Saturday, November 15, 2014

சென்னை ஐ.ஐ.டி. மாணவ மாணவியர்கள் 'அன்பு முத்தம்' போராட்டம் ஒரு கலாச்சார சீர்கேடா?

கலாச்சார காவலர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போபால் மாணவர்கள். | கோப்புப்படம்: ஏ.எம்.ஃபரூக்கி .
கலாச்சார காவலர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போபால் மாணவர்கள். | கோப்புப்படம்: ஏ.எம்.ஃபரூக்கி . 
 
 

புரட்சி என்ற பெயரில் வக்கிரங்களை வளர்க்காதீர்: சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் ‘அன்பு முத்தம்’ போராட்டத்திற்கு ராமதாஸ் கண்டனம்

 
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 'அன்பு முத்தம்' போராட்டம் நடத்தி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். 



அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.
பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது. சுதந்திரம் எது?, பாதுகாப்பு எது? என்பதை அறியாமலேயே ‘சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்திய மாணவ, மாணவியரின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டியில் நடத்தப்பட்ட இப்படிப்பட்ட போராட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகமும், காவல்துறையும் எப்படி அனுமதித்தன? என்பது தெரியவில்லை. கலாச்சாரத்தை சீரழிக்கும் இது போன்ற போராட்டங்களும், அதற்கு துணை போகும் வகையிலான அரச அமைப்புகளின் செயல்பாடுகளும் கண்டிக்கத் தக்கவை.
கேரளத்தில் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். அதே நேரத்தில் இத்தகைய கலாச்சார சீரழிவுகளை சரி என்று கூறி நியாயப்படுத்துவதோ, இதைக் கண்டிப்பதை தவறு என்று விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது.
பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை குற்றமென சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக அன்பு முத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும்.
ஆபாச செயல் என்பதற்கான வரையறை இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததே தவிர, பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. ஒருவேளை சட்டப்படி இது சரியாக இருந்தால் கூட கலாச்சாரப்படி தவறான இச்செயல்களை அனுமதிக்கக்கூடாது.
பொது இடங்களில் குப்பை போடுவது குற்றம்; பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று சட்டமும், சான்றோர்களும் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் செயலை’ எவ்வகையில் அனுமதிக்க முடியும் என்று தெரியவில்லை.
சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து அறியாமல் இதைச் செய்திருக்கலாம். இதைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அது நினைத்துப்பார்க்கவே முடியாத மோசமான கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்திவிடும்.
சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இத்தகைய செயல்களை சமூகவிரோதிகள் தங்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக தவறாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
அப்படி நடந்தால் பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடவே முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என்பதை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சொல்வதால் என்னை கலாச்சாரக் காவலர் என்றோ, பிற்போக்குவாதி என்றோ சில போலி புரட்சியாளர்கள் விமர்சிக்கக் கூடும். சமூக நலனுக்காக எத்தனையோ விமர்சனங்களைத் தாங்கிக் கொண்ட நான் இதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை. அடிப்படையில் தமிழ் சமுதாயம் பெண்மையை போற்றும் தன்மை கொண்டதாகும். ‘பெண்மை போற்றுதும்’ என்று கவிதைகளில் முழங்கிய மகாகவி பாரதியார் பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ முற்போக்கு கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பெண்களை உலகின் மகா சக்தி என்று வர்ணித்த பாரதியார், கல்வி, கலை, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என ஒருபோதும் அறிவுறுத்தவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக 14 வயதிலேயே அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மை, ஆயுதமேந்தி போராடிய ராணி வேலுநாச்சியார், விண்வெளியில் ஆய்வு செய்த கல்பனா சாவ்லா போன்று சாகசங்களைச் செய்வதில் தான் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதலுக்கு இரையாகி தவறான வழியில் சென்று விடக்கூடாது.
எனவே, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான எந்த செயலிலும் இளைய தலைமுறையினர் ஈடுபடக்கூடாது; அத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

thanx - the  hindu 


readers view


  • baka  
    kalacharam mukkiyam
    Points
    155
    31 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
  • கோட்டாறு. ஷிபான்  
    ஆமா அந்த பெண்ணுரிமை பேரியக்கங்கள் எல்லாம் எங்கய்யா போனீங்க? இதை எதிர்க்க உங்களுக்கு தோன்றவில்லை என்றால் வேறெதற்கும் வாய் திறக்க உங்களுக்கு அருகதை இல்லை. அல்லது இதை நீங்கள் பெண்ணின சுதந்திரம் என கூறுவீர்கள் என்றால், நாங்கள் கண்ணியத்தையும் கலாச்சாரத்தையும் குழி தோண்டி புதைபவர்கள் என்று பொது அறிக்கை ஒன்று விட்டுவிடுங்கள்.
    Points
    210
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ஷான் ஷான்  
    ஏன் மற்ற தலிவர்கள் அறிக்கை விடல ?ஒருவேளை முத்தங்களை ஒத்துக்கறாங்க போல் இருக்கு
    Points
    45235
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Bhai  
    இன்று கல்லூரியில் நடந்தது நாளை பள்ளிகளில் நடக்காது என்று என்ன நிச்சயம். இதை ஆரம்பத்திலேய தடை செய்ய வேண்டும். பாரத தேசம் கலாச்சாரத்தின் தேசம் என்பது இம்மாதிரி செயல்களால் கேலிக்குரியது ஆகிவிடும்.
    about 2 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
  • சங்கரநாராயணன்  
    சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை, வரைமுறை இருக்கின்றது. அதனை நியாயப்படுத்துபவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்த பிறகே அதன் அர்தத்தை புரிந்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்த பிற வழிகளை பின்பற்றலாம், இது போன்ற செயல்கள் அந்த அன்பை இழிவுப் படுத்துதல் ஆகும்.
    about 2 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • thevi  
    புதிதாக `அன்பு முத்தம்` என்ற கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் துளிர் விட்டு வளர ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கும் செயலாகும். அவர்களின் செய்கைக்கு தூண்டுதலாய் அமைந்த சம்பவங்கள் எவை எவை என ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாமே அரசியல் தான். ராமதாஸ் போன்ற பிற்போக்கு அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தாலே போதும்; கலாச்சாரம் காப்பாற்றப்படும்.
    Points
    100
    about 2 hours ago ·   (2) ·   (4) ·  reply (0) · 
    thevi  Up Voted
  • ramu  
    தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஹோலிபண்டிகை என்று கூத்து காட்டுமிராண்டி கூட பரவாயில்லை வரு போவோர் மேலெல்லாம் சாய பூச்சு அடுத்த்தது காதலர் தினம் தமிழ் நாட்டில் உள்ள பண்பலை ( பண்பு இல்லா) வானொலிகள் அன்று அடிக்கும் கூத்து அமெரிக்கர்கள் தீபாவளியோ பொங்கலோ கொண்டாடுகிறார்களா தினமும் ஒரு பன்பலையில் " காதல் காதல் " நிகழ்ச்சி ஆண்களும் பெண்களும் நேர்காணல் இவர்கள் எல்லாம் தமிழ் பண்பாட்டை வளர்க்கிறார்களாம் இதை பற்றி ராம்தொஸ் ஒன்றும் பேசமாட்டார் ஏன் என்றால் திரும்பவும் அரசியில் கூட்டணி வேண்டும் அல்லவா ? இந்த ஆண்களும் பெண்களும் உண்மையில் காதலர்களா அல்லது சும்மா பேச பேண்டும் என்பதற்காகா கப்சா வா ஆண்டவனுக்கு தான் வெளிச்சாம் இதில் மருத்துவர்கள் ஆலோசனை வேறு
    Points
    625
    about 2 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
    humanbeing  Up Voted
  • aaju  
    சத்யமான வார்த்தைகள்,
    about 2 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • அபுபக்கர்  
    இது போன்ற அன்பு பரிமாற்றத்தை அவர்கள் தன் தாய்,தந்தை,சகோதரி இடம் பரிமாறுவார்களா........? இல்லையே அவர்களிடம் அவர்கள் காட்டும் அன்பு பொய்யா......!?
    about 3 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
  • karthik  
    சபாஷ் டாக்டர்...நீங்க ஜட்த்ய விட்டு வெள்ளில வந்த நல்ல வருவீங்க...வருவீங்களா..?
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • sundar  
    வாழ்க்கையில் முதன் முறையாக ராமதாஸ் அவர்களை மரியாதையுடன் , பாராட்டும் விதமாக ஒரு நல்ல கருத்தைக் கூறியுள்ளார். கோழிக்கோட்டில் நடந்த சம்பவத்தை , சிறுபான்மையினர் செய்திருந்தால் , இந்த முத்தப் போராட்டம் வந்திருக்குமா.?
    Points
    475
    about 3 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Su Agathiyalingam Journalist at Chennai, Tamil Nadu 
    சரியா தவறா என்பதைவிட இது ஒரு எதிர்வினை என்பதை ராமதாஸ் போன்றவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது ? அவர்களைப் போன்றவர்களும் இந்துத்துவ வெறியர்களும் கலாச்சாராப் போலிஸாய் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டு காதலுக்கு எதிராய் கொலைவாளைத் தூக்கும் போது நிச்சயம் இளைய சமுதாயம் ஏற்காது . எதிர்க்கும் . எதிர்வினை ஆற்றும் . எதிர்வினை மோசமாக இருக்கிறதெனில் அதற்கான வினையை விதத்தவர்கள் இவர்களன்றோ !
    Points
    125
    about 3 hours ago ·   (13) ·   (5) ·  reply (0) · 
    humanbeing · anbu · anbu  Up Voted
  • stanislas Perianayagam at Government 
    கலாச்சார வேடதாரிகள் முதலில் தங்களின் பாதையை மறு பரிசீலனை செய்தால் முத்தப் போராட்டத்தையும் புரிய வைக்கலாம்.இங்கு யாருக்குமே அன்பு என்பதும்,மனிதம் என்பதும் தெரிவதில்லை. ஊருக்கு உபதேசம் செய்வதும்,அறிக்கை விடுவதும் மட்டும் மிக நன்றாகவே தெரிகிறது.வெறும் வார்த்தைகளும்,நீலிக் கண்ணீரும் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேடித் தராது.
    Points
    4605
    about 3 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
    humanbeing  Up Voted
  • சரா  
    இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும். ஆமா வயிற்றெரிச்சல் ஐ உருவாக்குரங்க பா அய்யாவுக்கு பாவம் அவரும் மனிதர் thaanE
    Points
    375
    about 3 hours ago ·   (2) ·   (5) ·  reply (0) · 
  • valarmathi asaithambi  
    இன்டர்நெட் வந்தபிறகு மறைக்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் விரல் நுனியில் வந்து விட்டது. இதனால் இலைமறை காய் போல் இருந்த வக்கிர உணர்வுகள் வெடித்து சிதறி ஆட்டம் போட ஆரம்பித்து விட்டன .. இதுவரை ஒழுக்க நெறிகள் என்று பேணப்பட்டு வந்தவை எல்லாம் புஸ வானம் ஆகிவிட்டது. என்ன செய்வது....ஒழுக்கத்தை சட்டம் போட்டோ, சங்கம் அமைத்தோ வளர்க்க முடியாது. ஒவ்வொரு தனி நபரும் மனக்கட்டுப்பாட்டுடன் பேண வேண்டிய வாழ்க்கை முறை அது. அன்பு முத்தம் கொடுத்தவர்கள் இதை நமது பெற்றோர் பார்க்க நேரிடுமே என்று கொஞ்சம் கூட பயப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெற்றோருக்கு மரியாதை கொடுக்காதவர்களின் அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதில்லை. அன்பு முத்தத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி லிப் டு லிப் முத்தம்தான். என்ன செய்வது...கலாசார சீரழிவு காலத்தின் கட்டாயம்.
    about 4 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Selva Kumar N C Project Associate at IIT Madras 
    ஐயா இளவரசன் திவ்யா விஷயத்தில் என்ன செய்தார் என்று பார்க்க வேண்டும். ஐயா தமிழ் கலாச்சாரம் அப்படின என்ன சொல்லுங்க ஐயா. தமிழர்கள் வரலாறு பத்தி விரிவா சொல்லுங்க. பெண்களை மதிப்பதாக இருந்தால் அவர்கள் எவ்வாறு மதிக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும் என்ற என்னணம் இருந்தால் அவ்வாறு செய்தாலும் மதிக்கணும். இப்போ நிறைய தவறு செய்த தலைவர்களை என்ன மதிக்காமல இருக்கிறோம். அதில் என்ன பாகுபாடு. நம் தலைவர்கள் அனைவரும் மிக நல்லவர்களா ? நாம் எப்போதும் மதிப்பதற்கு சற்று நினைத்து பார்க்க வேண்டும். கலாச்சாரம் என்பது வெறும் பாலியல் கட்டு பாடல்ல, அரக்கட்டுபாடும் தான், மானுட பண்பும் தான். ஊழல் இருத்தல் கூடாது, சாதி வேறுபாடு இருக்க கூடாது. உங்களை யாரும் இதை கட்டாயமாக கடை புடிக்க சொல்ல வில்லை. நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் சொல்ல வில்லை. உங்கள் பொருளையோ உங்கள் உரிமையோ அவர்கள் எடுக்க வில்லை. இந்திய சட்டப்படி ஒரு கணவன் வற்புறுத்தி உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு இல்லை என்று சொல்கிறது, ஆனால் வெளிநாட்டிலோ அதுவும் கற்பழிப்பு என்று சொல்கிறது, நாம் பெண்ணை மதிக்கிறோம இல்லை அவர்களா ?
    Points
    540
    about 4 hours ago ·   (11) ·   (5) ·  reply (0) · 
    Selva-Kumar N C  Up Voted
  • P.KARMEGAPANDI  
    ஐயா, ஐஐஐடியில் இவர்கள் படிக்க வந்தார்களா என்று சந்தேகமாக இருக்கின்றது. நமது கலாச்சாரத்தை குழிதோண்டி புதய்ப்பதற்க்காகவே இவர்கள் பிறந்திருக்கிறார்கள்.. ப. கார்மேகபாண்டி, தூத்துக்குடி-7.
    about 4 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • thudupathichinnaiyan  
    அனைத்து ஜாதிகாரகளும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை தான் வளர்த்து கொண்டு வருகிறார்கள் .. ஆகவே அவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் முக்கிய நாட்களில் முசுலீம் பெருமக்கள் தொழுகை முடிந்தவுடன் 'அன்பு தழுவல்' செய்வது போல் செய்து நல்ல நட்பு உறவை வளர்க்க முயற்சி செய்தால் என்ன..?அந்த இயக்கத்திற்கு திரு ராமதாஸ் அய்யா அவர்களையே தலைவராக போட வேண்டும்
    Points
    445
    about 4 hours ago ·   (13) ·   (8) ·  reply (0) · 
  • P.Padmanabhan  
    "{சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 'அன்பு முத்தம்' போராட்டம் நடத்தி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்."- நானும் அதை ஆதரிக்கிறேன்
    Points
    16815
    about 4 hours ago ·   (4) ·   (2) ·  reply (0) · 
    Mannan-Mannen  Up Voted
  • prathap  
    பிராணிகளை நேசிக்க சொன்னா, பிராணிகளாவே மாறிட்டாங்கோ!!! ( wild animals)
    Points
    615
    about 4 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
    Mannan-Mannen  Up Voted
  • abraham joseph  
    தமிழ்நாட்டில் தமிழக கலாட்சரதுக்கு எதிராக நடைப்பெற்ற இந்த வெட்ககேடான செயலுக்கு வருந்துகிறேன்.
    about 5 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
    Mannan-Mannen  Up Voted
  • Pandy Velayutham at Pensioner 
    மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக பரவுதலின் விளைவு. இது இத்துடன் முடிந்து விடுமா அல்லது அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லுமா அப்படிச் செல்லும் பட்சத்தில் அதன் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
    Points
    2085
    about 5 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • Jahir  
    எந்த ஒரு செயலையும் எதிர்க்காமல் விட்டுவிட்டால் தானாகவே அது மறைந்து விடும். மாணவர்கள் மீது சில வன்முறை, அடக்குமுறை என்றால் அதை அந்த மாணவ சமூகம் ஏற்காது. கருத்துச் சொல்பவர்கள் மாணவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் இவர்களும் மாணவர்கள் தான். இப்படி அறிக்கை கொடுப்பது, இந்த மாணவர்களின் செயலை பத்திரிகைகளில் போடுவது போன்ற மீடியாக்கள் தான் காரணம். இது இனி மெல்ல மாவட்டம் தோறும் பரவப் போகிறது. தயவு செய்து மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.
    about 5 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • Darwin  
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதன் பின்விளைவை இந்த இளைய சமூகம் சந்திக்க நேரிடும். சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டு. திருவிவிலியத்தில் சாலமன் அரசன் சொல்லியுள்ள வார்த்தைகளை வாலிபர்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்.///வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி/// வாலிபவயது முந்தையதை செய்ய துடிக்கும். அதை ஞானி தடை செய்யவில்லை. ஆனால் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார். இந்த எச்சரிப்பை இளைஞர்கள் ஏற்றுகொள்வது நல்லது.
    Points
    20365
    about 5 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • lakshman  
    சகோதரர் சகோதரிகளே நம்முடைய கலாச்சாரத்தை நாமே குழி தோண்டி புதைக்க வேண்டாம் ,உங்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம் பித்தது என்றால் இந்தியாவில் நீங்க இருக்க வேண்டாம் .
    about 5 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
    Darwin · Mannan-Mannen  Up Voted
  • bala  
    At last Ramadoss given a good ,correct statement useful to the society. It is the turn that parents should also object before leading to ...
    about 5 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    Darwin  Up Voted
  • sukivendhan  
    sirappana arikkai mattrum mika mukkiyamanathu
    about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
    sukivendhan  Up Voted
  • V.Thiyagu  
    correct statement
    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • [email protected]  
    காதலர் தினத்தன்று சில காட்டுமிராண்டிகள் அடித்து உதைத்து சில கட்டாய தாலி கட்டி வைத்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் வந்த எதிர் vilaivu
    about 5 hours ago ·   (17) ·   (22) ·  reply (1) · 
    THAMILAN · JV-NATHAN · Mannan-Mannen  Down Voted
    • பாலா  
      கேவலம் இக்காலத்துக் கள்ளக் காதலுக்கு ஒரு தினம்! அதுக்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பல். இன்றைய காலத்தின் 90% ஆனா காதல்களுக்கு கழுகு படத்தில் வருக "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் ...." என்ற பாடல் தான் பொருத்தமாக இருக்கும்.
      about 5 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
      Mannan-Mannen  Up Voted
  • பாலா  
    உண்மையில் சென்னை IIT இல் இது நடந்திருந்தால் மிக மிக கவலையான சம்பவம். இது தொடர்ந்தால் மலையாள மாணவர்கள் விஷ ஜந்துக்களாக பார்க்கப்படலாம்.

0 comments: