடை ,கெண்டைக்கால்களை உருவேற்றத்தவறி விட்டார்
4 அந்நியன் பைட்டை தூக்கி சாப்பிடும் ஜிம் பைட் .50 பாடி பில்டர்சுடன் விக்ரம் மோதும் கலக்கல் பைட்
5 பாடிபில்டர்ஸ் எப்போதும் க்ளோஸ் ஹேர்கட் தான் பண்ணிக்குவாங்க.ஹிப்பித்தலை ஏனோ?
6 டூ பீஸ் இல் காமி ஜாக்சன்
மெர்சல் ஆகிட்டேன் லைனை மெரசழ் ஆகிட்டேன் னு உச்சரிப்பு
8 பைக்கில் போகும் ஹீரோ.பைக் அப்டியே ஹீரோயினாக உருமாறும் கிராபிக்ஸ் கலக்கல்
9 ஸ்பீசஸ் 2 வில் ஹீரோயின் குளத்தில் இருந்து எழுந்து வரும் காட்சி ரீ மிக்ஸ்டு இன் ஐ
10 ஹீரோ பேரு லிங்கேசன்.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ ?
11 திருநங்கைகளை நக்கல் அடிக்கும் காட்சி.யூ டூ ஷங்கர்?
12 விக்ரம் மாடர்ன் மாடலிங்காக தோன்றும் காட்சி கலக்கல்
சீனா வில் எடுக்கப்பட்ட காட்சிகள் கலக்கல்.ஒளிப்பதிவு கண்ணாடி
14 திருநங்கை - ஹீரோ காதல் எபிசோடு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் .பெண்கள் ஆடியன்ஸ்.வேணுமா.? வேணாமா? ஷங்கர் சார்?
15 ஏ
ஆர் ரஹ்மான் லிங்கா போலவே ஐ யிலும் ஷங்கரை ஏமாற்றி விட்டார்.பாடல்கள்
பிரமாதமாக சோபிக்கவில்லை.ஒளிப்பதிவும் லொக்கேசனும் கலக்கல்
16 சைனா வீரர்களுடன் விக்ரம் போடும் பைட் கலக்கல் ரகம்.ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கிங்
17 அய்யய்யோ.அப்பாவி விக்ரமை துரத்தி ஹீரோயின் லிப் கிஸ் குடுக்குது
18 விக்ரமின் மிரட்டலான ஒப்பனையில் ,அபாரமான நடிப்பில் போர் அடிக்காமல் மெர்சல் ஆக்கும் முதல் 100 நிமிடங்கள் முடிந்தது # இடைவேளை
19
19
விக்ரமின் நடிப்பை
மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கும் ஷங்கருக்கு வழக்கமாகக்கிடைக்கும்
பிரம்மாண்டமான வெற்றி கிடைப்பது கடினம்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 விக்ரம் கூனன் கேரக்டரில் அவரது பாடி லேங்குவேஜ் , மேக்கப் எல்லாம் பிரமாதம் .இதுவரை தமிழ் சினிமா வில் இதுபோல் யாரும் செய்ததில்லை.
2 சீனாவி ல் ஷூட்டிங் ந.டக்கு ம் காட்சிகள் கண்ணூக்குக்குளுமை. அபாரமான லொக்கேசன் செலக்சன் , ஒளிப்பதிவு பிரமாதம்
3 சந்தானம் , பவர் ஸ்டார் காட்சிகள் காமெடி பட்டாசு.இன்னும் அதிக காட்சிகள் வெச்சிருக்கலாம் . ஆனால் படத்தின் நீளம் ஆல்ரெடி அதிக,ம்
4 பின் பாதியில் வரும் தேனீக்கள் ஏவி விட்டு வில்லனைப்பழி வாங்கும் காட்சி மிரட்டல் ரகம்

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 மாடலிங்காக வரும் ஹீரோயின் சக மாடலிங்க் ஆளை பிடிக்காமல் ஆல்ட்டர்நேட்டிவ்வாக ஒரு மாடல் கூட ந்டிக்கனும். ஓக்கே ஊர் உலகத்துல மாடலிங்க் ஆணே இல்லையா? அவர் ஏன் மெனக்கெட்டு ஒரு பாடி பிலடரை பிடிச்சு மாடலிங்கா ஆக்கி சிரமப்படனும் ஆல்ரெடி மாடலிங்கா ஃபார்ம் ஆன ஆளை ஏன் பிடிக்கலை ?
2 ஹீரோயின் வில்லனையும் லவ் பண்ணலை . ஹீரோவையும் லவ் பண்ணலை . தனிமை , இளமை , நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் அமைந்தும் அவர் பயங்கரமான பதிவிரதையா இருப்பது எப்படி ? அதுவும் 4 இஞ்ச் சார்ட்ஸ் , 40 செமீ ஜாக்கெட் மட்டுமே எப்போதும் உடுத்தும் ஃபிகர்>?
3 வில்லன் கிட்டே எந்த கெட்ட பழக்கமும் இல்லை . ஆள் படு ஸ்மார்ட்டா இருக்கார், அவர் லவ் பிரப்போஸ் பண்றப்போ ஹீரோயின் ஏன் மறுக்கனும் ? அவரை அருவெறுப்பாப்பார்க்க பாயிண்ட்டே இல்லையே?
4 ஹீரோயின்ன் பொய்யா லவ் பண்றார் என்பதை ஹீரோவால் ஏன் கண்டு பிடிக்க முடியலை ? ஒரு பொண்ணு நம்மை லவ் பண்ணிட்டு ;லவ் பண்ணாத மாதிரி நடிச்சா கண்டு பிடிக்க முடியாது , ஆனா லவ்வே பண்ணாம லவ் பண்ற மாதிரி நடிச்சா ஈசியா கண்டு பிடிச்சிடலாமே?
5 ஹீரோ மிஸ்டர் தமிழ் நாடு ஆவது எப்படி ? அவரை விட பிரமாதமான பாடி ஃபிலடர்ஸ் ஏகப்பட்ட பேரை எதுக்குக்காட்டனும்?பின் ஹீரோ ஜெயிச்சதா ஏன் சப்பைக்கட்டு கட்டனும் ?
6 சன்னி லியோன் தங்கச்சி மாதிரி முன் பாதி பூரா செம கிளாமரா வரும் நாயகி பின் பாதியில் பூவேலி கவுசல்யா மாதிரி கண்ணிய சுடி க்கு மாறியது ஏனோ?
7 ஹீரோயினுக்கு சக்களத்தி மாதிரி வரும் கேரக்டரில் ஒரு பெண்ணே போதுமே? எதுக்கு திருநங்கை? அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் உவ்வேக் ரகம்,

8 கொக்கோ கொலா மாதிரி ஒரு பிராண்ட் அயிட்டம் ஒரு மாடலிங் மாறுனா சேல்சில் டவுன் ஆகுமா?
9 பொய்யா லவ்வினதா சொன்னதால குற்ற உணர்ச்சியில் ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணினது எடுபடலை. எம் எல் ஏ சீட் கேட்ட ஆளிடம் என் இதயத்தில் இடம் இருக்குன்னு கலைஞர் ஏமாற்றுவது போல்
10 தலைமுடி கொட்டி உடம்பே உருக்குலைந்த கெட்டப்பில் இருக்கும் ஆள் பல் வரிசை மட்டும் பச்சரிசி போல் வரிசையாக இருப்பது எப்படி?
11 ஷங்கர் படங்களில் அமரர் சுஜாதா வின் வசனம் கலக்கலான பிளஸ் ஆக இருக்கும், ஆனா ரைட்டர் சுபா சமாளிச்சிருக்கார்.

சி பி கமெண்ட் -ஐ - விக்ரம் மாறுபட்ட ஒப்பனை , நடிப்பு , இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டம்- லவ் த்ரில்லர் -- விகடன் மார்க் =45 ,
ரேட்டிங் = 3.5 / 5
ரேட்டிங் = 3.5 / 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 45
குமுதம் ரேங்க் ( கணிப்பு) - நன்று
ரேட்டிங் - 3.5 / 5
ஈரோடு அன்னபூரணி யில் படம் பார்த்தேன்
ஈரோடு அன்னபூரணி யில் படம் பார்த்தேன்
Director : Shankar
Producer : V.Ravichandran and D.Ramesh Babu
Writer : Sampoorna Kannan and Subha
Star Cast : Vikram, Amy Jackson, Suresh Gopi, Upen Patel, Santhanam, Ramkumar Ganesan, Srinivasan, Mohan Kapoor, Ojas M. Rajani
Music Director : A.R.Rahman
Cinematography : P.C.Sreeram
Editor : Anthony
Production Company : Aascar Film Pvt.

6 comments:
விமர்சனம் நன்று...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
காதல் காட்சிகள் சவ சவ. அந்த திருநங்கை விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல் போவதில் அவரும் வில்லனாக மாறுவது எல்லாம் தேவை இல்லாத திணிக்கப்பட்ட கேரக்டர்.சந்தானம் பவர் ஸ்டாரை கலாய்த்து காமெடி செய்வதெல்லாம் சலிப்பு தட்டுகிறது.விக்ரம் நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டை இருப்பது வருத்தத்துக்குரியது . ஈசியாக அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடிவதால் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் ஒன்றும் இல்லை . பாவம் விக்ரம் அந்நியனுக்கு பிறகு அவரால் பெஸ்ட் பிலிம் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . இந்த திரைக்கதைக்கு போய் விக்ரம் 3 வருடத்தை வீணடித்து விட்டாரே? ஷங்கருக்கு என்ன ஆச்சு ? அந்நியனுக்கு பிறகு ஷங்கரின் இயக்கத்திலும் தோய்வு ஏற்பட்டு உள்ளது. விக்ரம் பெரிய உழைப்பை கொடுத்து இருந்தும் ஷங்கரின் திரைக்கதை ஓட்டையினால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது . அந்நியன் பிதாமகன் போன்ற படங்களை தான் விக்ரம் இடம் இருந்து நாம் எதிர்பார்க்கிறோம் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி செய்து அது நிறைவேறாமல் போனதில் அவரை போலவே அவர் ரசிகனாக எனக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது .
SUPER REVIEW BRO
Villian is requesting her for one night sex like a adjustment not for love. Enna padam pathingalo ponga
நல்ல விமர்சனம். ஆனால் நீங்கள் படத்தை ஒழுங்காக பார்க்கவில்லை என்று நன்றாகவே தெரிகிறது.
உதாரணம், 1. வில்லன் ஹீரோயின்னை படுக்கைக்கு அழைக்கிறாரே தவிர திருமணம் செய்ய அழைக்கவில்லை. 2. விக்ரம் ஆவதற்கு கஷ்டப்படுகிறார்; எமியை காதலிப்பதற்கு அல்ல.
படம் பார்க்கும் பொழுது மொபைலுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டால் இன்னும் கட்சிதமாக விமர்சனம் செய்யலாம். வாழ்த்துக்கள்.
Post a Comment