Saturday, December 06, 2014

நண்பேன்டா - நயன் தாரா வால் சம்சாரத்துடன் பிரச்சனையா?உதயநிதி ஸ்டாலின். பேட்டி

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இருந்தே ஜெகதீஷைத் தெரியும். ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு வசனங்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு முதல் பட இயக்குநரின் படம் என்று கூற முடியாதபடி ‘நண்பேன்டா’ படத்தை இயக்கியிருக்கார்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்ட உதயநிதி ஸ்டாலின்...
‘ஒரு முதலில் காஜல் அகர்வால்தானே நாயகியாக இருந்தார். பிறகு நயன்தாரா?
காஜல் அகர்வாலின் தேதிகள் தள்ளிப்போய்கிட்டே இருந்ததால் மட்டுமே நயன்தாராவை ஒப்பந்தம் பண்ணினோம். நயன்தாரா கதை கேட்டவுடன், நிஜத்தில் என்னோட கேரக்டர் மாதிரியே ரம்யா கேரக்டர் இருக்கு, நான் பண்றேன்னு சொல்லிட்டாங்க.
உதயநிதி - நயன்தாரா பற்றி நிறைய செய்திகள் வெளிவந்தப்போ என்ன நினைச்சீங்க? உங்க மனைவி என்ன சொன்னாங்க? 


 
ரெண்டாவது படமும் தொடர்ச்சியாக நடிச்சா இதுமாதிரி செய்திகள் வரத்தான் செய்யும். அந்தச் செய்தி வந்த உடனே, விளக்கம் கொடுத்தால் உண்மைதான் போல. அதான் உடனே விளக்கம் கொடுக்கிறான்னு சொல்வாங்க. அதனால்தான் அமைதியா இருந்தேன்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி இருக்கிறது. அதில் நயன்தாராவும், நானும் சேர்ந்து வில்லனை அடிக்க வேண்டும். நயன்தாரா என்னிடம் இருந்து போய், வில்லனை அடித்துவிட்டு என்னிடம் திரும்ப வர வேண்டும். அப்போது நயன்தாரா போகும்போது அவருடைய கை என்னுடைய கண்ணில் குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதற்காக மருத்துவமனை சென்றேன். இதை அப்படியே மாற்றி எழுதினார்கள். அந்தச் செய்தி வரும்போது, இரண்டு பேருமே ஒன்றாகத்தான் நடித்துக்கொண்டிருந்தோம். நயன்தாராதான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. என்ன இப்படி எல்லாம் எழுதுறாங்கனு கேட்டாங்க. ரெண்டு நாள் கழித்து திரும்பவும் சகஜமா நடிக்க ஆரம்பித்துவிட்டோம்.
என்னுடைய மனைவிக்கு நயன்தாராவைத் தெரியும். அதனால், அவங்க ரெண்டு பேருமே பேசிக் கொண்டார்கள். “ இந்த மாதிரி செய்தி வரவில்லை என்றால்தான் வருத்தப்பட வேண்டும். விடுங்க. படத்துக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைச்சிருக்குனு வைத்துக் கொள்ளலாம்” என்று மனைவி சொன்னாங்க.
படங்களைத் தயாரிச்சுட்டு இருந்தீங்க. ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்களது நிறுவனம் வாங்கி வெளியிடும் படங்களும் குறைந்து விட்டதே?
நிறைய இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறேன். இப்போது சம்பளம் அதிகமாகி விட்டது. அதனால் கொஞ்சம் நிறுத்திவைத்திருக்கிறேன். இப்போகூட பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். ஹீரோ புதுமுகம்.
அதேபோல நிறைய படங்கள் பார்க்கத்தான் செய்யறோம். ஆனால், எங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ரிலீஸ் பண்றோம். அதையும் இப்போ கொஞ்சம் நாளைக்கு வேண்டாம் என்று தள்ளி வைத்திருக்கிறேன். பெரிய ஹிட் ஒன்று கொடுத்துவிட்டு, மீண்டும் படங்கள் வாங்கி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறேன்.
அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்கிறீர்கள். ஆனால், உங்களது பிறந்த நாள் அன்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் பளபளத்ததே?
பிறந்த நாளை நான் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. அதனால் தான் போன ஆண்டுகூட ஊருக்குப் போய்விட்டேன். இந்தாண்டு நற்பணி மன்றத்தில் இருந்து உதவிகள் எல்லாம் செய்ய வேண்டும். அதனால் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தலால்தான் இருந்தேன். மாலை போடாதீர்கள், போஸ்டர் எல்லாம் வேண்டாம் என்று சொல்றேன். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஒன்றை ஆரம்பித்து, அதில் உங்களால் முடிந்த பண உதவியைக் கொடுங்கள் என்று கூறினேன். என்னுடைய பிறந்த நாள் அன்று மட்டும் 1 லட்சம் வசூல் ஆனது. என்னுடைய பிறந்த நாள் அன்று போடப்பட்ட மாலை, சால்வை அனைத்தையும், அம்மாகிட்ட கொடுத்து விற்றுக் காசாக்கி கொடுங்கள் என்று தெரிவித்திருக்கிறேன். நற்பணி மன்றம் மூலமாக முடியாதவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறேன்.
காமெடி என்று மூன்று படங்களில் சவாரி செய்துவிட்டீர்கள். எப்போது நடிப்பு, ஆக்‌ஷன் என மாறப் போகிறீர்கள்?
எனக்கு எது வருமோ அதைப் பண்றேன். ஆனால், இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் சந்தானம் கிடையாது. இதை நான் அவர்கிட்டயே சொல்லிட்டேன். சந்தானம் கூட எனக்காகக் கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருக்கிறார். அவரோட இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும் என்று. இந்தப் படங்கள் எல்லாம் முடித்துவிட்டு, கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.
‘இதயம் முரளி’ படத்தை எடுத்துக் கொண்டால் என்னுடன் ஹன்சிகா, கருணாகரன் நடிக்க இருக்கி றார்கள். அனிருத் இசை, மதி கேமிரா. இந்திப் படம் மாதிரி ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் பாதிக் கதை நடைபெறுவது போல இருக்கிறது. அதனால் படம் முடிய சில மாதங்கள் ஆகும். பள்ளி, கல்லூரி, வேலைக்குப் போனவுடன் என மூன்று காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது.
ரொம்ப கேப் விடக் கூடாது என்று திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். அதில் சத்யராஜ் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். அப்பா - பையன் இருவருக்குள் நடக்கும் கதை. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள ஒரு படம். முதல் முறையாக இப்படத்தில் 3 சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏமி ஜாக்சன் நாயகி, இமான் இசையமைக்க இருக்கிறார். 



நன்றி - த இந்து

0 comments: