தமிழ் சினிமாவில் தன்னை கவனிக்க வைக்கிறார் சந்தோஷ் நாராயணன் என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஜனவரி 6-ல் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல்
பக்கத்தில் லைவ் சாட் மூலம் ரசிகர்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில்
அளித்தார்.
பிரபல இசைக் கலைஞரான சலீம் மெர்சண்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளராய்ப்
பங்கேற்றார். அவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் லைவ் ஸ்ட்ரீமில் ரசிகர்களின்
கேள்விகளைக் கேட்க, அவரும் வழக்கமான தனது அமைதியான புன்னகையுடன் பதில்களைக்
கூறினார்.
ரசிகர்களின் உற்சாகமான கேள்விகளால் ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பக்கம் நிரம்பி
வழிந்தது. அதில் சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் இதோ...
உங்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் இடையேயான இசை மாயம் இன்னும் எப்படி புதிதாகவே இருக்கிறது?
மணி சார் என்னுடைய நண்பர், வழிகாட்டி... அவருடன் வேலை பார்க்கும்போது
வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். அங்கே எந்த விதமான கட்டுப்பாடுகளும்
கிடையாது. அதுவே காரணமாய் இருக்கலாம்.
உங்களுக்கு இணைய உலகம் பிடித்திருக்கிறதா?
கண்டிப்பாக. எல்லா விஷயங்களுக்கும் உடனுக்குடனே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது.
உங்களுக்குப் பிடித்த இளம் இசையமைப்பாளர்கள் யார்?
தமிழ் சினிமாவில் சந்தோஷ் நாராயணன் கவனிக்க வைக்கிறார்.
திரையில் உங்களை எப்போது ஹீரோவாகப் பார்க்க ஆசை. எப்போது இது நடக்கும்?
கண்டிப்பாக வாய்ப்பில்லை. இசை எனக்குக் கிடைத்த பரிசு. இந்த விஷயத்தில்
நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனக்கு இசையே போதும். கதை எழுதும்
பணியைத் தொடங்கி இருக்கிறேன். தயாரிப்பிலும் ஆர்வம் இருக்கிறது. இதுவே
போதும்.
இசையைத் தேர்வுசெய்வதில் இயக்குநரின் முடிவு உங்களைப் பாதித்திருக்கிறதா?
சில நேரங்களில் இயக்குநர்களின் தேர்வு மனதுக்கு அத்தனை நெருக்கமாக
இருக்காது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வேன். அதுவே மிகப் பெரிய வெற்றிப்பாடலாக
அமைந்துவிடும். ‘முன்பே வா அன்பே வா’ அதற்கு நல்ல உதாரணம்.
உங்களின் ஹாலிவுட் இசை முயற்சி எப்படி இருக்கிறது?
இன்னமும் எனக்கான இடத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அங்கேயுள்ள
சிலருக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது. இங்கு போல் இல்லாமல் 12
பேரைக் கொண்ட குழுதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.
ஏன் இரவு நேரங்களிலேயே உங்களின் பெரும்பாலான வேலைகளைச் செய்கிறீர்கள்?
என்னுடையது 9 டூ 5 வேலை கிடையாது. இரவு பகல் என்று எதுவும் இல்லை. அதற்கான ஓட்டத்திலேயே போய் வேலையை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
இளம் இசையமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மனிதர்கள்தான் நாம் என்ன செய்கிறோம் என்பது எல்லோராலும் கவனிக்கப்பட
வேண்டும் என விரும்புகிறார்கள். இயற்கையைப் பாருங்கள். எதைப் பற்றியும்
கவலைப்படாமல் பூத்துக் குலுங்குகிறது. அதைப்போல் தான் இருக்க வேண்டும்.
முதலில் நம்முடைய சொந்த திருப்திக்காக உழைக்க வேண்டும். சமுத்திரத்தில் ஒரு
துளியாக இருக்காதீர்கள். ஒற்றைச் சொட்டின் சமுத்திரமாக இருங்கள். உங்கள்
இசை முதலில் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, நீங்கள் அதை வாங்குவீர்களா என
யோசியுங்கள்.
உங்கள் வேலை பற்றி?
தரம், விலை, வேகம் இந்த மூன்றில் இரண்டைத்தான் தரமுடியும். மூன்று விஷயங்களையும் தர முயற்சிக்கிறேன்.
ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என சலீம் கேட்க, அதற்குத் தனது
பக்கத்தை இரவு 12 மணிக்கு பார்க்கச் சொல்லி அங்கு ஆச்சரியம்
காத்திருப்பதாகக் கூறினார் ரஹ்மான். 12 மணிக்கு, தன்னுடைய புதிய இசை பேண்ட்
'NAFS'-க்கான முன்னோட்டத்தைப் பகிர்ந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த
பேண்ட் இந்தியர்களின் இசைத் திறமையை உலக அளவில் பரப்புவதற்காகத்
தொடங்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி -த இந்து
- humanbeingசாலிகிராமத்தில் அவருடைய வீட்டின் இரண்டு வீடு தள்ளி இருந்த உறவினர் வீட்டுக்கு போய் விட்டு வரும்போது 15 வருடகள் இருக்கலாம், ரொம்ப சிம்பிளான ஒரு வீடு. ஒரு வார்த்தைதான் "ஆரவாரமில்லாத மனிதர்" இவர்.Points33495
- raviganeshஅருமை. மிகுந்த பணிவுடன் சொல்லப்பட்ட பதில்கள். இவரிடமிருந்துதான் பணிவை பலர் கற்றுகொள்ளவேண்டும். இசை மட்டும் போதும் என்று சொன்ன அடக்கம். தண் குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டில் சகல துறைகளை ஆளவேண்டும் என்று நினைக்கும் சில பழுத்த பழங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.Points1590
- Lawrence Corera at Tuticorin Port Trustநான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனக்கு இசையே போதும்அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.Points185
- thukluck_juniorதிரு. ஏ,ஆர்.ரகுமான், நிறை குடம், என்பதை அவரது பேட்டி, வெளிபடுத்துகிறதுPoints985
- Gnanasekaranஇன்றைய இசை என்பது "உலக இசைகளை எல்லாம் பல சிடி க்கள் மூலம் நன்றாக கவனமாக கேட்டு, அதனை உள்வாங்கி, ஆழ்மனதுக்குள் தியானித்து அதனை தன் நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, நடை, போன்றவைகளுடன் உட்புகுத்தி அதனை ஒலி மூலமாக வெளிப்படுத்தி மக்களின் செவிகளில் கொண்டு போய் சேர்ப்பதே ஆகும்". ரகுமான் உலக நாடுகளின் இசைகளை நன்கு கேட்டு அறிந்தவர், கேட்டுகொண்டிருப்பவர், இனியும் கேட்பார். முதல் முதலில் மனிதர்களை நம்பாமல் கம்ப்யூட்டர் ஐ நம்பியவர். டெக்னாலஜி is தி பேஸ் for ரஹ்மான். அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுமான். அதுமட்டுமில்லாமல் சந்தோஷ் நாராயணன் போன்று ஜிப்ரான் என்று ஒருத்தர் இருக்கிறார். இவரை ரகுமான் எப்படி மறந்தார் என்பதை மறந்தார் என்று தெரியவில்லை. "சர சர சாரகாத்து" பாடல் ஒன்று போதாதா? எல்லாம் அரசியல். எங்கும் அரசியல். நான் சொல்வேன் ஜிப்ரான் தான் அடுத்த ரகுமான். ஏன்? ரகுமானை விட பெரிய ஆளாக வருவார். அதற்காக சந்தோஷ் நாராயணனை மட்டமாக சொல்ல வில்லை. அவரும் திறமையானவர் தான். இந்த அனிருத் என்ற ஒரு சின்னபுத்தி பையன் உள்ளார். இந்த பையன் இருந்து என்ன பயன்? ஹாலிவுட் படங்களை பார்த்து 'காபி' அடிக்கிறான்.Points1335
- Prathap"எல்லாம் அரசியல், எங்கும் அரசியல்" - என்ன இது, எனக்கு புரிய வில்லை...ரஹ்மான் வேண்டுமென்றே ஜிப்ரான் பேரை புறக்கணிக்கிறார் என்கிறீர்களா?...இதே ரஹ்மான் ஜிப்ரான் பேரை கூறி இருந்தால், "முஸ்லிம் என்பதால் ஜிப்ரானை பாராட்டுகிறார்" என்று சொல்வீர்கள்... பாரட்டியது ஒரு தவறா? விட்டு விடுங்கள் பாவம் ரஹ்மான்about 5 hours ago · (2) · (0) · reply (0) ·
- Prathapரஹ்மான் ஏற்கனவே "வாகை சூட வா" பாடலை கேட்டு ஜிப்ரானை பாராட்டியுள்ளார், நீங்கள் சொல்வது சரி ரஹ்மானுக்கு பிறகு, ஜிப்ரான் or சந்தோஷ் தான் பொருத்தம் ... அனிருத் மீடியாவால் பெரிதாக்கி காட்ட படுகிறார் ஆனால் சந்தோஷ் and ஜிப்ரான் உண்மையிலேயே திறமைசாலிகள். அனிருத் பாடல்கள் எல்லாம் நிற்காது, காலத்தில் ஓட்டத்தில் மறைந்து விடும்.about 5 hours ago · (1) · (0) · reply (0) ·
- jayaprakashஇந்த பணிவுதான் புகழின் உச்சத்திற்கு உங்களை கொண்டு செல்கிறது. உங்களிடமிருந்துதான் பணிவை கத்துக்கணும், உங்களை போலவே வாழ முயற்சி செய்றேன் சார்about 8 hours ago · (5) · (0) · reply (0) ·
- kumar Ragavanமற்றவர்களின் திறமைக்கு மதிப்பளித்து அதை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அந்த பெருந்தன்மை மிக்க மனம்,குணம் திரு. ஏ,ஆர்.ரகுமான் அவர்களிடம் உள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது அவருடைய நல்ல மனதை பாராட்டுவோம்...about 9 hours ago · (20) · (1) · reply (0) ·
- Rizwan Deenநிச்சயமாக அவர் ஒரு சிறந்த இசை அமைமைப்பாளர் ரஹ்மான் சொன்ன சரியாக தான் இருக்கும். உங்க பணிவு எங்களை பரவசம் கொள்ள வைக்கறது :) என்றும் அன்புடன் ரசிகன் :)about 10 hours ago · (12) · (0) · reply (0) ·
- ramprasathகுகூ பட பாடல் ஒன்றே சந்தோஷ் Narayan ஒரு வளர்த்து வரும் நல்ல இசை அமைப்பாளர் என்று புரிய வைத்து விடும்Points265
- Venugopal Sமற்றவர்களின் திறமைக்கு மதிப்பளித்து அதை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அந்த பெருந்தன்மை மிக்க மனம்,குணம் திரு. ஏ,ஆர்.ரகுமான் அவர்களிடம் உள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.,Points645
- Gnanasekaranஉங்களை விட அவர் சிறப்பாக மியூசிக் போட்டால், பிறகு ஏன் கவனிக்க வைக்க மாட்டார்? இவருக்கும் வைப்பு கொடுத்தால் ஹாலிவுட்இல் ஆஸ்கார் விருதுகளை வாங்குவார். ஜிகர்தண்டவில் இவர் மிரட்டி இருக்கிறார். உண்மையிலேயே சந்தோஷ் நாராயணன் ஒரு நல்ல இசை அமைப்பாளர்.Points1335
- Prathapநீங்கள் "ரோஜா, பாம்பே,புதிய முகம், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு, கடல், காதலன், இந்தியன், பாய்ஸ்,அலை பாயுதே, திருடா திருடா, உயிரே, ஜென்டில்மென், ஜீன்ஸ், காதலர் தினம் , காதல் தேசம், சங்கமம்,ஆயுத எழுத்து, விண்ணை தண்டி வருவாயா, ராவணன்...etc, பாடல்களை எப்போதாவது கேட்டதுண்டா?... அந்த மாதிரி ஒரு ஆல்பம் சந்தோஷ் நாராயணன் கொடுத்த பின்பு ..அவரை ரஹ்மானோடு கம்பேர் பண்ணுங்க.. இப்போ உங்க வேலையே பொய் பாருங்க... சந்தோஷ் நாராயணன் திறமைசாலி தான் ஆனா எதுக்கு தேவை இல்லாமல் ரஹ்மானோடு கம்பேர் பண்றீங்க.about 11 hours ago · (130) · (3) · reply (3) ·
- kumarஇதை போல நீங்களும் இளையராஜா அவர்களுடன் ரகுமானை ஒப்பிடக்கூடாது. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசைஅமைத்து இன்னும் இருக்கிறார். இன்னும் இருநூறு தாண்டாத ரகுமானை ஆஸ்கார் விருது அளவு கோளுடன் இசைஞானியோடு ஒப்பிடாதீர்கள்.about 7 hours ago · (3) · (11) · reply (4) ·
- RAMACHANDRAN Sஅண்ணா குமார் அவர்களே இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து என்ன பயன் இவர் தமிழ் சினிமாைவ தன் அதிகாரத்தில் வைத்து ெகாண்டு தன்னை தானே புகழ்ந்து பாடல் பாடி ெெகாள்வார் தமிழ்சினிமாவும் இசையையும் வெளிநாட்டினர்க்கு ெகாண்டு சேர்த்தரா அந்த வகையில் ஆஸ்கார் நாயகேன சிறந்தவர் (பிரதர் எண்ணிக்கை முக்கிய இல்லை)about 5 hours ago · (0) · (0) · reply (0) ·
- RAMACHANDRAN Sஐயா குமார் அவர்களே இளையராஜாவின் இப்ேபாது பாடல்கள் தரமான இருக்குதா மனசாட்சி தொட்டு ெசால்லுங்க11 minutes ago · (0) · (0) · reply (0) ·
- RAMACHANDRAN Sசரியாக சொன்னீர்கள் பிரதர்about 9 hours ago · (8) · (1) · reply (1) ·
- Prathapநேற்று வந்த இசையமைப்பாளர் ஒருவர் , ஒரு 2 படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் .. இவர்கள் ரஹ்மானோடு கம்பேர் செய்வார்கள்... இவர்களுக்கு யாருக்குமே ரஹ்மான் எவ்வளவு நல்ல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதே தெரியாது..அப்புறம் எதற்கு தேவை இல்லாமல் இந்த "Comparison"about 8 hours ago · (8) · (1) · reply (0) ·
- RAMACHANDRAN Sஉங்களுக்கு வேறு வேலையே இல்லையா ஒரு நபர வாழ்த்தி பேசினாலும் தப்பாabout 11 hours ago · (18) · (2) · reply (0) ·
- thukluck_juniorவிசுவநாதன் இளையராஜா, ரஹ்மான் போன்றோர்கள், தனி, தனி தன்மை வாய்ந்தவர்கள், அதுவும் இசை என்பது கலை சம்பந்தமான விஷயம், ஒன்றுடன் ஒன்று கம்பேர் பண்ணுவதே தவறு, இசையை, இசையாக, கலையாக ரசிப்போம்about 6 hours ago · (0) · (0) · reply (0) ·
- ரியாஸ்தேடலில் ஆர்வம் உள்ளவர் ரஹ்மான். புகழின் உச்சம் போயும் தேடலை நிறுத்தவில்லை. புகழனைத்தும் இறைவனுக்கு என சமர்ப்பித்துவிட்டு தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார். வெற்றிகள் குவிகின்றன.
0 comments:
Post a Comment