சி2எச் மூலம் சினிமாவை நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்கிறோம் என திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார்.
புதிய திரைப்படங்களை தயாரிப்பாளரின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி
அதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் சி2எச் என்ற நிறு வனத்தை இயக்குநர்
சேரன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத் தின் சார்பில் தமிழகம் முழுவதும்
பல்வேறு இடங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 முக்கிய முகவர்களும், அவர் களுக்கு கீழ்
பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பல்வேறு முகவர்களும் நியமிக்கப்பட்டுள்
ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் இந்த திரைப் படங்களின்
டி.வி.டி.க்களை விற்க உள்ளனர்.
இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி விழுப்புரம் எஸ்பி விக்கிரமனை
சந்தித்து இயக்குநர் சேரன் நேற்று மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதிய திரைப்படங்களை தயாரிப்பாளரின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி
அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்வதற்கு சி2எச் என்ற
நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஒரிஜினல் டிவிடி ரூ.50-க்கு
கிடைக்கும். இதற்காக நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு ஒத்துழைப்பு
அளிக்கும்படி மாவட்டக் காவல் கண்காணிப் பாளரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.
திரைப்படங்களை டி.வி.டி.க ளாக மாற்றி வெளியிடுவதன் மூலம் திரையரங்குகள் பாதிக் கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
மண்பாண்டத்தில் சமையல் செய்தோம், இப்போது குக்கர் மூலம் செய்கிறோம்.
அதேபோல் டிரங்கால் போட்டு டெல்லிக்கு பேசினோம். இப்போது செல் போன் மூலம்
அமெரிக்காவுக்கே பேசுகிறோம். அதுபோல் சினிமாவையும் நாங்கள் அடுத்த கட்ட
நகர்வுக்கு கொண்டு செல்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக கமலஹாசன் “கோயில் கட்டினா லும், வீட்டில் சாமி
வைத்துக் கொள்வதில்லையா. வீட்டில் சாமி இருக்கிறது என்பதற்காக யாரும்
கோயிலுக்கு போகாமலா இருக்கிறார்கள்” என்று கருத்து கூறியுள்ளார். இதைவிட
இந்த விஷயத்தை எளிதில் யாரும் விளக்க முடியாது.
திரையரங்குகள் பாதிக்கப் படுவதை பற்றி மட்டும் பேசு பவர்கள்,
தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதையும் சிந்திக்க வேண்டும். பல
தயாரிப்பாளர்கள் தனது மனைவியின் தாலியை கூட அடகுவைத்து படமெடுக் கின்றனர்.
முதலில் சி2எச் மூலம் ‘ஜெ.கே எனது நண்பன்’ என்ற படத்தை வெளியிடுகிறோம்.
இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை வெளியிட உள்ளோம். நாங்கள் வெளியிடும்போது
திரையரங் குகள் வெளியிட விரும்பினால் திரையரங்குக்கு வழங்குவோம்.
இல்லாவிட்டாலும் நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment