அதிக வருவாய் ஈட்டும் துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை
(ஐ.டி) வளர்ந்து வருகிறது. இத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் ஒரு மணி
நேரத்துக்கு ரூ. 341.80 சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு
மணி நேரத்துக்கு ரூ. 291 சம்பாதிக்கின்றனர் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வேலைவாய்ப்பு மற்றும் ஆள்சேர்ப்பு நிறுவனமான
மான்ஸ்டர் இந்தியா நடத்திய ஆய்வில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்
துறையில் மணிக்கு ரூ. 341.80 சம்பாதிப்பதாகவும் இது மற்றெந்த துறைகளைக்
காட்டிலும் அதிகமான சம்பளம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மான்ஸ்டர் சம்பள குறியீடு (எம்எஸ்ஐ) தகவல்படி கட்டுமானத் துறையில் ஒரு மணி
நேர சம்பளம் ரூ.259 ஆக உள்ளது. கல்வித்துறையில் இது ரூ. 186.50 ஆகவும்,
மருத்துவத் துறையில் ரூ. 215 ஆகவும், சட்டத்துறையில் ரூ. 215.60 ஆகவும்,
உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் ரூ. 230.90 ஆகவும் உள்ளதாக
தெரியவந்துள்ளது.
கல்வித்துறையில் இருப்பவர்கள்தான் மிகக் குறைவாக ஒரு மணி நேரத்துக்கு ரூ. 186.50 ஈட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துறையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிவதும் சம்பளக் குறைவுக்குக்
காரணமாகும். ஆசிரியைகளுக்கு 18 சதவீதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய எழுச்சிமிகு மேம்பாடு காணப்படுகிறது. இதனால் புதிய வேலை
வாய்ப்புகள் பல லட்சம் பேருக்குக் கிடைக்கும். இதனால் சம்பளம் மற்றும்
வருவாயில் மாற்றம் ஏற்படும் என்று மான்ஸ்டர் இந்திய நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் சஞ்சய் மோடி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அமெரிக்காவில் இதுபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு
நிகரான ஊதியம் பெண்களுக்கு பணியிடங்களில் வழங்கப்படுவதில்லை என்பது
தெரியவந் துள்ளது.
இந்தியாவிலும் பாலின பேதம் சம்பளத்திலும் பிரதிபலிப் பதாக அறிக்கையில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக தகவல் தொழில் நுட்பத்துறையில்
ஆண்களைவிட பெண்களுக்கு 34 சதவீதம் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
நிதித்துறையில் இந்த பாகுபாடு 19 சதவீத அளவில் உள்ளது.
பணியிடங்களில் சூப்பர்வைஸர் போன்ற மேலாண் பணிகளில் பெண்கள் இருந்தாலும் ஊதிய விகிதம் பெருமளவில் மாறவில்லை.
மான்ஸ்டர் சம்பள குறியீடு அட்டவணை தயாரிப்பு பணி பேசெக் டாட் இன்
நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப் பணியில் ஐஐஎம்
(அகமதாபாத்) கல்வி மையம் ஆய்வு பங்குதாரராக சேர்ந்து கொண்டது. 2012-ம்
ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் இந்த ஆய்வு
thanx - the hindu
1 comments:
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
Post a Comment