Saturday, September 13, 2014

creature 3d (hindi)-சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

டைரக்டர் விக்ரம் பட் சமீபத்தில் இயக்கி, வெளிவந்துள்ள படம் கிரியேச்சர் 3டி. நடிகை பிபாசா பாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இம்ரான் அப்பாஸ் நஹ்வி, முகுல் தேவ், பிக்ரம்ஜீத் கன்வர்பால், தீப்ராஜ் ரானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஹானா தத்தாக பிபாசா பாசு நடித்துள்ளார். ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடப்பது போன்று கதை நகர்கிறது. காட்டுக்குள் இருக்கும் அந்த வீட்டில் அஹானா தத் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவராக குணால் ஆனந்த் என்ற கதாபாத்தில் இம்ரான் அப்பாஸ் நடித்துள்ளார்.

அந்த வீட்டில் தங்கி இருக்கும் உறவினர்கள் ஒரு மர்ம விலங்கினத்தால் தாக்கப்படுகின்றனர். குணால் மற்றும் புரோபசர் சாதனாவாக வரும் முகுல் தேவ் ஆகியோரின் உதவியுடன் அஹானா அந்த மர்ம உயிரினத்திடம் இருந்து எவ்வாறு தன்னையும், தன் விருந்தினர்களையும் காப்பாற்றி கொள்கிறாள் என்பதை திகிலுடன் சொல்வது தான் கிரியேச்சர் படத்தின் கதை.

பாலிவுட்டின் முதல் மர்ம உயிரினம் பற்றிய படம் என்பதால் விக்ரம் பட்டிற்கு இந்த படம் பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்திற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்ட வைக்கிறது. முதல் முறையாக மர்ம உயிரினத்தை காட்டும் போது அது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதன் முதுகில் செதில்களுடனும், பச்சை நிற கண்களுடனும் 3டி தொழில்நுட்பத்துடன் திரையில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

பிபாசா பாசு தனது வழக்கமான பாணியை முற்றிலும் மாற்றிக் கொண்டு, கடினமாக உழைத்திருப்பது நன்கு தெரிகிறது. அனைவரும் பயந்து நடுங்கும் போது, குழப்பமும் கண்ணீரும் கலந்து தனது உணர்வை கண்களில் வெளிப்படுத்தி இருக்கும் விதம் சபாஷ் போட வைக்கிறது. அந்த காட்சிகள் பிபாசா பாசுவின் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் நல்லதொரு சான்ஸ் என்றே கூறலாம். கதைக்கு தேவையான மிக நேர்த்தியாகவும், அழகாகவும் பிபாசா அளித்துள்ளார்.

இருப்பினும் உறவினர்கள் தாக்கப்படும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் பஞ்சம் என்றே கூற தோன்றுகிறது. இம்ரான் தனது இயல்பான நடிப்பால் பேச வைத்துள்ளார். முகில் தேவ், மீண்டும் இந்த படத்தில் மிச்ச சொச்சமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார். உப்புசப்பிலாமல் வரும் புரோபோசர்.

மொத்தத்தில், கிரியேச்சர் 3டி - பாலிவுட்டின் ஒரு புதிய முயற்சி!

ரேட்டிங் ஸ்டார் - 3/5
 
thanx -dinamalar 
 
  • படம் : கிரியேச்சர் 3டி (இந்தி)
  • நடிகர் : இம்ரான் அப்பாஸ் நக்வி
  • நடிகை : பிபாஷா பாசு
  • இயக்குனர் :விக்ரம் பட்
  • படம் : கிரியேச்சர் 3டி (இந்தி)
  • நடிகர் : இம்ரான் அப்பாஸ் நக்வி
  • நடிகை : பிபாஷா பாசு
  • இயக்குனர் :விக்ரம் பட்
  • - See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1500&ta=I#sthash.40a3IosL.dpuf
     
    - See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1500&ta=I#sthash.40a3IosL.dpuf

    0 comments: