தினமலர் விமர்சனம்
ராமன்
எனும் விஜித், தில்மி எனும் தில்மிகா, திவா எனும் பாலா, வைபவி, ரமேஷ்,
பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரூ, கண்ணன், சந்திரன் உள்ளிட்ட வெளிநாட்டு
வாழ்இந்தியர்கள் நடிக்க., முழுக்க, முழுக்க மேலைநாடுகளிலேயே
படமாகியிருக்கும் தமிழ் படம் தான் யாவும் வசப்படும்.
கதைப்படி.,
ஒரு பெரிய கடத்தல் கேங், காசுக்காக ஒரு பெரிய மனிதரின் பருவ வயது மகளை
கடத்துகிறது. கடத்தல் தலைவனுக்கு தெரியாமல் அந்த கடத்தலுக்கு
பொறுப்பேற்கும் 40 வயது ஆசாமி அந்த காசை அடித்து போக ஆசைப்படுகிறான்.
அவனுக்கும் தெரியாமல் அவனுக்கு கையாளாக வரும் அந்த கடத்தல் பெண்ணின் காதலன்
அந்த காசை அடித்து போய் கடத்தப்பட்ட காதலியுடன் வாழ துடிக்கிறான். இது ஒரு
கட்டத்தில் அந்த கடத்தப்பட்ட நாயகிக்கு தெரிய வருகிறது. அவரும் இவர்களது
கடத்தலுக்கு ஒத்துழைக்கிறார். காதலி ஒத்துழைக்கிறாரா? ஒத்துழைப்பது மாதிரி
நடிக்கிறாரா.? இதில் யாருடைய ஆசை நிராசை ஆனது..? யாருடைய ஆசை நிறைவேறிய
ஆசையானது..? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ் !
ராமாக
வரும் விஜித், தில்மியாக வரும் தில்மிகா, திவாவாக வரும் பாலா உள்ளிட்ட
எல்லோரும் உயிரை கொடுத்து நடித்திருக்கின்றனர். கடைசியில் தில்மியை
தவிர்த்து எல்லோரும் உயிரையும் கொடுக்கின்றனர். என்ன? சில இடங்களில் நம்
பொறுமையை சோதித்து ரசிகர்களின் உயிரையும் எடுப்பது தான் பலவீனம் !
ஆனால், அந்த பலவீனம் தெரியாமல் என்.டி.நந்தாவின் ஒளிப்பதிவில், அயல்நாட்டு லோகேஷன்கள் பளிச்சிட்டிருக்கின்றன.
ஆர்.கே.சுந்தரின் இசையில், பாடல்களும் பரவாயில்லை, பின்னணி இசையிலும் குறையொன்றுமில்லை!
ஆயிரமிருந்தும்
வசதிகள் இருந்தும்... இயக்குநர் புதியவன் ராசய்யாவின்
எழுத்து-இயக்கத்தில், ''யாவும் வசப்படும்'' படத்தின் இறுதியில் எல்லோரும்
சுட்டுக்கொல்லப்படுவது தான் புரியாத புதிர்.
மொத்தத்தில்,
''யாவும் வசப்படும்'' - ''எங்களாலும் முடியும் என வெளிநாட்டுவாழ்
இந்தியர்கள் நிரூபித்திருக்கும்
thanx - dinamalar
0 comments:
Post a Comment