உலக மற்றும் ஆங்கில சினிமா டிவிடிக்கள் பெட்டிக் கடைகளில்
கிடைக்க ஆரம்பித்த பிறகு ,தங்கள் விருப்பத்துக்குரிய ஹாலிவுட்
இயக்குநர்களுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள் இந்திய
ரசிகர்கள். அவர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன்.
‘த ப்ரஸ்டீஜ்’, ‘மெமன்டோ,
‘டார்க் நைட்’ ‘இன்செப்ஷன்’என்று தனது முன்மாதிரியான படங்களின் மூலம்
திரைக்கலையைத் திரைக்கதையின் கலையாக வடித்துக் காட்டும் கிறிஸ்டோபர் நோலன்,
ஹாலிவுட்டின் நிகழ்காலப் பரிசோதனைப் படங்களை ஃபாக்ஸ் ஆபீஸில்
மில்லியன்களைக் குவிக்கும் வெற்றிப் படங்களாக தந்து வருகிறார்.
தனது கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைச்
சித்திரிப்பதும் வாழ்வின் அடுத்தடுத்த கணங்களின் விடுபடாத முடிச்சுகளைப்
போலவே இவரது கதாபாத்திரங்கள் எடுக்கப்போகும் முடிவுகளை எந்த நொடியில் இவர்
ஒளித்து வைத்திருக்கிறார் என்ற திரைக்கதை எதிர்பார்ப்பும் ரசிகர்களைப்
பைத்தியம் பிடிக்க வைக்கின்றன.
தனது முந்தைய படமான இன்செப்ஷனில், தனி மனிதக் கனவுகளில்
ஊடுருவி ஐடியாக்களைத் திருடியும், விதைத்தும் விளையாடும் அறிவியல்
மாபியாக்களை அறிமுகப்படுத்திய நோலன் இம்முறை அறிவியல் புனைவுக்குள்
டுவெண்டி டுவெண்டி ஆடியிருக்கிறார்.
தற்போது நோலன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும்
‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் கதை இவ்வளவுதான்.
இன்னும் சில வருடங்களில்
பூமிப்பந்து அழியப்போவதை உணர்ந்துகொள்ளும் நாசா விஞ்ஞானிகள், மனிதனின்
இருப்பிடத்திற்காக வேறொரு கிரகத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசியப் பணியில்
ஈடுபடுகிறார்கள். பேராசிரியர் மைக்கேல் கெயின் தலைமையில் செயற்கைக்கோள்
பொருத்தப்பட்ட விண்வெளிக் கப்பலில் நான்கு பேர் கொண்ட குழு பால்வெளி
நோக்கிப் பறக்கிறது. விண்வெளிக் கப்பலை ஓட்டுபவர் மேத்யூ மொக்கானே.
ஆரம்பத்தில் இது எவ்வளவு ஆபத்தான பயணம் என்பது தெரியாத பைலட்
மொக்கானேவுக்கு, போகப் போகத்தான் விபரீதம் புரிகிறது.
காரணம் கிரகங்களுக்கு
இடையிலான காலத்தின் வேறுபாடு அல்லது காலத்தின் விரிவு (Time Dilation).
ஈர்ப்பு விசையை வென்று காலத்தின் முன்னும் பின்னும் பயணிக்கும் அறிவியலை
மனிதன் கைக்கொண்ட பிறகு கதை நடப்பதுபோல சித்தரித்திருக்கிறார்கள் நோலனும்
வழக்கம்போல திரைக்கதையை இணைந்து எழுதியிருக்கும் அவரது சகோதர் ஜோனதனும்.
பேராசிரியர் கெயின் டீம் நுழையும் ஒரு கிரகத்தில்
செலவழிக்கும் ஒரு மணி நேரம் என்பது பூமியைப் பொறுத்தவரை சுமார் ஏழு
ஆண்டுகள். இதனால் அங்கு நகரும் ஒவ்வொரு நிமிடமும் பூமிக்குத்
திரும்புவதற்கான நாட்களையும் டீமின் ஆயுளையும் தின்றுகொண்டேயிருக்கும்.
இப்படியொரு பொறியில் சிக்கியது போன்ற சூழ்நிலையில், தங்கள் குடும்பங்களைத்
திரும்பவும் பார்க்க முடியுமா என்ற பரிதவிப்போடு அந்த கிரகத்தில்
நிமிடங்கள் நகர்கின்றன.
அதன் பிறகு அந்தக் கிரகத்தில் நடப்பவை அனைத்துமே
நம்மால் யூகிக்க முடியாத, நோலனின் மேஜிக். மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியான
இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை எப்போதும் மனித
உணர்ச்சிகளுக்குப் போதிய முக்கியத்துவம் தரும் நோலனின் திரைக்கதை வழியே
அறிவதுடன் ஒரு புதிய தலைமுறை அறிவியல் புனைகதைப் படத்தை அனுபவிக்கலாம்.
இதற்கு படத்தின் தொழில்நுட்ப பிரம்மாண்டமும் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர்
ஹான்ஸ் ஸிம்மரின் இசையும் உங்களுக்குத் துணைபுரியும். அதேநேரம் படத்தின்
சிக்கலான இயற்பியல் சமாச்சாரங்கள் பலருக்கு எரிச்சலையும் ஊட்டலாம்.
இயற்பியல் தெரிந்தவர்களுக்கு இன்னும் நெருக்கமான படம்.
நன்றி - த இந்து
2 comments:
விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.
Anne Hathaway க்கும் இந்த படத்துக்கும் என்ன சம்மந்தம்
Post a Comment