Sunday, January 11, 2015

நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவரைக் கொன்றது ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்தான் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 



1945ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்று நேதாஜி மாயமடைந்த வழக்கை விசாரித்த முகர்ஜி குழுவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. எனவே இது ஒரு கட்டுக்கதை ஆகும். 



இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியடைந்தன. அந்த இருநாடுகளிடம் இருந்து உதவி பெற்று வந்த நேதாஜி, அதன் பிறகு சீனாவின் மஞ்சூரியா எனும் பகுதிக்குச் சென்றார். அன்று அது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 



அங்கு சென்றால் ரஷ்யாவின் உதவியை நாடலாம் என்று நேதாஜி நினைத்தார். ஆனால் ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின் அவரை சைபீரியாவில் உள்ள யாகுஸ்க் சிறையில் தள்ளினார். அனேகமாக 1953 காலகட்டத்தில் நேதாஜி அங்கு தூக்கிலடப்பட்டார். இது பற்றி ஜவஹர்லால் நேருவுக்கும் தெரிந்திருந்தது. 


உலக யுத்தத்தின்போது பிரிட்டன் வெற்றி பெறவும், இந்திய விடுதலைக்கும் நேதாஜியின் பங்களிப்பு மிகவும் முக்கிய மானதாகும். எனவே அவரின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நம் அரசிடம் உள்ள ரகசிய‌ ஆவணங்களை பொதுவெளிக்குக் கொண்டு வர வேண்டும். 


ஆனால் அவ்வாறு ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தால் அது பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் தற்போது இந்தி யாவுக்கு உள்ள உறவு பாதிக்கப் படும். எனவே ஆவணங்களை வெளியிடுவதில் உள்ள சாதக பாதகங்களை உணர்ந்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 



சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நேதாஜி மாயமடைந்த விவகாரம் குறித்து 41 ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்று மத்திய அரசு கூறியதோடு அதில் இரண்டு ஆவணங்களை மட்டும் பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. மீதமுள்ள ஆவணங்களை வெளிப்படுத்த அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 



  • பரட்ட! பத்த வச்சுட்டுயே பரட்ட! எப்படி சு சா உன்னால மட்டும் இப்படி எல்லாம் பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியாது!
    Points
    5505
    about 4 hours ago ·   (22) ·   (2) ·  reply (0) · 
  • Siva  
    நேதாஜி மறைவு குறித்து இனி யாராவது கேட்பீங்க ?
    Points
    1535
    about 4 hours ago ·   (16) ·   (0) ·  reply (0) · 
  • kaliki vanchinathan  
    நம் நாட்டின் மிக சிறந்த தேச தலைவர் இவர்....நம்மை ஆண்ட மேற்க்கத்திய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருக்கிறார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.....நாட்டின் விடிவெள்ளியான இவரின் பிறந்தநாள் நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட வேண்டியது அவசியம்....இவரின் பெயரால் அரசு விழாக்கள் பல நடத்தப்பட வேண்டும்..... முதன் முதலாக மர்மத்தை உடைத்த திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கு மிக்க நன்றி......
    Points
    605
    about 5 hours ago ·   (16) ·   (18) ·  reply (0) · 
  • Ram  
    pakkathula erunthu patha mathiri sollararu
    about 5 hours ago ·   (13) ·   (2) ·  reply (0) · 
  • கீழை ஜஹாங்கீர்  
    மோடி அரசே,நேதாஜியை கொன்ற ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மீது உடனடியாக நடவடிக்கை எடு.இந்த வழக்கில் சு.சாமியை முக்கிய சாட்சியாக ஏற்று நீதியை நிலை நாட்டுமாறு 1945வாழ் இந்தியர்களின் சார்பில் வேண்டுகிறேன்.நண்பர் ராஜபக்சேவின் தோல்வியை மறைக்க இதுதான் வழி.(சு.சா.வின் மைண்ட்வாய்ஸ்)
    Points
    13830
    about 6 hours ago ·   (33) ·   (2) ·  reply (0) · 
  • Chandra_USA  
    ஆஹா அடுத்த சர்ச்சையை சுவாமி துவக்கி விட்டார். நேதாஜின் மரணத்தில் இருக்கும் உண்மைகள் வெளியில் வரும் நேரம் நெருங்கி விட்டது என்றே தோன்றுகிறது


நன்றி - த இந்து

0 comments: