- ரஜினி பிறந்தநாளில்தான் படத்தை திரையிட வேண்டுமென பரீட்சை நேரத்தில் 'லிங்கா' படத்தை வெளியிட்டு தங்களை நஷ்டமடையவைத்துவிட்டதாக விநியோகஸ்தர் ஒருவர் சரமாரி புகார் கூறியுள்ளார்.ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான லிங்கா திரைப்படத்தால் கடும் நஷ்டமடைந்துவிட்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள சினிமா விநியோகஸ்தர்கள் வருத்ததில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இக்குற்றச்சாட்டின் உச்சபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் லிங்கா திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ஒருவர் வெகுண்டெழுந்த காட்சி யூ டியூபில் வெளியாகியுள்ளது.நஷ்டமடைந்த அந்த விநியோகிஸ்தர், "லிங்கா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமானது. படையப்பா திரைப்படம்போல் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றெல்லாம் பேசினார்கள்.பின்னர், கதை திருடப்பட்டது அப்படி..இப்படின்னு இவர்களாகவே தூண்டிவிட்டு வழக்கு பதிவு செய்யவைத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினர். இதையெல்லாம் நிஜம் என நம்பி என்னைப்போன்றோர் பட விநியோக உரிமைய வாங்கினோம். ஆனால், இன்று ரூ.8 கோடி நஷ்டப்பட்டிருக்கிறேன்.பட ரிலீஸ் பண்ண தேதியே மிகவும் தவறானது. ரஜினிகாந்த படத்தை அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்திருக்கிறார். ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா? அரையாண்டுத் தேர்வு காலத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டருக்கு யார் வருவார்கள்.இத்தனை வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு இதுகூடவா தெரியாது. இந்தப் படத்தை 200 கோடி ரூபாய் வரை தமிழ், தெலுங்கு, இந்தி என வியாபாரம் செய்திருக்கின்றனர். ஆனால், நாங்களோ திரையரங்கு உரிமையாளர்கள் மீது எங்கள் சுமையை இறக்கி வைத்திருக்கிறோம். ரஜினிகாந்த் தாயுள்ளம் கொண்டு எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்" என கூறியுள்ளார்.R.Subramanianலிங்கா படம் அப்படி ஒன்றும் மோசம் இல்லை, இடைவேளை வரையில் படம் மிக நன்றாகவே இருக்கிறது இடைவேளைக்கு பிறகு படம் சிறிது மெதுவாக செல்கிறது, கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் நன்றாகவே இருக்கிறது... ஒரு நல்ல படத்தை ஓட விடமால் செய்யும் ஒரு சதியாகவே இது தெரிகிறது.Points16190
- R.Subramanianரஜினி படத்தை வாங்கினால் நிச்சயம் லாபம் என்று நினைத்து பலரும் வாங்குகிறார்கள் லாபம் வரும் போது யாரும் ரஜினியை கண்டுகொள்வது இல்லை, லாபத்தில் பங்கு கொடுப்பது இல்லை ஆனால் நஷ்டம் வந்தால் எல்லோரும் ரஜினி திட்ட ஆரம்பிக்கிறார்கள். வியாபாரத்தில் லாபமும் வரும் நஷ்டமும் வரும் அதை தெரிந்து கொண்டு தான் வியாபாரத்தில் இறங்க வேண்டும். இது பரீட்சை நேரம் கூட்டம் வராது எனபது இவருக்கு தெரியாதா ? தெரிந்தே இவர் ஏன் படத்தை வாங்கினார் ?Points16190Srinivasan-Sundaram Up Voted
- Ramajayam .Dவயது அதிகம் . பில்டப் எடுபடாது .ரஜினி இனி தாத்தா வேடத்தில் நடித்தால் படம் ஓடும் .Points145
- Manoharஇவரது பிறந்தநாளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? பிரதமர் கூட வாழ்த்து சொல்லும் அளவுக்கு இவர் இந்த நாட்டுக்கு இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். இவருடைய கட் அவுட்டுக்கு பாலை ஊற்றி வீணடிக்கிறார்கள். தெருவில் பசியோடு இருக்கும் ஒரு குழந்தைக்குகூட எதையும் செய்ய மாட்டார்கள். நடிகர் நடிகைகளை தலைவர்களாக்கியதால் மொத்த தமிழ் நாடும் சீரழிகிறது. சிந்திக்க தெரியாத மனித மந்தைகள்.Points585ramakrishnan Down Voted
- S Venkateshkumarவியாபாரத்தில் லாப நஷ்டம் எல்லாம் இயல்பான ஒன்று படம் ஓடினால் ரஜினி அவர்களை கடவுளுக்கும் மேலாக துதி பாடுவார்கள் நஷ்டம் என்றால் அவரிடம் இழப்பீடு கோருவார்கள் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஏன் என்றால் பாபா படம் சரியாக வசூல் ஆகவில்லை என்று நஷ்ட ஈடு கொடுத்தார் அதையே வழக்கமாக எதிர் பார்க்கிறார்கள் லாபம் அடைந்தால் அதில் ஒரு பங்கை அவரிடம் கொடுப்பார்களா? இதே ராதா ரவி அவர்கள் பாபா தோல்வி அடைந்த பொது மிக விமரிசையாக கொண்டாடினார் இப்போது கொந்தளிக்கிறார் நாள் ஒரு மேடை பொழுதொரு நடிப்பு என்ற பாடல் நினைவிற்கு வருகிறதுPoints135
- Suriyanarayananவெள்ளிக்கிழமை மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகின்றன. இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.Points650
- Suriyanarayananலிங்கா படம் உண்மையிலேயே மாபெரும் வெற்றி படம். எதில் என்ன சந்தேகம் ??? சில வயிற்று எரிச்சல் பிடித்தர்வர்கள் கூறுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியும் உலகம் முழுவதும் அரங்கு நிறைந்துதான் காணப்படுகிறது. இனிமேல் தமிழ் சினிமாவின் வசூல் சாதனை என்பது லிங்கா படத்தை கொண்டு அமையும். லிங்கா மாஸ் ஹிட். மெகா ஹிட். BlockbusterPoints650Sivasankaran Down Voted
- Suriyanarayananபடம் தாறுமாறு ஹிட்., தெகிடி ஹிட். தலைவர் ரஜினி தான் மாஸ் ரஜினி தான் கிளாஸ்.Points650Sivasankaran Down Voted
- Suriyanarayananமனித தெய்வம் ரஜினியின் லிங்கா படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இனி வரும் காலம் எங்களின் லிங்கா ஆட்சி தான்.Points650ramakrishnan Up Voted
- Manoharஇவரது பிறந்தநாளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? பிரதமர் கூட வாழ்த்து சொல்லும் அளவுக்கு இவர் இந்த நாட்டுக்கு இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். இவருடைய கட் அவுட்டுக்கு பாலை ஊற்றி வீணடிக்கிறார்கள். தெருவில் பசியோடு இருக்கும் ஒரு குழந்தைக்குகூட எதையும் செய்ய மாட்டார்கள். நடிகர் நடிகைகளை தலைவர்களாக்கியதால் மொத்த தமிழ் நாடும் சீரழிகிறது.Points585Sivasankaran Up Voted
- Devarajan12.12.2014 அன்று வெள்ளிக்கிழமை அன்று இந்த லிங்கா திரைப்படத்தை திரையீடப்பட்டது... வெள்ளிக்கிமை 4 காட்சிகள் மட்டுமே திரையீட வேண்டும் ஆனால் கூடுதல் காட்சிகள் திரையீட்டு உள்ளார்கள்... இதன் மூலமூம் பல லட்சம் ரூபாய் ஒவ்வொரு திரையரங்கு மூலம் லாபம் கிடைத்தியிருக்கும்... மேலும், தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல விலையில் விற்பனை வேறு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடிகள் ஒரே நாளில் லாபம் பெற்றார்கள். இதை எல்லாம் யார் ஏடுத்துக்கொண்டது... நடிகர் ரஜினி மட்டுமா... எடுத்துக்கொண்டார்... இல்லை .... திரையரங்கு உரிமையாளர்கள் இந்த கொள்ளையில் பங்குதாரர்கள்... ரஜினி மட்டும் நடிகர் அல்ல... லிங்கா படத்தில் மூலம் வருவாய் பெற்ற அனைவரும் நடிகன் தான்... பொதுமக்களும்...ரசிகன் மட்டுமே...முட்டாள்கள் மற்றும் ஏமாளிகள்...about 23 hours ago · (11) · (1) · reply (0) ·Srinivasan-Sundaram Up Voted
- venkatesanஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் நீங்க மட்டும் என்ன சும்மாவா உட்ரிங்க என்ன அக்கரமும் செய்றீங்க டுபாகூர் திரையரங்குளில் கூட 300 ரூபாய் என்று விற்றால் ஏழை மக்கள் திரையரங்களுக்கு வரமுடியாது சாமிa day ago · (12) · (0) · reply (0) ·Srinivasan-Sundaram Up Voted
- sathiyanலிங்கா சங்கா?தொங்கு சதை வந்தப்புரமுமும் கதையில்லா படத்தில் நடித்து கல்லா கட்ட நினைப்பது முட்டாள் தனம்a day ago · (57) · (15) · reply (0) ·Prabu-M · Srinivasan-Sundaram · ramakrishnan · ramakrishnan · ramakrishnan · ramakrishnan Down Voted
- செ.ரத்தக்கண்ணீர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் மனைவி தனியே வாழாவெட்டியாக வாழும் வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு நடிகவேள் எம்.ஆர். இராத அவர்கள் நடிப்பிற்கு இலக்கணம் தீட்டும் காட்சியில் அவர் சனாதனிகளைச் சாடுவார். அதை நினைவில் கொண்டு எம் எளிய கருத்தை வாசிக்க வேண்டுகிறேன்: "யப்பா, வந்துட்டுதுடா உங்களுக்கெல்லாம் அறிவு! இந்த சினிமாக்கார பசங்களைஎல்லாம் கடவுள் உயருத்துக்குக் கொண்டுபோய் வைத்தது யாருடா, டேய், யாருடா? அது நீதாண்டா விநியோகஸ்தா, தியேட்டர் உரிமைக்காரா! வேறு யாருமில்லேடா. இப்போ, அவங்கள் உன்னைக் குத்திக் கொல்லுறான், நீ குமுறுரே! நல்லா குமுறு! நீயா தேடிக்கிட்ட வினைதாண்டா இது. உன் தியேட்டர் முன்னால் உள்ள சுவரொட்டிக்கு இந்த சினிமாக்கார பசங்க துட்டுகொடுத்து அவனுக ஆளுயர சுவரொட்டிய பாலாபிசேகம் செய்யும்போது பல்லிளித்து பரவசப்பட்ட பயல்களே நீங்கதானேடா? இப்போ படம் கருவாட்டுப்பானைக்குள் முடங்க நீ முச்சந்திக்கு வந்ததுக்கு அவனா பொறுப்பு? எவனோ நாயைக் குளிப்பாட்டி கட்டில்மேல வச்சானாம். அந்த கதைதான் ஒன்னோட கதையும். படு, நல்லா படு! பட்டாலும் வராதுடா படம் எடுக்க உதவும் உன்னைப்போன்ற பாம்பாட்டிகளுக்கு!Points11040as · ramk · ramk · SENTHIL · SENTHIL · Sivasankaran · Jay · Sampathkumar · abdul-rasheed · john Up Votedvenkat Down Voted
- LINGESHஇந்த விநியோகஸ்தர் கூறும் காரணம் சிறிதும் ஏற்கும்படியாக இல்லை. கதைத்திருட்டு, வழக்கு என எதிர்பார்ப்பை அதிகரித்தார்களாம் அதனால் படம் நன்றாக ஓடும் என எண்ணினாராம். அப்படியானால் ஒரு விநியோகஸ்தர் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, நடிப்பு, படம் எடுக்கப்பட்டவிதம் என பிற அம்சங்களைப் பார்ப்பதில்லையா? இவர்கள் முட்டாள்களாகிறார்களா? அல்லது மக்களை முட்டாள்களாக்குகிறார்களா?Points4630
- ஜெயம் Ramachandranநியாயமான கேள்வி. இப்படி ஒரு நடிகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்ன பலனைக் கண்டார்கள்? டோடல் லாஸ். பாவம் விநியோகஸ்தர்கள். இதில் ராதாரவி ஏன் கொதிக்கிறார் என்று நமக்கு புரியவே இல்லை.Points385Suriyanarayanan Down Voted
- Sriramachandran Manickam at State Governmentரஜினி மிகவும் நல்ல மனித நேய மிக்க மனிதர். அனைவரின் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்வார். இனிமேல் அவரும் அமிதாப் போல் வயதுக்கு தகுந்த வேடங்களை ஏற்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள்.Points1130
- Prabu Mஇத்தன வருஷம் நீ சினிமாவில் இருந்திருக்க தானே? அப்புறம் என்ன எழவுக்கு இவ்ளோ பணம் போட்டு வாங்கின?? கழுவி ஊத்திட்டு அப்புறம் என்ன தாயுள்ளம்?? பிச்சக் காரப் பசங்க.......நன்றி - த இந்து
0 comments:
Post a Comment