தினமலர் விமர்சனம் » தாவத்-இ-இஷ்க் (இந்தி)
தாவத் இ இஷ்க் படத்தில் தேவையான அனைத்து அம்சங்களையும் மிக சரியான
அளவில் புகுத்தி தந்துள்ளார் டைரக்டர் ஹபீத் பைசல். இந்த படத்தில் பரினிதி
சோப்ரா, ஆதித்யா ராய் கபூர், அனுபம் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில்
நடித்துள்ளனர்.
குல்ரஸ் என்ற ஐதராபாத்தில் தனது தந்தையுடன்
வசிக்கும் பெண்ணாக வருகிறார் பரினிதி சோப்ரா. தந்தையாக அனுபவம்
நடித்துள்ளார். படித்து விட்டு ஷூ-சேல்ஸ் கேளாக வேலை செய்யும் குல்ரசை
வரதட்சணை கேட்டு பெண் கேட்டு வருகிறனர். ஆனால் அதனால் வெருப்படைந்த
குல்ரஸ், அமெரிக்கா செல்ல நினைக்கிறாள். மாப்பிள்ளை வீட்டாரின் திட்டத்தை
தெரிந்து கொள்ளும் குல்ரஸ், ரகசிய கேமிரா மூலம் அவர்களின் திட்டத்தை
படமெடுக்கிறாள். அந்த வீடியோவை போலீசில் கொடுத்து விடுவதாக கூறி அந்த
குடும்பத்தினரை மிரட்டுகிறாள். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக கொடுத்த
பணத்தை கொண்டு தான் அமெரிக்கா செல்ல நினைக்கிறாள்.
இந்நிலையில்
லக்னோவில் உணவு விடுதி வைத்து நடத்தும் புகழ்பெற்ற சமையல்காரராக தரிக்
ஹைதராக வருகிறார் ஆதித்யா ராய் கபூர். இவருக்கும் குல்ரசிற்கும் இடையே
பழக்கம் ஏற்படுகிறது. பின் தான் செய்வது தவறு என்பதை புரிந்து கொள்ளும்
குல்ரஸ், தனது திட்டப்படி வெளிநாடு செல்கிறாள். இவர்களது காதல் ஒன்று
சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
லக்னோக்காரராக
வரும் ஆதித்யாவின் நடிப்பு பாராட்டும் படி உள்ளது. தனது கதாபாத்திரத்தில்
மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தோற்றம், ஸ்டைல், பேச்சு என
அனைத்திலும் தன்னை லக்னோக்காரராகவே மாற்றிக் கொண்டுள்ளார் என்றே
சொல்லலாம். அப்பாவிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரினிதி
சோப்ராவின் பர்மாமென்ஸ் சிறப்பாகவே உள்ளது. தனது கதாபாத்திரத்தை மிக
நேர்த்தியாக செய்துள்ளார். தன்னை ஐதராபாத் பெண்ணாக மாற்றிக் கொள்ள
ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் போலும்.
பரினிதி சோப்ராவின் தந்தையாக
வரும் அனுபவம் கர், தனது பொறுப்பான நடிப்பின் மூலம் அனைவரின்
பாராட்டையும் பெறுகிறார். நகைச்சுவை நடிகராக புதுமுகமான கரன் வாகி மிகக்
குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளார். தனது முந்தைய படங்களில் இருந்து
மாறுபட்டதாக அமைத்து இதனை அழகான அனைத்தும் கலந்த மசாலா படமாக
கொடுத்துள்ளார் டைரக்டர் ஹபீத் பைசல். குல்சர் மற்றும் தரீக் இடையேயான
காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் உணர்வு பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.
காதல்
கதை என்பதால் இந்த படம் அதிகப்படியான எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி உள்ளது.
சுகமான காதல் கதையாக இருந்தாலும், அதனை உடைக்கும் விதமாக உள்ளது திரைக்கதை.
சற்றே போரடிக்க வைக்கிறது. கதையை தயார் செய்வதில் டைரக்டர் ரொம்பவே
சொதப்பி இருப்பது தெரிகிறது. காதல், நடிப்பு, உணர்ச்சி என பல விஷயங்கள்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவில்லை. முழுமையற்ற கதை காரணமாக முழுமையாக
பொழுதுபோக்கு படமாக இதனை தர டைரக்டர் தவறி விட்டார் என்றே சொல்ல
வேண்டும்.
மொத்ததில் தாவத் இ இஷ்க்....ஒரு சிறப்பான படமாக
இல்லாவிட்டாலும் ரசிகர்களை கவரும் காதல் கதையாக சொல்லப்பட்டிருப்பதால்,
பரினிதி சோப்ராவும், ஆதித்யா ராய்யும் இதனை பைசா வசூல் படமாக ஆக்கி
உள்ளனர்.
thanx - dinamalar
0 comments:
Post a Comment