Saturday, October 18, 2014

சமூக வலைத்தளங்களில் என் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதன் பின்னணியில் சதி: சரிதா நாயர்

சரிதா நாயர்| கோப்புப் படம்: எஸ். சிவ சரவணன்.
சரிதா நாயர்| கோப்புப் படம்: எஸ். சிவ சரவணன்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ள என்னைப்போன்ற ஆபாசப் படங்களுக்குப் பின்னால் சதி நடந்து வருகிறது என சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் ஆழப்புழா செங்கனூரை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் நாயர். இவர்கள் கோவை வடவள்ளியில் சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். அந் நிறுவனத்தில் ரவி என்பவர் மேலாளராகப் பணிபுரிந்தார். மானிய விலையில் காற்றாலை அமைத்துத் தருவதாக பணத்தை வாங்கிவிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக கோவை மற்றும் உதகையை சேர்ந்த இரு வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணை யில் சரிதா நாயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு இடைவேளை யின்போது நிருபர்களை சந்தித்த சரிதா நாயர், “சமூக வலைதளங் களில் என்னை போன்று ஆபாசப் படங்கள் பரப்பப்பட்டுள்ளன. அந்த படங்களில் இருப்பது நான் இல்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னைப் போன்று உருமாற்றம் செய்துள்ளனர். என்னை களங்கப்படுத்த வேண்டும் என அவ்வாறு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள மாநிலம் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளேன்.
உம்மன்சாண்டி
இதற்கிடையே, சவுதிஅரேபியா வில் இருந்து இணையதளம் மூலமாக எனது அலைபேசிக்கு அவ்வப்போது அழைப்பு வரு கிறது. சோலார்பேனல் மோசடி யில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சில அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயரை வழக்கு விசாரணையின் போது சொல்லுமாறு மிரட்டுகின்றனர். அவ்வாறு இல்லையெனில், மேலும் நான் இருப்பது போன்ற ஆபாசப் படங்களை வெளிவிடுவதாகவும், கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். நான் அவர்களது மிரட்டலுக்குப் பயப்படவில்லை. எனக்கு எதிராக சதி நடக்கிறது. சட்டத்தின் மூலம் அதனை வெல்வேன்.
எனது தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அதனால், வரும் காலத்தில் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்வேன்” என்றார். 



 thanx - the hindu

0 comments: