Thursday, October 23, 2014

பென்சில்’ - ஜி.வி.பிரகாஷுடன் ஸ்ரீதிவ்யா.சிறப்புப் பேட்டி

தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருப்பவர் ஸ்ரீதிவ்யா. இவரது கைவசம் உள்ள படங்களின் பட்டியல் ‘வெள்ளக்கார துரை’, ‘ஈட்டி’, ‘காக்கிச்சட்டை’, ‘பென்சில்’ என்று தவுசண்ட் வாலா சரவெடியைப்போல நீண்டுகொண்டே போகிறது. ‘பென்சில்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் நடித்துக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். 

 
‘ஜீவா’ வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

 
இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸானபோது ‘வெள்ளைக்கார துரை’, ‘பென்சில்’ படங்களின் படப்பிடிப்புக்காக இங்குதான் இருந்தேன். நானே மூணு தடவை தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன். ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமாய் இந்த படத்தை பார்க்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 


‘ஜீவா’ படத்தைத் தொடர்ந்து ‘பென்சில்’ படத்திலும் ஸ்கூல் மாணவியாக நடிக்கிறீர்களே?


 
நான் இந்த வேடத்தை வேணும்னு எடுக்கலை. எனக்கு இந்தமாதிரி கேரக்டர் வேணும்னு இயக்குநர்கிட்ட கேட்க முடியாது. எனக்கு அமையும் கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். எதேச்சையாக எனக்கு ‘பென்சில்’ படத்திலும் ஸ்கூலில் படிக்கும் மாணவியாக வேடம் அமைஞ்சிருக்கு. ‘வெள்ளக்கார துரை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். இதிலும் வித்தியாசம் தெரியும். 


சினிமாவில் இத்தனை பிஸியாக இருந்தும் படிப்பை தொடர்கிறீர்களே?
ஆமாம். கரஸ்பான்டன்ஸில் எம்.ஏ. பொலிடிகல் சையன்ஸ் படிக்கிறேன்.
அப்படியென்றால அரசியல் பிடிக்குமா? 



அந்த பாடத்தின் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். அவ்வப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அப்டேட்டாக வச்சுக்குவேன். பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்திருந்தால் நாடே சுத்தமாகி விடுமே? நான் எப்போதோ எதிர்பார்த்த திட்டம் இது. 

 

நீங்க ரொம்பவே வெளிப்படையா பேசுவீங்கன்னு சொல்றாங்க. உங்க வயது, சம்பளம் எவ்ளோன்னு சொல்லுங்களேன்?
வெளிப்படையா பேசறதுல எனக்கு ஒண்ணும் பயம் இல்லை. என் வயசு 21. சம்பளம் பத்தி எனக்கே தெரியாது. எங்கம்மாவைத்தான் கேட்கணும். 


அக்கா ஸ்ரீரம்யா எப்படி இருக்காங்க?
அவங்களை என் அக்கான்னு சொல்றதை விட சிறந்த தோழின்னே சொல்லலாம். நான் நல்லா டான்ஸ் ஆடறதுக்கும் அவங்கதான் காரணம். அவங்க திறமையான கிளாசிக்கல் டான்ஸர். 



தொடர்ந்து இரண்டாவது முறையா சிவகார்த்திகேயன் கூட நடிக்கிறீங்க. உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி எப்படி?
சிவா ரொம்ப முன்னேறிட்டார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’படத்துலயே அவர் டான்ஸ் காட்சிகள்ல அசத்தினார். இப்போ ‘காக்கிசட்டை’ படத்துல சண்டைக் காட்சிகள்லயும் நல்லா பண்ணியிருக்கார். எங்களோட கெமிஸ்ட்ரி ரொம்பவே நல்லா இருக்கும். ஏற்கெனவே ஒரு படம் பண்ணினதால நிறைய விஷயங்களை பிரண்ட்லியா பேசி, நடிக்க முடியுது. 


ஷூட்டிங்குக்கு எப்பவாவது நீங்க பொய் சொல்லி கட் அடிச்சிருக்கீங்களா?
வாய்ப்பே இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே நடிப்புதான். இரவு, பகல்னு ஷூட்டிங் இருந்தாலும் கொஞ்சம்கூட சோர்ந்துபோகாம நடிப்பேன்.
தெலுங்கு படங்கள்லயும் கவனம் செலுத்தறீங்களே?
அடுத்து ரெண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கேன். அந்தப் படங்களோட படப்பிடிப்பு டிசம்பர்ல தொடங்கும். தீபாவளி முடிஞ்சதும் தெலுங்கில் நடித்த ‘வாரதி’ படம் ரிலீஸாகப் போகுது. இப்போ தீபாவளிக்கு ஊருக்கு போனதும் அந்த படத்தோட புரொமோஷன் வேலைகளில் இறங்கப்போகிறேன். அப்பப்போ நேரம் இருக்கும்போது விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்களை எப்படி தேர்ந்தெடுக்கறீங்க?
முதல்ல எனக்கு கதை பிடிக்கணும்.. அதுல என் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தா போதும். மற்றபடி எதையும் பார்க்கமாட்டேன். தமிழில் மனிரத்னம், கவுதம் மேனன் படங்கள் ரொம்பவே பிடிக்கும். அதனால அவங்க நடிக்க கூப்பிட்டா முதல்ல ஓ.கே சொல்லிடுவேன் அப்புறம்தான் கதையைக் கேட்பேன்.
இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?
தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்ச பண்டிகை. ஆனா பட்டாசு கொஞ்சம்கூட பிடிக்காது. சத்தம் இல்லாத வெடிகள் மட்டும்தான் வெடிப்பேன். தீபாவளிக்கு வீட்டில் என்னோட சமையல்தான். இந்த முறையும் நான்தான் சமைப்பேன். 


thanx - the  hindu

0 comments: