தினமலர் விமர்சனம்
‛காதல் கோட்டை' டைப் நாயகனும், நாயகியும் கடைசிவரை நேரில் சந்திக்காத காதல் கதை! ஆனால், ‛காதல் கோட்டை' கவித்துவமான காதல் கதை... என்றால், இது, காசுக்கு கொலைக்கு பண்ணும் கையாளின் காதல் கதை ‛‛தமிழ்செல்வனும் 50km கலைச்செல்வியும்'' டைட்டிலில் மட்டும் தான் கதவித்துவம்! மற்றபடி கத்தியும், இரத்தமும் தான்!
ராணிப்பேட்டை ரவுடி காசியின் கைகூலி தமிழ்செல்வனுக்கு போனில் அறிமுகமாகிறார் கலைச்செல்வி! போன் பேச்சு லவ் ஆச்சு... எனும் சூழலில், கலைச்செல்வியை, அவர்தான் கலைச்செல்வி என்பது தெரியாமல், தீர்த்து கட்டும் அசைமெண்ட்டுக்காக.... தன் பாஸ் காசு வாங்கி கொண்டு போட்ட அக்ரிமெண்ட்டுக்காக திருத்தணி, திருச்சிராப்பள்ளி... என ஆட்களுடன் அலைகிறார்... ஹீரோ. கலையை, தமிழ் தீர்த்து கட்டினாரா.? அல்லது கடைசி நேரத்தில் அவர்தான் கலை என உணர்ந்து காதலை சொன்னாரா.? கலையை தீர்த்து கட்டுமளவிற்கு அவருக்கு விரோதிகள் யார்.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்க முயன்று அதில் கதை, திரைக்கதையில் வெற்றியையும், இயக்கத்தில் தோல்வியையும் தழுவியிருக்கிறது ‛‛தமிழ்செல்வனும் 50km கலைச்செல்வியும்'' மொத்தபடமும்!
கதாநாயகனாக புதுமுக அறிமுகம் ராஜேஷ், கதாநாயகியாக அனாமிகா உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறது.
ராஜதுரையின் ஒளிப்பதிவு, சந்திரா பார்ஸின் இசை இரண்டும் பாஸ் மார்க் வாங்கி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
‛காதல் கோட்டை' காதல், பிணத்துடன் உறவு கொள்ளும் பெரிய மனிதன், க்ளைமாக்ஸில் நாயகியை கொன்றுவிட்டு போட்டோவை வைத்துக் கொண்டு புலம்பும் ஹீரோ... என பி.பாண்டியனின் எழுத்து-இயக்கத்தில், வழக்கமான காட்சிகளுடன் ‛‛தமிழ்செல்வனும் 50km கலைச்செல்வியும் - 5km கூட கரை சேரவில்லை!'' பாவம்!!
thanx - dinamalar
படம் : தமிழ்செல்வனும் கலைசெல்வியும்
நடிகர் : , ராஜேஷ்
நடிகை : , அனாமிகா
இயக்குனர் : , பி. பாண்டியன்
0 comments:
Post a Comment