Thursday, October 02, 2014

யான் - சினிமா விமர்சனம்

 

ஓப்பனிங்க் ஷாட்லயே  போலீஸ்   ஒரு என்கவு|ண்ட்டர் ல  ஒரு தீவிரவாதியை  போட்டுத்தள்ளுது . ரணகளத்துலயும்    ஒரு  கிளு கிளுப்பு-ன்னு  சொல்வாங்களே  அந்த மாதிரி அவங்க  பாட்டுக்கு   ஃபைட்  போட்டுட்டு  இருக்கும்போது   முன் பின் அறிமுகம்  இல்லாத  ஹீரோ ஹீரோயின் 2 பேர் அறிமுகம் ஆகி மொத பார்வையிலயே அந்த  மொக்கை  ஃபிகரை  ஹீரோ உயிருக்கு  உயிரா லவ்வறாரு. 

ஹீரோயினுக்கும்  உள்ளூர  லவ் தான் . ஆனா அதை வெளில காட்டிக்கலை . காதலை மட்டும் தான்  காட்டலை ., மத்த  எல்லாத்தையும் காட்டுது . இடை வேளை வரை  ஹீரோ நாய் மாதிரி   ஹீரோயின்  பின்னாலயே சுத்தறாரு .பெரும்பாலான கதை இல்லா தமிழ்  சினிமா ல   முன் பாதி  திரைக்கதை இப்டித்தான் ஜவ்வு  இழுப்பு  இழுக்கும் .


 இடைவேளை வரும்போது  படத்துல  பெரிய  ட்விஸ்ட் (அப்டினு  டைரக்டர் நினைச்சுக்கிட்டாரு ) 


போதை மருந்து  வெச்சிருக்கறதா  ஹீரோ  மேல   பழி போட்டு  கைது பண்றாங்க .


ஹீரோ  எப்படி அந்த  கே|ஸ் ல இருந்து  தப்பிக்கறாரு? என்பதை   மரியான் , எஸ்கேப் ஃப்ரம்  உகா\ண்டோ |( ஆர் பார்த்திபன்  வில்லனாக நடித்த   மலையாளப்படம் |) போன்ற படங்களில்  இருந்து  உருவி மருவி ஒப்பேத்தி   இருக்காங்க . இந்த  மொக்கையையா 2 வருசமா எடுத்தீங்க\/ ?





கோ படத்துக்குப்பின்   பெரிய  பிரேக்  கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்   இருக்கும்   ஜீவா வுக்கு ஆழ்ந்த  இரங்கல்கள்.  ஜீவா  கெட்டப்  இதுல  சரி இல்லை . 2  வருசம்  ஷூட்டிங்க் நடந்ததால    கண்ட்டிநியூட்டி   மிஸ்சிங் . ஃபைட் காட்சியில்   கலக்கறார். பாடல்  காட்சியில்    பொசுக் பொசுக் -னு  ஹீரோயினுக்கு  கிஸ்  தர்றார். குட் பாய் 


  ஹீரோயினா   கடல்  புகழ்  துளசி . பாப்பா  நல்ல  ராசி  உ|ள்ள பாப்பா  போல  . மெகா ஹிட் படங்களா  அமையுது ., இந்தப்பட   ரிசல்ட்டுக்குப்பின்  எங்கேயோ  போய்டும் .ரம்பாவுக்கு  தான் சற்றும்  இளைத்தவள்  இல்லை  என்பதைக்காட்ட  பாப்பா  ஆன்னா  ஊன்னா   தொடையைக்காட்டுது .இடையைக்காடுது . லோ  ஹிப் காட்டுது . சென்சார் இதுக்கு  யு சர்டிஃபிகேட்  கொடுத்து   அவங்க  டே|ஸ்ட்டை காட்டுது .ஹீரோ    10 செக\ண்ட் ல    12   கிஸ்  கொடுத்தா   இது  போட்டி போட்டுக்கிட்டு   5  செக\ண்ட்ல 7 கிஸ்  தருது . இந்த மாதிரி  முற்போக்கான  , வேகம்  உ|ள்ள பெ|ண்கள் தான் தமிழ்  சினிமாக்குத்தேவை. 



லொக்கேஷன்க\ள் எல்லாம் அற்புதம் . ஷூட்டிங்  எங்கே நடந்தாலும்   ஓடாத  கதைல  படம் பூரா   ஃபாரீன்  லொக்கேஷன் ல்;  யாராவது  ஓடிட்டே இருக்காங்க  . பின் பாதி ல உக்கார  முடியல . 


ஒளிப்பதிவு   மன்னன்  ரவி கே சந்திரன்  தான்   இதுல  இயக்குநர் . அண்ணனுக்கு   இயக்கம்  சரிப்படு வர்லை . 



இசை  , பிஜிஎம் 2ம்  சுமார்  ரகம்  தான் .



 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1..   போஸ்டர்   டிசைன்  ,  டி வி , பேப்பர்   , மீடியா  வி|ளம்பரம்  எல்லாம்  பக்கா .  


2  தீபாவளிக்கு  1 மாசம்  இருக்கும்போது  படத்தை  ரிலீஸ் செஞ்ச  லாவகம் . எப்படியும்   மினிமம்  20 நாளாவது  ஓடிடும்னு நம் பிக்கை 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   ஒரு    சீன்ல   ஹீரோயின்   லேப்  டாப்ல் என்னமோ   ஒர்க்  பண்ணிட்டு  இருக்கு . ஃபோன் வருதுன்னு  யாரோ   கூப்பிடறாங்கனு  பாப்பா  எந்திரிக்கும்போது   லேப் டாப் \ஸ்க்ரீன்  க\ருப்பா  இருக்கு . ஏதாவது ஆன் பண்ணி  வெச்சு  ஒர்க் பண்ற மாதிரி  காட்டி  இருக்கலாம்



2 ஹீரோயின்   அப்பா  நாசர்   ஹீரோயினுக்கு அப்பாவா? மாமாவா|? ஹீரோ   வீட்டு வாசல்ல  ஹீரோயினை அந்த  புரட்டு  புரட்டி  உதட்டை எல்லாம் மென்னுட்டு  இருக்காரு , அதைப்பார்த்துட்டு  தேமேன்னு  நிக்கறாரு அப்பா 


போதை  மருந்து கடத்தல்  , பொய்க்குற்றச்சாட்டு  இதெல்லாம்  செம  போர். பல படங்கள்ல பார்த்தாச்சு . உக்கார  முடியல  பாஸ்


மனம் கவர்ந்த வசனங்கள்


லாங் ஷாட் ல பார்க்கும்போது எல்லா பொண்ணுங்களும் அழகுதான் # யான்



2 உன் மேல அவன் ரொம்ப கிறுக்கா இருக்கான் போல. 


நிஜமாவே அவன் கிறுக்கன் தான் டாடி #யான் 


3 காதலனைத்தவிர இந்தப்பொண்ணுங்களுக்கு கண் ல தென் படும் எல்லாமே க்யூட் தான் .நாய்க்குட்டி ETC#யான்






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


ஹீரோயின் ஸ்லோமோசன் ல ஓடி வரும்போது கேமராவை டாப் ஆங்கிளில் வைக்காமல்  மிடில் ஆங்கிளில் வைத்தால் நீ ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் போய்  DFT படித்து என்ன பயன் ? # யான்



ஹீரோயினுக்கு எல்லாமே சுமார் தான்.இதுல சோகம் என்னான்னா முகம் படுசுமார் # யான்


3 3 நிமிசம் ஓடும் டூயட்டில் ஹீரோ ஹீரோயினுக்கு 42 கிஸ் குடுத்துட்டாரு.ஹீரோயின் ஹீரோக்கு 24 கிஸ் குடுத்துடுச்சு# நீதி - வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்?/ லிப்  கிஸ்  குடுக்கும் 


4  யான் இடைவேளை.என்ன கதைனு இது வரை சொல்லலை.ஹீரோயின் சரி இல்லை.தோழி மொக்க பிகர் # ஆ



5  ஆடாதொடை இலை சாப்பிட்டு வளர்ந்த மூடா இடை அழகி துளசி ராக்கிங் # யான்


6 பின் பாதி மரியான் சாயல்.சப்பா.முடியல #,யான்


7 கோ படத்துல் கார்த்திகா ஜோடி. யான் ல துளசி ஜோடி. ஜீவா அடுத்த பட ஜோடி ராதாவா? பேமிலி ல 1 மிச்சம் விடுங்கப்பா


8 ஏம்ம்மா துளசி.நீ சிரிச்சாலே சகிக்காது.இதுல அழுகை வேற.துப்பட்டா போட்டுட்டு கிளம்பும்மா # யான்


9 கார்த்திகா புருவத்துக்கும் துளசி புருவத்துக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது போல\



10  துளசி கிட்டே ஜீவா = தனியாவா என்னைப்பார்க்க வந்தே? # பின்னே அக்கா கார்த்திகாவையும் கூட்டிட்டு வருவா னு பார்த்தீங்ளா?


11 டைரக்டர் டூ ராதா = உங்க பொண்ணு கிட்டே முகத்துல உணர்ச்சி காட்டி நடிக்கச்சொல்லுங்க 


ராதா = ம் ம் முடிஞ்சவரை காட்டுவா.டோன்ட் ஒர்ரி





சி பி கமெண்ட்  -
யான் - முன் பாதி , பின் பாதி மிச்ச மீதி பாதி எதைப்பார்த்தாலும் ஆகிடும் பேதி - விகடன் மார்க் = 39 , ரேட்டிங்க் = 2.25 / 5

  ஏ பி  சி  எல்லா செண்ட்டர்லயும் 10 நாள்  தா\ண்டாது . இது நயன் தாரா  மேல சத்தியம்



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.25   /  5
  

1 comments:

Unknown said...

தயவு செய்து பொறுமையாக படிக்கவும்,

டேய் டைரக்டர் என்னா ம.. படம்டா எடுத்துருக்கே.. இப்பதான் பார்த்தேன். சவுதி ரூல்ஸ இமிடேட் பண்ணி ஒரு படம்...
போலீஸ் வில்லனை சேஸ் பண்றார்
ஹீரோ ஹீராயின (ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை - ரெண்டும் ஒண்ணுதான்) சேஸ் பண்றார், அப்புறம் அவங்க அட்ரச சேஸ் பண்றார்.. காதல் காட்சிகள் ஒட்டவே இல்ல.. படம் முடியிற வரைக்கும் எங்கடா கதை அப்படின்னு தேடிகிட்டே இருந்தேன்.

சூப்பரப்பு சீன்கள்
ஹீரோ ஒரு இலச்ச ரூபாய்க்கு மேல் உள்ள பைக் வைத்திருக்கிறார்.. ஆனா வேலை இல்லை.. அதனால காதல் நிறைவேரல...
வேலை தேடி காலிஸ்தான் / கஜாஜாஸ்தானுக்கு வேலைக்கு போறார். எஜன்ட் ஹீரோ பேக்குல போதை பொருளை வைக்கிரதனால ஹீரோ ஜெயிலுக்கு போறார். அங்க ஒரு ஒரு மணிநேரம் படம் ஓடுது.
கத்தி உடன்ஜதனால ஹீரோவோட மரணதண்டனை தள்ளி வைக்கபடுது (இஸ்லாத்துல ராசி பாக்குற வழக்கம் இருக்கோ ?)
ஹீரோயின் என்னாலதான அவன் அங்க போனான்னு அவரை காப்பாத்த போறாங்க.. (அடடே என்ன ஒரு கருமாந்திர காட்சி).
போதை பொருள் தடை செய்யப்பட்ட நாடாம்... ஆனா அங்கே வில்லன் தண்ணி அடிப்பாராம்.. (சவுதிய மனசில வச்சிக்கிட்டு) பெண்கள் புர்கா போடனுமின்னு டிரைவர் சொல்றார் ஆனா வில்லன் வெட்டவெளியில் ஜட்டியோட உட்கார்ந்திருப்பாராம்,
இன்டர் போல் தேடுற ஆள் சர்வசதாரனமா வேறொரு நாட்டுல பெரிய பொறுப்பை ஏற்பாராம்
ஹீரோ போலிசை அடித்து போட்டுவிட்டு அவர் உடையை (பெரிசா தானே இருக்கணும்) போட்டுக்கிட்டு தப்பிச்சிடுவாராம்.
நாட்டு மிஞ்சினா ரெண்டு கிலோமீட்டர் இருக்குற பார்டரை தாண்ட ஒட்டகம் யூஸ் பண்ணுவாங்களாம். (அங்க பார்டர்ன்னு ஒரு பலகை வேற..)
சவுதியில போதை வழக்குக்கு ஜாமீன் தாறாங்களா ??
இவ்வளவு நடந்தும் கடைசியிளையும் ஹீரோவுக்கு வேலை இல்ல.. அப்படியே எண்டு கார்டு போட்டுடுறாங்க..

இஸ்லாமிய சகோதரர்கள் பெருசா விஸ்வரூபத்துக்கு இடைஞ்சல் கொடுத்தீங்களே.. உண்மையிலே இடைஞ்சல் கொடுத்து தவிற்கவேண்டிய படம் யான்.,.,

கடைசியா ஒன்னு சொல்லிகிறேன்.. படத்துல நடிச்சவன் இல்ல படத்தோட டைரக்டர் யாராவது Gulf பக்கம் வந்தீங்க.. இதுவரைக்கும், போதை மருந்துக்குத்தான் மரண தண்டனை கொடுத்து பாத்துருகீங்க மொதோ முறையா ஒரு மொக்கை படம் (கர் த்தூ) எடுத்ததுக்கு தண்டனை கொடுப்பதை அப்போ தெரிஞ்சுக்குவீங்க.

டேய் நான் அஞ்சானை கூட தாங்கிப்பண்டா... இந்தப்படத்த தாங்க முடியலடா... பாத்துட்டேனேடா... எப்படிடா மறந்து தொலைக்கிறது.. புலம்ப வச்சுட்டீங்களேடா