Sunday, November 30, 2014

திகார் - பேரரசு உடன் எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி

திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன்
திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன் 
பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள். 



இவ்விழாவில் 'பவர் ஸ்டார்' சீனிவாசனை பேச அழைப்பதற்கு, "இங்கு வந்துள்ளவர்களில், ஒருவருக்கு மட்டுமே திகாரைப் பற்றி தெரியும். பெயரிலே பவரை வைத்திருக்கும் பவர் ஸ்டாரை அழைக்கிறேன்" என்று கூறினார் பேரரசு. 



அதனைத் தொடர்ந்து 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேசியது: 



"பேரரசு போன் செய்து இசை வெளியீட்டு விழாவிற்கு வரணும்னு கேட்டார். நான் என்ன படம் என்று கேட்டேன். 'திகார்' என்றார். என்னது திகாரா? மறுபடியும் டெல்லி போலீஸ் வந்திருச்சோ என்று பார்த்தேன். உண்மையில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் என்று நினைக்கிறேன். 


நிறைய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவிட்டேன். தம்பி பேரரசு இயக்கத்தில் நடித்தபோதும் சந்தோஷமாக இருந்தது. ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் சொல்லுவார், நானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துவிட்டேன். 2, 3 நாள் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 



நான் இந்த நிகழ்ச்சிக்கு வரணுமா, வேண்டமா என்று யோசித்தேன். வந்தால் கிண்டல் செய்வார்களோ என்று பயந்தேன். போவோம், எல்லாத்தையும் பார்த்துவிட்டோம்... இதையும் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். 



ரமேஷ் கண்ணா, வெங்கடேஷ் இருவரும் டெல்லி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாதுங்க. திடீரென்று இரவு 12 மணிக்கு தமிழ்நாட்டில் இருந்து "சார்.. உங்களை டெல்லிக்கு கூட்டிட்டு போறோம்" என்றார்கள். எதுக்கு என்று கேட்டேன். விசாரணை என்றவுடன் முன்னாடியே சொல்லக்கூடாதா கொஞ்சம் பணம் ஏதாவது எடுத்துட்டு வருவேன்ல என்றேன். எதுக்கு டெல்லி, கூட்டிட்டு போய் தூக்கு போட்டுருவாங்களோ என்று யோசித்தேன். 



என்ன தான் வருது என்று பார்த்துவிடுவோம் என்று கிளம்பினேன். வேலூரில் இருந்தே ஏற்றினார்கள். என்னங்க சென்னைக்கு போகலயா என்று கேட்டேன். இல்லை சென்னைக்கு சென்றால், உங்களது ரசிகர்கள் உங்களை பிடித்துவிடுவார்கள் என்றார்கள். சரி பரவாயில்லை என்றேன். அதிகாலை 2 மணிக்கு எழுப்பி, 3 மணிக்கு குளித்து கிளம்பி கூட்டிட்டு போனார்கள். 



என்னை நம்பிக்கை துரோகம் செய்தார்கள். வேண்டுமென்றே நான் செய்யவில்லை. என் உடன் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். கோடிக்கணக்கான பணங்களை இழந்து, நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால், அது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்லுவேன். உண்மை என்று ஜெயிக்கும் என்பார்கள். அதனால் தான் உங்கள் முன் நிற்கிறேன். 



உண்மையில் சொல்கிறேன், திகார் ஜெயில் ரொம்ப நல்ல ஜெயில். இரவு 8 மணிக்கு கொண்டுப் போய் விட்டார்கள். மொழி தெரியாது, புது இடம் என்று பயந்தேன். ஒரு ரூம்மில் படுக்கச் சொன்னார்கள். படுத்திருந்தேன். பக்கத்தில் இருவர் படுத்திருந்தார்கள். அவர்கள் யார் என்றே தெரியாது. காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு தான் நன்றி சொன்னேன். ஏனென்றால், திகாரில் ஜெயிலில் இருந்த 1500 தமிழ் போலீஸும் என்னுடைய ரசிகர்கள். 



என்னை பார்த்தவுடன், "என்ன பவர்.. இங்க வந்துட்டா. ஷுட்டிங்கா " என்றார்கள். ஆமா என்று பொய் சொல்லக்கூடாது ஏனென்றால் ரொம்ப நாள் இருக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும். குறைந்தது 20 நாளாவது இருக்கணும், அப்படின்னா தான் பெயில் கிடைக்கும். ஷுட்டிங் எல்லாம் இல்லை. அப்படியே வந்தேன் என்று தெரிவித்தேன். பரவாயில்லை பவர். அதனால ஒண்ணுமில்லை. இதப் பார்த்து நீங்க படம் எடுக்கணும் என்றார்கள். கண்டிப்பாக எடுக்கிறேன் என்று தெரிவித்தவுடன், உங்களுடன் இரவு படுத்திருந்தார்கள் அல்லவா யாரென்று தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். ரேப் கேஸில் வந்தவர்கள் என்றவுடன், நம்மளை ரேப் பண்ணாமல் விட்டார்களே சாமி என்று எண்ணினேன். 



அங்கு எனக்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்தார். என்ன பவர் இங்கு இருக்கீங்க என்று கூட்டிட்டு அவருடைய இடத்திற்கு சென்றார். அடுத்த நாள் இன்னொரு இடத்திற்கு கூட்டிட்டு போனார். அங்கு இருந்தது எல்லாம் பெரிய பெரிய முதலைகள், போனவுடன் என்ன பண்ணிட்டு வந்தீங்க என்று கேட்டார்கள். சின்ன மேட்டர் தான் என்றவுடம், நான் எவ்வளவு தெரியுமா 2000 கோடி என்றார்கள். நான் கடப்பாரை நீ குண்டு ஊசி என்றார்கள். 


ஒவ்வொரு இடத்திற்கு சொல்லும் போது, வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது. திகார் அனுபவங்கள் எல்லாம் வேண்டாம், ஆனால் நான் பார்த்துவிட்டேன். திகார் பார்த்தவுடன் நிறைய விஷயங்கள் இருக்குமோ என்று பார்த்தால், ஒண்ணுமே இல்லை. ஆனால் இந்த 'திகார்' படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. 



இந்தியாவில் எங்கு சென்றாலும் இனிமே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் எங்கேயும் போக மாட்டேன், திரையுலகில் தான் நிரந்தரமாக இருப்பேன். என்னுடன் இருந்த நண்பர்கள், உள்ளிட்ட அனைவரையும் துரத்திவிட்டேன். என்னுடைய ரசிகர்கள் தான் என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய ரசிகன் ஒருவன், "தலைவா.. நீ உள்ளே போனால், உனக்காக உயிரைக் கொடுப்பேன்" என்றார்கள். ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்கவில்லை. நான் இதெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அனுபவத்தில் கற்றுக்கொண்டதால் சொல்லுகிறேன். 'திகார்' வெற்றியடைய வாழ்த்துகள்" என்று சீனிவாசன் பேசினார். 



நன்றி  - த இந்து

Saturday, November 29, 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

 

 பொறாமை தான்  மனிதனின் ஆதார  கெட்ட  குணம். ஆதி காலத்தில்  இருந்தே ( விஜய் யின் ஆதி அல்ல ) மனிதனிடம்  பொறாமை  உணர்வு  தலைதூக்கி  பல  போர்களை காண வைத்திருக்கிறது.அப்படிப்பட்ட  பொறாமை  குணம் இருவர் வாழ்வில்  ஏற்படுத்தும்   மாற்றங்கள் ,பாதிப்புகள் தான்  கதை .

கே  பி  சுந்தராம்பாள் - கிட்டப்பா  வின்  காதல்  கதை தான்  இது  என  பலரும்  சொல்லி வருகின்றனர், 

ஆல்பம் , வெயில் , அங்காடித்தெரு , அரவாண்  என  தனக்கென  தனி  முத்திரை  படைத்த  இயக்குநர்  வசந்த பாலன் -ன் கலைப்பூர்வமான  கமர்ஷியல் படம்  தான்  இது. 



ஒரு நாடகக்குழு. அதன்  தலைவர்    நாசர்.   சித்தார்த் , பிருத்வி  இருவரையும்   சின்ன வயசில்  இருந்தே  வளர்த்து  வர்றார்,நாடகத்தில்   எப்போதும்  சித்தார்த்துக்கே  முதல் இடம். அசால்ட்டா பாராட்டு  பெற்று விடுகிறார். நல்ல  நடிப்புத்திறமை  இருந்தும்  பிருத்விராஜ்க்கு அங்கீகாரம்  கிடைக்கலை.குஷ்பூ  எண்ட்ரி ஆனதும் இளங்கோவன்க்கு காங்கிரஸ் ல  கிரேஸ்  குறைஞ்ச  மாதிரி   பிருத்விக்கு  மவுசு  இல்லை.


அந்த ஊர்  ஜமீன் ராணிக்கும்   சித்தார்த்துக்கும்  லவ்.இதை   நாசர்  கிட்டே  போட்டுத்தந்து  பிரச்னை கிளப்பறார்  பிருத்வி. இந்த  களேபரத்துல  அந்த   ராணி  தற்கொலை  பண்ணிக்குது. குற்ற  உணர்ச்சியில் நாசரும்  அவுட்,

 இப்போ  நாடக ட்ரூப்   பிருத்வி  கையில் . சித்தார்த்   தேவதாஸ்  மாதிரி ஆகிடறார்.


இருவர்  வாழ்க்கையும்   என்ன ஆச்சு? என்பது  மிச்ச  மீதிக்கதை

ஹீரோவாக  சித்தார்த்  கலக்கலான நடிப்பு . இவரது நடிப்பில் நாளுக்கு நாள்  மெருகேறி வருது . இவரது  ஒல்லியான  உடல் அமைப்பு  முன் பாதியில்   கை  கொடுத்தாலும்  பின்  பாதியில்  பகத் சிங்காக  வருகையில்  , இன்ன  பிற காட்சிகளில்   எடுபடவில்லை. ஆனாலும்  திரைக்கதை  பலமாக  இருப்பதால்  பெரிய அளவில்  குறை  தெரியவில்லை . புது நாயகியுடனான   ரொமான்ஸ் காட்சியில்  ”ஸ்ருதி” தப்பாத  முத்த நயம்.நாசரிடம்  கொந்தளிக்கும் காட்சியில்  அப்ளாஸ் அள்ளுகிறார்,


வில்லனாக / 2வ்து நாயகனாக  பிருத்வி . தமிழ்  சினிமா அதிகம் பயன் படுத்தத்தவறிய ஒரு நல்ல நாயகன் . அட்டகாசமான  நடிப்பு . இவரது  வசன  உச்சரிப்பு  பெரிய  பலம் .


ஜமீன்  ராணியாக  வரும் (தமிழுக்கு) புதுமுகம் Anaika Soti (mumbai)கொள்ளை அழகு. பஞ்சு  மிட்டாய்  மாதிரி  ரோஸ்  கலர்  உதடு ( அது ஏன்  பஞ்சு  மிட்டாய்  ரோஸ் கலர்ல மட்டும்  வருது?அதை  முதன்  முதல் ல  கண்டு  பிடிச்சது  ரோஸ்மேரியா   இருக்குமோ? )


வேதிகா  தான்    2 வது நாயகி . இவருக்கு   மேக்கப்  ஓவர் . இன்னும்   கம்மி  பண்ணி  இருக்கலாம். ஆனால்  நடிப்பில்  குறை  இல்லை  ( பொண்ணுங்களை நாம  என்னைக்கு  குறை  சொல்லி  இருக்கோம் ?


நாசர்  , தம்பி   ராமைய்யா,மன்சூர் அலிகான் இன்ன பிற   நடிகர்களின்   குணச்சித்திர நடிப்பு   அருமை
ஒளிப்பதிவு  , இசை  , எடிட்டிங்   எல்லாம்  தரமோ  தரம்.



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  அவபேரு எனக்குத் தெரியாது, ஆனா அவள நான் ராசாத்தின்னுதான் கூப்புடுவேன்"


"ஏன்"


 "நான் ராசாமாதரி இருப்பனா, அவ தீ மாதி ரி இருப்பாளா-அதான் ராசாத்தி"


2   அப்ப மதுரை ஜில்லாவுலயே நாந்தான்யா பேர் போன பாகவதரு"


 "அப்பவே பேரு போச்சா" ;-)


3  கூத்தாடியை   கூத்து  மேடையிலேயே  கவுரவிக்கனும்.அதுதான்  சாஸ்திரம் # கா த 


4  வெற்றி என்பது எனக்கொரு கொண்டாட்டமே அல்ல; அது என் அன்றாட வாழ்க்கை! - சூரபத்மன் ! #கா.த


5 சின்ன  நடிகனோ , பெரிய நடிகனோ  தினமும் ஒத்திகைக்கு  வரனும்.அதுதான்  நல்ல நடிகனுக்கு அழகு @ கா த 



6 மகாராணியா இருக்குறது வாழ்க்கை இல்லை, மனசுக்குப் புடிச்சவன்கூட இருக்குறதுதான் வாழ்க்கை !


7  குரு தான்  சாபம்  இடனுமா? நான்  குருவுக்கே  சாபம்  இடறேன் # கா த 



8  பெண் சாபமும்  , குரு சாபமும்  என் வாழ்க்கையை  சுத்தி  சிதறடிச்சிடுச்சு # கா த 


9 காசுன்னு  சொன்னதும்   பொண்ணுங்க  உன்  பின்னால  ஓடி  வந்துடுவாங்கனு  நினைச்சுடாத #  கா த


10 எந்தத்தகுதியும்  இல்லாத நீ  ஜெயிச்சுக்கிட்டே இருப்பே!  எல்லாத்தகுதியும்  இருந்தும்  நான்   தோத்துகிட்டே   இருக்கனுமா? #  கா த






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  டைட்டில்   டிசைன்  . அந்தக்கால  பட ஸ்டைலில். இளைய தலைமுறைக்கு  புதிய  அனுபவம் # கா த






2  வாங்க  மக்கா  வாங்க , எங்க  நாடகம் பார்க்க  வாங்க -ஓப்பனிங் சாங் .ஏ ஆர் ஆர்  ராக்ஸ்.இளையராஜாவால் தான்  இது  போல் இசை அமைக்க  முடியும்




3  ஆர்ட்   டைரக்டர்  ,  காஸ்ட்யூம்  டிசைனர்  , ஒப்பனைக்கலைஞர் என   எல்லா   டெக்னீஷியன்களுக்கும்  செம  தீனி  # கா த

4  மிக  எளிமையான  ஒப்பனைக்குப்பதில் அனைவருக்கும்  மிக் அதீதமான  ஒப்பனையில்  இயக்குநர்  லேசாக  சறுக்கி விட்டார் @ கா த்




5 மலையாளப்படமான  நடன்  படத்தின் சாயலில்  திரைக்கதை  பயணிக்குதே. ம் ம் .


6  இருவர்  படத்தில்  வரும்  தீம்  மியூசிக்  அங்கங்க  வருது


7    ஏய்  மிஸ்டர்  என்னை என்ன  பார்க்கறே   பாட்டு   அப்பட்டமான   உல்டா ஆஃப்  இருவர் பட பாட்டான   ஹலோ மிஸ்டர்  எதிர்க்கட்சி  # கா த 


8 மெலோடி  இசை  வர வேண்டிய  இடங்கள் பலவற்றில்  ரஹ்மான் தன்னையும்  அறியாமல்  தன்  பாணி  மேற்கத்திய இசையைப்புகுத்தியது  பலமா? பலவீனமா?


9   பாடலின்  இடை இடையே அபாரமான  சிறப்புச்சத்தம் சேர்ப்பதில்  விற்பன்னரான  ரஹ்மான்  வசனக்காட்சிகளில்   பின்னணி  இசை  அமைப்பதில்   இளையராஜா   போல கலக்க  முடியவில்லை


10  சித்தார்த்தின்   கமல்  டைப்  நடிப்பை   தூக்கி  சாப்பிடுது  - பிருத்விராஜ்-ன்  ரஜினி  டைப்  வில்லன்  நடிப்பு


11  டெக்னிக்கல் அம்சங்களை  நம்பி  , திரைக்கதையில்  கே  பி  சுந்தராம்பாள்  உண்மைக்கதையுடன்  சுவராஸ்யமாய்  இது வரை. இடைவேளை


Anaika Soti








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  சித்தார்த்  , பிருத்விராஜ்  இருவ்ருக்கும்  பிரமாதமான  ரோல் கொடுத்து  இருவரிடம் இருந்தும்  அபாரமான  நடிப்பை  வர வைத்த  இயக்கம் 


2  ஏ ஆர்  ரஹ்மான் -ன்  கலக்கலான  இசை . 3 பாட்டு  சூப்பர்  ஹிட் . சர்வதேச மார்க்கெட்டிங்க்கு உதவும் 



3  வழக்கமான  காதல்  கதையை  நாடகக்கலைஞர்களின்  பின்னணியில்   சொன்ன விதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1    யார்   போனாலும்   , ஆடியன்ஸ் வர்லைன்னாலும் நான் நாடகம்  நடத்துவேன்  என   பிருத்வி  சொல்வது   புன்னகை  மன்னன் படத்தில்  வரும் கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பாட்டு  லீடு  சீனை  நினைவு படுத்துது. 


2   படத்தின்  ஜீவ நாடியான  ஜமீன்  ராணி  தற்கொலை காட்சி  நாசூக்காக  சொல்லப்படுகிறது. இன்னும்    விஸ்தீரணமாக   காட்டி இருக்கனும் . ஆடியன்ஸ்  மனசில்  அது  பதியவே  இல்லை 


3   சித்தார்த்  கோபமாக  போலீஸ் ஆஃபீசரிடம்  சவால்  விடும்  காட்சியில்  இடது  கையில்  சொடக்குப்போடுவது   செயற்கை. அவர்  இடது கைபழக்கம்  உள்ளவர்  அல்லவே?


4   படத்தின்  ஆரம்பக்காட்சிகள்   மலையாளப்படமான  நடன்  காட்சி அமைப்பை  நினைவுபடுத்துது


5  மணிரத்னம்  இயக்கிய  இருவர்  படத்தின்  சாயல் ஆங்காங்கே  வருவது , சூர்யா  ரகுவரன் நடித்த  படத்தின்  சாயல்   என  சில  அது  போல  சாயல்




சி  பி  கமெண்ட் - காவியத்தலைவன் - அபாரமான நடிப்பு , நல்ல  இசைக்காக பார்க்கத்தூண்டும் கலைப்பூர்வமான  கமர்ஷியல் படம் - விகடன்  மார்க் = 46 . ரேட்டிங்= 3.25/5.முன் பாதி  நல்ல திரைக்கதை , பின் பாதியில்  தடுமாற்றம்.ஏ செண்ட்ட்டரில் மட்டும்  நல்லா போகும் .விமர்சகர்கள் , மீடியாக்கள் பாராட்டைப்பெறும்,ஆனால் வசூலில்  சுமாராய்த்தான் கல்லா கட்டும்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங் -  3.25 / 5


Friday, November 28, 2014

காவியத் தலைவன் - எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்இயக்குநர் வசந்தபாலன்

எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் வசந்தபாலன்


  • 'காவியத்தலைவன்' படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் நடிகர் சித்தார்த்
    'காவியத்தலைவன்' படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் நடிகர் சித்தார்த்
‘காவியத்தலைவன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளதால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். படத்தை விளம்பரப்படுத்துவதற்கான முயற்சிகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்து பேசினோம். 



12 வருடங்களில் நீங்கள் 5 படங்கள்தான் இயக்கியிருக்கிறீர்கள். இப்படி குறைவாக படங்களை இயக்கியதற்கு என்ன காரணம்? 

 
வெளிப்படையாகச் சொன்னால் சோம்பேறித்தனம்தான். ‘காவியத் தலைவன்’ படம் மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் என்னுடைய அடுத்த படத்துக்கான கதையைக் கூட எழுத ஆரம்பிக்கவில்லை. இதற்கு என் சோம்பேறித்தனம்தான் காரணம். 


உங்களின் அடுத்த படம் குறித்து திட்டமிட்டுவிட்டீர்களா? 


இதுவரையிலும் செய்யாத ஒரு புதுமையான கதையை இயக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எந்தத் திட்டத்தையும் போடவில்லை. 


உங்கள் முதல் படம் ‘ஆல்பம்’ பெரிய அளவில் பேசப்படவில்லை. அந்தப் படம் வெளிவந்த பிறகு உங்களின் அடுத்த படமான ‘வெயில்’ வெளிவர 4 ஆண்டுகள் ஆனது. ‘ஆல்பம்’ படம் உங்களுக்கு கற்றுத் தந்தது என்ன? 

 
முதன்முதலாக சைக்கிள் ஓட்டும்போது நாம் கீழே விழுவோம். பிறகு எழுந்து நின்று சரியாக ஓட்டுவோம். அந்த வகையில் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டபோது விழுந்த படம்தான் ‘ஆல்பம்’. அப்படி விழுந்ததில் நிறைய கற்றுக்கொண்டேன். 



உங்கள் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் பெரிய அளவில் சாதிப்பதில்லையே. இதற்கு என்ன காரணம்? 


 
நான் இயக்கிய ‘வெயில்’, ‘அங்காடி தெரு’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்கள்தான். ஆனால் அவை பாக்ஸ் ஆபீஸின் சூப்பர் ஹிட் படங்கள் இல்லை. ஒரு படம் சூப்பர் ஹிட்டாக வேண்டுமானால் அதற்கு பெரிய ஹீரோக்கள் தேவை. அப்போதுதான் கிராமங்களில் இருக்கும் மக்கள் படத்தைப் பார்க்க வருவார்கள், பிரபலமானவர்களின் முகமே மக்கள் கூட்டத்தை தியேட்டருக்குள் இழுக்கும். 



பெரிய ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தை இயக்க உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா? 


 
பெரிய ஹீரோவை வைத்து படம் செய்தால் எனக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். படமும் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதற்கான சூழ்நிலையும், கதையும் அமைந்தால் அதைப் பற்றி யோசிப்பேன். 




உங்கள் அடுத்த படத்தின் கதையை ஒரு பெரிய ஹீரோவுக்காக எழுதப் போகிறீர்களா அல்லது கதையை எழுதிவிட்டு ஹீரோவை தேடப் போகிறீர்களா? 


 
இந்த கேள்வியை என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஒரு சின்ன ஹீரோவுக்காக கதை எழுதிவிட்டு 2 வருடங்கள் படம் எடுப்பதைவிட பெரிய ஹீரோவுக்காக கதையை எழுதிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக 2 வருடங்கள் காத்திருக்கலாமே. 



தமிழ் சினிமாவில் தொடர்ந்து ‘கதை திருட்டு’ அதிகரித்து வருகிறதே? 


 
இன்ஸ்பிரேஷன் இல்லாமல் படம் பண்ண முடியாது. எங்கிருந்தோ ஒரு விஷயத்தை பார்த்து ஒரு ஐடியாவை உருவாக்குகிறோம். அதனால் எல்லா விஷயத்தையும் ‘காப்பி-கேட்’ (copy-cat) லிஸ்ட்டில் சேர்ப்பது தவறு. அதே மாதிரி சினிமாக்காரர்களும் ஒரு விஷயத்தால் கவரப்பட்டு படம் செய்யும்போது ஒரு நன்றி கார்டு போடவேண்டும். அதை பல பேர் செய்வதில்லை. யோசித்து பார்த்தீர்கள் என்றால் மிஸ்டர் க்ளீனாக இருப்பவர்கள் மீது இப்படிப்பட்ட புகார்கள் வருவதில்லை. அப்படி இல்லாதவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் எந்த அளவுக்கு வளர்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களை க்ளீனாக வைத்துக்கொள்ள வேண்டும். 



சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களால் சில படங்கள் தோல்வி அடைவதாக கூறப்படுகிறதே? 



 
ஒரு படம் வெளிவந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஒரு நல்ல விமர்சனத்தை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, அதே மாதிரி எதிர்மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எப்படி தடுப்பீர்கள்? ஒரு படத்தை வாட்ஸ் அப்பில் நாம் விளம்பரப்படுத்தும்போது அதில் வரும் விமர்சனங்களையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். 


ஒரு படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்று ரசிகர்களிடம் யாராலும் சொல்ல முடியாது. அந்த விமர்சனங்களைத் தாண்டி நீங்கள் வளர்கிறீர்களா, இல்லையா என்பது மட்டும்தான் பிரச்சினை. 


நன்றி - த ஹிந்து

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/ 11 / 2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

வசந்தபாலன், பிரித்விராஜ், சித்தார்த் எனப் பலரும் இருந்தாலும், கோச்சடையானுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள படம் என்பதால், ‘காவியத் தலைவன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதில் ஆச்சரியமில்லை. எடுத்த படங்கள் ஒவ்வொன்றிலும் புது சப்ஜெக்ட்டை கையாளும் வசந்தபாலன், இந்தப் படத்தில் நாடு விடுதலை பெறுவதற்கு முன் இருந்த சபா நாடகக் குழுக்கள் பற்றிய கதையைக் கையில் எடுத்திருக்கிறார்.
மொத்தம் ஆறு முழுமையான பாடல்கள், நாடகங்களில் இடம்பெறும் குறும்பாடல்களைப் போன்று 8 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் அல்லி அர்ஜுனா நாடகத்தில் இடம்பெறுவது போல வாலியால் புதிதாக எழுதப்பட்டவை. பெரும்பாலான பாடல்களை ஹரிசரண் பாடியுள்ளார்.
நா. முத்துகுமார் எழுதி, ஹரிசரண் பாடியுள்ள "வாங்க மக்கா வாங்க" படத்துக்கும் ஆடியோவுக்கும் நல்ல அறிமுகமாக அமைகிறது. அடுத்த நான்கு பாடல்களையும் எழுதியிருப்பவர் பா.விஜய். அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும், ஸ்வேதா மோகன் பாடியுள்ள "யாருமில்லா தனி அரங்கில்" மெலடி பாடலில் ரஹ்மானை உணர முடிகிறது.
இருவர் படத்தில் வரும், "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பாடலின் மெதுவான வெர்ஷன் போலிருக்கும் "ஏய்! மிஸ்டர் மைனர்" பாடல் (ஹரிசரண், சாஷா திரிபாதி) ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. இன்றைய தேதிக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலை, வாணி ஜெயராமைத் தவிர வேறு யாரால் பாட முடியும்?
"சண்டிக் குதிரை" பாட்டு, ‘காதலிக்க நேரமில்லை’ "விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை நினைவுபடுத்துகிறது. "சொல்லிவிடு சொல்லிவிடு" பாடலை முகேஷ் பாடியுள்ளார்.
ஹாலிவுட் படத்துக்கு இசையமைப்பதைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆர்வம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை, இந்த ஆடியோ பூர்த்தி செய்யவில்லை. மேலும், 40-50களில் நடக்கும் கதைக்கான பாடல்கள் என்ற உணர்வை முழுமையாகத் தரவில்லை.


வேல்முருகன் போர்வெல்ஸ்
கஞ்சா கருப்பு தனது தருண்காந்த் ஃபிலிம் ஃபேக்ட‌ரி சார்பில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளார். எம்.பி.கோபி படத்தை இயக்கியுள்ளார். அங்காடித்தெரு மகேஷ், ஆருஷி நடித்துள்ளனர்.
FILE

எம்.பி.கோபியும் சமுத்திரக்கனியும் நண்பர்கள். வேல்முருகன் போர்வெல்ஸுக்குப் ‌பிறகு எம்.பி.கோபி இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தையும் கஞ்சா கருப்பே தயா‌ரிக்க உள்ளார்.

சமுத்திரக்கனி ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் இயக்கி வருவது தெ‌ரிந்ததே. தெலுங்கில் ஹீரோ நானி. அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து வெடிகுண்டு முருகேசன் படத்தை தயா‌ரித்த கணேஷ் தயா‌ரிப்பில் ‌ஜீவா நடிக்கும் சமுத்திரக்கனி இயக்குகிறார்.

இயக்கத்துக்கு நடுவில் கஞ்சா கருப்பின் படத்தில் நடிக்கவும் தீர்மானித்துள்ளார்


விஞ்ஞானி  -நடிகர் பார்த்தி விஞ்ஞானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். இந்த பொழுது போக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார். பார்த்திக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பு. அழகப்பா செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்ட பார்த்தி, தனது உயர் கல்வியை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

பார்த்தியின் கனவுகள் அனைத்தும் மிகப்பெரியது. சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினார். அந்த பெருமைமிகு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் பார்த்தியும் ஒருவர்.

நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து  தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர். இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி, பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 2008 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்.

அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தார்.
தனது பள்ளி நாட்களில் பார்த்தி நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்ப்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியவர்.

இந்த புது முயற்சியில் அறிவியலையும், நடிப்பையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே, அவரது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டினார். தமிழ் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெறுவதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார்.

‘விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள். நடிகை மீராஜாஸ்மின் பட நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

மாரிஸ் விஜயின் இசையில், பார்த்தி உருவாக்கி உள்ள இந்த திரைப்படத்தின் இசை வரும் நாளை பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்படுகிறது. 



4  மொசக்குட்டி”-மைனா, சாட்டை போன்ற படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் “ மொசக்குட்டி”.
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ரமேஷ் விநாயகம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ஜீவன்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறியாதவது…..இந்த படம் மைனா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்கலதைப் உள்ளடக்கியது. நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. மனதை உருக்கும் காதலும் இருக்கும், மனதை இரும்பாக்கும் ஆக்ஷனும் இருக்கும்.
மைனா படத்தில் பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாக பேசப்பட்டதோ அதே மாதிரி மொசக்குட்டி படத்தில் பத்து குழந்தைகளுடன் செல்லும் ஜீப் ஒன்று விபத்தில் சிக்குவது மாதிரியான காட்சி பரபரப்பாக பேசப்படும்.
இதை கேரளாவில் படமாக்கினோம். பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். பாடல்களும், படமும் நிச்சயம் மைனா, சாட்டை மாதிரியே பாராட்டும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். படம் இம்மாதம்(நவம்பர்) 28ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது.


5   ஆ -சினிமாவில் இது ஆவிகளின் யுகம் என்றாலும், பேய்களைக் கொஞ்சம் மறந்திருந்த தமிழ்சினிமாவில் ஆவியைப் புகுத்தியவர்கள் என்ற பெருமை(!)யைப் பெறுபவர்கள் இரட்டை இயக்குநர்களான ஹரி & ஹரீஷ்.
aaah‘ஓர் இரவு’ படம் மூலம் ஆவிகள் உண்டு என்று அடித்துச் சொல்லி ரசிகர்களை பயமுறுத்திய இந்த இரட்டையர் மீண்டும் பேய்களை அறியும் முயற்சியாக ‘ஆ’ படத்தை இயக்கியிருக்கிறார்கள். பேய்க் கதைகளில் இது கொஞ்சம் வித்தியாசமானதாம்.
“பேயில் என்னய்யா வித்தியாசம்..?” என்கிறீர்களா..?
“இருக்கிறது. இதுவரை திரையில் ஒரு பேய்க் கதை மட்டுமே சொல்லப்பட்டதைத் தாண்டி ஒரு படத்துக்குள் பல கதைகளைச் சொல்லப்போகிறோம். குறும்படங்களுக்கான காலம் இது என்பதால் இதைச் சின்னச் சின்னக் கதைகளால் ஒரு ஹாரர் ஆன்தாலஜியாகச் சொல்கிறோம்…” என்கிறார் ஹரீஷ்.
aaahதொடரும் ஹரி, “இது சினிமா இலக்கணம் தாண்டிய கதை. இதற்காகவே தமிழ் சினிமா வெளிச்சம் படாத ஜப்பான், அரேபியப் பாலைவனத்தைக் களங்களாக வைத்திருக்கிறோம். கடலுக்குள்ளேயே நடக்கும் காட்சி மற்றும் ‘ஏடிஎம்’முக்குள்ளேயே நடக்கும் காட்சி எல்லாம் இதுவரை படங்களில் காணாத த்ரில்லைத் தரும்..!” என்கிறார்.
aaahஇவர்களது முந்தைய பட


மான ‘அம்புலி 3டி’யைத் தயாரித்த ‘கேடிவிஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ்’ வி.லோகநாதனே இந்தப் படத்தையும் தயாரிப்பதால் இவர்களது ‘டீம் ஒர்க்’கின் நம்பகத் தன்மை புரிகிறது.
‘அம்புலி’ கோகுல்நாத் ஹீரோவாக, சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் ஜப்பானிய நடிக, நடிகையரும் நடித்திருக்கிறார்கள்.


நன்றி - தினமணி , மாலைமலர் , ஆல்  சினி வெப்சைட்ஸ் , வெப்துனியா
வரும் வெள்ளியன்று (28-11-14) வெளியாகி பயமுறுத்தவிருக்கிறது ‘ஆ….!’

வன்மம் - சினிமா விமர்சனம்

உயிர் நண்பர்கள் ராதாவும் (விஜய் சேதுபதி) செல்லத்துரையும் (கிருஷ்ணா)... அவர்களுக்குள் பிரிவும் விரோதமும் உருவாகி, தொடரும் விளைவுகளை, கன்னியாகுமரி மண்ணைக் களமாக வைத்துச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெய்கிருஷ்ணா. 


முரட்டு சுபாவம் கொண்ட உள்ளூர் மர வியாபாரியான ரத்னத்தின் (கோலிசோடா மதுசூதன் ராவ்) தங்கை வதனாவை (சுனைனா) செல்லத்துரை காதலிக்கிறான். ரத்னம், செல்லத் துரையைக் கொலைவெறியோடு நெருங்க... கைகலப்பில் வதனாவின் அண்ணன் கொலையாக ராதா காரணமாகிவிடுகிறான். 


ரத்னம் கொலையின் பின்னணியில் அவரது தொழில் கூட்டாளியான ஜே.பி. இருக்கக்கூடும் என்று ஊர் நம்புகிறது. காதலி வதனாவின் துக்கத்தை எதிர்கொள்ள முடியாத செல்லத்துரை, அவசரப்பட்டு அவள் அண்ணனைக் கொன்றதாக ராதாவைக் குற்றம்சாட்டுகிறான். “அவனை விட்டிருந்தா உன்னை வெட்டிப்போட்டிருப்பான்” என்று குமுறும் ராதா, செல்லத்துரையை விட்டுப் பிரிகிறான். 


நண்பர்கள் பிரிந்த அடுத்த நொடியிலிருந்து, ராதா உண்மையான கொலையாளி என்பது வதனாவின் குடும்பத்துக்கும், அவர்களது குடும்பத்தின் தொழில் எதிரிக்கும், ஊர் மக்களுக்கும் எந்த நிமிடமும் தெரிந்துவிடலாம் என்ற சாத்தியத்தை வைத்தே கதையை நகர்த்தியிருக்கும் விதம் விறுவிறுப்பு. குமரி நிலப்பரப்பையும் அதன் வட்டார வழக்கையும் காட்டியிருக்கும் விதமும் அழகு. 


ஆனால், நண்பர்கள், காதல், தியாகம், விரோதம் என்ற முடிச்சுகளை வைத்து ஏற்கெனவே கோலிவுட் கபே அரைத்த அதே மாவைத்தான் இதிலும் இயக்குநர் அரைத்திருக்கிறார். 



கதையின் பல திருப்பங்கள் ‘நான் நினைச்சேன்’ ரகம்தான். 


குடும்பத் தலைவனின் சாவுக்குக் காரணமாகி விட்ட குற்ற உணர்வுடன் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகுவதில் உள்ள ஆழமான சங்கடத்தை விஜய் சேதுபதி யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். நட்பு, கோபம், விரோதம், தியாகம் ஆகிய உணர்வுகளை நன்றாகவே வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் அவர் முகம் மட்டுமே ஆக்‌ஷன் காட்டுகிறது. 


நடனமும் அப்படியே. உடம்பைக் கட்டுக்குள் வைக்காவிட்டால் ‘ஊது’பதி ஆகும் அபாயம் வேறு! 


நடிப்பில் கிருஷ்ணா மெனக்கெட்டிருக்கிறார். சில காட்சிகளில் ‘ஓவர்’ ஆகவே!
சுனைனாவுக்குச் சவாலான பாத்திரம் இல்லை என்றாலும் அவர் முக பாவங்கள் ரசிக்கும் விதம். பானுப்ரியாவும் படத்துக்குக் கொஞ்சம் வலு சேர்க்கிறார். விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் பத்மநாபன் நடிப்பும் பேச்சும் அபாரம். 


தமனின் பின்னணி இசை காதை கிழிக்கிறது. அரங்கத்தில் இருக்கையில் லேசாக தாளம் போட வைக்கிற பாடல்கள், வெளியே வரும்போது நினைவில் நிற்கவில்லை. 


குடித்துவிட்டு வரும் செல்லத்துரை நள்ளிரவில் தன் காதலி வீட்டுக்கு வந்து சத்தம்போட்டு கலாட்டா செய்கிறான். தூக்கத்திலிருந்து எழுந்து வரும் நாயகியின் உதட்டில் அவ்வளவு திருத்தமாக லிப்ஸ்டிக்! தமிழில் யதார்த்த படம் எடுக்கிற தைரியம் இன்னும் முழுசாக வரவில்லையோ...! 


சஸ்பென்ஸிலும் திருப்பங்களிலும் வட்டார வழக்கிலும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் கதையின் போக்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். 


thanx - the hindu

Tuesday, November 25, 2014

மொக்கை போடுவார் சூரி.உங்க ஜோக்குக்கு சிரிப்பு வர்லை.சாரி

1

"தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே பத்திக்கும்" - கொந்தளிக்கும் விஜய்
ரசிகர்கள் #அய்யோ பத்திக்குச்சு பத்திக்கிச்சு ஓஹோ கண்ணே

================


 

83 % பெண்களும்  40  % ஆண்களும் தங்கள் துணைகளை ஏமாற்றுகிறார்கள்
-வெளிநாட்டு ஆய்வு"#அப்போ % இடிக்குதே.எவனோ டபுள் என்ட்ரி போட்டுட்டான்
போல


===================

3
போதைப் பொருள் கடத்தல்: எஸ்.ஏ.சி.யின் 'நண்பர்கள்' பட ஹீரோயின், கணவர்
கைது # அன்பே மம்தா கொஞ்சம் ரம் தா ன்னாரா?
=================

4   பந்துகளை எதிர்கொண்டு  ரன்களைக் குவித்து 0வது ஓவர் கடைசி பந்தில் அவுட்
ஆனார் ரோஹித் சர்மா!!# ஒன் (வின்)மேன் ஆர்மி


=================





வசந்தகுமாரன் படத்தில் நடிக்கவில்லை.. என்னை திட்டி மிரட்டுகிறார்
தயாரிப்பாளர்!- விஜய் சேதுபதி # நொந்த குமாரன்
===================


6    ஒரு நாளைக்கு  பெண்கள், மொத்தம் 1,000 இருக்கும்: பாப் பாடகரின் படுக்கை
கணக்கு # அண்ணன் டூரிங் கொட்டாய் மாதிரி.தினசரி  காட்சிகள்


=================



தேர்தல் நேரத்தில் நாங்கள் முன்னணி கட்சியாக விளங்குவோம்: ஜி.கே.வாசன்
நம்பிக்கை # தோராயமா 1 0,000 ஓட்டு தேறுமா?
=================



8  என்னை மிரட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் - விஜய் சேதுபதி அறிக்கை - படம்
மிரட்டலா இருந்தா நல்லது.படத்தயாரிப்பாளரே மிரட்டலா இருந்தா கெட்டது
===============

9 கிளீன் இந்தியா திட்டம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு -செய்தி #
அர்விந்த் கெஜ்ரிவால் ன் விளக்குமாறு சின்னத்தை பேமஸ் பண்ணிட்டார்னா?


================


10 
அதிமுகவுக்கு மட்டும்தான் ‘அம்மா’ வா, பாஜகவுக்கும் இருக்காங்க 'தமிழ்'
அம்மா..: முரளிதர ராவ் # ஓஹோ.இவங்களும் உள்ளே போவாங்க்ளா?


===============


11
ஆரோக்கியா பாலைத் தொடர்ந்து பிற பால் விலையும் நாளை உயர்வு.. தயிர் விலை
லிட்டருக்கு ரூ. 10 உயர்கிறது! # இனி தயிர் சாதம் ரேட்டும் எறுமா?ஸப்பா
===============



12    120  ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது "செல்பி"! # நினைச்சேன்.அப்போ செல்பி
புள்ள பாட்டு கூட அண்ணன் அனிரூத் எங்கிருந்தாவது சுட்டிருப்பாரோ?


==================



13

ரஜினி ஒரு 'காமன் மேன்'... அதனால்தான் அரசியலுக்கு வரக் கூடாது
என்கிறேன்...ஈ.வி.கே.எஸ் #சொல்லிட்டாரு காமா சோமா மேன்.இவருக்கு பயம்
==============



14 விஜய்  படத்தின் பட்ஜெட் ரூ. + கோடி? # இன்னும் 0 கோடி செலவு பண்ணினா
ரைமிங்கா சொல்லிக்கலாம். க்கு

======================


15  மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது...: கமல் நம்பிக்கை #
அப்டி நடிச்சா அது 200 கோடி ரூபா டார்கெட் படமா இருக்கும்
==================



16  ஒரே வாரத்தில் கட்சிப் பெயர் ரெடியாகி விடும்-வாசன் #ம்க்கும்.பில்டப்
குடுத்துட்டு கடைசில "என்னை அறிந்தால் முன்னேற்றம்"னு பேர் வைப்பீங்க
=======================



17  வெளியில போய்ட்டு மறுபடியும் வந்தா பதவி தர மாட்டோம்.. தங்கபாலு
வார்னிங்! # பாத்ரூம் க்குக்கூட போகக்கூடாதுங்க்ளா?
=====================


18  எனது படங்கள் கல்யாண சமையல் போன்றது-ஹரி # ஆமா.பந்தி பரிமாறும்போது ஒரே
அடிதடியா இருக்கும்
=====================


19  2016-ல் காங்கிரஸ் தயவில்லாமல் ஆட்சி அமைக்கமுடியாது-EVKS! # சினிமா வில்
மொக்கை போடுவார் சூரி.உங்க ஜோக்குக்கு சிரிப்பு வர்லை.சாரி


==================


20 

தனுஷின் அடுத்த படம் மாரி... முதல் போஸ்டர் வெளியீடு # அப்போ சிம்பு
தேவன் விஜய் இணையும் மாரீசன் ல விஜய்க்கு அப்பாவா தனுஷ் நடிப்பாரா?



========================



காய்ச்சல் அடிக்குது னு காதலி சொன்னா கில்மாத்தமிழன் என்ன செய்வான்?

1  
பொண்டாட்டியை ஓட்டும் புருசனை DTH னு சொல்லலாம்.DEAR TROLLS HUSBAND



===================





2  அன்புள்ள பிக்பாக்கெட் பார்ட்டிக்கு,என் பேண்ட் பாக்கெட்டில் இருப்பது 100
ரூபாய்க்கட்டு 10000 அல்ல.20 ரூபா பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்.


==================


3


தமிழ் வாக்கியம் அமைக்கும்போது ஆணை விடப்பெண்ணே கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது




====================






4  எந்த ஊரா இருந்தாலும் எந்த தியேட்டரா இருந்தாலும் ஷோ டைம்க்கு11 0 நிமிஷம்
லேட்டா போய் இருட்ல சீட் தேடி் தடவித்தடுமாறுவான் தமிழன்


=================

5  



வசூல் படங்கள் தரும் ஒரு ஹீரோ வெரைட்டியான ,கலைப்பூர்வமாகவும் படங்கள் தர
முடியும் என நிரூபித்த ஒரே தமிழ் சினிமா ஹீரோ கமல்


================




திருப்பதி தேவஸ்தானம் திகைப்பு.பணம் எண்ணும் ஊழியர்கள் கத்தி வசூல்
பணத்தை எண்ணப்போய்விட்டார்களாம்.அரசாங்கம் ஸ்தம்பித்தது


=====================



7 சன் டிவிசெய்திகள் .சென்செக்ஸ் 28,000 புள்ளிகள் தொட்டது.கத்தி பட வசூல் 2500
கோடியைத்தொட்டது என படத்தில் பணி புரிந்த லைட் மேன் தகவல்


===================

 8


இன்னிக்கு குரு பூர்ணிமா வாம்.டீச்சரை லவ் பண்றவங்க காதலைச்சொல்ல உகந்த
நாள் # பரிபூரண வெற்றி


==================

9

அன்னக்கொடி ,மின்னல்கொடி,சுடர்க்கொடி,பூங்கொடி இவங்க எல்லாம் குண்டா
இருந்தாக்கூட கொடி இடை யாள் னு சொல்லிக்கலாம்


====================


10

நான் செல்லில் வீடியோ எடுத்துட்டிருக்கேன்னு நினைச்சுட்டு ரயிலில் எதிர்
சீட் ஏஞ்சல் ஜோதிகா மாதிரி ஓவர் ஆக்டிங் முக பாவனைகளா காட்டிட்டிருக்கு


====================



11 ஸ்கூல் பியூன் ,ரயில்வே ஸ்டேசன் பெல் பாய் ,சிறைக்கைதி,குல்பிஐஸ் விற்பவர் ,கோவில் பூசாரி  இவங்க வாழ்க்கைல
மணி அடிச்சா சோறு


==================

12 காய்ச்சல் அடிக்குது னு காதலி சொன்னா பதறிப்போய் நெத்தி ,கழுத்து
எல்லாத்தையும் தொட்டுப்பார்ப்பான் இதான் சாக்கு எடு பிளம் கேக்கு
த்தமிழன்


=====================



13 விஜய் ரசிகர்க்கு ATM = அழகிய தமிழ் மகன் மத்தவங்களுக்கு ATM = அஞ்சு
டைம் மட்டும் # அதுக்கு மேல எடுத்தா 20 ரூபா ஊ ஊ


================


14  நான் சின்னப்பையனா இருக்கும்போது ரயில் பயணங்களில் பெரிய ஆடிட்டர் மாதிரி
ஒவ்வொரு ஸ்டேசன் பேரையும் டைரில நோட் பண்ணிட்டு இருந்தேன்


======================



15 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனிக்காரர் செம ஸ்மார்ட்.10
ரூபா pkt விலை ஏத்துனா வம்புனு ரேட் ஏத்தாம  2 பிஸ்கெட்டை உருவிட்டார்

==================



16 காலை வணக்கம் வைப்பவர்கள் சொந்த ஊர் காங்கேயமா இருந்தா காங்கே யங் காளை
வணக்கம் னு வைப்பாங்ளோ?


=======================



17  காலைலயே ஒரு பொண்ணு உங்க ட்வீட்டை ஆர் டி பண்ணிட்டா அந்த நாள் மங்களகரமா
இருக்கும் ,பல ஆர் டி கிடைக்கும்-கொல்லிமலை சித்தர்

================


18 
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ன்னு பேரெடுக்கனும்னா
"திருவாசகம்" னு சொன்னா போதும்


==================

19
டெய்லி அட்டென்டென்ஸ் போடும் ஆம்பளைங்களைக்கண்டுக்காம எப்பவாவ்து வரும்
பெண்ணுக்கு வாங்"கண்ணே" வணக்கங்"கண்ணே"ம்பான் தமிழன்


===================


20
செல்வி டூ கலைஞர் = அன்புள்ள அப்பா ! உங்கள் ஊழல் கதையை கோர்ட்டில் சொன்னால் தப்பா?


====================

Monday, November 24, 2014

தங்கம் விலை நமீதா மார்க்கெட்டு போல் சரியக்காரணம் என்ன?

: நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி1 0 லட்சம் எலிகள் # நியூயார்க்னாலே
மவுஸ் (MOUSE)ஜாஸ்தின்னாங்க்ளே.இதானா?


==================


2


இரவு ரோந்து பணியில் தூங்கிய  போலீசாருக்கு ஓர் ஆண்டுக்கு சம்பள உயர்வு
ரத்து! # தூக்கத்தில் நடக்கும் வியாதினு சமாளிக்க முடியாதா?


===================


3

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண முதலைகள்  பேரின்
கணக்கில் பணமே இல்லை # பிட்டுப்படத்தில் பிட்டே இல்லையா?மொமென்ட்

=================


கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது  6 !# ஆறிலிருந்து அறுபது
வரை டைட்டில் இவருக்குத்தான் பொருத்தம் போல


==================



5  எனது ஆஸி., பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது-மோடி # ஏன்?
அங்கிருந்து வந்ததும் எல்லார் ஆஸ்தி க்கும் வரி புதுசா
விதிக்கப்போறீங்களா?


================


6  

கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல
முயற்சி கள்ளக்காதலன் கைது..# முதல்ல கழுத்தை அறுத்தது யாரு?


==================


7

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தர்ணா போராட்டம் நகரியில் நடிகை ரோஜா
பங்கேற்பு.# இவரைப்பார்க்க ஜனங்க கூடுனா அதுதான் ரோஜாக்கூட்டம்?


==================


8


தங்கம் விலை கடும் சரிவு: பவுன் ரூ.190000,க்கு விற்பனை -1 0 நாளில் பவுனுக்கு
ரூ.500 , குறைவு # இந்த நியூஸ் சம்சாரம் கண்ல படாம பாத்துக்கனும்


=================


9



நயன்தாராவுடன் லண்டன் சென்ற உதயநிதி.. # செய்தி போடும்போது ஷூட்டிங்
நியூசா ?ஷாக்கிங் நியூசா?னு டைட்டில் வெச்சுப்போடுங்கப்பா.

==================



10  நான் காங்கிரஸில் இணைந்ததாக யாரோ வதந்தி கிளப்பிவிட்டார்கள்: கார்த்திக்
சிறப்புப் பேட்டி #சினிமாக்காரர் பேச்சு விடிஞ்சாப்போச்சு


======================


11 

25% சதவீத இளைஞர் அணி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளனர்: -EVKS #
நல்லா எண்ணிப்பாருங்கண்ணா.மொத்தமே 20 பேர் தான் னு கேள்விப்பட்டோம்


=====================


12 
: ராமருக்கு பின் இலங்கையை துவம்சம் செய்த ரோகித் சர்மா: குவியும்
பாராட்டு– கருணாநிதி வாழ்த்து # பகுத்தறிவுப்பகலவர் பல்டி அடிச்ட்டாரே


=====================


   ·
13


=சமீரா ரெட்டி கர்ப்பம்... இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என அறிவிப்பு #
புள்ளத்தாச்சி வைராக்யம் புள்ள பெத்துக்கிட்டா போச்சு


====================


   ·
14  ரோஹித் சர்மாவுக்காக நிர்வாண போட்டோவை அர்ப்பணித்த சோபியா ஹயாத் # இது
போல் குடும்ப குத்து விளக்கு வேறு எங்கேனும் உண்டா? நீ கலக்கு சித்தப்பு

====================

15 அஜய் தேவ்கனை டாப்லெஸ்ஸா பார்த்து அசந்துட்டேன்: பிரபுதேவா # இனி
எந்தப்பெண் ணோட வாழ்க்கைலயும் குறுக்கிட மாட்டேன்னாரே.இதான் மேட்டரா?

=================


16  வாட்ஸ் அப்பில் ஆபாச படம்... ஏ.டி.ஜி.பி. மீது சரிதா நாயர் புகார்-
விசாரணை #வாட்ஸ் அப் பா?பிட்ஸ் அப்பா?


=====================


   ·
17  சாதனை: வால் நட்சத்திரத்தை ஆய்வுக்கலம் படம் பிடித்து அனுப்பியது... #
வால் நட்சத்திரம் னு சிம்பு போட்டோவை காட்டி ஏமாத்தாம இருந்தா சரி


===================


   ·
18  மணலியில் மாமியார் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட ராணுவ அதிகாரி கைது..#
அரைச்ச மாவையே அரைச்சுட்டு இருந்தாங்களாம்

==================


   ·
19  திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு வாலிபருக்கு போலீஸ்
வலைவீச்சு. # முதல் இரவு ஆசை நிறைவேறினதும் எஸ்கேப்பா?


======================


   ·
20  என் வாழ்க்கை வரலாற்று படத்தில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா
மிர்சா விருப்பம்... # பின்னால வருத்தப்படுவீங்க்."


========================


   ·
21  IIT மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்: இது கலாசார
சீரழிவு அல்ல என்று வாதம்#முத்தத்தோட நிறுத்திட்டாங்ளே.மகிழ்ச்சி

=======================


   ·





பெண் போலீசாருடன் ஆபாசமாக பேசும் வாலிபர்கள்


   

1 என்னை திட்டுவதற்காவது அக்கறை காட்டுகிறாரே ஓ.பன்னீர்செல்வம் :கருணாநிதி
#அதுவும் அவரா திட்டி இருக்க மாட்டார்.அம்மா சொல்லிக்குடுத்தபடி


==================
 

2 காங்கிரஸ் பலவீனமடையுதே என மக்கள் வருத்தப்பட வேண்டாம்-தங்கபாலு #
சர்க்கஸ் னா கோமாளி இருக்கறதும் ,காங்கிரஸ் னா ஏமாளி இருப்பதும் சகஜம்
தானே ?


====================


3

சிம்பு தேவன் படத்திலும் இரண்டு விஜய்கள்! # அப்போ  200  கோடி கன்பர்ம்.இளைய தளபதிடா



==============


4

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணிகரம்: உண்டியலில் கையை விட்டு
காணிக்கையை திருடியவர் கைது.# அந்தாளுக்கு மைக்ரோ கையா?எப்டி உள்ளே
போச்சு?


================


5

‘பேசியல்’ செய்வதாகக்கூறி நூதன முறையில் பெண்களிடம் நகை திருடிய இளம்பெண்
கைது... # நகை அபேசியல் ,அபேஸ் இயல்

=====================
   

6 ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு தொகுதியிலும் ்10,000 புதிய உறுப்பினர்களை
சேர்க்கனும்-பாமக  டூ அன்புமணி  # அண்ணன் கிட்ட ஆல்ரெடி அவ்ளவ் தானே இருக்கும்.போதுமா?


=====================

7  மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு ஆயுள் தண்டனை.#
என் அழகுல மயங்கிட்டா னு கோர்ட்ல அள்ளி விடலையா?


====================


8
  ·

கல்யாணம் முதல் காதல் வரை’ விஜய் டிவியில் புதிய சீரியல் # இதுக்கு
பொருத்தமான டைட்டில் = கல்யாணம் முதல் கள்ளக்காதல் வரை

=================
   


9  மனைவியின் உதவியுடன் 70  பெண்களை சீரழித்த கனடா வாலிபர் – கைது! #
செஞ்சுரி அடிக்கலாம்னு பார்த்திருக்கான்.மாட்டிக்கிட்டான்


====================



     

10 ஊட்டி மலைப் பாதையில் 'ஹார்ட் அட்டாக்'... 110 பயணிகளை காப்பாற்றிவிட்டு
உயிரிழந்த பஸ் டிரைவர்!#சபாஷ் டிரைவர்.ஒரு  108  பண்ண வேண்டிய காரியத்தை  தனி ஆளா  பண்ணி  110 பேரை காப்பாத்தீட்டீங்க

=====================



11 
   

எந்த அரசை எதிர்ப்பது என்று தெரியவில்லை -கருணாநிதி # தலைவா!,இந்தாங்க
லிஸ்ட்  இலங்கை அரசு  மத்திய அரசு  மாநில அரசு  வல்லரசு(கேப்டன்)

=====================


12
முத்த போராட்டம்: கைது செய்தும் போலீஸ் வேனில் லிப் டூ லிப் கொடுத்த ஜோடி
#கேப் கிடைச்ச இடத்துல எல்லாம் கிடா வெட்டுவான் இந்தியன்  


====================


13  வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” –  ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்! #
பாதிப்பேரு ஐ லவ் யூ தான் அனுப்புவாங்க


================


14

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் க்கு அத்தையாக கிரண் நடிக்கிறார் -செய்தி
# டைட்டில் நான் கிளுகிளுப்பு சிவப்பு ஆண்ட்டி யா?


====================
   


15  விஷாலுடன் இருக்கும்போது எனக்கு ரொம்ப சவுகர்யமாக இருக்கிறது - வர
லட்சுமி சரத்குமார் # லட்சுமிமேனனுக்கு அசவுகர்யமா இருக்குமே?


===================
   


16  அனுஷ்கா சர்மா வுடனான காதலால விராட்் கோலிின் ஆட்டத்திறன் குறைந்து
விட்டது -செய்தி # இல்லியே.ஒரு பார்ட்டில  பேரும் செம ஆட்டம்
போட்டாங்களே?
   
 =============================

17  என்னை அறிந்தால் ல்   அஜித்  6  கெட்டப் பில் வருகிறார் - கவுதம் # டைட்டிலை
ஆறு முகம் னு வெச்சிருக்கலாம்



======================


18 

67 வயதில் 16  வயது பெண்ணை திருமணம் செய்த வங்கதேச ரயில்வே அமைச்சர் #
இந்த சட்டை என்னுதுதான்.ஆனா நான் யூஸ் பண்றதில்லை


====================
   


19  உ பி மாநிலத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண்
போலீசாருடன் ஆபாசமாக பேசும் வாலிபர்கள் # ரொம்ப காய்ஞ்சு கிடப்பானுங்க
போல


======================
   


20 எவ்வளவு நடித்தாலும் கருணாநிதி உத்தமர் ஆக முடியாது- ஓ.பன்னீர்
செல்வத்தின் 2வது தாக்கு # இவர் மட்டும் புண்ணிய பூமில பிறந்த மாதிரி
பேசறாரே?


===========================