‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான வழக்கில் நாவலாசிரியர் பெருமாள் முருகனையும் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது:
எழுத்தாளர் பெருமாள் முருகன், 2010-ம் ஆண்டு ‘மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதினார். அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத் தின் மாயை பற்றியும், குழந்தையில்லா தம்பதிகளின் வீணான முயற்சிகள் குறித்தும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், புத்தகத்தில் இடம்பெற் றுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு சாதி மற்றும் மதம் அடிப்படையிலான அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடந்த 12-ம் தேதி நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த சமரச கூட்டத்தில், அந்த நாவலை திரும்பப் பெறும்படி பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து சம்மதிக்க வைத்துள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த சமரச கூட்டம், சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அதில் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர், “பெருமாள் முருகன் தனக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தங்களின் விவரங்களை முகநூலில் வேதனையுடன் எழுதியுள்ளார். பெருமாள் முருகன் இறந்துவிட்டான். அவன் மீண்டும் பிறக்க மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக் கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “பொது மக்களுக்கு மனவேதனை ஏற்பட்டிருந் தால், அவர்கள் சட்டப்படியான நிவாரணத்தை பெற முயற்சிக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் முடிவு செய்வதை ஏற்க முடியாது’’ என்று கூறினர். மேலும், ‘‘இவ்வழக்கில் நாவலாசிரியர் பெருமாள் முருகனையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவரது நிலை குறித்து இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள முடியும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 22-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.
நன்றி - த இந்து
மக்கள் கருத்து
- ஜல்லிகட்டுக்கு தடை போட்ட நீதிபதிகளுக்கு தமிழ் வரலாறு தெரியாது ,அதை போலதான் மாதொரு பாகன் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் தன்மையும் ..அந்தந்த பகுதிகளின் மக்களின் கருத்துகளை யாரும் விசாரித்து தெரிந்து கொள்வதில்லை .எழுத்தாளர் பொதுவாக எழுதி இருக்க வேண்டும் ..சாதி ,அதில் உட் பிரிவான கூட்டம் என குறிப்பிட்டு எழுதி உள்ளார் .அவர் எழுதிய கருத்து சொந்த கற்பனை ..திருசென்கொட்டில் வாழும் முதியவர்கள் அந்த பழக்க வழக்கங்கள் சுத்தமாக இல்லை என்றுதான் சொல்கிறார்கள் ..மூட நம்பிக்கை பற்றி எழுதுவதும் ,ஒரு சாதி பிரிவினரை இழிவு படுத்தி எழுதுவதும் ஒன்றாகாது ....வட மொழி பெயர் உள்ள நீதியரசர்கள் சொல்வதெல்லாம் தமிழ் மக்களுக்கு சரியென்று எப்படி சொல்ல முடியும் ,,பெருமாள் முருகன் கண்டிக்க பட வேண்டியவரே அன்றி தண்டிக்க பட வேண்டியவர் அல்ல ..
- விமலா அவர்களின் கூற்று உண்மையானால், ஏன் பெருமாள் முருகன் தனது நிலைக்கு எதிராக எழுதப்பட்டது என்று சொல்லவில்லை. மாறாக அவர் தனது படைப்புகளை எல்லாம் அழிப்பதாக கூற வேண்டும். இது வரை தான் கட்டயபடுத்த பட்டதாக சொல்லவில்லை. விமலா அவர்கள் அந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அவர்களும் ஏன் இதுவரை "கட்டாயத்தின் பேரில்" தான் அந்த செய்தி வெளியிடப்பட்டது என்று சொல்லவில்லை. நாட்கள் ஆகி விட்டனவே.Points2510
- அமரர் சாண்டில்யன் தனது கடல்புறா என்ற நாவலில் போருக்கு செல்லும் சத்திரியனுக்கு சத்தான உணவும் -கட்டான பெண்ணும் இருந்தால் போதும் -என்று எழுதிஉள்ளார். இன்று வரை ஒவொரு பதிப்பிலும் அது வெளி வருகிறது.சுமார் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்று பெருமாள் முருகனுக்கு எதிராக முண்டா தட்டும் சாதிக்கட்சிகள் சாண்டில்யனின் இந்த ஆதிக்க கருத்துக்கு இன்று எதிர்ப்பு தெரிவிப்பார்களா ?சாதி ரீதியாக தமிழ் மக்களை துண்டு துண்டாக பிரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பாகம் நடந்து கொண்டு இருக்கிறது.சூழ்ச்சி உபயம் பிஜேபி மற்றும் ஹிந்து முன்னணி .Points2585
- கணேஷ் துரைசாமி Managing Director at My Own Businessஇன்று பெருமாள் முருகனினின் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கும் அனைவரும்அன்று நபிகள் நாயகத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட திரைபடத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் தடை செய்ய போராடிய போது எங்கு போனீர்கள்? இந்துக்களை அவமதித்தல் இந்துக்கள் போராடாமல் இருக்க வேண்டும் என்று எதாவது சட்டம் இருகிறதா அரசியல் அமைப்பு சாசனத்தில்???Points560
- இங்கே கருத்து எழுதும் எல்லாரும் இந்து மத எதிர்ப்பாக இருந்தால் ஏற்கிறார்கள். இஸ்லாம் பற்றியோ கிறித்துவம் பற்றியோ விமரிசம் செய்து நூல் வந்தால் அப்போது இதே சுதந்திரம் கிடைக்க போராட வேண்டியது தானே? என் இந்த ஒர வஞ்சனை. லீன்ர்டோ டாவின்சி கோடு/ புத்தகம் வெளியீடு செய்ய அனுமதி இல்லை. / சாதனிக் வேர்சுஸ் என்ற புத்தகம் வெளியிட அனுமதி இல்லை. ஆனால் இந்த மத விடயமாக , , இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதம் எழுதினால் , அத மட்டும் வெளியிட வேண்டும். இது எந்த வூர் நியாயம்?Points530
- சட்டம் என்று ஒன்று உண்டு .ஆனால் நியாயம் தர்மம் என்றும் ஒன்று உண்டு .எல்லாம் சட்டப்படியே நடக்கிறது என்று சொன்னால் லஞ்சம் ஒழிந்திருக்க வேண்டும் .இல்லையே .இன்னும் பல விசயங்கள் சட்டப்படி நடக்க வில்லை .அது நீதி மன்றத்தின் கவனத்திற்கு போகாமல் நடந்து வருகிறது .எல்லா விசயங்களையும் காவல் துறையும் கவனித்து விட வாய்ப்புகள் குறைவு .சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளது .எப்படி நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சாரார் பாதிக்கப்படுகிறார்கள் .சட்ட மன்றமும் பாராளுமன்றமும் பெரும்பான்மையை வைத்தே முடிவு செய்யப்படுகிறது .இங்கேயும் அந்த பெரும்பான்மையை வைத்தே இப்படி நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது .இதை நீதிமன்றம் கவனமாக பரிசீலனை செய்ய பிரார்த்திக்கிறேன் .Points755
- 'சட்டத்தைத் தவிர எழுத்துக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது' எனில்,சட்ட எரிப்பு போராட்டதில் ஈடுபட்டவர்களை, இராமாயணத்தைக் கொளுத்தியவர்களை, "கம்ப ரசம்" எழுதியவர்களை, "கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி " என்றெல்லாம் கல்லிலே பொறித்து வைத்துள்ளவர்களை எல்லாம் எந்த சட்டம் ஆதரிக்கிறது என்பதையும் நீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டும். அல்லது சினிமாத் துறைக்கு ஒரு தணிக்கைத் துறை இருப்பதுபோல் எழுத்துக்கும், ஊடகங்களுக்கும் ஒரு தணிக்கைத் துறையை ஏற்படுத்தட்டும். திரு. பெருமாள் முருகன் "எழுத்துத் தற்கொலை" செய்து கொண்டது வருந்தத்தக்கது. இதன் பிறகுதான் கழகங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வருகின்றன. ஏனெனில் அவர்களே இதுபோன்ற காரியங்களைச் செய்துள்ளார்கள். எனவே மௌனம் சாதித்தார்கள். இந்தப் பகுத்தறிவுத் திலகங்களால் ஒரு புதிய "எழுத்தாளர் சாதி"யைத்தான் உருவாக்க முடிந்தது.Points285
- Samooga Avalangal மனிதன் at மனித காட்சி சாலைமாதொரு பாகன் நல்ல naaval அதை நல்ல நாவலாக மட்டும் பார்க்கும் தன்மை அனைவரிடமும் வரவேண்டும். பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். நல்லா எழுதுங்கையா நாமிருக்கோம்...Points3070
- Vendhan Karuppiah Deputy Director of Local Fund Audit Dept.(Retired) at Govt.of Thamizh Naadu.வரலாற்றை எந்த கொம்பனாலும் மாற்றமுடியாது.நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பழக்கவழக்கங்கள் அப்போது நடைமுறைகளாக,மரபாக இருக்கலாம். இப்போது அவை தவறென்றால் - அதற்காக உரிய ஆதாரத்துடன் அதனைப் பதிவு செய்வது கூடாது என்பது அய்யோக்கியத்தனம் ஆகும்.இது உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.Points2375
- மனிதகுல வரலாறு என்பது குரங்கிலிருந்து மனிதன் என்கிற இப்போதுள்ள வடிவத்தை அடைந்த உயிரியல் சமாச்சாரம் என்பதாக குறுக்கி கொள்ளத்தக்கதல்ல.மாறாக மனிதன் மானுடனாகிய நாகரீக வளர்ச்சி நிலையை குறிப்பதாகும்.ஒவ்வொரு நூற்றாண்டும் ஒவ்வொரு தலைமுறையும் எல்லா இனக்குழுவும் வளர்ச்சி பெற்றே வந்துள்ளது.ஒரு நூற்றாண்டு முந்தைய நம் வரலாற்றின் சுவடை நாம் அறிந்து கொள்கிறோம் என்பதை தாண்டி அதில் பெருமிதமோ இழிவோ நம் பொறுப்பில் இருப்பதாக கருத இயலாது.ராகுல்ஜி எழுதிய வால்கா முதல் கங்கை வரை நூலை ஒரு முறை படித்தால் நாம் எத்தகைய மாற்றங்களை தாண்டி வந்திருக்கிறோம் என்பது புரியும்.பெண்களின் மீது ஆண்கள் உரிமை கொண்டாடும் ஆதிக்க சிந்தனை எப்படி உருப்பெற்றது என்பதும் விளங்கி கொள்ள முடியும்.Points3750
- ஐயா முற்பாேக்கு எழுத்தாளா்களே பெருமாள் முருகன் எழுதியது உண்மை என்றால் அதை ஆதார பூா்வமாக நிரூபியுங்கள் நாங்கள் தலை வணங்கி ஏற்கிறாேம் ........ இப்படிக்கு திருச்செங்காேட்டுகாரன்
- நீங்களும், திருச்செங்கோட்டின் பெரும்பான்மை சமூகமும் தலைவணங்கி ஏற்காது. மாறாக எழுத்தாளனை ஒழித்திவிடும்.. உங்கள் பகுதி சமூகம், முன்யோசனையற்ற தன்மையால், ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில்,பலவிதமான கொலை /அரிவாள் வெட்டு சம்பவங்களால் குற்றவாளியாகி தலை குனிந்து நிற்பதை எண்ணிப்பாருங்கள். மீசையை முறுக்கி புண்ணியமில்லை, அறிவு கூர்மைப்படவேண்டும்....
- Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limitedகவனிக்க வேண்டியது: "மாதொரு பாகன்' என்ற நாவல் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாவல் வெளியிடப்பட்டபோது எந்த ஆட்சேபணைகளும் தெரிவிக்கப்படவில்லை." அப்பொழுது மத்தியில் வேறொரு கட்சியின் ஆட்சி. சாதிய அமைப்புகள்அப்பொழுது அடங்கி இருந்தன. இப்பொழுது மத்தியில் மற்றுமொரு கட்சியின் ஆட்சி. இப்பொழுதுள்ள மத்திய ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த சாதிய அமைப்புகள் தங்களுடைய 'வாலை' ஆட்டுகின்றனர். 'வாலை' ஓட்ட நறுக்க வேண்டும்.Points16065
- 1.ஒரு நாவல் ஆசிரியர், தனது அனுபவம் மற்றும் அறிவாற்றலைக் கொண்டு பழமை மற்றும் புதுமையான இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கு அடிப்படை உரிமை உள்ளது. அதை அமைதிக் குழு கூட்டத்தின் மூலம் பறித்துவிட முடியாது." -சென்னை உயர் நீதி மன்றத்தின் முதன்மை அமர்வின் இந்த கருத்து தவிர , பலராலும் திரு பெருமாள் முருகனுக்கு பலவகையிலும் ஆதரவுகள் எழுதப்பட்டுள்ள நிலையில்,அவருக்குரிய எழுத்துரிமை வரையற்றதா என்ற கேள்வியும் எழுகிறதே? தவிர இலக்கிய படைப்பு என்ற பெயரில் அவர் பஈந்து விரிந்து கிடக்கும் அடிப்படையில் இன்றும் ஒரு வேளாண் சமூகத்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி எழுத உரிமை உண்டா? சான்றுகள்: 1. “ஒரு வேளாண்மைசார்ந்த சமூகத்தின் இக்கதை நடக்கும் காலகட்டம் பிரிட்டீஷ் ஆட்சியின் கடைசிப் பகுதி. அந்த வரலாற்றுப் பகுதியைப் பல வர்ணனைகளால் உருவாக்கிக் கதையின் பின்புலத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றார்.” (2) “குழந்தைப்பேறற்ற குடியானவத் தம்பதியர் காளி - பொன்னாவை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” (3). பிள்ளைப்பேறு அற்ற பெண், திருவிழாவில் முன்பின் அறியாத, தனக்குப் பிடித்த ஆணுடன் பாலியல்Points19060
- இந்த கதையை ஒரு கற்பனையான தேசத்தில் நடப்பதாக எழுதி இருக்கலாம் , மிக தெளிவாக இந்த ஊரு, இந்த கோவில் என்று எழுதி இருக்கிறார்.. தனி பட்ட மனிதர்களை பற்றி எழுதாமல், அந்த சுற்று பகுதியில் இருக்கும் குழந்தை இல்லாத பெண்கள் எல்லோரும் கூட்டம் கூட்டம் ஆக இதில் ஈடுபடுவதாக எழுதி இருக்கிறார். இந்த நூலை படிப்பவர்கள், தவறே செய்யாத தாமதமாக குழந்தை பெற்று கொண்ட எல்லா பெண்களையும் நாளை சந்தேகம் ஆக பார்ப்பார்கள் . ஒரு நல்ல எழுத்தாளரின் மன ஓட்டம் இப்படியா இருக்கும் ? இது அவர் மனதில் ஓடும் விரசத்தின் வெளிபாடு.. அட்டை படத்தில் ஆபாச படம் போட்டு.. கிளிகிளுபாக கதைகள் வருவது உண்டு.. அதை எல்லாம் நல்ல எழுத்து இலக்கியம் என்று எடுத்து கொள்ளலாமா ? பொது கழிப்பறையில் ஆபாசமாக கிறுக்கி விட்டு போவதும் எழுத்து தான்.. அதை கருத்து சுதந்திரம் என்று எண்ணி முகம் சுளிக்காமல் இருக்க முடியுமா ? கற்பு ஒழுக்கத்தை மிக அழகாக கூறியன தமிழ் இலக்கியங்கள்.. அதை எல்லாம் விட்டுவிட்டு இவர் போன்றவர்களின் காம கிறுக்கல்களை எல்லாம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அப்பாவி பெண்களின் தனி மனித ஒழுக்கதையும் சுதந்திரத்தையும் கேலி கூத்து ஆக்காதீர்கள்Points130
- Pandy Velayutham at Pensionerதீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இது மதவாதிகளின் செயல் மட்டுமல்ல, சாதீய வாதிகளின் செயல். இவர்களின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது - வே. பாண்டிPoints2375
- The legal system should also give a direction to review Panjaali having Five husbands and let not it be included in school or college text books. Legal procedures enlightens the importance of the Constitution of India, individual right to expression, educating caste-ridden people to change their caste attitudes and keeping women as just productive machines.Points690
- நீதிமன்றம் "எதை எழுதுவது, எழுதக் கூடாது என்பதை சட்டத்தால் மட்டுமே முடிவு செய்ய முடியும். சட்டத்தை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது'" //// சட்டத்தின் பார்வை ஆபாசம் வார்த்தை உபயோகம் போன்ற TECHNICAL போன்ற விஷயங்களில் தான் கருத்து கூற முடியும். கலாசாரம் சேர்ந்த விஷயங்களில் ஒரு நேர்மையான கமிட்டி வைத்து முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும்
0 comments:
Post a Comment