Monday, October 06, 2014

தப்பியது போயஸ்; சிக்கியது கோடநாடு-விஜிெலன்ஸ் துறை,

தப்பியது போயஸ்; சிக்கியது கோடநாடு

'ஜெ., அரசு ஊழியர்'-கருணாநிதி வழக்கு மேற்கோள் :சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., அரசு ஊழியராக கருதப்பட்டு உள்ளார். 'ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர, கவர்னர் அனுமதியளித்தது, சட்டப்படியானது தானா' என்று, அவரது தரப்பு வழக்கறிஞர்கள், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு, நீதிபதி குன்ஹா, தனது உத்தரவில் அளித்த பதில்:ஊழல் தடுப்பு சட்டத்தின்படி முதல்வராக பதவி வகிப்பவர் ஒரு அரசு ஊழியர். கருணாநிதி எதிர் இந்திய அரசு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு ஊழியர்கள் தான். அவர்கள் பதவியில் இருக்கும் வரை, அரசிடம் இருந்து சம்பளம் பெறுகின்றனர்' என, கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் படியும் அவர்கள் அரசு ஊழியராக தான் கருதப்படுவார்.ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, அரசின் வேலைகளை செய்வதற்காக, அரசிடம் இருந்து சம்பளம், சேவை கட்டணம், கமிஷன் ஆகியவற்றை பெறுபவர்கள் அரசு ஊழியர்கள் தான் (ஆலோசனை வழங்கல் போன்ற குறுகிய கால சேவை எனில், அந்த காலகட்டத்திற்கு மட்டும்).இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படும் போது, முதல்வராக ஜெயலலிதா இல்லை. இருந்தாலும், ஜெயலலிதா மீது, வழக்கு தொடர, கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் செல்லுமா என்கிற கேள்வி, 1997லேயே ஜெ.,யால் இந்த கோர்டில் எழுப்பப்பட்டு உள்ளது. அது செல்லும் என்று, எனக்கு முன் இந்த பதவியை வகித்தவர், ஏற்கனவே பதிலளித்துவிட்டார்.இவ்வாறு, நீதிபதி குன்ஹா, தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் தங்கள் சொத்துக்கள் குறைவாக மதிப்பிடப்பட்டு இருந்ததாக ஜெ.,யும், சசிகலாவும் கோர்ட்டில் முறையிட்டனர். அதன்படி:



*1988 - 91 காலகட்டத்தில் ஜெ.,யின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்திய விஜிெலன்ஸ் துறை, 1991ல் அவர்களின் சொத்துகளின் மதிப்பு 2.64 கோடி ரூபாய் என, மதிப்பிட்டு இருந்தன. அதை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கில், விசாரணை காலத்திற்கு முந்தைய சொத்தின் மதிப்பில் 62.42 லட்சம் ரூபாய் சேர்க்கப்பட வேண்டும்.

*சசிகலாவிடம் 62 நகைகள் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், 96 நகைகள் இருநத்ன. அதே போல், அவரிடம் 9.35 லட்சம் ரூபாய் இருந்ததாக காட்டப்பட்டு உள்ளது. ஆனால், 15.14 லட்சம் ரூபாய் இருந்தது.என, குறிப்பிட்டு இருந்தனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா, தன் தீர்ப்பில் தெரிவித்ததாவது:

*1988 - 91 காலகட்ட சொத்துகளின் விசாரணை அறிக்கையை, சில சட்ட காரணங்களினால், புலனாய்வு அதிகாரியின் கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டு உள்ளது. அது இந்த அறிக்கையின் அடிப்படையில் தானா என்பது தெளிவாக இல்லை.

*ஜெ.,யும், சசிகலாவும் மேற்கண்ட பட்டியலில் உள்ள சொத்துகளை தவிர, 1991ல் தங்களுக்கு கூடுதல் சொத்துகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதையும் கோர்டில் கொடுக்கவில்லை.

*மேலும், இந்த வழக்கின் விசாரணை காலத்தின் துவக்கத்தில், பட்டியலில் இருந்த சொத்துக்களை தவிர மற்றவை இருந்ததா (அல்லது
விற்கப்பட்டனவா உள்ளிட்ட வாய்ப்புகளுக்கு) என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.என்று கூறி, அவர்களுது கோரிக்கையை, நீதிபதி குன்ஹா ஏற்க மறுத்துவிட்டார்.


விலை ஏன் கம்மியா இருக்கு?



'700 கிலோ வெள்ளியோட விலை வெறும் 28 லட்சம் ரூபாய்னு பதிவாகி இருக்கே' என்று, அதிர்ச்சியாகாதீர்கள். இதெல்லாம் 1991ல் தயாரிக்கப்பட்ட விலை பட்டியல். அப்போது வெள்ளி யின் விலை கிலோவுக்கு 4,000 ரூபாய் என்று, கணக்கிடப்பட்டு உள்ளது. இன்றைய நிலையில் வெள்ளி விலை கிலோவிற்கு 38 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இன்றைய விலையில் 700 கிலோ வெள்ளியின் மதிப்பு 2.7 கோடி ரூபாய். 20 ஆண்டுகளில் 10 மடங்கு (1,000 சதவீதம்) உயர்வு! இதே காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். போயஸ் தோட்டம் வீட்டின் இன்றைய மதிப்பெல்லாம், இந்த பட்டியலுக்காக வீடுகளை மதிப்பிட்ட பொதுப்பணி துறை பொறியாளரின் கால்குலேட்டரில் கூட கொள்ளாது.

- நமது நிருபர் -

thanx - dinamalar

0 comments: