Friday, December 05, 2014

13ம் பக்கம் பார்க்க - சினிமா விமர்சனம்


 
 ஃபிளாட்பார்ம் ல  கதை புக்ஸ்  விற்பவரிடம்  ஒரு ஆள் பல  புக்ஸ்  எடைக்குப்போட்டுட்டுப்போறார்.அதுல  ஒரு  பேய்க்கதை புக்ல  ஒரு கதை. அந்த புக்கில் “ இந்தக்கதையை  யாரும்  படிக்காதீங்க  படிச்சா  மரணம் நிச்சயம்?அப்டினு  ஒரு எச்சரிக்கை  இருக்கு,

 குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக்கேடு-ன்னு  பாட்டில்ல  எழுதி  இருந்தும்  எவன் அதை  கேட்கறான்? டெய்லி குடிச்சுட்டு மட்டை ஆகிடறான்.அது  மாதிரி அந்தக்கதையை படிச்சுடறான் அந்த புக் ஷாப்காரன். ஆள்   அவுட் அந்தக்கதை  புக்கை  ஒரு ரைட்டர் வாங்கிட்டுப்போறார். அவரும்  ஆள் அவுட்.

ரைட்டர்  குடி  இருந்த வீட்டில்  நம்ம  ஹீரோவும் , ஹீரோயினும்  குடி வர்றாங்க.

நாயகி  உடம்புல  பேய்  புகுந்துக்குது. முனி  ராஜ் கிரண்  மாதிரி  நாயகி  மட்டன்  சிக்கன்  எல்லாம்  சாப்பிடுது. இதை  வெச்சு  கொஞ்சம்  பயம்  காட்டறாங்க .

 அடுத்த  கட்டமா  ஹீரோ  வை  பேய்  பிடிக்குது . இவரும்  ஒரு ரைட்டர். நாட்ல  ரைட்டர்களோட  எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு


அந்த  புக்கைபடிச்சு அதுக்கு  திரைக்கதை  எழுத  முயற்சிக்கும்  ரைட்டர் ம்  செத்துடறாரு. ஒரு லேடி  போலிஸ் செத்துடுது . இவங்க  சாவுக்கு என்ன  காரணம்?  என்பதே   மிச்ச  மீதிக்கதை


ஹீரோ  புதுமுகம்,  ஓக்கே  ரகம் .ஆனா அவருக்கு   வாய்ப்புகள்  கம்மி.

  ஹீரோயின்  நல்ல  குடும்பப்பாங்கான  பேய் சாரி  பொண்ணு. அவங்களுக்கும்  வாய்ப்பு  கம்மிதான்


பின்னணி இசை  மகா சொதப்பல்

 சி ஜி   ஒர்க்     ரொம்ப  மோசம்



ஒளிப்பதிவு  சராசரி  .கவுரவத்தோற்றம்னு நளினிக்கு  டைட்டில்ல  மரியாதை  கொடுத்து  படத்தில்  பேய்  ஓட்டும் சாமியாரா கேரக்டர்  குடுத்ததால அவங்க  பின் பாதில வர்றாங்க .அவர்  பேசும்  சேரி பாஷை  கர்ண  கொடூரம்.






  டூயட்  சீன்  இல்லை  என்பது  ஒரு ஆறுதல்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  இந்தக்காலத்துல கதை  புக்ஸ்  எல்லாம் யார் படிக்கறா?ஃபேஸ்புக் வந்த  பின் கதை  புக்  படிக்கற பழக்கமே  இல்லாம போயிடுச்சு#13


2  இந்தக்கால  லேடிங்களுக்கு  அவங்க  புருசனை  விட  அவங்க வளர்க்கும் நாய் மேல தான் அக்கறை  ஜாஸ்தி #13





பேய்  பிசாசு  மேல  உங்களுக்கு  நம்பிக்கை இருக்கா?

10 வருசமா  அது  கூடத்தான்  குடும்பமே நடத்தறேன்#13 ( 1984 ம் வருட இதயம்  பேசுகிறதுஜோக்)


4  பேய்  பிசாசு  பசங்கள்  ஹிட் ஆகுதே அதுக்கு  என்ன காரணம் ? பேயை  நம்பறவங்க நிறைய  பேர்  இருக்காங்கனு தானே அர்த்தம் ? #13






5  மனைவி - காஃபி?


ரைட்டர் = நோ . ஒரிஜினல்


 ஹய்யோ . காபி குடிக்கறீங்களா?னு கேட்டேன்


ஓ! நான்  என் கதையைச்சொன்னேன் #13


6  நாம  தூங்கிட்டு  இருக்கும்போது  சில சமயம் விதி  முழிச்சுக்கிட்டு இருக்கும்.அது நம்ம  தலை விதி








 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  வழக்கமா எல்லா  பேயும்  வெள்ளை சேலை  தானே  கட்டும்? இந்தப்படத்துல  மஞ்சள்  கலர் சேலை கட்டி  இருக்கு ? மங்களகரமான  பேயா? திமுக  பேயா?#13



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   போஸ்டர்   டிசைன்  , டைட்டில்  ஒர்க் எல்லாம்  பக்கா . நல்ல  திகில் படம்னு  மக்களை நம்ப  வைக்கும் அளவு  இருக்கு


2  அந்த  புத்தக  மேட்டர்   தமிழ்  சினிமா பேய் சப்ஜெக்ட்க்கு அதிக  பழக்கம்  இல்லாத  புது  உத்தி 




இயக்குநரிடம்  சில கேள்விகள் 

1 பேய்  புகுந்த  நாயகியின்  நெற்றியில்  அவர்  அப்பா  டெல்லிகணேஷ்  குங்குமம் இடும்போது நாயகி  தடுக்குது. சாமி  குங்குமம்  படக்கூடாதுன்ன்னு.ஆனா ஆல்ரெடி அவர் நெற்றி  வகிட்டில்  குங்குமம் இருக்கு. அது மட்டும்  ஓக்கேவா?


2 ரைட்டர்னா   ஜிப்பா பைஜாமா  தான்  போட்டிருப்பாங்களா? அதெல்லாம்  அந்தக்காலம்ங்கோ. இப்போ எல்லா ரைட்டர்களும்  ஜீன்ஸ்  பேண்ட் அல்லது பர்முடாஸ்  தான்  போடறாங்க .

3 பேய்க்கதைன்னு முடிவு ஆன பின் எதுக்கு   அந்த  போலீஸ் ஸ்டேஷன்  டிராக்? கேனத்தனமா  இருக்கு, எம் எஸ்  பாஸ்கர்   நல்ல நடிகர். அவரை அட்டர் வேஸ்ட்  ஆக்கிட்டாங்க


4  படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள்   அந்த கதை  புக்கை படிக்கறாங்க , சாகறாங்க. அப்டிஅந்த புக்கில்  என்ன கதை>னு சொல்லவே  இல்லையே? அடுத்த  பாகத்தில்  சொல்விங்களோ?


5  இடை வேளை  விடும்போது  ரைட்டர்  பேய்  போலிஸ்ஸ்டெஷன்ல லேடி  கான்ஸ்டபிளைகொல்லுது.அவர்  உடம்புல  இருந்து    நீல கலர் சேலை  கட்டிய   உருவம்  கிளம்புது? யார்  அந்த  நீல வேணி?


6  பேய்க்கதைன்னா  பிஜிஎம்  எப்பவும்  டொம் டொம்னு சவுண்ட்  குடுத்துட்டேதான்  இருக்கனுமா?  காது  வலிக்குது


7  பேய்  எதுக்கு  அடிக்கடி  கெக்கே  பிக்கேனு சிரிக்குது ? படத்துல யாரும் ஏதும்  ஜோக்   சொல்லலையே?


8  படத்துல அடிக்கடி  பேய்  யார்  கிட்டயாவது வந்து ? நீ  செத்துடுனு  சொல்லிட்டே  இருக்கு, என்னமோ  காங்கிரஸ்ல  சேருன்னு  சொல்றமாதிரி. பவர்  உள்ள  பேய்னா  கொல்ல  வேண்டியதுதானே? எதுக்கு காமெடி  பண்ணிட்டு  இருக்கனும்?


9  பேய்  அடிக்கடி   யாரோ  ஒரு லெடி உடம்பில்   புகுந்துக்கிட்டு  எனக்கு  தாகமா  இருக்கு  ரத்தம் வேணும்குது. பிளட்  பேங்க்  போனா நிறைய   குரூப்  ரத்தம்  கிடைக்குமே?







சி  பி  கமெண்ட் -13-ம்  பக்கம்  பார்க்க  - பேய்ப்படம் எடுக்கனும்னு நினைச்சு  ஒரு மொக்கைப்படம்  எடுத்திருக்காங்க.முடியல - விகடன் மார்க் 36,ரேட்டிங் = 2/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 36



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  மொக்கை



 ரேட்டிங்  -  2 / 5



a






இந்த  லட்சுமிரமான  பேய்ப்படத்தை   நெய்வேலி  மகாலட்சுமி  யில்  பார்த்தேன்

0 comments: