1 1 கத்தி 2 பூஜை 3 புலிப்பார்வை ,4 மேடை 5 HAPPY NEW YEAR (hindi )# தீபாவளி ரிலீஸ்
விஜயின் ‘கத்தி’ படம் நாளை திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘கத்தி’
விஜய், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன், ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரித்துள்ளனர். இந்த படம் நாளை தீபாவளி அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்தன. தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு, விளம்பரமும் செய்யப்பட்டது.
‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று சில தமிழ் அமைப்பினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சுபாஷ்கரன் மறுத்தார். ஆனாலும், எதிர்ப்புகள் தொடர்ந்தது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், தீபாவளிக்கு ‘கத்தி’ படம் வெளிவருவதையொட்டி எதிர்ப்பாளர்களுடன், தயாரிப்பு தரப்பினர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், எதிர்ப்பாளர்கள் சார்பில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் பங்கேற்றார். இரவு 11 மணிவரை பேச்சுவார்த்தை நீடித்தது.
சுமுக தீர்வு
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கத்தி’ படம் பற்றிய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி நாளை (புதன்கிழமை) படம் ரிலீஸ் ஆகும். டிக்கெட் முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
முன்னதாக, ‘கத்தி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி மனு கொடுத்திருந்தார்

2 பூஜை
யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு
தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி கூட்டணி சேர்ந்துள்ள படம் பூஜை. இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.
பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே வரிவிலக்கு பெற இயலும், ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பூஜை படக்குழுவினர்.
பூஜை படம் தீபாவளியன்று, விஜய்யின் கத்தி படத்தோடு மோத இருக்கிறது.
யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு
ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 13வது படம் பூஜை. இந்த படத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன்-சத்யராஜ் முக்கிய வேடங்களில நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருககிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை விஷால் படங்கள் இல்லாத அளவுக்கு 1108 தியேட்டர்களில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70, ஆந்திராவில் 473, கர்நாடகாவில் 47, எப்எம்எஸ்- 143 ஆக மொத்தம் 1108 தியேட்டர்களில் பூஜை வெளியாகிறதாம். இதில் தமிழ்நாட்டை விட, ஆந்திராவில்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.
தமிழில் உருவான ஒரு படத்துக்கு தெலுங்கிற்கு இத்தனை முக்கியத்தும் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. தமிழில் விஜய்யின் கத்தி படம் சர்ச்சைகளில் சிக்கியிருந்தபோதும், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது. அதனால் விஷால் படம் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் உண்மை
அதனால் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூல் இல்லையென்றால்கூட ஆந்திர ரசிகர்கள் படத்தை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் விஷாலுக்கு அதிகமாக உள்ளதாம். காரணம், விஷால் ஆந்திராக்காரர்தான் என்றபோதும், அவருக்கு அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், அப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அவர் நடித்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட அங்கு வசூலை வாரி குவித்திருக்கின்றன.
அவர் ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டால்கூட அந்த படம் ஹிட்தான் என்ற செண்டிமென்ட் இருப்பதால்தான் விஷாலுக்கு ஆந்திரா மீது இத்தனை நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். ஆக, தமிழ்நாட்டில் விஷால் படம் என்று வெளியாகும் பூஜை, ஆந்திராவில் ஸ்ருதிஹாசன் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகிறதாம்.
தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப்
பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப்
பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான
ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப்
பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு
வருகின்றன. ஆனால், 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை.
இருந்தாலும் 'பூஜை' படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு
சாதனையைப் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம்
முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக
உள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில்
சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும்
திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி கமர்ஷியல்
இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர்
இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம். அதோடு
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு
அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக்
கொடுத்துள்ளதாலும், 'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில்
வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பூஜை' படத்துடன் தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. 'கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது.
3
ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர்
ஃபரக் கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படத்திற்கு சென்சார் போர்ட் யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகப் பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.
அக்டோபர் 24ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் ரிலீசாவதற்கு முன்னே அனைவரிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் அனைவரும் ரசிக்கும் விதத்தில் அமையும் என எதிர்பார்த்தோம். அத்துடன் தற்போது அப்படத்திற்கு யு சான்றிதழும் கிடைத்துள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்று விடும். இந்த படத்தை எடுப்பதற்கு முன்பே இது குடும்பத்துடன் ரசிக்கும் படமாக அமைய வேண்டும் என நானும் ஃபரக் கானும் முடிவு செய்தோம். அதன்படியே படமும் அமைந்து யு சான்றிதழை பெற்றுள்ளது. அதனால் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்த்து தீபாவளியை குதூகலமாக கொண்டாடலாம் என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் ரசிக்கும் படமாகவும், இசை, நடனம் என நல்லதொரு பொழுதுபோக்கு படமாகவும் அமைய வேண்டும் என மனதில் வைத்தே இந்த படத்தின் கதையை உருவாக்கினேன். நிச்சயமாக இந்த ஹேப்பி நியூ இயர், இந்த தீபாவளியை ஹேப்பி தீபாவளியாக மாற்றி விடும். மைன் ஹூன் நா மற்றும் ஓம் சாந்தி ஓம் போல இதுவும் மக்களை கவரும் விதமாக இருக்கும் என படத்தின் டைரக்டர் ஃரக் கான் தெரிவித்துள்ளார்.
4

- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/23069/cinema/Kollywood/Happy-New-Year-gets-U-certificate,-team-happy.htm#sthash.zKTp1zG4.dpuf
0 comments:
Post a Comment