Monday, November 17, 2014

புலிப்பார்வை - சினிமா விமர்சனம்




யுத்தப்பின்னணியில்  உருவான   முதல்  தமிழ்ப்படம்  என்ற  முஸ்தீபுகளுடன்  படம்  ஆரம்பிக்குது.

ஆரம்பத்தில்  காட்சிகள்  குழப்பமா வந்து  போகுது. யுத்த  பூமியில் தெளிவான  காட்சிகளை  எதிர்பார்க்க  முடியாது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும்  , சிங்கள  ராணுவத்துக்கும் நடக்கும்   போர் க்காட்சிகள்    கொஞ்ச  நேரம்  ஓடுது. 

தமிழ்  இனத்தின்  ( உண்மையான )  தலைவன்  பிரபாகரன் மகன்  பாலா வை  சிங்களர்கள்   பிடிச்சுடறாங்க . அவனைப்பிணையக்கைதியா  வெச்சு தலைவர்  பிரபாகரனுக்கு ஒரு வேண்டுகோள் வீடியோ  சிங்கள  ராணுவம்  ரெடி பண்ணுது .அதில்  பிரபாகரனின்  முக்கிய  தளபதிகள் 4 பேரை  ராணுவத்திடம் ஒப்படைத்தால் பிரபாகர் மகன்  ஒப்படைக்கப்படுவான். கிட்டத்தட்ட எக்சேஞ்ச் ஆஃபர்  மாதிரி.


ஆனா  பிரபாகரன்   அதுக்கு  ஒத்துக்கலை.  அவர்  கூட இருக்கும்  ஆட்கள்  அவருக்கே  தெரியாம   அவர் மகனைக்காப்பாற்றும்  முயற்சியில்  ஈடுபடறாங்க.அவங்க   வெற்றி  பெற்றாங்களா?  இல்லையா?  என்பதே  மிச்ச  மீதிக்கதை .

 இந்தப்படத்தைப்பார்ப்பவர்களுக்கு   ஒண்ணு  சொல்லிடறேன். இது  70% கற்பனைப்படம். அதாவது   பிரபாகரன் மகன்   சிங்கள ராணுவத்திடம்  பிடிபட்ட பின் என்ன  நடந்திருக்கும் ? என   உத்தேசமா கற்பனை   பண்ணி எடுக்கப்பட்ட  படம். இப்படியும்  நடந்திருக்கலாம் அவ்வளவுதான்.இது   ஒரு  வரலாற்றுப்பதிவு  கிடையாது.

படத்தில்    முதல்   ஹீரோ  வசனங்கள்  தான் . பிரமாதமான  வசனங்கள்.அரசியல் வாதிகள்  வயிற்றில்   புளியைக்கரைக்கும்   வசனங்கள். குறிப்பா   தமிழ்  இனத்ததலைவரை  வாரு  வாருன்னு வாரிடறாங்க.



பாலாவா  வரும்  பையன்  நடிப்பு  பிரமாதம்,அவர்   சின்னப்பசங்க  ளுக்கு  பாடம்  சொல்லித்தருவது  , வீர  உரை ஆற்றுவது  எல்லாம்  செயற்கை  தட்டுது.


 பிரபாகரன்  கேரக்டர்  இடைவேளை  சமயத்தில்  தான்  வருது . அவர்  வரும்போது   தியேட்ட்டரில்   ஆரவாரம் . அச்சு அசல்   அவரைப்போலவே  தோற்றம். சபாஷ்  இயக்குநர். பாத்திரத்தேர்வு   அருமை.அவர் பேசும்  வசனங்கள்  , வசன  உச்சரிப்பு  எல்லாம்  அருமை .

வில்லனாக வரும்  மேஜர்   கேரக்டரை  ராஜபக்சேவா  சித்தரிச்சிருக்காங்க . அவர்  மகன்  கோழையாக  வருவதும், அவனை  பிரபகரன்  மகனுடன்  ஒப்புமைப்படுத்தி அடிக்கடி   மேஜர்  பேசுவதும்  கதைப்போக்குக்கு  தேவை  இல்லாதது. அவனை  வீரனாக  மாற்ற அவர்  எடுக்கும்  நடவடிக்கைகள்  கமல் -ன் மங்கம்மா  சபதத்தில் ஆல்ரெடி  வந்தாச்சு.

திரைக்கதையின்  வேகத்தைப்பாதிக்கும்  அந்த காதல்  கதை எபிசோடு  தேவை இல்லாதது . ரிலாக்ஸ் என  இயக்குநர்  நினைத்திருக்கலாம். ஆடியன்ஸ்  போர்ப்பின்னணியைத்தெரிந்து  கொள்ளவே.  எனவே  அதைத்தவிர்த்திருக்கலாம்.



பாடல் காட்சிகள்  பிரமாதம் . இசை  வீர உணர்ச்சியைத்தட்டி  எழுப்புது








மனதைக் கவர்ந்த  வசனங்கள்



1  வீரன் அழக்கூடாது.அதுவும் பயத்தால அழவே கூடாது # புலிபார்வை



2 பசியால  மக்கள் செத்தா  அது நாட்டோட தப்பு . போரால  மக்கள் செத்தா அது நாட்டை ஆள்பவர்களோட தப்பு #புலிப்பார்வை


3  இங்கே   ( ஈழம்) துப்பாக்கி எடுத்த   ஒவ்வொருவர்  வாழ்க்கைலயும்  ஒரு கதை இருக்கும் , அதுல வலி இருக்கும் #புபா


4  மழை  இல்லாத  வறண்ட  பூமில கூட வாழ்ந்துடலாம்.ஆனா யுத்த  பூமில வாழவே கூடாது # பு பா 


5  இந்த  பூமில  பிறந்தவங்க   எண்ணம்  மண்ணைப்பத்தி மட்டும் தான் நினைக்கனும், பெண்ணைப்பத்தி அல்ல # பு பா


6  உங்கப்பா  எங்கே  ஒளிஞ்சிருக்கார்?

பயந்தவன் தான்  ஒளிவான். எங்கப்பா  பயந்து நான்  பார்த்ததே இல்லை # பு பா



7  தன்  வாரிசுகளுக்கு  மக்கள்  சொத்தை  தாரை வார்ப்பவன் , சொத்து  சேர்ப்பவன்  தலைவனா  இருக்க  தகுதியே இல்லாதவன் # பு பா  ( தலைவா! நம்மை  தான்)



சயனைடு குப்பியை  எப்பவும்  இதயத்துக்கு  பக்கத்துலயே  மாட்டி வெச்சிருக்கறவங்க நாங்க . எதுக்கும் பயப்பட மாட்டோம் # பு பா



9   போராளி  வாழ்வில்  காதல் வருமா?


காதல் வந்த  பின் தான் பலர்  போராளியாவே ஆகி இருக்காங்க # பு பா




10 நாட்டை  ஆள்பவர்கள்  எப்போதும் ஆபத்தானவர்கள்.அவங்க  சுய நலத்துக்காக மக்களை   பலி கொடுக்க  தயங்க  மாட்டாங்க # பு பா


11  பிரபாகரன் - தமிழனும் , யானை இனமும் 1. இருந்தாலும் ,இறந்தாலும் மத்தவங்களுக்கு  உபயோகமாத்தான்  இருப்பாங்க # பு பா



12   தமிழ்க்கடவுள்  முருகனுக்கு அறுபடை வீடு உண்டு.
எங்கள் தமிழ்த்தலைவனுக்கு நூறுபடை உண்டு # பு பா ( பாடல் வரி )



13   இங்கே  இருந்து   தனி ஈழத்துக்காக  போராடுவதற்கு எங்கேயாவது போய் பிச்சை எடுத்தாவது வாழ்ந்துடலாம் # பு பா


14  யுத்த களத்தில்   பிடிபடறதும் , சித்திரவதைப்படறதும்  சகஜம் தான் . எல்லா ஆபத்தையும்  எதிர்பார்த்துத்தான்  களம்  இறங்கனும் # பு பா


15  நாம கத்துக்கிட்ட  கலாச்சாரம் நம்ம  செயல்களில்  தான்  வெளிவரனும் # புலிப்பார்வை


16  ராணுவத்தில்இருப்பவர்கள்அடிக்கடிஇறப்பதால்  ராணுவவீரர்கள்  மகன்கள் மனோவியல் ரீதியா  கோழைகளாகவும்    ,பயந்த  சுபாவிகளாகவும் ஆகிடறாங்க#புபா


17  எதிரிக்குப்பயந்து  ஓடுவதை  விட  சயனைடு சாப்பிட்டு  நம் உயிரை  நம்மை  விட்டு  ஓட  விடுவது  நல்லது # பு பா


18  ஆர்மிக்காரன்  கண்ணுக்கு  எதிரில்  நிற்பவரெல்லாம்  போராளியாத்தான் தெரியும் # பு பா





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  இடைவேளை  போடும்போது இயக்குநர்  நச் டச் # INTER(NATIONAL)MISSION




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1    சென்சார்   பார்வையில்  பாஸ்  செய்யும்  அளவு  இந்தியாவுக்கு ஆதரவாக  சில  வசனங்களை சாமார்த்தியமாக  நுழைத்தது


2    பிரபாகரன்  , அவர்  மகன்  கேரக்டர்களுக்கு  அச்சு அசல் அதே
தோற்றத்துடன் ஆட்களை  செலக்ட்  செய்தது


3   அரசியல்வாதிகள்  நிஜ  முகத்தை  வசனங்கள்  மூலம் தோல்  உரித்துக்காட்டியது



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  விடுதலைப்புலிகள்  எல்லோரும்   கிட்டத்தட்ட  மிலிட்ரி  வீரர்கள்  போல்  தான்  இருப்பாங்க . ஆனா  இதில் வரும்  ஆட்கள்  ஏதோ  வீரப்பன்  அடியாட்கள் போல்   காட்டுத்தனமா  இருக்காங்க . டிசிப்ளினே  இல்லை..  குறிப்பா   அவங்க   ஹேர் ஸ்டைல் . போலீஸ்  கட்டிங்  அடிச்சு     விட்டிருக்க  வேணாமா?

2  பிரபாகரன்   பெரும்பாலும்        யூனிஃபார்மில்  இருக்கும்போது  சிரிக்க  மாட்டார். இதில்  அடிக்கடி  சிரிக்கிறார். அவர்  கூட மிலிட்ரி கட்டிங்  அடிக்கலை. ஹேர் ஸ்டைல்  ஒத்து வர்லை


3  சிங்கள  ராணுவம் அந்த  சிடியை   பிராபகர் ஆளிடம்  கொடுத்து  விடுவது      நம்பும்படி  இல்லை. அவரை  ஃபாலோ  பண்ண ஆள் அனுப்பி  இருக்க  மாட்டாங்களா?அல்லது  சிடி  அவர்  கைக்குப்போய்ச்சேர்ந்ததா?  என செக்  பண்ண மாட்டாங்களா?



4 சிடி  வாங்கிய  விடுதலைப்புலி அதைத்தலைவனிடம்  சேர்ப்பிக்காமல்  காதலியின்  பேச்சைக்கேட்டு அசால்ட்டாக  இருப்பது நம்பும்படி இல்லை.அவர்  சேர்ப்பிக்கலைன்னாலும்  யாரிடமாவது  கொடுத்து  விட்டிருக்கலாமே?


5  படகில்  நடுக்கடலில்  போகும்பொது திடீர்  என அவர்  ஞானோதயம்  வந்து  கடலில்  குதித்து  நீந்திப்போய்   சிடி  யை  சேர்ப்பிப்பது  சிரிப்பை வர வைக்கிறது





சி  பி  கமெண்ட்  - புலிப்பார்வை -அபாரமான  வசனங்களுடன் யுத்த  பின்னணியில்  எடுக்கப்பட்ட  படம் - விகடன் எதிர்பார்ப்பு  மார்க் - 40 . ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40  ( இதுக்கு  விமர்சனம்  போட மாட்டாங்க .எதுக்கு  சர்ச்சை  என  விட்டுடுவாங்க . நெட்டில்  இணையவாசிகள்  கூட  எதுக்கு நமக்கு வம்பு  என  இதுவரை யாரும்  விமர்சனம்  போடலை )



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங்  = 2.5 / 5


தஞ்சை  சிவாஜி  தியேட்டரில் ( ஜி வி காம்ப்ளெக்ஸ் ) படம் பார்த்தேன். இந்தப்படத்துக்கு  பெண்கள்  கூட்டம்  வந்தது ஆச்சரியம்



டிஸ்கி  -

அப்புச்சி கிராமம் - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2014/11/blog-post_14.html

 

திருடன் போலீஸ் - சினிமா விமர்சனம்

 

 


http://www.adrasaka.com/2014/11/blog-post_76.html

 

0 comments: