வசந்தபாலன், பிரித்விராஜ், சித்தார்த் எனப் பலரும்
இருந்தாலும், கோச்சடையானுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள படம்
என்பதால், ‘காவியத் தலைவன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதில்
ஆச்சரியமில்லை. எடுத்த படங்கள் ஒவ்வொன்றிலும் புது சப்ஜெக்ட்டை கையாளும்
வசந்தபாலன், இந்தப் படத்தில் நாடு விடுதலை பெறுவதற்கு முன் இருந்த சபா
நாடகக் குழுக்கள் பற்றிய கதையைக் கையில் எடுத்திருக்கிறார்.
மொத்தம் ஆறு முழுமையான பாடல்கள், நாடகங்களில் இடம்பெறும்
குறும்பாடல்களைப் போன்று 8 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் அல்லி அர்ஜுனா
நாடகத்தில் இடம்பெறுவது போல வாலியால் புதிதாக எழுதப்பட்டவை. பெரும்பாலான
பாடல்களை ஹரிசரண் பாடியுள்ளார்.
நா. முத்துகுமார் எழுதி, ஹரிசரண் பாடியுள்ள "வாங்க மக்கா
வாங்க" படத்துக்கும் ஆடியோவுக்கும் நல்ல அறிமுகமாக அமைகிறது. அடுத்த நான்கு
பாடல்களையும் எழுதியிருப்பவர் பா.விஜய். அந்தக் காலத்துக்கே நம்மை
அழைத்துச் சென்றுவிடும், ஸ்வேதா மோகன் பாடியுள்ள "யாருமில்லா தனி அரங்கில்"
மெலடி பாடலில் ரஹ்மானை உணர முடிகிறது.
இருவர் படத்தில் வரும், "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி"
பாடலின் மெதுவான வெர்ஷன் போலிருக்கும் "ஏய்! மிஸ்டர் மைனர்" பாடல்
(ஹரிசரண், சாஷா திரிபாதி) ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. இன்றைய
தேதிக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலை, வாணி ஜெயராமைத் தவிர வேறு
யாரால் பாட முடியும்?
"சண்டிக் குதிரை" பாட்டு, ‘காதலிக்க நேரமில்லை’
"விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை நினைவுபடுத்துகிறது. "சொல்லிவிடு
சொல்லிவிடு" பாடலை முகேஷ் பாடியுள்ளார்.
ஹாலிவுட் படத்துக்கு இசையமைப்பதைத் தவிர்த்துவிட்டு இந்தப்
படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த
ஆர்வம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை, இந்த ஆடியோ பூர்த்தி செய்யவில்லை.
மேலும், 40-50களில் நடக்கும் கதைக்கான பாடல்கள் என்ற உணர்வை முழுமையாகத்
தரவில்லை.
2 வேல்முருகன் போர்வெல்ஸ்
கஞ்சா கருப்பு தனது
தருண்காந்த் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை
தயாரித்துள்ளார். எம்.பி.கோபி படத்தை இயக்கியுள்ளார். அங்காடித்தெரு
மகேஷ், ஆருஷி நடித்துள்ளனர்.
FILE
|
எம்.பி.கோபியும் சமுத்திரக்கனியும் நண்பர்கள். வேல்முருகன் போர்வெல்ஸுக்குப் பிறகு எம்.பி.கோபி இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தையும் கஞ்சா கருப்பே தயாரிக்க உள்ளார்.
சமுத்திரக்கனி ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் இயக்கி வருவது தெரிந்ததே. தெலுங்கில் ஹீரோ நானி. அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து வெடிகுண்டு முருகேசன் படத்தை தயாரித்த கணேஷ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் சமுத்திரக்கனி இயக்குகிறார்.
இயக்கத்துக்கு நடுவில் கஞ்சா கருப்பின் படத்தில் நடிக்கவும் தீர்மானித்துள்ளார்
3 விஞ்ஞானி -நடிகர் பார்த்தி விஞ்ஞானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு
அறிமுகமாகிறார். இந்த பொழுது போக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக
நடிப்பதுடன், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார்.
பார்த்திக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பு. அழகப்பா
செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். அறிவியல்
மீது தீராத ஆர்வம் கொண்ட பார்த்தி, தனது உயர் கல்வியை இந்திய அறிவியல்
நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பார்த்தியின் கனவுகள் அனைத்தும் மிகப்பெரியது. சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினார். அந்த பெருமைமிகு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் பார்த்தியும் ஒருவர்.
நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர். இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி, பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 2008 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்.
அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தார்.
தனது பள்ளி நாட்களில் பார்த்தி நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்ப்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியவர்.
இந்த புது முயற்சியில் அறிவியலையும், நடிப்பையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே, அவரது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டினார். தமிழ் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெறுவதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார்.
‘விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள். நடிகை மீராஜாஸ்மின் பட நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாரிஸ் விஜயின் இசையில், பார்த்தி உருவாக்கி உள்ள இந்த திரைப்படத்தின் இசை வரும் நாளை பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்படுகிறது.

4 மொசக்குட்டி”-மைனா, சாட்டை போன்ற படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் “ மொசக்குட்டி”.
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன்,
எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர்,
ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு
செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ரமேஷ் விநாயகம். கதை,
திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ஜீவன்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறியாதவது…..இந்த படம் மைனா படத்தை
போன்றே வித்தியாசமான கதைக்கலதைப் உள்ளடக்கியது. நிஜ சம்பவங்களின்
தொகுப்பாக உருவாகியுள்ளது. மனதை உருக்கும் காதலும் இருக்கும், மனதை
இரும்பாக்கும் ஆக்ஷனும் இருக்கும்.
மைனா படத்தில் பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாக பேசப்பட்டதோ அதே
மாதிரி மொசக்குட்டி படத்தில் பத்து குழந்தைகளுடன் செல்லும் ஜீப் ஒன்று
விபத்தில் சிக்குவது மாதிரியான காட்சி பரபரப்பாக பேசப்படும்.
இதை கேரளாவில் படமாக்கினோம். பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் பதினைந்து
நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். பாடல்களும், படமும் நிச்சயம் மைனா,
சாட்டை மாதிரியே பாராட்டும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்
என்றார். படம் இம்மாதம்(நவம்பர்) 28ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது.
5 ஆ -சினிமாவில் இது ஆவிகளின் யுகம் என்றாலும், பேய்களைக் கொஞ்சம்
மறந்திருந்த தமிழ்சினிமாவில் ஆவியைப் புகுத்தியவர்கள் என்ற பெருமை(!)யைப்
பெறுபவர்கள் இரட்டை இயக்குநர்களான ஹரி & ஹரீஷ்.
‘ஓர்
இரவு’ படம் மூலம் ஆவிகள் உண்டு என்று அடித்துச் சொல்லி ரசிகர்களை
பயமுறுத்திய இந்த இரட்டையர் மீண்டும் பேய்களை அறியும் முயற்சியாக ‘ஆ’
படத்தை இயக்கியிருக்கிறார்கள். பேய்க் கதைகளில் இது கொஞ்சம்
வித்தியாசமானதாம்.
“பேயில் என்னய்யா வித்தியாசம்..?” என்கிறீர்களா..?
“இருக்கிறது. இதுவரை திரையில் ஒரு பேய்க் கதை மட்டுமே சொல்லப்பட்டதைத்
தாண்டி ஒரு படத்துக்குள் பல கதைகளைச் சொல்லப்போகிறோம். குறும்படங்களுக்கான
காலம் இது என்பதால் இதைச் சின்னச் சின்னக் கதைகளால் ஒரு ஹாரர்
ஆன்தாலஜியாகச் சொல்கிறோம்…” என்கிறார் ஹரீஷ்.
தொடரும்
ஹரி, “இது சினிமா இலக்கணம் தாண்டிய கதை. இதற்காகவே தமிழ் சினிமா வெளிச்சம்
படாத ஜப்பான், அரேபியப் பாலைவனத்தைக் களங்களாக வைத்திருக்கிறோம்.
கடலுக்குள்ளேயே நடக்கும் காட்சி மற்றும் ‘ஏடிஎம்’முக்குள்ளேயே நடக்கும்
காட்சி எல்லாம் இதுவரை படங்களில் காணாத த்ரில்லைத் தரும்..!” என்கிறார்.
மான ‘அம்புலி 3டி’யைத் தயாரித்த ‘கேடிவிஆர் கிரியேட்டிவ்
பிரேம்ஸ்’ வி.லோகநாதனே இந்தப் படத்தையும் தயாரிப்பதால் இவர்களது ‘டீம்
ஒர்க்’கின் நம்பகத் தன்மை புரிகிறது.
‘அம்புலி’ கோகுல்நாத் ஹீரோவாக, சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர்
உள்ளிட்டோருடன் ஜப்பானிய நடிக, நடிகையரும் நடித்திருக்கிறார்கள்.
நன்றி - தினமணி , மாலைமலர் , ஆல் சினி வெப்சைட்ஸ் , வெப்துனியா
வரும் வெள்ளியன்று (28-11-14) வெளியாகி பயமுறுத்தவிருக்கிறது ‘ஆ….!’
0 comments:
Post a Comment