Thursday, December 25, 2014

வெள்ளக்காரதுரை - சினிமா விமர்சனம்

ஹீரோவோட  ஃபிரண்ட் 15  லட்சம் ரூபா வட்டிக்கு பணம்  வாங்கி  ஒரு இடம்  வாங்கறார்.அதை ஃபிளாட்  போட்டு  விற்கத்திட்டம்.இதுக்கு  ஹீரோ  உதவியா  இருக்கார் . ஒரு டைம்  ஒரு டெட் பாடியை  கொண்டு வந்து அந்த  இடத்துல  புதைக்கறாங்க  ( பிணம்னாலே செத்துப்போனதுதான் , அதுல   என்ன செத்துப்போன  பிணம் ? ) அப்போதான்  தெரியுது  அவங்க  வாங்கின  இடம் ஒரு சுடுகாடுன்னு . செம  ஷாக் ஆகிடறாங்க .


 வட்டிக்குப்பணம்  கொடுத்த வில்லன் சும்மா இருப்பானா? இவங்க  2 பேரையும்  தூக்கிட்டு  வந்து  அவங்க  இடத்துல    வெச்சு  அடிமையா  நடத்தத்திட்டம்  போடறான்.


ஒரு  கட்டத்தில்   வில்லனைத்தாக்க  வரும்  ஆட்களிடம்  இருந்து   ஹீரோ  ஃபைட்   பண்ணிக்காப்பாத்தறாரு. இதனால  வில்லன்  ஹீரோவுக்கு  அங்கே  ஒரு கவுரமான  வேலை  போட்டுத்தர்றாரு. 


வில்லனோட  இடத்தில்  வேலை  பார்க்கும்   ஹீரோ  ஹீரோயினை சந்திக்கறாரு. 2 பேரும்   லவ்விங். 

ஹீரோயினும்  ஹீரோ மாதிரியே   வில்லனிடம்  கடன்  வாங்கி  மாட்டிக்கிட்ட ஆள்  தான் . 

இங்கே  தான்  ஒரு ட்விஸ்ட் . வில்லன்  ஹீரோயினை  கல்யாணம்  பண்ணிக்க  நினைக்கறார் . ஹீரோ  அதுக்கு  முரளி   மாதிரி  விட்டுக்கொடுத்தாரா?  அதர்வா  மாதிரி  போராடி  ஜெயிச்சாரா?  என்பதுதான்  மிச்ச  மீதிக்கதை

இதுவரை   ஆக்சன் , காதல்   என  போய்க்கொண்டிருந்த   விக்ரம்  பிரபுவுக்கு  முதன் முதலாக  முழுநீள   காமெடி  ஹீரோ ஆகி இருக்கார். ஆக்சன்  ஹீரோவாகப்பேர்  வாங்கிய அளவு  காமெடியில்  கலக்கவில்லை , ஆனாலும்   மோசம் இல்லை . ஹீரோயினிடம்  ஆசையாகப்பேசும்போது கூட கடு கடுவெனவே  இருந்தா  எப்டி  பாஸ்?


ஹீரோயினா  பால் மணம் மாறா பாலகி ,தாவணி அணிந்த ஆவணி,பவானியில்  அமைந்த  ஊரணி  டீன்  ஏஜ்  ஃபிகர் ஊதா கலர்  ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யா. இவர்  வரும்போது  எல்லாம்  ரசிகர்கள்  கை தட்றாங்க , விரைவில்  திருச்சியில்  கோயில்  கட்டிடுவாங்க


  சூரி  இதில்  முதல் முறையாக  முழுப்படமும் வந்து  போகும்  காமெடி  ரோல். பில்டப்  எல்லாம்  நல்லாதான்  இருக்கு  ஆனா காமெடி  சுமாரா தான் இருக்கு . காமெடி டிராக் ஆட்களை  மாத்துங்க  பாஸ்,



வில்லனா வரும்  ஜான்  வழக்கம்  போல்  கலக்கல். டயலாக்டெலிவரி பக்கா,



பாடல்  காட்சிகள்  சராசரி . நடிகர் திலகம்  பாட்டும்  காக்கா  முட்டை  பாட்டும்  ஓக்கே ரகம்,






மனதைக் கவர்ந்த  வசனங்கள்



தாய்லாந்தில் தொழில் தொடங்க கூப்ட்டாங்க.நான் தான் தாய் LAND லயே இருந்து உழைச்சு சம்பாதிக்கறேன்ட்டேன் #,வெ து


2 நான் எது செஞ்சாலும் என் பார்ட்னர்ஸ் கம் பிரண்ட்ஸ் எதுவும் கேட்க மாட்டாங்க.ஏன்னா அந்த அளவுக்கு அவங்களுக்கு எதுவும் தெரியாது# வெ து


3  சூரி - இவன் அவளுக்கு முத்தம் தர்றதுக்கு நாம ரத்தம் சிந்த வேண்டியதா இருக்கே? #,வெ து


4   இன்னும்  அவ கிட்டே சாவகாசம்  இருக்கா?

 ச்சே ச்சே  வெறும்  ஃபோன்ல மட்டும் தான் # வெ து


5  உன் ஆள்ங்கறே! கழுத்துல  தாலி  இருக்கு ?

 ஹிஹி இது ஆஃபீஸ் பிராஜக்ட்ங்க #வெது


6  வில்லன்  டூ  ஹீரோயின் - உனக்கு ரெண்டே வழி தான் இருக்கு, 1  என்னை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பது 2  என்னைக்கட்டிட்டு  சோகமா  இருப்பது#வெது


7  என் பொண்டாட்டியை  நீ ஏன் அடிக்கறே?

 ஏன் இப்டி  பிரிச்சுப்பேசறே?  உன் பொண்டாட்டிவேறஎன் பொண்டாட்டிவேறயா?இத்தனைநாளா ஒண்ணாதானே  குடும்பம் நடத்திட்டு இருந்தோம்



மேல மரம் இல்ல.எப்படி பூ வந்து விழுது?


 அது தேவர்கள் போட்ட பூ 


ஏன் செட்டியார் ,கவுண்டர் எல்லாம் பூ போடமாட்டாங்களா?# வெ து


9
பர்ஸ்ட் நைட் ல பால் கேட்கலாம்.மிக்சர் கேட்கலாமா?# வெ து


10 



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஸ்ரீ திவ்யா 1ம் பிரமாதமான பிகர் இல்லையே.ஏன் ஆடியன்ஸ் அப்ளாஸ் குடுக்கறாங்க?# வெ து


2  ஸ்ரீ திவ்யா சார்.மணிபர்ஸ் மாடல் ஜடை போட்டிருக்கு சார்.நேச்சுரல் கர்லிங் ஹேர் சார் # வெ து


3 சூரி சீன் பை சீன் வர்றாரு.இவரும் சந்தானம் மாதிரி ஹீரோ ஆயிடுவாரோ?# வெ து

4  காக்கா முட்டை னு ஒரு குத்தாட்டப்பாட்டு ல டபுள் மீனிங் வரிகள். # வெ து



வில்லன் காமெடியன் சூரிக்கு கன்னத்தில் முத்தம் தர்றாரு.என்ன கண்றாவி இன்டர்வல் பிளாக் இது?#,வெ து


6 தொடர்ந்து 3 ஹிட் படங்கள் தந்த விக்ரம் பிரபு வுக்கு இது ஒரு சராசரிப்படமே #வெ து


 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஓபனிங்கில்   சூரிதான்  ஹீரோவோ  என  நினைக்கும் அளவு  கதை  திரைக்கதை  எல்லாம் அவரைச்சுற்றியே   எடுத்துட்டு   சரியான  நேரத்தில்  ஹீரோவை  உள்ளிழுத்த  லாவகம்



2  வில்லன் - சூரி -  ஹீரோ  சம்பந்தப்பட்ட   முன்  பாதி  காமெடி  காட்சிகள்

3   ஸ்ரீ  திவ்யாவுக்கான  ஆடை  வடிவமைப்பு  , குழல் அலங்காரம்  கனகச்சிதம்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   இடம்  1  செண்ட்  வாங்குனாலே  வில்லங்கச்சான்றிதழ்   எல்லாம்  பார்த்துத்தான்  வாங்கறாங்க. ஆனா 15  லட்சம்  ரூபா  போட்டு  சுடுகாட்டு  நிலத்தை  யாராவது  விசாரிக்காம  வாங்குவாங்களா?


2  அன்றாடங்காய்ச்சியான  வீட்டோட மாப்ளை  சூரிக்கு  15 லட்சம்  ரூபா  கடன்  எப்படி  தர்றார்?


3    சூரி நில  விவகாரத்தில்  ஏமாந்த அடுத்த   நிமிடமே  அவர்  சம்சாரத்திடம்  இருந்து  ஃபோன்  வருதே “ என்னய்யா  ஏமாந்துட்டியாமே?”ன்னு  எப்படி?

4   ஹீரோயினுக்கு   ஹீரோ  மேல  லவ் இல்லை , ஆனா   ஒரே  பெட்ல  நைட்   ஒரே ரூம்ல  படுக்க  அனுமதிக்கறாரே  எப்படி?


5   முன்  பாதி  வரை  கல கலப்பாகப்போகும்  திரைக்கதை  பின் பாதியில்  பாதை  தெரியாமல்  தடுமாறுவது  ஏனோ?


6  ஒரு சாதா  அட்ஜஸ்மெண்ட்டுக்காக  வில்லன்  எதுக்காக  சப் இன்ஸ்பெக்டர்க்கு  10 லட்சம்  ரூபா  லஞ்சம்  தர்றாரு?





சி  பி  கமெண்ட்  =வெள்ளக்காரதுரை -  முன் பாதி  கலகலப்பு , பின் பாதி  மொக்கை , ஸ்ரீதிவ்யா, சூரிக்காக - விகடன்  மார்க் = 41  , ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  சுமார்


 ரேட்டிங்  =  2.5 / 5


டிஸ்கி  1  -  மீகாமன்  - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/blog-post_54.html


2    கயல்  - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_58.html


3   கப்பல்  - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/blog-post_83.html




0 comments: