ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . நகர் ல ஆங்காங்கே ஏ டி எம் செண்ட்டர்களில் கொள்ளை நடக்குது . நவீனமான கொள்ளை . அதாவது ஏ டி எம் செண்ட்டர்ல நம்ம ஏடி எம் கார்டு பாஸ் வோர்டு திருடி போலி கார்டு ரெடி பண்ணி ரத்தம் இன்றி யுத்தம் இன்றி சாத்வீகமா சாமார்த்தியமான திருடல் . இந்தப்பிரமாதமான சப்ஜெக்டை எவ்வளவு த்ரில்லிங்கா பண்ணி இருக்கலாம் ? ஒரு பர பரப்பான த்ரில்லர் கம் ஆக்ஷன் பேக்கேஜ் கதையை வெச்சுக்கிட்டு பின் பாதியில் பட்டையைக்கிளப்பும் திரைக்கதை வேகத்தை வெச்சுக்கிட்டு எதுக்குதான் இயக்குநர் அவ்வளவு தடுமாறினாரோ முன் பாதியில் ?
ஜில்லா வில் வருவது போல் அப்பா வுக்கு போலீஸ் பதவியில் மகனைப்பார்க்க ஆசை . ஆனா மகனுக்கு அது பிடிக்கலை . காதலிக்கும் போலீஸ் காதலன்னா பிடிக்காது . சம்பந்தமே இல்லாம ஹரித்வார் டூர் ல 4 ரீல் என முன் பாதியில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் .
ஹீரோவா விக்ரம் பிரபு . ஹாட்ரிக் வெற்றியைக்கொடுத்தவர் . ஹேர் இழையில் அந்த வெற்றியைத்தக்க வெச்சுக்கிட்டார் . கொஞ்சம் ஏமாந்திருந்தா இது ஒரு தோல்விப்படம் ஆகி இருக்கும். ஆனாலும் செம ஹிட் படத்தை சாதா ஹிட் படமாக்கிட்டாங்கனு தான் சொல்லனும் . போலீஸ் ஆஃபீசர் கெட்டப்பில் எக்ஸ்ட்ரா கம்பீரம் காணோம் . மழு மழு அமுல் பேபி போல் இருக்கார்
ஹீரோயினா மோனல் கஜ்ஜர் . ஆந்திரா ஸ்வீட் ஆப்பம் . மொழு மொழு கன்னங்கள் . பஞ்சு மிட்டாய் குட்டி உதடு ,துக்ளியூண்டு கண்கள் என முதலுக்கு மோசம் இல்லை ( இவன் டிக்கெட்க்கு கொடுத்த 100 ரூபா தான் மொதலாம் . அதுக்கு மோசம் இல்லையாம், அடேய் ;-)) பாடல் காட்சிகளில் இவர் கிளாமர் காட்டாதது அதிர்ச்சி அளிக்கிறது . நாம எதுக்கு தான் ஜெர்க் ஆகலை ?
ஹீரோவோட அப்பாவா சத்யராஜ் . நல்ல கேரக்ட்ர் ரோல் . வில்லனின் காலை விடாமல் பிடிப்பது எல்லாம் ஊமை விழிகள் ல யே பாத்துட்டோம் பாஸ் . ஆனாலும் கண்ணியமான நடிப்பு
ஈரோடு மகேஷ் இந்தப்படத்துல சப் இன்ஸ்பெக்டரா வர்றார் . யார்யா அங்கே நக்கலா சிரிக்கறது ?
வில்லன்களாக வரும் அந்த 3 பேரும் இன்னும் மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கலாம் .
இசை அண்ணன் இமான். கூச்சமே இல்லாம சுட்டிருக்கார் . எதுக்காக கூச்சப்ப்படனும் ? யாரும் செய்யாததையா அவர் செஞ்சுட்டார் ? தேவா வை நிறுத்தச்சொல் , ஹாரீஸ் ஜெயராஜை நிறுத்தச்சொல் . நானும் நிறுத்தறேன்பாரோ ?
பின்னணி இசை சுமார் ரகம் . 2 பாட்டு ஹிட் ஆகிடும்
ஆக்சன் காட்சிகள் , ஃபைட் காட்சிகள் நம்பகத்தன்மையோட இருக்கு . சினிமாத்தனம் இல்லை . க்ளைமாக்சில் நல்ல விறு விறு[ப்பு
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. எந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் ல இன்ஸ்பெக்டர் டியூட்டி டைம்ல லவ்வர் கூட மேட்னி ஷோ க்குப்போறார் ?
2 ஹீரோ சினிமாக்குப்போவது யாருக்கும் தெரியாது . அவர் செல்லும் ஸ்விட்ச் ஆஃப். எப்படி மகேஷ் சரியா அதே தியேட்டர் ல வந்து ஸ்லைடு போட்டுக்காட்றார் ?
3 ஃபாரீன் பேங்க் அக்கவுண்ட் ல ஒரு லட்சம் ஒரு நாள் ல எடுக்கலாம், லோக்கல் அக்கவுண்ட் -னா 25,000 தான் எடுக்க முடியும் என்பது சரிதான் . ஆனால் ஃபாரீன் திருட்டுக்கு இன்னொரு பங்கு வரும் . அவனுக்கும் பங்கு தரனும் , ரிஸ்க்கும் அதிகம் . அப்போ லோகல் தானே சேஃப்டி ?
4 ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ஹரித்வார் ல சுத்திட்டு இருக்காங்க . அடுத்த ஷாட்டில் லோக்கல் ல இருக்காங்க . அடுத்த ஷாட்டில் ஹரித்வார் . எடிட்டிங்க் ஃபால்ட்டா?
மனம் கவர்ந்த வசனங்கள்
ஆம்புலன்ஸ் வர்றதை ஒரே ஷாட் ல் காட்னா சாதா டைரக்டர்.கட் பண்ணி க்ட் ப்ண்ணி காட்டி டெம்ப்போ ஏத்துனா பிலிம் இன்ஸ்டிடியூட் டைரக்டர் !
ஒருத்தன் தோள்ல ஸ்டார் ஏறனும்னா அவன் நிஜமாவே ஸ்டாரா இருக்கனும்
இந்தக்காலப்பசங்களுக்கு சின் சியாரிட்டின்னா சிங்கிள் டீ சாப்பிடற மாதிரி.ஒருத்தனும் மதிக்கறதில்ல
இதை நாங்க மாமா வேலைம்போம்.
சொல்லிக்க.எனக்கு இது மார்க்கெட்டிங்
ஏதோ சரக்கு பார்ட்டின்னியே?
அப்பா.அது வந்து GOODS ,EQUIPMENTS இந்த சரக்கு.
ஓ.சரி சரி.நான் ஏமாந்துட்டேன்
பேங்க் ல க்ரெடிட் செக்சன் ல ஒர்க் பண்றவனே போர்ஜரி பண்றான்.
நீ வாஜ்பாய்! நான் பிளேபாய்!,!
கோவை சரளா = என் பேத்தி பேரு அம்புஜம்.சுருக்கமா அம்பு அம்பு னு கூப்பிடுவோம்.
கிளுகிளுப்பா இருக்கே.நானும் அப்டியே கூப்பிட்டுக்கறேன்!
அந்த சாமியார் முகத்துல ஞானஒளி தெரியுதா?
அந்தாள் மூஞ்சியே சரியாத்தெரியல
டியர்.நீ ஆப்பிள் ஐ போன் மாதிரி அம்சமா இருக்கே.உங்க்ப்பன் பிளாக்பெர்ரி மாதிரி கருப்பா இருக்கான்?
சார்.கடலை கடலை.சூடான கடலை.கடலை சாப்டுட்டே சூசயிடு சீன் பாருங்க
ஏ டி எம் கறதே எனி டைம் மர்டர் நடக்கற ப்ளேஸ் ஆகிடுச்சு
காதலி = பட டிக்கெட் என் செலவு.டின்னர் உன் செலவு.
ஓஹோ.240 ரூபா உன் செலவு.2500 ரூபா என் செலவா?,செம மூளை
நாளைக்கு நம்ம ஜிம் க்கு நமீதா வர்றாங்க.அவங்க சைஸ்க்கு தம்பிள்ஸ் எல்லாம் வாங்கனும்.என்ட்ரன்ஸ் எல்லாம் இடிச்சுக்கட்டனும்
வாழ்க்கைல ஜெயிக்கற தருணம் எல்லாருக்குமே ஒரு முறை வரும்.உனக்கும் வரும்
டேய்.நீ கண்ணாடி பாக்கறதே தப்பு.இதுல கண்ணாடி போடறது அதை விடத்தப்பு கழட்றா கூலிங்கிளாஸை
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
பார்த்தேன் ரசித்தேன் பட பாடலான பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் பாட்டு மெட்டின் அப்பட்டமான காபி ! #,டக்கு டக்கு டக்குனு
இமான்.=,ஏ ஆர் ஆர் மாதிரி பெரிய ஆளா வரனும்
குட்.இப்போதான் தேவா ,ஹாரீஸ் மாதிரி ஆகி இருக்கீங்க #,உல்டா
ஜில்லா கதை மாதிரியே போகுதே.அப்பா பெரிய போலீஸ்.பையன் க்கு போலீஸ் ஆகவே பிடிக்கலை
ஏடிஎம் சென்டர் ல பணம் கொள்ளை அடிக்கும் காட்சிக்கு ஏக வரவேற்பு.எல்லாம் ஒரு ஆதங்கம் தான்
அவளுக்குப்பிடிக்கலைன்னா நான் கிஸ் அடிச்சப்பவே வாய் விட்டுக்கத்தி இருக்கலாமே?
எப்டி?நீ கிஸ் அடிச்சதே அவ வாய்ல தானே?
கும்கி யானையைக்கூட மேய்ச்சுடலாம்.இந்தப்பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி மாளலை
படத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாம ஹீரோ ஹீரோயின் உட்பட 20 பேர் ஹரித்வார் ரை 1 மணி நேரமா சுத்திப்பாத்துட்டிருக்காங்க.புரொடியூசர் பாவம்
ஹீரோயின் பேரு மோனல் கஜ்ஜர்.பேர் தான் வாய்லயே நுழையல்.ஆனா பிகர் ம்ம்ம்ம்ம்
பிடிக்குதே திரும்பத்திரும்ப உன்னை குட் மெலோடி.ஒரிஜினல்.அடடே!
ஈரோடு மகேஷ் க்கு அபாரமான நினைவாற்றல்.1978 ல வந்த ஆனந்த விகடன் ல வந்த மொக்கை ஜோக் எல்லாம் சொல்றார்.
சிகரம் தொடு = இடைவேளை.இளையதளபதி யின் ஜில்லா வில் பாதி கூட இல்லை :-(( அதே சாயல் கதை
ஈரோடு மகேஷை சப் இன்ஸ்பெக்டர் யூனிபார்ம்ல பார்க்கும்போது மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியன் மாதிரியே இருக்கு.அடேங்கப்பா
சீனு சீனு ஓவர் சீனு போட்டதெல்லாம் வீணு செம கானா குத்து
அபூர்வ சகோதரர்கள் பார்த்தேன்.2 குழந்தைங்க
ஈரோடு மகேஷ் = நல்ல வேளை.1000 தலைவாங்கிய அபூர்வசிகாமணி பார்க்கலை # ஒரிஜினல் SV sekar drama 1988
போலீஸ் ஆபீசரான ஹீரோ ட்யூட்டி டைம்ல ஸ்டேசனை அநாமத்தா விட்டுட்டு காதலி கூட மேட்னி ஷோ # இவன் வேற மாதிரி இல்ல.இவன் நம்ம மாதிரி
பின் பாதியில் பிரமாத்மான த்ரில்லிங் சீன் க்ள் வெச்சுக்கிட்டு முன் பாதியில் சொதப்பியது ஏனோ? #
சி பி கமெண்ட் -சிகரம் தொடு = முன் பாதி சவ சவ பின் பாதி பர பர.ATM கொள்ளையர் கதை - விகடன்
மார்க் = 41 ,ரேட்டிங் = 2.5 / 5.ஏ பி சென்ட்டரில் சுமாரா ஓடிடும்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.5 / 5
diski - வானவராயன் வல்லவராயன் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 09/blog-post_86.html
diski - வானவராயன் வல்லவராயன் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/
- Sigaram ThoduFilm
- Sigaram Thodu is an upcoming Indian Tamil film written and directed by Gaurav Narayanan and produced by UTV Motion Pictures. It has cinematography by Vijay Ulaganath, editing by Praveen K. L. — N. B. Srikanth, and music by D. Imman. Wikipedia
- Director: Gaurav Narayanan
- Screenplay: Gaurav Narayanan
- Music composed by: D. Imman
- Production company: UTV Motion Pictures
- Producers: Ronnie Screwvala, Siddharth Roy KapurCast: Vikram Prabhu, Monal Gajjar, Sathyaraj, Kovai Sarala, Sathish, KS Ravikumar
Direction: Gaurav Narayanan
Music: D.Imman
Label: Sony Music India
Production: UTV Motion Pictures
- Takku Takku - A peppy tune and an instantly likeable lyrics. It has a tinge of Imman’s Muttalai Muttalai song and Madhan Karky’s youthful lyrics reinstates the fact he is one of the very few singers who instills attention-grabbing yet relatable lines in his songs. Anthony Dasan’s rendition is as usual full of vigor and rightly supported by Varun Paranthaman
- Pidikkudhae - Shreya Goshal’s memorable stint with Imman continues. An oversimple tune made gorgeous in her flawless vocals. Jithin Raj has done a equally good job
- Scenu Scenu - An essential Gaana Bala song with his quintessential lyrics. It has a no non-sense tune, enjoyable lyrics (boy explains how a girl puts too much scenu) and beautifully rendered by Aranarai Natraj. If you keenly listen to the composition, you will hear cries of Oodha Color Ribbon in the song
- Anbulla Appa - Welcome back, Yesudoss. The entire songs leaves us with only one question – Why doesn’t he sing frequently? Such a soulful track and beautifully enhanced by Yesudoss’s marvelous rendition. Lovely orchestration from Imman throughout the song. It will linger in your ears for long. Our PICK of the album!
- Sigaram Thodu - Inspiring lyrics let down by a predictable tune from Imman. A passable number and the most underwhelming in the album
Sigaram Thodu Songs Review : 3.25/5
thanx -http://www.onlykollywood.com/sigaram-thodu-songs-review/
a
a
a
1 comments:
லேப்டோப் போடு அலைறீங்க்லே தல வாழ்க
Post a Comment