Saturday, January 31, 2015

மாஸ் ஹீரோ அஜித்தா? விஜய்யா?

1
ஒரு நல்ல படைப்பு முழுமை பெறுவது எல்லாத்தரப்பு மக்களையும் போய்ச்சேரும்போதும் ,எல்லோராலும் /பெரும்பான்மையோர்களால் சிலாகிக்கப்படும்போதும்
=============


அவசர தேவையா இருக்கும்போது கூட ரத்த வங்கியில் தன் ஜாதிக்காரன் /மதத்துக்காரன் ரத்தமாக்கிடைக்குமா? னு கேட்பான் ஜாதிப்பாசத்தமிழன்
===================

3  அன்பே! கல்யாணப்பொண்ணு மாதிரியே எப்பவும் சீவி சிங்காரிச்ட்டு இருக்கியே! இதுக்கெல்லாம் மேக்கப் செலவு உங்க அப்பன் வீட்ல இருந்தா சீரா வருது ?
===============



4  உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?னு ஆளாளுக்குக்கேட்டீங்கன்னா அப்புறம் நான் என் தன்னடக்கத்தை கை விட்டுட்டு M.A ஹிந்தி -னு சொல்ல வேண்டி வரும்
================


தேதி அறிவிக்கப்பட்ட மரணங்கள் கொடூரமானவை



================



ரயில்ல ஒரு பொண்ணு 10 வளையல் ஒரே கைல போட்டிருந்துது.திடீர்னு வளைய வளையமா கழட்டுச்சு.பார்த்தா ஒரே முத்து மாலை.சுத்தி சுத்தி வளையல்.அடடே!
=============

பாம்பு எப்படி படம் எடுக்குது?ங்கறதை படம் எடுக்க பாம்புப்புத்துக்குள் உன் கையை விடாதே! நீ படமாகத்தான் வீட்டில் இருப்பாய்
============

8  பருமனாக இருக்கும் (தென்படும்) மணிபர்ஸ்களில் பெரும்பாலும் விசிட்டிங் கார்டுகள் தான் இருக்கும்
==============
9
விஜய் ரசிகர்கள் அரசியல் ல இறங்குனா நல்ல எதிர்காலம் இருக்கு.சூழ்நிலைக்கு ஏற்றபடி விஷால் ரசிகரா ,விக்ரம் ரசிகரா ட்யூன் ஆகிடறாங்க
================
10  போர் நடக்காதபோதும் ஒரு ராணுவ வீரன் தயார் நிலையில் இருப்பது போல அதிர்ஷ்டம் இல்லாதபோதும் நீ எந்நேரமும் வாய்ப்புக்காக காத்திரு
===================


11   மாஸ் ஹீரோ அஜித்தா? விஜய்யா? னு ஒரு பக்கம் சண்டை நடக்்கும்போது சூதானமா சூர்யா படத்துக்கு மாஸ் னு டைட்டில் வெச்சு மாஸ் ஹீரோ ஆக்கிட்டாங்க


================


12  வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ பாட்டுல ஆசீர்வாதம் நான் தான் பண்ணுவேன் னு ஒரு டபுள் மீனிங் வரி வருது #சிவகுமார்


==============


13  எளிமையான அழகு பல முறை பல இடங்களில் ,பல தருணங்களில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை அமைதியாக வென்றிருக்கிறது என் பத னை அறிந்தால்


==============


13 
உனக்கான சிறந்த இடம் கிடைக்கவில்லையே என வருந்தாதே! உன்னை நீ நிரூபித்ததும் நீ எதிர்பார்த்தது உன்னைத்தேடி வரும்


===================


14  முத்தம் வாங்கிய கன்னம் அடுத்து இதுக்குப்போட்டியா யாராவது முத்தம் நித்தம் தந்த அன்னம் னு பேர்வெச்சுக்குவாங்களோ? # ஐ ஆம் வெய்ட்டிங்


================


15  அன்பே சொரூபா!,அர்ஜென்ட்டா காந்தி கணக்கில் வேணும் எனக்கு ஆயிரம் ரூபா.! # சும்மா


================

16 
அன்பே சோன் பப்டி! டெய்லி அரைக்கிலோ நொறுக்ஸ் தின்ன பின்னும் இன்னும் லீன் பப்டியா இருக்கியே,அது எப்டி?


==============

17  ரயில்ல ஒருத்தன் தன் கள்ளக்காதலிக்கு 5 முழம் பூ வாங்கிக்குடுத்தான்.1 மணி நேரத்துல அது இறங்கும்போது பூச்சர்த்தை ஜன்னல் வழியாவீசிடுச்சு.அடடா.


===============


18  கண்ணியம் கருதுவோர் உபயோகிக்க விழி ஒளி இழந்தோர் செவித்திறன் குறைந்தோர் பேசும் திறன் அற்றோர். கொச்சை வார்த்தைகளை தவிர்க்கவும்


==============


19  இந்த   வாரம்  மாளவிகா  வாரமாம். ஸி  யூ அட் 9  படம்  போடலையே? சன்  டி விக்கு  மார்க்கெட்டிங்க் தெரியலையா?சென்சார் ல  விடலையா?



===============


20  ஷமிதாப் படத்துல ஹீரோ  தனுஷ்  வில்லன் அமிதாப் பை அடிச்சு  இழுத்துட்டு வர்ற  சீன்  அப்டியே  1000  சுள்ளான் பார்த்தது  போல்  இருக்கும்


====================

Friday, January 30, 2015

டூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்

 

இதுதான்  என்னோட இயக்கத்தில்  வரும் கடைசிப்படம் என்ற  அறிவிப்போட  நம்ம  100  கோடி கலெக்டர் ( கலெக்சன்  செய்பவர் = கலெக்டர்) தளபதியோட அப்பா  கதையின்  நாயகனா  நடிச்சு  இயக்கிய  படம்  தான்  டூரிங்  டாக்கீஸ். பல  வருடங்களுக்கு முன்பே  கே பாலச்சந்தர்  இதே  போல்  ஒரு வீடு  இரு  வாசல்  என்ற  டைட்டிலில்  ஒரே  படத்தில்  இரு கதைகள்  சொல்லி  புதுமை செஞ்சார். நம்ம ஆளு  என்ன செஞ்சார்னு பார்ப்போம்.


ஹீரோவுக்கு 75  வயசு. அவருக்கு ஒரு காதலி 25 வயசுல  தொலைஞ்சிடுது. எந்தத்திருவிழாவில்  தொலைச்சார்னு  ஒரு ஃபிளாஸ்பேக்  இருக்கு. லவ்  பண்ணும்போதே  ஹீரோ  மேட்டரை  முடிச்சுடறார். தொடாம  காதலிக்க  இது  அகத்தியன்  படம் இல்லை.வழக்கம்  போல்  எல்லா  பெற்றோரும்  போல்  காதலியின்  பெற்றோரும்  மிரட்டி  ஹீரோ கண்ல படாம  பண்ணிடறாங்க.


50  வருசம்  கழிச்சு  எதேச்சையா  தன்  காதலி  இருக்கும்  இடம்  தெரிஞ்சு அவரைத்தேடு  தேடுனு  தேடறதுதான்  முன்  பாதிக்கதை. இதை இப்டியே  சொன்னா  சாதா  கதை ஆகிடும், அனுதாப  ஓட்டு  வாங்கனுமே,அதுக்காக  ஹீரோக்கு  பிளட் கேன்சர் , ஸ்மோக்கிங் கேன்சர்னுஒரு  எக்ஸ்ட்ரா  பிட்டு .


ஹீரோவா  எஸ்  ஏ சி .சால்ட்  &  பெப்பர்  லுக்கில்  அஜித்  கெட்டப்பில்  வர்றார்.எந்த  அஜித் கெட்ட்ப்பைப்பார்த்து  விஜய்  ரசிகர்கள் கிண்டல்  பண்ணாங்களோ  அதே  கெட்டப் .என்ன  ரீ ஆக்சன்  காட்டுவாங்களோ  பாவம்.  ஒரு  ஹீரோவா  அவர்  அடக்கி  வாசிச்சாலும்  இயக்குநரா  அவர்  இன்னும்  மாறாம  1985ல்  தான்  இருக்கார் . 


ஹீரோயினா  ஒரு  பாப்பா சங்கவி  சாயல்லயே  தேடிப்பிடிச்சுப்போட்டிருக்கார். இதுல  ஏதாவது  குறியீடு  இருக்குமோ?முன்  பாதி  ஓரளவு கண்ணியமான  கதையா தான்  போகுது. என்ன  3 லிப்  கிஸ்  சீன்  ஒரு   பெட்ரூம்  சீன்  இருக்கு அவ்ளவ்  தான்  , ஜம்பு  புகழ் கர்ணன்  படம்னா  கில்மா  சீன்  இருப்பதும் எஸ்  ஏசி  படம்னா  ரேப்  சீன்  இருப்பதும் சகஜம்  தானே?



ஹீரோவுக்கு    உதவி   செய்யும்  திருடன்களா  2  பேர்  , ஆக  மொத்தம்  கிட்டத்தட்ட  6  பேரை  வெச்சே  இடைவேளை  ஓவர் 


 2வது  கதை தான் . கொஞ்சம்  கில்மாவா  இருக்கும் . ஆண்கள்  மட்டும்  படிக்கவும், இல்லை  நான்  மிருதுளாவுக்கே  அக்கா , மீனம்மா  வுக்கு  தங்கை என்பவர்கள்  படிக்கலாம்  தடை  இல்லை


ஒரு  ஊர்ல  ஒரு  பெரிய  மனுசன்  வில்லன்  , அவன்  மகன்   அவனை  விடக்கேடி. இல்லாத  அட்டூழியம்   எல்லாம்  பண்றான்.ஊர்ல  ஸ்கூல் டீச்சரை  கிண்டல்  செஞ்சதை தடுத்த   ஒரு 10 வயசு  சிறுமியை  ரேப்  பண்ணி  கொலை  பண்றான். பையன்  ரேப்  பண்ண  பொண்ணோட  அக்காவை  வில்லனோட  அப்பா  ரேப்  பண்ணப்பார்க்கறார். அது  நிறைவேறுச்சா? இல்லையா? என்பதே  மிச்ச  மீதி  எச்சக்கதை.


ரோபோ சங்கர்தான்  அந்த  வில்லன். ஏதோ  காமெடி பண்ணி  கேப்டனை  வெச்சுப்பொழைப்பை ஓட்டிட்டு  இருந்தாரு  , அவரை  இப்டி  கேவலப்படுத்தி  இருக்க  வேணாம். 


இந்தப்படத்தில்  இசை  இளையராஜா வாம் . அய்யோ  பாவம் 








மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1
        மனோபாலா = ஏற்கனவே கோனைவாய்.இது ல கொட்டாவி வேறயா ? # டூ டா
 
 
 
2
        இப்போ நான் என்ன செஞ்சேன்?
 
 
கன்னத்தில் முத்தம் இட்டாய்.பக்கா பிராடுடா நீ!
 
 
அந்த பிராடுத்தனத்தை நீயும் பண்ணேன்? # டூ டா
 
 


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  முத கதை டைட்டில்  லவ் @75 .சில்வர் க்ரே ஹேர்   ஜீன்ஸ் எஸ் ஏ ஸி  இன்ட்ரோ # டூ டா


2 நல்ல  வேளை  விஜய்  மாதிரி ஓப்பனிங்  சீன்ல  டான்ஸ்  ஆடலை. ஆடிப்போய் இருப்போம்

        SAC பிளாஸ்பேக் ல 25 வயசு புதுமுகத்த போட்டிருக்காரு.அந்த கேரக்டர் ல  தளபதியைப்போட்டிருந்தா 100 கோடியை அசால்ட்டா பார்த்திருக்கலாம் # டூ டா

      4     75 வயசு ஹீரோ 50 வருசம் முன் தொலைத்த தன் 25 வயசு காதலியை தேடறது தான் கதை.தேடு தேடு னு தேடிட்டே இருக்கார்.முடியல #,டூ டா
      
     5      எஸ் ஏ ஸி எப்போ மேஜர் சுந்தர் ராஜன் ஆனாரு?
என் காதலி அழகா இருப்பா.ரொம்ப க்யூட்டா இருப்பா #,டூ டா

 
 
எங்க பரம்பரைக்கே பிடிக்காத ஒரே வார்த்தை கெட்டப் சேஞ்ச் #,டூ டா
 
 6   ஹீரோவை 2,ரவுடிங்க அடிச்சுப்போட்டுடறாங்க.முதல் உதவி செய்யாம அவனை கில்மா க்கு கூப்பிடுது ஹீரோயின்.அய்யய்யோ.யு/ ஏ வா?#,டூ டா
 
 
7        ஹீரோயின்  புதுமுகம் சங்கவி சாயல்லயே இருக்கு.அங்க தான் நிக்கறார் சந்திரன் # டூ டா
 
 

8  அப்பா கூடத்தேவலை.கெட்டப் சேஞ்ச் எல்லாம் பண்றாரு.குணா கமல் கெட்டப்.அடடே !! #,டூ டா
           
      9       2 வது கதை பிரமாதம்.ஊர் பெரிய மனுசன் மகன் ரோபோ சங்கர் 5 வது படிக்கும் சிறுமியை ரேப் & மர்டர்.சப்பா # டூ டா
10
             டாக்டர் ராம்தாஸ் இந்தப்படம் பார்த்தா செம கடுப்பாகிடுவாரு.சீன் பை சீன் யாரோ ஒருவர் தம் அடிச்ட்டே இருக்காங்க #,டூ டா

    11         ஹீரோயின் தன் யூரினை சரக்கில் கலந்து வில்லனுக்குத்தருதுஅந்த கேனக்கிறுக்கன்  செம டேஸ்ட்னு குடிக்கறான்.அட கன்றாவியே! # உவ்வே டூரிங் டாக்கீஸ்

   12           வில்லன் க்ளைமாக்சில்  ஹீரோயின்  ஜாக்கெட்டை  அரிவாளால் கிழிக்கறான்.கிறுக்குப்பயபுள்ள.
ட்ரிம்மிங் சிசர் போதாதா? # டூ டா
 
 

13  பல வருசத்துக்கு முன் சத்யா னு ஒருதொடர்  சன் டி வி ல 10pmவந்துச்சு.ஒரே பெட் ல ஹீரோ ஹீரோயின் .உல்டா பண்ணிட்டார்.யோவ்

 14                குடும்பப்பெண்களுக்கு  எச்சரிக்கை.பின் பாதி  சில கேவலமான காட்சிகள் /ரேப்/மசாஜ்  இருப்பதால் டூரிங் டாக்கீஸ் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்க்



15  ஒரு ஜி கே கேள்வி = எஸ் ஏ சி இயக்கத்தில் ரேப் சீனோ ,ஹீரோயின் குளிக்கும் சீனோ இல்லாமல் படம் வந்திருக்கா?

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1  இந்த  கேவலமான  படத்தில்  கெஸ்ட்  ரோல்ல  நடி  என  இளைய தளபதியைக்கூப்பிட்டு  அவர்  பேரைக்கெடுக்காம  விட்டது



2   பின்  பாதிக்கதைலயும்  நாம  தான்  தலை  காட்டனும்னு  அடம்  பிடிக்காம  ஒதுங்கிக்கிட்டது



3   இது தான்  என்  கடைசிப்படம்னு  அறிவிச்சது  (  நம்ப  முடியாது.  கலைஞர்  கூட  இது  தான்  என்  கடைசித்தேர்தல்னு  40வருசம்  முன்  சொன்னார்)

4   முக  லட்சணமான  2  புதுமுகங்களை அறிமுகம்  செஞ்சது. 20,000  சம்பளம்  கொடுத்துட்டு  20 லட்சம்  ரூபா  க்கு  சீன்   ஷூட்  பண்ணிக்கிட்டது



இயக்குநரிடம்  சில கேள்விகள்


முன்  பாதி  ஃபிளாஸ்பேக்  சீன்ல  ஹீரோ  பாட்டுக்கு சிவனேன்னு தான் இருக்கான் . ஹீரோயின்  தான்  கில்மாக்கு  கூப்பிடுது. பெண்களை  மதிப்பவர் பெண் ரசிகைகள்  அதிகம்   உள்ளவரின்  தந்தை இப்படித்தான்  சீன்  வைப்பதா?



2 ஹீரோ  ஹீரோயினைத்தேட போலீசின்   உதவியை  நாடாம  2  திருடன்கள்  உதவியை  நாடுவது ஏன்?


3  அந்தத்திருடன்க  2  பேருக்கும் 5  லட்சம்  ரூபா  செக்  போட்டுத்தர்றாரு.4  வேளை  சாப்பாட்டுக்கு  250 ரூபா தானே  வரும் ? 100  கோடி ல  இருந்து எடுத்ததால  அள்ளி  விட்டுட்டாரா?



4  பின்  பாதிக்கதைல  வில்லன்   டீச்சரை  விட்டுடறான். அது  தக தகனு  தங்க  விக்ரகம்  மாதிரி  இருக்கு. அந்த  தேரை  விட்டுட்டு  பாவம்  குழந்தையை  ரேப்பரான். அய்யோ  சாமி 




                 ஹீரோயின் வில்லனை பழி வாங்க 2,தேள்களை ஒரு துணில சுத்தி தன் இடுப்புல முடிஞ்சிருக்கு.ஏய்யா தேள் பொண்ணுங்க இடுப்பை கொட்டாதா?
 6
         வில்லன் சரியான கூமட்டையனா இருக்கான்.வந்தமா ஹீரோயினை ரேப்புனமான்னு இல்லாம கண்ணை மூடி படுத்துக்கிட்டு ஹீரோயினை மசாஜ் பண்ண சொல்றான்




               ரேப் பண்ண வரும் வில்லன் கிட்டே ஹீரோயின் " நான் இன்னைக்கு வீட்டுக்கு தூரம்,நாளை பாத்துக்கலாம்"குது.அந்த கேன வில்லனும் நம்பி விட்டுடறான்.






சி  பி  கமெண்ட் - டூரிங் டாக்கீஸ் =முன் பாதி காதல் கதை= 2/5,
             பின் பாதி கில்மா ரேப் மசாஜ் கதை சாரி சதை = 1/5  
             டோட்டலா 1.5 / 5 
              விகடன்  மார்க் = 30



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 30



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = பிரமாதம் (  கவர்  கவர்  )



 ரேட்டிங் =  1.5 / 5



வடலூர்  முருகா  தியேட்டரில்  படம்  பார்த்தேன் .  முருகா  மன்னிச்சிடு

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30/1/ 2015 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

இசை,டூரிங் டாக்கீஸ்,பொங்கி எழு மனோகரா,கில்லாடி,தரணி.புலன் விசாரணை 2,மண்டோதரி,7th son#30 1 15 ரிலீஸ்

 1 ‘புலன்விசாரணை 2'  -   திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.

291 15  ல்  ரிலீஸான


புலன் விசாரணை பாகம் 2 - சினிமா விமர்சனம்




2  இசை - 
இந்தா ரிலீஸ், அந்தா ரிலீஸ் என தள்ளிக்கொண்டே வந்த ‘இசை’ படத்தை வரும் ஜன-3௦ல் வெளியிட தீர்மானித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இன்னொரு பக்கம் ஜன-29ஆம் தேதி வெளியாகவிருந்த அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போனது வேறு எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிபெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது ‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். படமும் இரண்டு  இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதை தான். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் இருவரும் இசையமைப்பாளர்களாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் சாவித்ரி நடித்துள்ளார்.


திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15282&id1=3#sthash.AmX1VeQ7.dpuf
திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15282&id1=3#sthash.AmX1VeQ7.dpuf

3  டூரிங் டாக்கீஸ்
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் டூரிங் டாக்கீஸ்.
இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், எஸ் ஏ சந்திரசேகரனுடன், அபி சரவணன், பாப்ரி கோஷ், ஹேமமாலினி, அஸ்வின், காயத்ரி, ரோபோ சங்கர், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு 75 வயது இளைஞனின் சுவாரஸ்யமான சேட்டைகள்தான் டூரிங் டாக்கீஸ் திரைப்படம் என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.
இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி டூரிங் டாக்கீஸ் படத்தை இசையமைப்பளர் விஜய் ஆண்டனிக்கு போட்டு காட்டியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். படத்தை பார்த்து முடித்ததும் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம் விஜய் ஆண்டனி. காரணம் படத்தில் வரும் ஒரு பெண் கேரக்டர் விஜய் ஆண்டனிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
இதனால் அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லையாம். இரவு முழுக்க மனைவி தோளில் சாந்தபடியே இருந்தாராம். மறுநாள் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு போன் செய்து அவருடைய அலுவலகத்துக்கு சென்றதும் டூரிங் டாக்கீஸ் படம் தன்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறி அழுதே விட்டாராம்.



4   பொங்கி எழு மனோகரா’


‘‘1995 காலகட்டத்தில் 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிஜசம்பங்கள் தான் ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் கதை’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் ரங்கசாமி. அந்த நிஜ மனிதன் வேறு யாருமல்ல; படத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி தான்!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்ற இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் கதையின் நாயகனாக ‘ரூ’ படம் மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த இர்ஃபான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக புதுமுகங்கள் அருந்ததி நாயர், அர்ச்சனா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் இயக்குனர் சிங்கம் புலியும் நடித்துள்ளார்.
“இந்த படத்தில் இர்பானும் – சிங்கம் புலியும் படம் முழுக்க நகைச்சுவை கடை விரித்திருக்கிறார்கள். படம் முடிந்ததும் திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கனத்த இதயத்துடனேயே வெளியே வருவார்கள் அப்படியொரு நெஞ்சை பிழியும் இறுதிக் காட்சி இந்த படத்தில் உள்ளது” என்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.
“98 சதவிகிதம் காமெடி, 2 சதவிகிதம் சீரியஸ் என்ற வகையில் இப்படம் இருக்கும்” என்கிறார் அவர்.
‘பேனியன்’ என்ற பட நிறுவனம் சார்பில் பரந்தாமன் தயாரித்துள்ள இப்படம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படமாகியுள்ளது.
இப்படத்திற்கு சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, கண்ணன் இசை அமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் மாத வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.


5  கில்லாடி. 


பரத், நிலா ஜோடியாக நடிக்க ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி.
தயாரிப்பாளர் சந்திரசேகரன். இசை ஸ்ரீகாந்த் தேவா. கடந்த 2006ம் ஆண்டு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. பூஜை போட்ட கையோடு வேகமாக படப்பிடிப்பையும் தொடங்கினர். கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படத்தை முடித்தும் விட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் தயாரித்த பிப்.14, சுள்ளான், சபரி படங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டதால், கில்லாடி பைனான்ஸ் சிக்கலில் மாட்டி, பாதியில் நின்றது.
பரத் பலமுறை கால்ஷீட் கொடுத்தும் படம் முன்நகரவில்லை. ஒரு கட்டத்தில் பரத், நிலா, ஏ.வெங்கடேஷ் என அனைவரும் ஒத்துழைப்பு தர படத்தை 2013ம் ஆண்டு எடுத்து முடித்தனர். இதனால் படம் விரைவிலேயே ரிலீஸாகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுதான் இல்லை. இடையில் பலமுறை படம் ரிலீஸ் குறித்து பத்திரிகைகளில் அவ்வப்போது விளம்பரம் செய்ததோடு சரி, படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் கில்லாடி படத்தை பல கஷ்டங்களை தாண்டி தற்போது வரும் 30ம் தேதி வெளியிடுவது என்பது உறுதியாகிவிட்டதாம். ‘கில்லாடி’ படத்தின் ரிலீஸ் குறித்து நாளேடுகளில் விளம்பரங்கள் மீண்டும் தென்படுகின்றன. ஆனால் இந்தமுறை ‘கில்லாடி’ வருவது உறுதி என்கிறார்கள். இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளதாம்.



தரணி  -  மூன்று மனிதர்கள்.... மூன்று காலச்சூழல்கள்... இவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாற்றங்கள்- தரணி என்ற பெயரில் படமாக உருவாகிறது. இந்த பயணம் எங்கு சென்று எப்படி முடிகிறது என்பது புதிய பரிமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் ஒரு பகுதி தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றி வருகிறது. இதற்காக புகழ் பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரானின் மகன் புரிசை கண்ணப்ப சம்பத்தையும் அவரது குழுவினரையும் நடிக்க வைத்துள்ளனர். கூத்துப்பட்டறை குமரவேல் கதையில் கதை நாயகனாக வருகிறார்.
நெடுஞ்சாலை அரி, அறிமுக நாயகன் அஜய் கிருஷ்ணா ஆகியோரும் நாயகர்களாக வருகிறார்கள். இவர்கள் மூன்றுவித தோற்றங்களில் அதிசயக்க வைக்கிறார்கள். இவர்களுடன் வருணிகா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை: என்.சோன், ஒளிப்பதிவு: ஆர்.பிரகாஷ், வினோத் காந்தி, பாடல்கள் கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, புலவர் திருவேங்கடம். தரணி படத்தை எழுதி இயக்குபவர் குகன் சம்பந்தம். தயாரிப்பு: விஜி.எஸ்.நரேந்திரன்



7மண்டோதரி  


   ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ மண்டோதரி”.
இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாககிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாகிகளாக தாரீனா, பிரியா நடிக்கிறார்கள். இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார். மற்றும பொன்னம்பலம், பாண்டு, விசென்ட்ராய்,நாகலட்சுமி, சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தை எழுதி இயக்குபவர் ஆர்.ஷம்பத். இவர் யாரது என்ற திகில் படத்தை இயக்கி இருக்கிறார். டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்கியார். படம் பற்றி இயக்குனர் ஆர்.ஷம்பத்திடம் கேட்டோம்…..
மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம். அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம். திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளா, பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் இயக்குனர் ஆர்.ஷம்பத்.
 Seventh Son Poster.jpg

8 Seventh Son is a 2014 American and Canadian and British fantasy film based on the novel The Spook's Apprentice (titled The Last Apprentice: Revenge of the Witch in America). The story centers on Thomas Ward, a seventh son of a seventh son, and his adventures as the apprentice of the Spook. It is directed by Sergei Bodrov and stars Ben Barnes, Jeff Bridges, and Julianne Moore. It features music composed by Marco Beltrami, who replaced A. R. Rahman and Tuomas Kantelinen. After having the release date shifted numerous times, the film is scheduled to be released in the United States on February 6, 2015.


thanx -  மாலைமலர் தினமணி , அனைத்து  வெப் சைட்ஸ்

2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்? ஏன்?




விஜய்தான் என் ஃபேவரிட் ஹீரோ - ஸ்ரீதிவ்யா! # ஆனா சிவகார்த்திகேயன் ட்வீட்சைத்தான் ஆர் டி பண்ணுவீங்க.அதானே ட்விஸ்ட்டு?
==============

புத்தாண்டில் குத்தாட்டம் போட சன்னிலியோனுக்கு ரூ.5 கோடி சம்பளமாம் #,கெட்ட ஆட்டம் போட்ட டிவிடியே 100 ரூபாக்கு கிடைக்குதே.ஏன் இத்தனை சம்பளம்?
================

    ·  
 3காங்- திமுக கூட்டணி அரசில் ரூ12 லட்சம் கோடி ஊழல்-் அமித்ஷா # தலைவர் மைன்ட் வாய்ஸ் - நம்ம கைக்கு 1 3/4 லட்சம் கோடிதானே வந்திருக்கு?
=============
4
 கிறிஸ்துமஸ் விழாவில் கருணாநிதி கேக் வெட்டினார்-செய்தி #மைனாரிட்டி வாக்குக்காக என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு?தலைவர்டா! தியாகிடா!
=============
5   கவர்ச்சி மற்றும் ஆக்‌ஷனில் கலக்கும் பூனம் பாண்டேவின் மைதிலி & கோ #,தமிழ் ல இதை டப் பண்ணா டைட்டில் " மைதிலி எல்லோரையும் காதலி?"


==============


6 ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் ‘அம்மா சிமென்ட் # டால்மியா இனி மம்மியா?


==============

7  தமிழக வாக்காளர்கள் 5.62 கோடி: ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் அதிகம்:# ஆனா பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுனு புலம்பறாங்ளே மாப்ளைங்க


==================


8 நடிகைகள் அரசியல்ல ் சேரக்கூடாதா? தமிழிசை சவுந்தரராஜனுக்கு குஷ்பு கண்டனம� # அரசியல்வாதிங்க நடிக்கும்போது நடிகர்கள் அரசியல் பண்ணக்கூடாதா?


==============


 9 சசி தரூரின் மனைவி சுனந்தாவின் மரணம் கொலையே # ஹூம்.கொலைன்னே இப்பதான் தெரியுதா? புருசன் தான் மர்டரர்னு கண்்டுபிடிக்க மாமங்கம் ஆகிடும் போல


==============

10  ராஜேஷ்குமார் நாவல் படிக்கும் 15 வயசுப்பையனுக்குக்கூட சுனந்தா கொலை வழக்கில் கொலையாளி சசி தரூர்னு கண்கூடா தெரியும்.போலீஸ்க்குத்தெரியாதா?


=============


11 எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும்.. சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்’... இது சுனந்தாவின் கடைசி டிவிட்! # சசி தரூர் க்கு தண்டனை ஸ்யூர்


===============

12  சுனந்தாகொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும்- சுசுவாமி # ஊர் ல எந்தக்கொலைக்கேஸ்னாலும் இவருக்கு மட்டும் கொலையாளியைத்தெரிஞ்சிடுதே எப்டி?


================


13 என்ன, சுனந்தாவின் மரணம் கொலையா?: சசி தரூர் அதிர்ச்சி # அதுக்கு அர்த்தம் = என்னது? கொலை னு கண்டுபிடிச்ட்டாங்களா? எட் றா பாஸ்போர்ட்டை


================


14   டாப்லெஸ் சாக போஸ் குடுப்பது தப்பில்்லை.அது சைவம் - வீணா மாலிக் # இந்த வீணாப்போன தத்துவ முத்தை தஞ்சாவூர் கல்வெட்டில் குறிச்சு வை அத்தை


==============
 15 விதவை மருமகளை பராமரிக்க மாமனாரை கட்டாயப்படுத்த முடியாது: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு #வெரிகுட்.ஜட்ஜ் மலையாளப்படமான மழு பாத்திருப்பார்


===============

16  தமிழில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட முடியவில்லை: தனுஷ் வேதனை # சுள்ளான் ,மயக்கம் என்ன,மரியான்,3 எல்லாமே "சோதனை" முயற்சி தானுங்ணா?

==============


17 
திருமணத்திற்க்கு பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை!!--திரிஷா!!! #கணவர் அனுமதித்தால் பரிசீலிப்பேன் னு பின்னால சொல்வாரோ?

=============

18  
ஆளுக்கு 4 குழந்தைகள் பெத்துக்கங்க.. இந்துப் பெண்களுக்கு பாஜகMP "அட்வைஸ் @ மீரட் # 4 பேர் 4 விதமா பேசுவாங்களே?நாளா வட்டத்துல சரியாகிடுமா?


============


19  ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம்- ட்விட்டரில் அறிவித்தார் த்ரிஷா # மாப்ளை பேர்லயே MONEY இருக்கு.


=========


20 2016ல் தமிழகத்தை தேமுதிகதான் ஆளும்: சொல்கிறார் விஜயகாந்த் # டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்?


=================

Thursday, January 29, 2015

புலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்

 

1990  இல்  ஆர் கே  செல்வமணி , ஃபிலிம்  இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ் ,கேப்டன்  கூட்டணியில்  பிரம்மாண்டமான  க்ரைம்  இன்வெஸ்டிகேசன்  த்ரில்லராக  புலன் விசாரணை  வந்து சக்கை  போடு போட்டது .வசூல்  மழையில்   நனைகிறார்  ஹானஸ்ட் ராஜ்  என்று பேப்பரில் விளம்பரம்  எல்லாம் வந்தது.அதுக்குப்பின்  இயக்குநருக்கு மேரேஜ் ஆன  ராசியோ என்னவோ  படங்கள்  பெரிதாக  கை  கொடுக்கலை. 25 வருடங்களுக்குப்பின்  அதன்  2ம்  பாகம்  என்ற  பெயரில்  புதுக்கதையுடன்  களம்  இறங்கி  இருக்காங்க . எந்த  அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி  இருக்குன்னு  பார்ப்போம். 


நாட்டில்  பெட்ரோல்  விலை  அடிக்கடி ஏறுது  , இறங்குது. இதுக்கு அரசியல்வாதிகளின்  சுயநலம் தான் காரணம் அப்டினு  கதைக்கரு. 


பெட்ரோல் துறைல  பெட்ரோல்  ஆராய்ச்சிக்கூடத்தில்  பணி புரியும்  15  இஞ்சினியர்க்ள்  அவங்க  டிபார்ட்மென்ட்  ஏற்பாடு செஞ்ச  அஃபிசியல்  டூர்ல பங்கேற்கப்போகும்போது திடடமிட்ட   விபத்து  மூலம்   கொல்லப்படறாங்க .அந்த  டூர்  போன பஸ்சை  தவற  விட்ட  ஒரு  லேடி எஞ்சினியர்  கொல்லப்படறாங்க .அந்தப்பொண்ணோட  பெற்றோர்கள்  கொடுத்த புகார் அடிப்படையில்   புலன்  விசாரணை  நடக்குது.  என்ன  காரணத்துக்காக  அந்தக்கொலை  ? எதனால  விபத்தா  காட்டினாங்க ? யார் செஞ்சது ? இதை  ஹீரோ  கண்டுபிடிப்பதே  திரைக்கதை 


ஹீரோவா  பிரசாந்த்.இல்வாழ்க்கைத்துணை சரியா அமையலைன்னா  அவங்க  வாழ்க்கை  எப்படி  ஏற்படும்னு ஒரு முன்னுதாரணமா  நமக்குகாட்டும் பிரசாந்த்  மீண்டு  வர  மீண்டும்  வெற்றி பவனி  வர  வாழ்த்து.


பல  வருடங்களாக  கிடப்பில்  இருந்த  படம் என்பதால்   கெட்டப்பில்  பல  மாற்றங்கள்.  ஃபைட்  சீனில் கலக்கறார்.  டூயட் சீனில் எஞ்சாய்  பண்றார்.  வழக்கம் போல்  சர்ட்டைக்கழட்டி பாடி  காட்றார்.


ஹீரோயினா  2  பேரு  . கார்த்திகா, அஸ்வினி. ஆக்சன் த்ரில்லர் படங்களில்  ஒரு  ஹீரோயினுக்கே  இடம்  பத்தாது. 2  ஹீரோயின்  எதுக்கு ? 

2 பேரும்  பாஸ்  மார்க் பெருசா  சொல்லிக்கற  அளவு  இல்லை . 


போலீசாக  வரும்  ஹீரோயின்  ஸ்விம்மிங்  டிரஸ் ல  கிளுகிளுப்பை  ஊட்டறார்



மன்சூர்  அலிகான்  வக்கீலாக  ஓப்பனிங்கில்  வந்து கை தட்டல்  அள்ளும்  வசனங்கள் பேசறார்.தலைவாசல்  விஜய்  , குயிலி  என  பல தெரிந்த  முகங்கள் 


 முதல்  பாகத்தில்  வந்த ஆனந்த்ராஜ்  இதிலும்  அட்டெண்டென்ஸ்  போடறார்.ஆனா  அதிக  வாய்ப்பு  இல்லை


 பிரமிட் நடராஜன் , நிழல்கள் ரவி  கோர்ட்  சீன்  கலக்கல்  ரகம் 








மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  சுதந்திரம் கிடைச்சு இத்தனை வருசம் ஆகியும் பெட்ரோல் இறக்குமதி ல தான் நம்ம வண்டி ஓடிட்டு இருக்கு # பு வி 2



2  பத்த வைக்கறதுக்கு ஒரு தீக்குச்சியே போதும்.நீங்க தந்திருக்கும் ஆதாரங்கள் தீப்பந்தமா இருக்கு - கம்யூனிஸ்ட் தா  பாண்டியன்  வி 2


3 குற்றவாளிகளுக்கு மட்டும் சம்மன் அனுப்பறதில்லை.குற்றவாளிகளைக்கண்டு பிடிக்கறதுக்காகவும் சம்மன் அனுப்பலாம் # பு வி 2


 4  அரசாங்கத்தை எதிர்த்து  யார் வேணாலும் போராடலாம்.ஆனா அரசாங்கத்தை நிர்ணயிக்கும்  ஆதிக்க சக்திகளை யாராலும் எதிர்க்கவே முடியாது# பு வி 2


5 செஞ்ச  குற்றத்துக்காக  ஒருத்தரை  தண்டிக்க  முடியலைன்னா செய்யாத  குற்றத்துக்காக  அவரை  மாட்டி  விடறதுல  தப்பே  இல்லை #பு வி 2


6 இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தனக்கு கப்பம் கட்டனும்னு ரிலையன்ஸ் மாதிரி கம்பெனிகள் நினைக்குது # பு வி 2






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  

வீட்ல தனியா இருக்கும் பொண்ணு பாத்ரூம் ல மிடி ,டாப் போட்டு குளிக்குது.மன்னிக்கவே முடியாத ,ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் மிஸ்டேக் # பு வி 2


2 டைட்டில்ல  நட்புக்காக ரோஜா.னு  போடறாங்க. இயக்குநரின் சம்சாரம் என்பதால் வேற வழி இல்லாம ன்னு போட்டிருக்கலாம் #,பு வி 2


3  38 வயசு வழுக்கை மண்டையன் 15 வயசு ஸ்கூல் பொண்ணை தள்ளிட்டு வந்திருக்கான்.எப்டித்தான் ஏமாறுதுங்களோ?


4 பெட்ரோல் விலை எற்றத்தில் உள்ள தில்லுமுல்லுகளை தோல் உரித்துக்காட்டும் லியாகத் அலிகான் /மன்சூர் அலிகான் வசனங்கள் # பு வி 2



5  கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங் ஜீப்/போலீஸ் ஸ்டேசன் பைட் டிட்டோ ரீ மேக் # பு வி 2






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  பல  வருடங்கள்  ஆனாலும்  டச்  விடாமல் ஒரு  சராசரி  க்ரைம் இன்வெச்ட்டிகேசன்  படம்  தந்தது


2   தயாரிப்பாளர் ?ஃபைனான்சியர்  சொந்த சம்சாரம்  ரோஜா  என்பதால்  அவருக்கு  பிரஸ்  ரிப்போர்   ட்டர் கேரக்டர் கொடுத்து  நட்புக்காக  என சமாளிச்ச்சது


3  காமெடி  டிராக்  என்ற  பெயரில்  மொக்கை  எதுவும்  போடாதது 


4 படத்தில் வரும் பெரும்பாலான  பெண்  கேரக்டர்களை  ஒரு  சீனிலாவது குளிக்க  வைத்  து   தான்  ஒரு சுத்த பத்தமான  இயக்குநர்  என நிரூபித்தது


5  லியாகத்  அலிகான் -ன்  கோர்ட்  வசனங்கள்


6   ரிலையன்ஸ்  கம்பெனியை தாக்குவது  போல்  அலையன்ஸ்  கம்பெனி  என  மாற்றியது  செம  தில்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  விபத்தில்  15  பேரை  கொலை செய்யத்திட்டம்  போடும்ம்  வில்லன்  ஏன்  பஸ்  டிரைவர்  மூலம் 15  பேரும் ஆஜர் ஆகிட்டாங்களா ?னு   செக்  பண்ணலை ?


2  விபத்தில்   பாதாளத்தில்  விழும் பஸ்சில்  தப்பிப்பிழைக்கும்  சிலரை    வில்லன்  ஆனந்த்ராஜ்  துப்பாக்கியால்  சுட்டு  பின் பஸ்ஸை  எரிக்கிறார். அது  போஸ்ட்மார்ட்ட்டம்  ரிப்போர்ட்ல  தெரிஞ்சிடும்  என்பது  வில்லனுக்குத்தெரியாதா? சுடாமல்  எரிச்சிருக்கலாமே?


3  விபத்தில்  பலி ஆகாமல்  தப்பித்த சிலர்  ஏன்  ஃபோனில்  யாருக்கும்  தகவலோ  எஸ் எம் எஸ் சோ  அனுப்ப  முயற்சி பண்ணலை ?


4  பெட்ரோல்  ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வங்காள விரிகுடாவில்  2  லட்சம்   கோடி  ரூ மதிப்புள்ள  பல ஆயிரக்கணக்கான லிட்டர்  பெட்ரோல்  இருந்ததை  கண்டுபிடித்தததை  அந்த  15  எஞ்சினியர்களும் தங்கள் நெருங்கிய நண்பர்கள் /தோழிகள்/கள்ளக்காதலிகள் னு யாருக்குமே தகவல்  சொல்லலையா?


5  வில்லன்  ஆர் கே  நடிப்பு  எடுபடவில்லை. அவர்  வில்லனா?  கேனமா?




சி  பி  கமெண்ட் -புலன் விசாரணை -2 -  க்ரைம்   இன்வெஸ்டிகேசன்  த்ரில்லர்- ஓக்கே ரகம் - விகடன் மார்க் = 41  ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - =41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =ஓக்கே



 ரேட்டிங்



Embedded image permalink
 
  சேலம்  ஏ ஆர் ஆர் எஸ்  தியேட்ட்டரில்  படம் பார்த்தேன்

அரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயம் மிகச் சிறந்த சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
321 சதுர அடியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் சுமார் 90 அரிய வகை நீர்ப் பறவைகள் உட்பட 188 அரிய வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து மட்டும் அல்லாமல், இங்கு எப்போதும்  ஏராளமான நீர் வாழ் பறவைகள் இருப்பதால் இது ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் சரணாலயமாக திகழ்கிறது.
பார்ஹெட்டட் கூஸ், கிரே நிற பெலிகான், 16 வகையான வாத்துகள், வெள்ளை கழுத்து ஸ்டோர்க், ஸ்பூன்பில், இபிஸ், ஷோவெல்லர், குளோஸி இபிஸ், வெள்ளை இபிஸ், கூட்  என இங்கு பல விதமான பறவைகள் நிறைந்திருக்கின்றன.
நவம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த ஏரிப் பகுதிக்கு வரும் பறவைகள், இனப்பெருக்கம் செய்து மே மாதம் வரை தங்கியிருக்கின்றன.  பிறகு தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன. எனவே, இங்கு நவம்பர் முதல் மே மாதம் ஏராளமான பறவைகள் நிறைந்திருக்கும். அதிலும் ஜனவரி மாதத்தில் தான் இங்கு அதிகமான பறவைகள் இருக்கும். அதுதான் இங்கு பீக் சீசன் என்று கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பறவைகள் இந்த சரணாலயத்தில் நிறைந்திருக்குமாம்.
இந்த சரணாலயம் திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அரியலூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
இதனை காண சிறந்த சீசன் என்றால் அது டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலமாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம்.
தங்கும் வசதி என்றால், அது தஞ்சாவூர் அல்லது திருச்சியில் உள்ள ஹோட்டல்களில் தான் சுற்றுலாப் பயணிகள் தங்க வேண்டியதிருக்கும்.
இந்த சரணாலயத்துக்கு அருகில் தஞ்சாவூர், திருச்சி ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

நன்றி - தினமணி 

ஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்லில் படம் பிடிச்ச பெயிண்ட்டர் எப்டி மாட்னாரு?

1   10 படையப்பா, 5 எந்திரன்னு சொல்லி, மண்ணுள்ளி பாம்பு மோசடி நடந்துவிட்டது- 'லிங்கா' விநியோகஸ்தர் #சதுரங்கவேட்டை இப்போ தான் பார்த்தார் போல.



==============


2 நாம் தமிழர் கட்சியிலிருந்து சீமான் நீக்கம் # நமக்கு நாமே திட்டப்படி அவரே அவர் கட்சில இருந்து விலகிட்டாரா?



============


3  
11-ஆவது முறையாக தி.மு.க. தலைவராகிறார் கருணாநிதி! மீண்டும் பொருளாளராக மு.க.ஸ்டாலின்! # அப்பா ரிட்டையர்டு ஆகும்போது மகன் டயர்டு ஆகிடுவாரு


================

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் # அய்யோ அம்மா! ஷாக் கிங் நியூஸ் டூ போயஸ்

===============


அபராதமாக ரூ2 கோடி செலுத்தப்பட்டதால் வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை!# பிரமாதம்ங்க.10 கோடி ஏமாத்திட்டு 2 கோடி தந்தா சரி?


==============


6 ஜெ சசிகலா மீதான வருமானவரி வழக்கு வாபஸ்!, 18 ஆண்டுகாலம் நடைபெற்ற வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை!! # இதுக்கு எவ்ளவ் பணம் கை மாறுச்சோ?


===============


7
சன் பாத்' எடுத்த வெளிநாட்டு பெண்களை படம் பிடித்த குட்டி விமானம்: வாலிபர் கைது # குட்டிங்களை படம் பிடிக்கதான் குட்டி விமானம்னு நினைச்சாரோ?


==============


8 ஜெ பற்றிய தீர்ப்பு நீதிபதியை விமர்சனம் செய்த வக்கீலுக்கு ஜெயில் தன்டனை. # சபாஷ் .இனி வாயைத்திறப்பாரு?

==============


தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்.. தமிழக மக்களின் தலையில் பேரிடி - திருமா. கண்டனம். # தேனி மக்களுக்கு தேள் கொட்டின மாதிரி செய்தி


==============


10  சுனந்தா எப்படி இறந்தார்?: சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்...#10 க்கும் ஒரே பதில் = தெரியாது


==============


11  400 சீடர்களின் ஆண்மையை பறித்ததாக சாமியார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு...# அக நானூறு அவுட்டா?


==============


12
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் _ கேப்டன் # இது டாக்டர் ராம் தாஸ் சொன்னதாச்சே? நீங்க ஏன் காப்பி அடிக்கறீங்க?


==============


13 
ஜல்லிக்கட்டுக்குத்தடை தமிழர்களின்உணர்வுகளை சீண்டிப்பார்க்கும்செயல் -சீமான் # சத்யராஜே சும்மா இருக்கார்.ஹீரோக்கு இல்லாத அக்கறை நமக்கு ஏன்?


============


14
ஆமா, நான் நயன்தாராவோட பேசினால் மத்தவங்களுக்கு என்னவாம்?: ஆர்யா # பேசிட்டு மட்டும் இருந்தா பரவால்லீங்க்ணா!


==============
15 இந்து மதத்தை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு # திமுக வைக்கூடத்தான் அவமதிச்சாரு.தலைவர் கேசா போட்டாரு?

==============


16
தி.மு.க.வை வாழ வைக்க உயிரையும் கொடுப்போம்’-்மு க# சொத்து சேர்க்கும்போது மட்டும் தனியா சேத்திக்குவாரு.போராட்டம்னா ஆளைக்கூட்டிக்குவாரு

=============


17
ராஜபாளையத்தில் "20" போலி டாக்டர்கள் கைது#அப்டியே 20 போலி நர்சையும் கைது பண்ணா20- 20 மேட்ச் ஆடிட்டு இருப்பாங்க ஜெயில்ல

=============


18
மூன்று நிமிடத்திற்கு ஒருவர் தமிழக பாஜக வில் சேர்கின்றனர் - தமிழிசை # விட்டா சோனியா காந்தியே எங்க சோல்னாப்பையில ,இனி கையே இல்லைம்பார் போல


================


19
குளித்துக் கொண்டிருந்த ஐடி ஊழியரை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த பெயிண்டர் கைது # ஸ்மைல் ப்ளீஸ் னு சொல்லி தவளை மாட்டிக்குச்சாம்

==================


20 
பாஜக தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது:மு க #திராவிடக்கட்சிகளே காலம் காலமாஏமாத்திட்டு இருந்தா எப்டி?எல்லார்க்கும் வாய்ப்பு கொடுப்போம்


========================



Wednesday, January 28, 2015

இளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:
"நான் ஒண்ணும் 20 வயசுப் பையனாக இப்படத்தில் நடிக்கவில்லை. 60 வயதான ஒரு மனுஷனுக்கு அந்த வயதில் என்னென்ன குறும்புகள் செய்வாரோ அந்த மாதிரியான வயதான பாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ப்ளாட்பாரத்தில் தூங்கி எழுந்து வாய்ப்பு தேடுவேன். அப்புறம் இயக்குநராகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து நல்லா சம்பாதித்து பின்னாடி இதுபோது, இதற்கு பிறகு படங்கள் இயக்க வேண்டாம், தயாரிக்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
அப்போதுதான் என்னோட பையன் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அப்போது திரையுலகில் ரொம்ப முக்கியமான பெரிய இயக்குநர்கள் எல்லோர்கிட்டயும் என் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டி "சார்... என் பையனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு செலவு என்றாலும் நான் பார்த்துக்கிறேன்"னு சொன்னேன். ஆனால் யாருமே விஜய்யை வைத்து படம் பண்ண தயாராக இல்லை" என்று நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதையை உருக்கமாக கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், "விஜய்யை வைத்து யாரும் படம் இயக்க முன்வரவில்லை என்ற நிலையில்தான், நானே மறுபடியும் இயக்குநராகி என் மகனை வைத்து சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ? நல்ல மருமகள், நல்ல பேரக்குழந்தைகள், நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது.
போதும்... இதற்கு மேல் நாம ஏன் படங்கள் இயக்க வேண்டும் என்று நானேதான் முடிவெடுத்தேன். இயக்கம் மட்டும்தான் பண்ண மாட்டேன். மற்றபடி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் திறமையான இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிப்பேன்" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 


thanx - the hindu

  • இப்பு மட்டும் என்ன ...............சார்?
    Points
    330
    about 13 hours ago ·   (3) ·   (5) ·  reply (0) · 
  • Haja  
    முதல் படம் வந்த பொது தமிழின் நம்பர் 1 வார இதழ் ஒன்று "இந்த மூஞ்சியெல்லாம் பார்க்கணுமா" என்று ஒரு வரி விமர்சனம் செய்திருந்தது.. காலம் ஒரு ஒரு அற்புதம்...
    Points
    1275
    about 14 hours ago ·   (11) ·   (3) ·  reply (0) · 
  • Naga Nagaiah  
    இது விஜய்யை புறக்கணித்தவர்களுக்கான செய்தியா, அல்லது விஜய்க்கே சொல்லும் செய்தியான்னு சந்தேகமா இருக்குதுங்ணா... ஏம்பா இப்டி காச கரி ஆக்குறேன்னு மகன் வருத்தப்பட்ருக்கலாம்.. அதுக்கான பதிலா இத ஏன் எடுத்துக்க கூடாதுங்ணா..?
    about 16 hours ago ·   (18) ·   (4) ·  reply (0) · 
  • C R  
    வாழ்க்கையில் கஷ்டப் படாமல் ஜெயிச்சவங்க யாருமே இல்லை. அதில் வருத்தம் கொள்ளவும் தேவை இல்லை. இவரை நாடி வந்த அனைவருக்கும் இவர் வாய்ப்புக் கொடுத்திருப்பரா என்ன? இப்போதைக்கு விஜய்யின் பல தோல்விகளுக்கு எவர் தான் காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். ஒதுங்கி இருந்து அவரை மேலும் வளர விடுவதே இவருக்கு பெருமை. பழைய கதையெல்லாம் கிளறாதீர்கள்.
    Points
    1375
    about 16 hours ago ·   (40) ·   (2) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது." அனால் ஊருக்கு மட்டும் தன்னோட பணத்த எடுத்து எதுவும் நல்லது செஞ்சிடாதிங்க. ஏமாந்த ரசிகர்கள் எவனோட பணத்தையாவது எடுத்து கல்யாணம், நல்லது, அது இதுன்னு எதாச்சும் பண்ணுங்க. வெளங்கிடும் நாடு.
    Points
    1800
    about 17 hours ago ·   (72) ·   (15) ·  reply (0) · 
  • இருமேனி Irumeni  
    வருத்தப் படுவதற்கும்,புலம்புவதற்கும் இதில் ஒன்றும் இல்லை. விஜய் எந்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து விட்டு வந்தார்? அல்லது சினி ஃபீல்டில் எந்த ஒரு இயக்குநர்-நடிகரிடம் தொழில் கற்றுக் கொண்டார்? டைரக்டர் சந்திரசேகரனின் மகன் எனும் ஒரே தகுதியில் சினிமாவுக்குள் வந்தவர்.அவரை வைத்து அன்றைக்கு படம் எடுக்காதவர்கள் சரியான முடிவே எடுத்திருக்கின்றனர். ஒரு வகையில் அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    Points
    4170
    about 18 hours ago ·   (48) ·   (15) ·  reply (0) · 
  • TMZ  
    இவர் பேசியது "தி ஹிந்து" எடிட் செய்ததா அல்லது அப்படியே செய்தி பதிவு செய்து உள்ளதா? இல்லை என்றால்...இவருக்கு மமதை அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். நிறைய முரண்பாடுகளுடன் பேசியுள்ளார். இன்றைக்கி விஜைய்க்கு வரும் எல்லா எதிர் விமரசனங்கள்ளுக்கு முழு காரணகர்த்தா சத்தியமாக இவர் ஒருவரே