Friday, December 19, 2014

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Camouflage
Camouflage 
 
 
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Camouflage / Krzysztof Zanussi / Poland / 1977 / 106'
மாணவர்களை எப்போதும் அச்சப்படுத்திக் கொண்டே இருந்தால் தான் மாணவருக்கும் ஆசிரியிருக்குமான உறவு சரிவர அமைந்திருக்கும் என்று எண்ணும் முதிர்ச்சியான வாத்தியார், மாணவர்களை தோழர்களாக நடத்தினால் மட்டுமே அவர்களின் திறனை முழுவதுமாக வெளிக்கொணர முடியும் என நினைக்கும் இளைஞர். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுகிறது. பள்ளியில் பெரிய அளவில் நடத்தப்படும் மொழியியல் போட்டியின் போது இவ்விருவரும் தீர்ப்பு சொல்லும் இடத்தில் அமர்ந்த்திருக்க இவர்களின் கருத்து வேறுபாடு போட்டியில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், குழப்பத்தையும் பற்றிய படம் தான் இது. 



மதியம் 12 மணி
Mundaspatti / Dir.:Ram / Tamil|2014|133'| TC
புகைப்படம் எடுத் துக்கொண்டால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவது உறுதி என்று நம்புகிறார் கள் முண்டாசுப்பட்டி கிராமத்து மக்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தக் கிராமத்தில் நடந்த ஒரு அசம்பாவிதம்தான் இந்த நம்பிக்கைக்குக் காரணம். விளைவு அந்தக் கிராமத்தில் கேமராவைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள். 




உயிரோடு இருப்பவர்களைப் படம் பிடிக்கக் கூடாது என்பதால் இறந்த பிறகு பிணத்தை அலங்கரித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது அவர்கள் வழக்கம். அந்தக் கிராமத்தின் தலைவர் இறந்துபோக, அவரது பிணத்தைப் புகைப்படம் எடுக்க ஹாலிவுட் ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கோபியையும் (விஷ்ணு) அவன் உதவியாளரையும் (காளி வெங்கட்) அழைக்கிறார்கள். ஊர்த் தலைவர் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டிருக்க, அவர் இறக் கும்வரை அங்கேயே தங்கியிருந்து புகைப்படம் எடுத்துத் தரும் படி ஊர்க்காரர்கள் வேண்டிக்கொள் கிறார்கள். கலைவாணியும் அந்த வீட்டில் தான் இருக்கிறாள். அந்த ஊரிலேயே தங்கும் கோபி, கலைவாணியிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளுக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் அவ ளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டது. 



ஊர்த் தலைவர் இறந்ததும் அவர் பூத உடலைப் புகைப்படம் எடுத்துவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்புகிறான் கோபி. ஆனால் எடுத்த புகைப்படம் சரியாக விழவில்லை. அதற்குப் பதிலாக ஒரு தந்திரம் செய்கிறான். ஆனால் குட்டுவெளிப்பட்டு மாட்டிக் கொள்கிறான். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறும் கோபியும் அவன் நண்பர்களும் எப்படித் தப்பினார்கள், கோபியின் காதல் என்ன ஆயிற்று என்பதுதான் மீதிக் கதை. 



மதியம் 3 மணி
Thegidi / Dir.: P. Ramesh / Tamil|2014|126'| TC
கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப்படுகிறான். 



குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடுகிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான். 



எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது. 



அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடுகிறான். 


நன்றி - த இந்து

0 comments: