பொதுவாக ஒரு உப்புமா படம் இயக்கிய இயக்குனர்கூட பேட்டி கொடுக்கும்போது தமிழ் சினிமாவையே புரட்டிபோட வந்தவர் மாதிரியே பேட்டி கொடுப்பார். ஆனால் ஹரி அதற்கு நேர் எதிர்மாறானவர். உள்ளதை உள்ளபடி சொல்லும் அண்ணாச்சி அவர். பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அதற்கு ஒரு உதாரணம். சில கேள்வி பதில் இங்கே...
* திருநெல்வேலியில் படம் எடுத்தால் தாமிரபரணின்னு தலைப்பு வைக்கிறீங்க? கோவையில் படம் எடுத்தால் சிறுவாணின்னுதானே வச்சிருக்கணும் ஏன் பூஜைன்னு வச்சிருக்கீங்க?
கதைக்கும் தலைப்புக்கும் அத்தனை ரிலேஷன்சிப் இல்லீங்க. நான் என்னைக்கு படத்துக்கு சம்பந்தப்பட்ட தலைப்பு வச்சிருக்கேன்.
* இந்த படத்துலேயும் சுமோ அரிவாள் உண்டா?
நான் உங்கள மாதிரி சென்னையில ஜாலியா வாழ்றவன் இல்லை. நம்ம வாழ்க்கை தெற்கத்தி பக்கம்தான். திருநெல்வேலி, குற்றாலம், தென்காசிதான். அங்க அரிவாளும், சுமோவும் சகஜம், பார்டர்ல புரோட்டா சாப்பிட போனா அங்க ரெண்டு கோஷ்டி அரிவாளோட நிக்குது. எத்தனை நாள் பாதி சாப்போட்டோட கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா?. நான் கண்ணால பாக்குறதத்தானே சீனா வைக்க முடியும். ஒருத்தனை பத்து பதினைந்து பேரு துரத்துரறப்போ கொஞ்சம் அருவா சில சுமோக்கள் தவிர்க்க முடியாது. மன்னிச்சு விட்டுருங்க. ஆனா இந்த படத்துல குறைவுதான் அண்ணாச்சி.
* ஏன் ஒரே மாதிரி எண்டர்டெயின்மெண்டாவே படம் எடுக்குறீங்க? சீரியசா எடுக்கவே மாட்டீங்களா?
அதுக்குத்தான் நிறைய பேரு இருக்காங்களே. ஷங்கர் சார் உலக தரத்துல பிரமாண்ட படத்தை எடுத்துக்கிட்டிருக்கார். பாலா சார் உலக சினிமா எடுத்துக்கிட்டிருக்கிறார். வருதப்படாத வாலிபர் சங்கம் மாதிரி காமெடியா எடுத்துக்கிட்டிருக்காங்க. அந்த படங்களும் ஜெயிக்குது? நாமளும் பாராட்டுறோம். நான் லோக்கல்ல மசாலா படம் எடுக்கிற மந்திரவாதியாவே இருந்துட்டு போறேனே. அட நமக்கு இதுதாங்க வருது.
இவ்வாறு ஹரி ஜாலி பேட்டி அளித்தார்.
thanx-dinamalar
0 comments:
Post a Comment